அத்தியாயம் : 8
كتاب الصلاة
தொழுகை
(41)باب هَلْ يُقَالُ مَسْجِدُ بَنِي فُلاَنٍ
பாடம்
: 41
(ஒரு பள்ளிவாசல் குறித்து இது) இன்ன குலத்தாரின் பள்ளிவாசல்
என்று கூறலாமா?
٤٢٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَابَقَ
بَيْنَ الْخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ،
وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى
مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ
سَابَقَ بِهَا.
420 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட)
குதிரைகளுக்கிடையே ஹஃப்யா எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய)
எல்லை சனிய்யத்துல் வதா எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெ-யவைக்கப்படாத (பயிற்சி
பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின்
பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்களும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வார்கள்.
(42)باب الْقِسْمَةِ وَتَعْلِيقِ الْقِنْوِ فِي الْمَسْجِدِ
பாடம்
: 42
பள்ளிவாசலுக்குள்
காசு பணங்களைப் பங்கீடு (தானம்) செய்வதும், பழக்குலை களைப் தொங்கவிடுவதும்
(செல்லும்).
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الْقِنْوُ الْعِذْقُ،
وَالاِثْنَانِ قِنْوَانِ، وَالْجَمَاعَةُ أَيْضًا قِنْوَانٌ مِثْلَ صِنْوٍ
وَصِنْوَانٍ.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய
நான்) கூறுகின்றேன்:
அல்கின்வு எனும் சொல்லுக்கு, பழக் குலை என்று பொருள்.
இருமை : கின்வானி. இதன் பன்மை கின்வான் என்பதேயாகும். (வாய்பாட்டில்) ஸின்வ், ஸின்வானி எனும் சொற்களைப்
போனறே (இதுவும் அமைந் துள்ளது).
٤٢١وَقَالَ
إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ
قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَقَالَ
" انْثُرُوهُ فِي الْمَسْجِدِ ". وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ
بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم إِلَى الصَّلاَةِ، وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ
جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلاَّ أَعْطَاهُ، إِذْ
جَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ
نَفْسِي وَفَادَيْتُ عَقِيلاً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" خُذْ ". فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ
يَسْتَطِعْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعُهُ
إِلَىَّ. قَالَ " لاَ ". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ.
قَالَ " لاَ ". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ
يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَىَّ. قَالَ "
لاَ ". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ " لاَ
". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ
ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُتْبِعُهُ
بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ.
421 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம்
பஹ்ரைனிலிருந்து நிதி (கப்பம்) கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இதைப் பள்ளி வாசலில் பரப்பி வையுங்கள்
என்று உத்தரவிட்டார்கள். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே
அதிகமானதாக இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் அதை ஏறிட்டுப் பார்க்காமல் தொழுகைக்காச் சென்றார்கள். தொழுகையை முடித்து விட்டு
அந்த செல்வம் நோக்கி வந்து (அதனருகில்) அமர்ந்து கொண்டு ஒருவர்விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம்
வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தையார்)
அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப்போரில் தங்களால் கைது செய்யப்பட்ட
பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை
கொடுத்திருக்கின்றேன் என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப் போட்டார்கள். பிறகு
அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான)
இவர்களில் ஒருவரை இதை எனக்குத் தூக்கிவிடப் பணியுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்)
அவர்கள், இல்லை (நான் எவரையும் பணிக்க மாட்டேன்)
என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்களாவது என் (தோள்) மீது தூக்கிவையுங்கள்
என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், இல்லை (முடியாது) என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு அதிலிருந்து சிறிதைக் கொட்டிவிட்டு பிறகு அதை தூக்கிச் சுமக்க முயன்றார்கள்.
(அப்போதும் அவர்களால் அதை தூக்க முடியவில்லை.) எனவே நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கிவிடுமாறு
இவர்களில் ஒருவரைப் பணியுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இல்லை (பணிக்க மாட்டேன்) என்று சொல்லிவிட்டார்கள்.
