அத்தியாயம் : 8
كتاب الصلاة
தொழுகை
(51)باب مَنْ صَلَّى وَقُدَّامَهُ تَنُّورٌ أَوْ نَارٌ أَوْ
شَىْءٌ مِمَّا يُعْبَدُ، فَأَرَادَ بِهِ اللَّهَ
பாடம்
: 51
தனக்கு
முன்னால் அடுப்போ நெருப்போ அல்லது (பிறரால்) வணங்கப்படும் எதோ ஒன்று இருக்கும் போது
அவற்றை (சட்டை செய்யாமல்) ஏகயிறை அல்லாஹ்வை எண்ணித் தொழுவது.
وَقَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي أَنَسٌ قَالَ: قَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُرِضَتْ عَلَيَّ النَّارُ
وَأَنَا أُصَلِّي».
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் தொழுது கொண்டிருக்கும்
போது எனக்கு நரகத்தை எடுத்துக் காட்டப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
٤٣١حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ
عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ انْخَسَفَتِ
الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "
أُرِيتُ النَّارَ، فَلَمْ أَرَ مَنْظَرًا كَالْيَوْمِ قَطُّ أَفْظَعَ ".
431 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(சூரிய கிரகணத் தொழுகையை) தொழு(வித்)தார்கள். பிறகு, (இத்தொழுகையில் நான் இருந்த போது) எனக்கு
நரகத்தை எடுத்துக்காட்டப்பட்டது. இன்று (நான் கண்டது) போன்று படு (மோசமான) கோரக் காட்சி
எதையும் நான் ஒரு போதும் கண்டதில்லை என்று சொன்னார்கள்.
(52)باب كَرَاهِيَةِ الصَّلاَةِ فِي الْمَقَابِرِ
பாடம்
: 52
அடக்கத்தலங்களில்
தொழுவது வெறுக்கப்பட்ட காரியமாகும்.
٤٣٢حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي
نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "
اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا
".
432 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது தொழுகைகளில் சிலவற்றை
உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக
ஆக்கிவிடாதீர்கள்.
(53)باب الصَّلاَةِ فِي مَوَاضِعِ الْخَسْفِ وَالْعَذَابِ
பாடம்
: 53
(அக்கிரமம் புரிந்த மக்கள்) பூமிக்குள் புதையுண்ட இடங்களிலும்
(பொதுவாக இறைவனின்) வேதனை இறங்கிய இடங்களிலும் தொழுவது.
وَيُذْكَرُ أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ كَرِهَ
الصَّلاَةَ بِخَسْفِ بَابِلَ.
(நும்ரூதும் அவனுடைய மக்களும் உயிருடன்) புதையுண்ட (இராக்கிலுள்ள) பாபில் எனுமிடத்தில்
அலீ (ரலி) அவர்கள் தொழுவதை (விரும்பவில்லை; அதை) வெறுத்தார்கள் என்று கூறப்படுகிறது.
٤٣٣حَدَّثَنَا
إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ
الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ
فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ ".
433 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து), இவர்களைத் தீண்டியது போன்ற அதே வேதனை
நம்மையும் தீண்டிவிடுமோ என்று (அஞ்சி) அழுதபடியே தவிர, வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்)
வழியாகச் செல்லாதீர்கள். உங்களால் அழமுடியா விட்டால் அந்த இடத்திற்கே செல்லாதீர்கள்!
என்று (ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது எங்களிடம்) கூறினார்கள்.
(54)باب الصَّلاَةِ فِي الْبِيعَةِ
பாடம்
: 54
கிறிஸ்தவ
ஆலயங்களில் தொழலாமா?
وَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّا لاَ
نَدْخُلُ كَنَائِسَكُمْ مِنْ أَجْلِ التَّمَاثِيلِ الَّتِي فِيهَا الصُّوَرَ.
وَكَانَ ابْنُ عَبَّاسٍ يُصَلِّي فِي الْبِيعَةِ إِلاَّ
بِيعَةً فِيهَا تَمَاثِيلُ.
உருவச் சிலைகள் இருக்கின்ற
காரணத் தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம்
நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
உருவச் சிலைகள் இல்லாத கிறிஸ்தவ ஆலயங்களில் தொழுவார்கள்.
٤٣٤حَدَّثَنَا
مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ
أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا
مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ
الْعَبْدُ الصَّالِحُ ـ أَوِ الرَّجُلُ الصَّالِحُ ـ بَنَوْا عَلَى قَبْرِهِ
مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ
عِنْدَ اللَّهِ ".
434 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனிய நாட்டில் தாம்
கண்ட மரியா என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு
சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே நல்ல அடியார் அல்லது நல்ல
மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக்
கட்டிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே
மிகவும் மோசமானவர்கள் என்று சொன்னார்கள்.
