Saturday, August 12, 2017

அத்தியாயம் : 8 தொழுகை ஹதீஸ்கள் 399 முதல் 419 வரை


                                                                அத்தியாயம் : 8

                                                                        كتاب الصلاة

                                                                      தொழுகை






(31)باب التَّوَجُّهِ نَحْوَ الْقِبْلَةِ حَيْثُ كَانَ
பாடம் : 31

எங்கிருந்தாலும் (தொழும் போது) கிப்லா (கஅபாவின்) திசையையே முன்னோக்க வேண்டும்.

وَقَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقْبِلِ الْقِبْلَةَ وَكَبِّرْ».

நீங்கள் கிப்லாவை முன்னோக்கித் (தொழுகையில்) தக்பீர் (தஹ்ரீமா) சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்

٣٩٩حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ ‏{‏قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ‏}‏ فَتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ، وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ ـ وَهُمُ الْيَهُودُ ـ مَا وَلاَّهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ‏{‏قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ‏}‏ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ‏.‏ فَتَحَرَّفَ الْقَوْمُ حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ‏.‏

399 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு வந்து) பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் (ஜெரூசலே மிலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) கஅபாவை நோக்கித் தாம் திருப்பப்பட வேண்டுமென்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே (தொழுகையில் கஅபாவை முன்னோக்கும் படி ஆணையிட்டு) அல்லாஹ், (நபியே!) நாம் உமது முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்... எனும் (2:144 ஆவது) வசனத்தை அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கஅபாவை முன்னோக்கி(த் தொழலா)னார்கள். (இதைக் கண்ட) அறிவற்ற மக்கள்: (முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கூறினர். (அதற்கு அல்லாஹ்,) (நபியே!) கூறுக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான். (2:142) என்று சொன்னான்.

- இந்த வசனத்திலுள்ள அறிவற்ற மக்கள் எனும் சொற்றொடர் யூதர்களையே குறிக்கின்றது. -

(கஅபாவை நோக்கி கிப்லா மாற்றம் நடை பெற்ற அந்தத் தொழுகையில்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். தொழுது விட்டு அவர் புறப்பட்டு(ச் செல்லும் வழியில்) பைத்துல் மக்திஸை நோக்கி அஸ்ர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த அன்சாரிகளில் சிலரைக் கடந்து சென்றார். அப்போது அவர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன்; அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன் என்றார். உடனே (தொழுகையிலிருந்த) அம்மக்கள் கஅபாவின் திசையில் திரும்பிக் கொண்டார்கள்

٤٠٠حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ، فَإِذَا أَرَادَ الْفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ‏.‏


400 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு,) அது செல்கின்ற திசையை நோக்கி (உபரித் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையானத் தொழுகையினை அவர்கள் தொழநாடும் போது (வாகனத்திலிருந்து) இறங்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்.

٤٠١حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم ـ قَالَ إِبْرَاهِيمُ لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ ـ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ قَالَ ‏"‏ وَمَا ذَاكَ ‏"‏‏.‏ قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا‏.‏ فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ ‏"‏ إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَتَحَرَّى الصَّوَابَ، فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ يُسَلِّمْ، ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ ‏"‏‏.‏

401 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்து விட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்த போது அவர்களிடம், இந்தத் தொழுகையின் போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்) என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்து விட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பிய போது, ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்து விடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்து விட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும் என்று கூறினார்கள்.


(32) بَابُ مَا جَاءَ فِي الْقِبْلَةِ، وَمَنْ لاَ يَرَى الإِعَادَةَ عَلَى مَنْ سَهَا فَصَلَّى إِلَى غَيْرِ الْقِبْلَةِ

பாடம் : 32

கிப்லா குறித்து வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாகக் கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும் போது) அந்தத் தொழுகையைத் திருப்பித் தொழவேண்டியதில்லை என்பதும்.

وَقَدْ سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَكْعَتَيِ الظُّهْرِ، وَأَقْبَلَ عَلَى النَّاسِ بِوَجْهِهِ، ثُمَّ أَتَمَّ مَا بَقِيَ.

நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுத்து விட்டு மக்களை நோக்கி அமர்ந்த (நபித் தோழர்களால் நினைவூட்டப்பட்டதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதிருக்கிறார்கள்.



٤٠٢حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ ‏{‏وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى‏}‏ وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ‏.‏ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ‏.‏ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ‏.

402 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்:

1.. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தை (கஅபாவை) தொழும் திசையாக (கிப்லாவாக) நாம் ஆக்கிக் கொள்ளலாமே! என்று கேட்டேன். அப்போது, இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள்ளுங்கள் எனும் (2:125 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் (என் கருத்துக்கு இசைவாகவே அருளப் பெற்றது.) :

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மனைவி மார்களை பர்தா அணியும்படி தாங்கள் பணிக்கலாமே! ஏனெனில் அவர்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) உரையாடலாம் என்று சொன்னேன். அப்போது (பர்தா (சட்டம்) குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது நான் அவர்களிடம், இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்து விட்டால், உங்களைவிடச் சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறே) இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.


حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، قَالَ سَمِعْتُ أَنَسًا، بِهَذَا‏.‏


இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.


٤٠٣حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ‏.‏

403 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (மஸ்ஜித்) குபாவில் சுப்ஹுத் தொழுகையை தொழுது கொண்டிருந்த போது அவர் களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடந்த இரவொன்றில் கஅபாவைத் தொழுகையில் முன்னோக்கும்படி ஆணையிட்டு அவர்களுக் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே நீங்களும் கஅபாவையே முன்னோக்கித் தொழுங்கள்! என்று கூறினார். உடனே (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுது கொண்டிருந்த அவர்கள் கஅபாவை நோக்கி அப்படியே தொழுகையிலேயே) சுழன்று (திரும்பிக்) கொண்டனர்.

٤٠٤حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ خَمْسًا فَقَالُوا أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ ‏ "‏ وَمَا ذَاكَ ‏"‏‏.‏ قَالُوا صَلَّيْتَ خَمْسًا‏.‏ فَثَنَى رِجْلَيْهِ وَسَجَدَ سَجْدَتَيْنِ‏.‏

404 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழு(வித்)து விட்டார்கள். (தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபியவர்களை நோக்கி) மக்கள், தொழுகையில் (அதன் ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்)? என்று கேட்டார்கள். மக்கள், நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழு(வித்) தீர்கள் (அதனால் தான் வினவினோம்.) என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வது போன்று) தமது கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கித் திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.

(33)باب حَكِّ الْبُزَاقِ بِالْيَدِ مِنَ الْمَسْجِدِ
பாடம் : 33

பள்ளி வாசலில் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது.

٤٠٥حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ ‏"‏ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ـ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمَيْهِ ‏"‏‏.‏ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ، ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ ‏"‏ أَوْ يَفْعَلْ هَكَذَا ‏"‏‏.‏

405 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டி ருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு உங்களில் ஒருவர் தொழுகையில் நின்று கொண்டிருக்கும் போது அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார் அல்லது அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான். ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

٤٠٦حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ ‏ "‏ إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلاَ يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى ‏"‏‏.‏

406 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)ய பின்னர், உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) உமிழவேண்டாம். ஏனெனில், அவர் தொழும் போது அல்லாஹ் அவரது முகத்திற்கெதிரே இருக்கின்றான் என்று கூறினார்கள்.

٤٠٧حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ‏.‏

407 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் மூக்குச் சளியை அல்லது எச்சிலை அல்லது காறல் சளியைக் கண்டார்கள். உடனே அதை சுரண்டி (சுத்தப்படுத்தி)விட்டார்கள்..

(34)باب حَكِّ الْمُخَاطِ بِالْحَصَى مِنَ الْمَسْجِدِ
பாடம் : 34

பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியை சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி) விடுதல்.

وَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنْ وَطِئْتَ عَلَى قَذَرٍ رَطْبٍ فَاغْسِلْهُ، وَإِنْ كَانَ يَابِسًا فَلاَ.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அருவருப்பானவற்றை நீ மிதித்து விட்டால் அது பச்சையாக இருந்தால் உடனே அதை கழுவிக் கொள்! அது காய்ந்து இருந்தால் (கழுவ) வேண்டியதில்லை என்றார்கள்.



   ٤٠٨,٤٠٩حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ حَدَّثَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي جِدَارِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا فَقَالَ ‏ "‏ إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ‏"‏‏.‏


408,409 அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத் திசை) சுவரில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு, உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத்திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்.. தமது இடப் புறமோ தமது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

(35)باب لاَ يَبْصُقْ عَنْ يَمِينِهِ، فِي الصَّلاَةِ

பாடம் : 35

தொழும் போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்பலாகாது.

٤١٠,٤١١حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي حَائِطِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَصَاةً فَحَتَّهَا ثُمَّ قَالَ ‏ "‏ إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمْ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ‏"‏‏.‏

410,411 அபூஹுரைரா (ரலி) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பின்னர், உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழவேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்; தம் இடப்புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும் என்று சொன்னார்கள்.

٤١٢حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَتْفِلَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ رِجْلِهِ ‏"‏‏.


412 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கு முன்புறமோ தமக்கு வலப்புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும் தமக்கு இடப் புறமோ காலுக்கடியிலோ (துப்பலாம்).

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(36)باب لِيَبْزُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى
பாடம் : 36

இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.

٤١٣حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ ‏"‏‏.‏

413 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறை நம்பிக்கையாளர் (மூமின்) தொழுது கொண்டிருக்கும் போது தம் இறைவனிடமே அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே அவர் தமது முன்புறத்திலும் உமிழ வேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்.. எனினும் இடப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழட்டும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



٤١٤حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ،‏.‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ، ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى‏.‏ وَعَنِ الزُّهْرِيِّ سَمِعَ حُمَيْدًا عَنْ أَبِي سَعِيدٍ نَحْوَهُ‏.‏

414 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றினால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு (தொழுகையிலிருக்கும்) ஒருவர் தம் முன்புறமோ அல்லது வலப் புறமோ துப்பக்கூடாது என தடைவிதித்து விட்டு, எனினும் அவர் தமது இடப்புறமோ அல்லது இடப் பாதத்திற்கு கீழேயோ உமிழட்டும் என்று சொன்னார்கள்.

இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


(37)باب كَفَّارَةِ الْبُزَاقِ فِي الْمَسْجِدِ

பாடம் : 37

பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.

٤١٥حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا ‏"‏‏.‏

415 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளி வாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(38)باب دَفْنِ النُّخَامَةِ فِي الْمَسْجِدِ
பாடம் : 38

பள்ளிவாசலில் (உமிழப்பட்ட) சளியை மண்ணுக்குள் புதைத்து விட வேண்டும்.

٤١٦حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَبْصُقْ أَمَامَهُ، فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلاَّهُ، وَلاَ عَنْ يَمِينِهِ، فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ، فَيَدْفِنُهَا ‏"‏‏.‏


416 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதேபோல்) அவர் தம் வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்து விட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(39)باب إِذَا بَدَرَهُ الْبُزَاقُ فَلْيَأْخُذْ بِطَرَفِ ثَوْبِهِ
பாடம் : 39

(தொழுது கொண்டிருக்கும்) ஒருவரை எச்சில் முந்திக் கொள்ளும் போது அவர் தமது ஆடையின் ஓர் ஓரத்தைப் பிடித்து (அதில் உமிழ்ந்து)கொள்ளலாம்.


٤١٧حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَحَكَّهَا بِيَدِهِ، وَرُئِيَ مِنْهُ كَرَاهِيَةٌ ـ أَوْ رُئِيَ كَرَاهِيَتُهُ لِذَلِكَ وَشِدَّتُهُ عَلَيْهِ ـ وَقَالَ ‏"‏ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ ـ أَوْ رَبُّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ ـ فَلاَ يَبْزُقَنَّ فِي قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ ‏"‏‏.‏ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَزَقَ فِيهِ، وَرَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، قَالَ ‏"‏ أَوْ يَفْعَلُ هَكَذَا ‏"‏‏.

417 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லாத் திசையில் (உள்ள சுவரில்) சளியைக் கண்டார்கள். (இதைக் கண்ட) உடன் நபி (ஸல்) அவர் களிடம் வெறுப்புக் காணப்பட்டது அல்லது இந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதும் அதன் மீது அவர்கள் காட்டிய வேகமும் நேரடியாகத் தெரிந்தது. உடனே அவர்கள் அதைத் தமது கரத்தால் சுரண்டி விட்டு, உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும் போது தமது கிப்லா திசையில் கட்டாயமாக அவர் உமிழ வேண்டாம்.. எனினும் அவர் தம் இடப் புறமோ அல்லது வலப் புறமோ தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்து கொள்ளட்டும். என்று கூறினார்கள். பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சுருட்டி(க் கசக்கி)விட்டு அல்லது அவர் இவ்வாறு செய்து கொள்ளலாம் என்றார்கள்.

(40)باب عِظَةِ الإِمَامِ النَّاسَ فِي إِتْمَامِ الصَّلاَةِ، وَذِكْرِ الْقِبْلَةِ
பாடம் : 40

(தொழுகையை முழுமையாக நிறைவேற்றா) மக்களிடம் இமாம், தொழுகையை குறைவின்றிப் பூர்த்தி செய்யுமாறு அறிவுரை கூறுவதும், கிப்லா பற்றிய குறிப்பும்.

٤١٨حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ خُشُوعُكُمْ وَلاَ رُكُوعُكُمْ، إِنِّي لأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ‏"‏‏.

418 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் நீங்கள் செய்வதையெல்லாம் நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களின் பணிவும் (சஜ்தாவும்) உங்களின் குனிவும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٤١٩حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةً ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ، فَقَالَ فِي الصَّلاَةِ وَفِي الرُّكُوعِ ‏ "‏ إِنِّي لأَرَاكُمْ مِنْ وَرَائِي كَمَا أَرَاكُمْ ‏"‏‏.‏

419 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக ஓர் தொழுகையை தொழுவித்த பின்னர், சொற்பொழிவு மேடை (அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக ஓர் தொழுகையை தொழுவித்த பின்னர், சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி தொழுகையைப் பற்றியும் (அதன் முக்கிய நிலைகளில் ஒன்றான) ருகூஉ பற்றியும் (அவற்றை குறைவின்றி நிறைவேற்றுமாறு) கூறினார்கள். அப்போது, (உங்களை முன்புறமாக) நான் காண்பது போன்றே எனது முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காண்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

No comments:

Post a Comment