நீங்களாவது என்(தோள்) மீது இதைத் தூக்கி வையுங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்
இல்லை (முடியாது) என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதிலிருந்து
இன்னும் சிறிதைக் கீழே கொட்டிவிட்டு அதைத் தூக்கி தமது தோள்களுக்கிடையில் வைத்துக்
கொண்டு நடக்கலானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக்
கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டேயிருந்தார்கள் அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம்கூட
மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்து விட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தம் இடத்தை விட்டு எழுந்தார்கள்.
(43)باب مَنْ دَعَا لِطَعَامٍ فِي الْمَسْجِدِ وَمَنْ
أَجَابَ فِيهِ
பாடம்
: 43
பள்ளிவாசலுக்குள்
வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும், பள்ளிவாசலிலேயே அதை ஏற்றுக்
கொள்வதும் (குற்றமல்ல).
٤٢٢حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ
اللَّهِ، سَمِعَ أَنَسًا، قَالَ وَجَدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي
الْمَسْجِدِ مَعَهُ نَاسٌ فَقُمْتُ، فَقَالَ لِي " آرْسَلَكَ أَبُو
طَلْحَةَ " قُلْتُ نَعَمْ. فَقَالَ " لِطَعَامٍ ".
قُلْتُ نَعَمْ. فَقَالَ لِمَنْ حَوْلَهُ " قُومُوا ".
فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ.
422 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களை
பள்ளிவாசலில் இருக்கக் கண்டேன். அவர்களுடன் மக்கள் சிலரும் இருந்தனர். (அவர்களுக்கு
முன்னால் சென்று) நான் நின்றேன். உடனே, அவர்கள் என்னிடம், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.
உணவு அருந்துவதற்காகவா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும்
இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் முன்னால்
நடந்தேன்.
(44)باب الْقَضَاءِ وَاللِّعَانِ فِي الْمَسْجِدِ بَيْنَ
الرِّجَالِ وَالنِّسَاءِ
பாடம்
: 44
பள்ளிவாசலுக்குள்வைத்து
வழக்குகளுக்கு தீர்ப்பளிப்பதும், (தகுந்த சாட்சிகளின்றி
மனைவியர் மீது கணவர்கள் விபசாரக் குற்றம் சாட்டுவதன் பேரில்) கணவர்- மனைவியருக்கிடையே
சாப அழைப்புப் பிரமாணம் (ஆன்) செய்விப்பதும் (செல்லும்).[1 ]
٤٢٣حَدَّثَنَا
يَحْيَى، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ
جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ
رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ
رَجُلاً أَيَقْتُلُهُ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ.
423 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனை (தகாத உறவு கொண்டபடி இருக்க)க்
கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? என்று கேட்டார். (இந்த விவகாரத்தில்
கணவன்-மனைவி இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள்
தீர்ப்பளித்தார்கள்.) எனவே, பள்ளி வாசலுக்குள் அத்தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர்.
அப்போது நான் அந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தேன்.
(45)باب إِذَا دَخَلَ بَيْتًا يُصَلِّي حَيْثُ شَاءَ، أَوْ
حَيْثُ أُمِرَ، وَلاَ يَتَجَسَّسُ
பாடம்
: 45
(அழைப்பின் பேரில்) அடுத்தவர் வீட்டுக்குச் சென்ற ஒருவர்
அவ்வீட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொழுது கொள்ளலாமா? அல்லது வீட்டுக்காரர் பணித்த இடத்தில் தொழ வேண்டுமா? என்பதும், (வீட்டுக்காரர் குறிப்பிடும்
இடத்தில் தொழும் போது அவ்விடத்தின் தூய்மை பற்றித்) துருவி விசாரிக்க வேண்டியதில்லை
என்பதும்.
٤٢٤حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ
ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَاهُ فِي مَنْزِلِهِ فَقَالَ "
أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ لَكَ مِنْ بَيْتِكَ ". قَالَ فَأَشَرْتُ
لَهُ إِلَى مَكَانٍ، فَكَبَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
وَصَفَفْنَا
خَلْفَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ.
424 இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(எனது வீட்டில் ஓர் இடத்தில் தொழுவித்து அந்த இடத்தை எனது தொழுமிடமாக்க வருமாறு
நான் அழைத்ததன் பேரில்) நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். (வீட்டுக்குள்
வந்ததும்) உமது வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீர் விரும்புகின்றீர்? என்று கேட்டார்கள். நான் அவர்களிடம்
(குறிப்பிட்ட) ஓர் இடத்தைக் காட்டியதும் (அந்த இடத்தில் நின்று) நபி (ஸல்) அவர்கள்
தக்பீர் கூறி(த் தொழலா)னார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால், அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள்
இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.
(46)باب الْمَسَاجِدِ فِي الْبُيُوتِ
பாடம்
: 46
வீடுகளிலேயே
தொழுமிடத்தை அமைத்துக் கொள்வது.
وَصَلَّى الْبَرَاءُ بْنُ عَازِبٍ فِي مَسْجِدِهِ فِي
دَارِهِ جَمَاعَةً.
பராஉபின் ஆஸிப் (ரலி)
அவர்கள் தமது வீட்டிலுள்ள தொழுமிடத்தில் கூட்டாகச் சேர்ந்து (ஜமாஅத்தாக) தொழுதார்கள்.
٤٢٥حَدَّثَنَا
سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ،
عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ،
أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ ـ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ ـ أَنَّهُ أَتَى رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قَدْ أَنْكَرْتُ
بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ
الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ
فَأُصَلِّيَ بِهِمْ، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ تَأْتِينِي
فَتُصَلِّيَ فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلًّى. قَالَ فَقَالَ لَهُ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ ".
قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ حِينَ
ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ "
أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ ". قَالَ فَأَشَرْتُ لَهُ
إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَّنَا، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ
وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ. قَالَ فَثَابَ فِي الْبَيْتِ
رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ
مِنْهُمْ أَيْنَ مَالِكُ بْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّخْشُنِ فَقَالَ
بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ ". قَالَ
اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ
إِلَى الْمُنَافِقِينَ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "
فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ
اللَّهُ. يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ". قَالَ ابْنُ شِهَابٍ ثُمَّ
سَأَلْتُ الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ ـ وَهْوَ أَحَدُ بَنِي
سَالِمٍ وَهُوَ مِنْ سَرَاتِهِمْ ـ عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ،
فَصَدَّقَهُ بِذَلِكَ.
425 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப்போரில் கலந்து
கொண்ட அன்சாரிகளில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்போய்)விட்டது. நான் என் சமூகத்தாருக்கு
(இமாமாக நின்று) தொழுகை நடத்தி வருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும்
அவர்களுக்குமிடையே உள்ளபள்ளத் தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச்
சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு
வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக் கொள்ளவேண்டும்
என ஆசைப்படு கிறேன் என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே
நான் செய்வேன் என்று கூறினார்கள்.
இத்பான் பின் மாலிக்
(ரலி) அவர்களே கூறுகின்றார்கள்:
(மறுநாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன்.
வீட்டில் நுழைந்ததும். உட்காராமலேயே, உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான்
தொழவேண்டு மென விரும்புகிறீர்கள்? என்று (என்னிடம்) கேட்டார்கள். உடனே நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள்.
நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள்
இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)து விட்டு சலாம் கொடுத்தார்கள்.
(கொத்துக் கறியும் மாவும் கலந்து) நபி (ஸல்) அவர்களுக்கு நாங்கள் தயாரித்து வைத்திருந்த
ஒரு வகை உணவைச் சாப்பிட்டு விட்டுத் தான் செல்லவேண்டுமென நாங்கள் அவர்களை வற்புறுத்தினோம்.
கலைந்து சென்ற எனது குடும்பத்தார் பலர் மீண்டும் வீட்டில் குழுமிவிட்டனர். அப்போது
அவர்களில் ஒருவர், மாலிக் பின் துகைஷின் அல்லது இப்னு துக்ஷுன் எங்கே என்று கேட்டார். மற்றொருவர், அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர்
(அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை) என்று சொன்னார்.
(இதைச் செவியுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் திருப்தியை
நாடி அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை(லாயிலாஹ இல்லல்லாஹ்) என அவர் சொல்லிவிட்டிருப்பதை
நீ பார்க்கவில்லையா? என்று கேட்டார்கள். அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறிவிட்டு, அவரது முகமும் அவரது அபிமானமும் நயவஞ்சகர்களை
நோக்கியே அமைந்திருக்கக் காண்கிறோமே? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ்
நரகத்தை அவர் மீது தடை செய்து விடுகிறான் என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ- ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு நான் பனூசாலிம்
குலத்தாரும் அவர்களின் பிரமுகர்களில் ஒருவருமான ஹுசைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரலி)
அவர்களிடம் மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களின் ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவருடைய
ஹதீஸை ஹுசைன் பின் முஹம்மத் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
(47)باب التَّيَمُّنِ فِي دُخُولِ الْمَسْجِدِ وَغَيْرِهِ
பாடம்
: 47
பள்ளியில்
நுழையும் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் வலப் பக்கத்திற்கு முதலிடம் அளித்தல்.
وَكَانَ ابْنُ عُمَرَ يَبْدَأُ بِرِجْلِهِ الْيُمْنَى،
فَإِذَا خَرَجَ بَدَأَ بِرِجْلِهِ الْيُسْرَى.
இப்னு உமர் (ரலி) அவர்கள்
தமது வலக் காலை முதலில் வைத்துப் பள்ளியில் நழைவார்கள். வெளியேறும் போது தமது இடக்
காலை முதலில் வைத்து வெளியேறுவார்கள்.
٤٢٦حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ
سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ
النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ
كُلِّهِ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ.
426 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அங்க)
சுத்தம் செய்யும் போதும், தலைவாரும் போதும், செருப்பணியும் போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள்அனைத்திலும் வலப் பக்கத்தைக்
கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.
(48) بَابُ هَلْ تُنْبَشُ قُبُورُ مُشْرِكِي الْجَاهِلِيَّةِ،
وَيُتَّخَذُ مَكَانَهَا مَسَاجِدَ
பாடம்
: 48
அறியாமைக்
காலத்தில் வாழ்ந்த இணை வைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப் படலாமா? அவ்விடத்தில் பள்ளி வாசல் கட்டலாமா? (என்றால் கட்டலாம்.)
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَعَنَ اللَّهُ الْيَهُودَ، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ».
وَمَا يُكْرَهُ مِنَ الصَّلاَةِ فِي الْقُبُورِ.
وَرَأَى عُمَرُ أَنَسَ بْنَ مَالِكٍ يُصَلِّي عِنْدَ
قَبْرٍ فَقَالَ الْقَبْرَ الْقَبْرَ. وَلَمْ يَأْمُرْهُ بِالإِعَادَةِ.
நபி (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில்
இருந்த போது), அல்லாஹ் யூதர்களைத் தம் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின்
அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.
சவக்குழி (கப்று)களின்
(அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்)மீது தொழுவது தகாத செயலாகும்.
ஒரு சவக்குழிக்கு அருகில்
தொழுது கொண்டிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் சவக்குழி(களைத்
தவிருங்கள்! அதன் அருகில் தொழாதீர்கள்) சவக் குழி(களைத் தவிருங்கள்; அதன் அருகில் தொழாதீர்கள்)
என்று கூறினார்கள். ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பித் தொழுமாறு அனஸ் (ரலி) அவர்களை
உமர் (ரலி) அவர்கள் பணிக்கவில்லை.
٤٢٧حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ
أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ
ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا
لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ
فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا،
وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ
اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ".
427 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா அவர்களும்
உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள்
கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக்
கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே
நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம்
ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில்
அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.
٤٢٨حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ
أَنَسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَنَزَلَ
أَعْلَى الْمَدِينَةِ، فِي حَىٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ.
فَأَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً،
ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ،
كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ،
وَأَبُو بَكْرٍ رِدْفُهُ، وَمَلأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ، حَتَّى أَلْقَى بِفِنَاءِ
أَبِي أَيُّوبَ، وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ،
وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، وَأَنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ،
فَأَرْسَلَ إِلَى مَلإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَقَالَ " يَا بَنِي
النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا ". قَالُوا لاَ وَاللَّهِ،
لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ. فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا
أَقُولُ لَكُمْ، قُبُورُ الْمُشْرِكِينَ، وَفِيهِ خَرِبٌ، وَفِيهِ نَخْلٌ،
فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ،
ثُمَّ بِالْخَرِبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ
قِبْلَةَ الْمَسْجِدِ، وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ، وَجَعَلُوا
يَنْقُلُونَ الصَّخْرَ، وَهُمْ يَرْتَجِزُونَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم
مَعَهُمْ وَهُوَ يَقُولُ " اللَّهُمَّ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ
فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ "
428 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நாடு
துறந்து) மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் பனூ அம்ர் பின்
அவ்ஃப் என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள்.
பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ
நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி
வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப்
பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை
(இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் வாகனம்
அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது தொழுகை நேரம் தம்மை
வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்
பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை
(அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்த போது), பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின்
இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான
விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம் என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான்
உங்களிடம் கூறப்போனவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள்
இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளி வாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு
உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும் படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின்
கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.
பள்ளிவாசலின் (கதவின்)
இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். ரஜ்ஸ் எனும் ஒரு விதயாப்பு வகைப் பாடலை
பாடிக் கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.
இறைவா! மறுமையின் நன்மையைத்
தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ மன்னிப்பளிப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை
அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள்.
(49)باب الصَّلاَةِ فِي مَرَابِضِ الْغَنَمِ
பாடம்
: 49
ஆட்டுத்
தொழுவங்களில் தொழுவது.
٤٢٩حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ،
عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي مَرَابِضِ
الْغَنَمِ، ثُمَّ سَمِعْتُهُ بَعْدُ يَقُولُ كَانَ يُصَلِّي فِي مَرَابِضِ
الْغَنَمِ قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ.
429 ஷுஅபா (பின் அல்ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத்
தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபுத்தய்யாஹ்
(ரஹ்) அவர்கள் அறிவித்துவந்தார்கள். பின்னர் பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னால்
நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு) ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று
(காலவரையறையுடன் சேர்த்துக்) கூறக் கேட்டேன்.
(50)باب الصَّلاَةِ فِي مَوَاضِعِ الإِبِلِ
பாடம்
: 50
ஒட்டக(த்
தொழுவ)ங்களுள்ள இடங்களில் தொழுவது.
٤٣٠حَدَّثَنَا
صَدَقَةُ بْنُ الْفَضْلِ، قَالَ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، قَالَ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَلِّي
إِلَى بَعِيرِهِ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.
430 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள்
தமது ஒட்டகத்தை நோக்கித் தொழுது விட்டு, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை
நான் கண்டிருக்கிறேன் என்று சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
[1]தன் மனைவி மற்றொரு ஆடவனுடன்
தகாத உறவு கொண்டுவிட்டாள் என்று கணவன் குற்றம் சுமத்தி, இதற்கு நான்கு சாட்சிகளையும் கொண்டு வராத போது மனைவியும் அக்குற்றத்தை மறுத்தால், அவ்விருவரும் நான்கு தடவை அல்லாஹ்வின்
மீது சத்தியம் செய்து தாங்கள் உண்மையானவர்கள் எனக் கூற வேண்டும். ஐந்தாவது தடவையில்
தாம் பொய் சொல்லி இருந்தால் தம் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று இருவரும்
கேட்க வேண்டும். இதுவே லிஆன் எனப்படும். இவ்வாறு செய்த பின் அவ்விருவரும் ஒரு காலத்திலும்
சேர முடியாது)
No comments:
Post a Comment