(55)باب
பாடம்
: 55
٤٣٥,٤٣٦حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي
عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ
اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا
كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهْوَ كَذَلِكَ " لَعْنَةُ اللَّهِ
عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ
". يُحَذِّرُ مَا صَنَعُوا.
435,436 ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி
ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து
விலக்கிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ்
தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள்
வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும்
செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
٤٣٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ
بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَ " قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ
أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ".
437 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் யூதர்களைத் தன்
கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத்தலங்களாக
ஆக்கிக் கொண்டார்கள் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
(56)باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم "
جُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا "
பாடம்
: 56
பூமி முழுவதும்
எனக்குத் தொழுமிடமாகவும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது
٤٣٨حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ حَدَّثَنَا سَيَّارٌ ـ
هُوَ أَبُو الْحَكَمِ ـ قَالَ حَدَّثَنَا يَزِيدُ الْفَقِيرُ، قَالَ حَدَّثَنَا
جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي،
نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا
وَطَهُورًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ
فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى
قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ
".
438 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள்
எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய
உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு
ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில்
இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள்
எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு)
அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(57)باب نَوْمِ الْمَرْأَةِ فِي الْمَسْجِدِ
பாடம்
: 57
பெண்கள்
பள்ளிவாசலில் (தங்கி) உறங்குவது.
٤٣٩حَدَّثَنَا
عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ،
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ وَلِيدَةً، كَانَتْ سَوْدَاءَ لِحَىٍّ مِنَ
الْعَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ قَالَتْ فَخَرَجَتْ صَبِيَّةٌ
لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ قَالَتْ فَوَضَعَتْهُ أَوْ وَقَعَ
مِنْهَا، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهْوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا
فَخَطَفَتْهُ قَالَتْ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ قَالَتْ فَاتَّهَمُونِي
بِهِ قَالَتْ فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا قَالَتْ وَاللَّهِ
إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ، إِذْ مَرَّتِ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ قَالَتْ
فَوَقَعَ بَيْنَهُمْ قَالَتْ فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ ـ
زَعَمْتُمْ ـ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ قَالَتْ فَجَاءَتْ إِلَى
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَتْ. قَالَتْ عَائِشَةُ فَكَانَ
لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشٌ قَالَتْ فَكَانَتْ تَأْتِينِي
فَتَحَدَّثُ عِنْدِي قَالَتْ فَلاَ تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلاَّ قَالَتْ
وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ
الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ لاَ
تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلاَّ قُلْتِ هَذَا قَالَتْ فَحَدَّثَتْنِي بِهَذَا
الْحَدِيثِ.
439 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கருப்பு நிற அடிமைப்பெண்
அரபு களில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமான வளாயிருந்தாள். பின்னர் அவளை அவர்கள்
விடுதலை செய்து விட்டனர். ஆயினும் அவர்களுடனேயே அவள் இருந்துவந்தாள். அந்தப் பெண்
(தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பின்வருமாறு என்னிடம்) கூறினாள்:
(ஒரு நாள்) அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் (மணமுடித்த புதிதில்) சிவப்புத்
தோல் முத்துக்கள் பதிக்கபட்ட அரையணித் தோள் பட்டிகை அணிந்து கொண்டு (குளியலறைக்குப்)
புறப்பட்டாள். அப்போது அவள் அதை (ஓர் இடத்தில் கழற்றி) வைத்தாள் அல்லது (எதிர்பாராத
விதமாக) அந்தப் பட்டிகை அவளிடமிருந்து (கழன்று) விழுந்து விட கீழே கிடந்த அதைக் கடந்து
சென்ற பருந்துக் குஞ்சு ஒன்று அதை இறைச்சி என்று நினைத்துக் கொத்திச் சென்றுவிட்டது.
அவர்கள் அதைத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்தார் (அதை நான் தான்
களவாடியிருப்பேன் என்று) என் மீது குற்றம் சாட்டி (என்னை வதைத்த)னர். (எந்த அளவிற்
கென்றால்,) எனது பிறவி உறுப்பில் கூட சோதனையிட்டனர்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
நான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த போது பறந்து வந்த அந்தப் பருந்துக் குஞ்சு அந்தப்
பட்டிகையைக் (கீழே) போட அவர்களுக்கு மத்தியில் அது விழுந்தது. (உடனே) நான் (அவர்களிடம்), நிரபராதியான என் மீது (திருட்டுக்)குற்றம்
சாட்டி, (அதை நான் எடுத்து விட்டதாக)க் கூறினீர்களே
அந்தப் பட்டிகை இதோ இங்கு இருக்கிறது என்று சொன்னேன். இதற்குப் பிறகு நான் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது
சிறிய குடில் இருந்தது. (அதில் அவள் வசித்துவந்தாள்.)
அந்தப் பெண் என்னிடம்
வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் என்னிடம் அமர்ந்திருந்த ஒவ்வோர் அமர்வி(ன்முடிவி)லும்
அவள் (பின் வருமாறு) பாடாமல் இருந்ததில்லை:
எம் இறைவனின் விந்தைப்
பட்டியலில்
அந்த அரையணிப்பட்டிகை
நாளும் ஒன்றே!
எனை இறைமறுப்பின் பட்டியிலிருந்து
ஈடேற்றிக் காத்த நாளும்
அன்றே!
(இந்நிலையில் ஒரு நாள்) நான் அவளிடம், நீ என்னுடன் அமரும்போதெல்லாம் இதை நீ
சொல்லாமல் இருப்பதில்லையே! உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டேன். அப்போது தான் அந்தப்
பெண் (மேற்கண்ட) அந்தச் செய்தியை என்னிடம் கூறினாள்.
(58)باب نَوْمِ الرِّجَالِ فِي الْمَسْجِدِ
பாடம்
: 58
பள்ளியில்
ஆண்கள் உறங்குவது.
وَقَالَ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ قَدِمَ رَهْطٌ مِنْ
عُكْلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانُوا فِي
الصُّفَّةِ.
وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ كَانَ
أَصْحَابُ الصُّفَّةِ الْفُقَرَاءَ.
உக்ல் எனும் குலத்தாரில்
சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்)
திண்ணையில் (தங்கி) இருந்தனர் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக
இருந்தனர் என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
٤٤٠حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي
نَافِعٌ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهْوَ شَابٌّ
أَعْزَبُ لاَ أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
440 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த
போது நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசல் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
٤٤١حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ،
عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ
" أَيْنَ ابْنُ عَمِّكِ ". قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ
شَىْءٌ، فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي. فَقَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم لإِنْسَانٍ " انْظُرْ أَيْنَ هُوَ ". فَجَاءَ
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُضْطَجِعٌ، قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ
شِقِّهِ، وَأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ " قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ
".
441 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (தம் புதல்விர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான)
அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர்
எங்கே? என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்
தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து)
சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்) என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், அவர் எங்கே என்று பாருங்கள் என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து
(தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர்
ஒருக்களித்துப்படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ
(ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!! என்று கூறலானார்கள்.
٤٤٢حَدَّثَنَا
يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي
حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ
الصُّفَّةِ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ، إِمَّا إِزَارٌ وَإِمَّا
كِسَاءٌ، قَدْ رَبَطُوا فِي أَعْنَاقِهِمْ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ
السَّاقَيْنِ، وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ، فَيَجْمَعُهُ بِيَدِهِ،
كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ.
442 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
திண்ணைத் தோழர்களில் எழுபது
பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்குக் கூட மேலங்கி இருந்ததில்லை.
(ஒரேயொரு ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது வேட்டியாக இருக்கும்; அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்)
இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள். அதில் சில துணி
(பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில (துணிகள்) கணுக்கால்களை
எட்டுமளவிற்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும் போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால்
சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தமது உறுப்புக்களை பிறர் பார்த்து
விடக் கூடாதே! (அதற்காகத் தான் அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.)
(59)باب الصَّلاَةِ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ
பாடம்
: 59
பயணத்திலிருந்து
திரும்பியதும் தொழுவது.
وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ كَانَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ
فَصَلَّى فِيهِ.
நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து
திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம் என கஅப் பின் மாலிக்
(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
٤٤٣حَدَّثَنَا
خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ
بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى
الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ
فَقَالَ " صَلِّ رَكْعَتَيْنِ ". وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ
فَقَضَانِي وَزَادَنِي.
443 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தை முடித்துக் கொண்டு) பள்ளி வாசலில் இருந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம்
நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), (பயணத்திலிருந்து திரும்பிய நீங்கள்)
இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள்.
எனக்கு நபி (ஸல்) அவர்கள்
தரவேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்குத் தந்தார்கள்; மேலதிகமாகவும் தந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஃஸார் (ரஹ்) அவர்கள் முற்பகல் நேரத்தில்
(நான் நபிகளாரிடம் சென்றேன்) என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறிய தாகவும் குறிப்பிட்டார்கள்
என நான் எண்ணுகிறேன்.
(60)باب إِذَا دَخَلَ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ
பாடம்
: 60
பள்ளிவாசலுக்குச்
சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழுவீராக.
٤٤٤حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ
عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ
أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ
أَنْ يَجْلِسَ ".
444 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள்
நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
இதை அபூகத்தாதா (ஹர்ஸ்
பின் ரிப்ஈ) அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment