Tuesday, August 15, 2017

அத்தியாயம் : 8 தொழுகை ஹதீஸ்கள் 445 முதல் 456 வரை



                                                               அத்தியாயம் : 8

                                                                        كتاب الصلاة

                                                                      தொழுகை



(61)باب الْحَدَثِ فِي الْمَسْجِدِ
பாடம் : 61

பள்ளி வாசலில் இருக்கும் போது (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படுதல்.

٤٤٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ ‏"‏‏.‏


445 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(62)باب بُنْيَانِ الْمَسْجِدِ
பாடம் : 62

மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலின் கட்டுமானம்.

وَقَالَ أَبُو سَعِيدٍ كَانَ سَقْفُ الْمَسْجِدِ مِنْ جَرِيدِ النَّخْلِ. وَأَمَرَ عُمَرُ بِبِنَاءِ الْمَسْجِدِ وَقَالَ أَكِنَّ النَّاسَ مِنَ الْمَطَرِ، وَإِيَّاكَ أَنْ تُحَمِّرَ أَوْ تُصَفِّرَ، فَتَفْتِنَ النَّاسَ.

وَقَالَ أَنَسٌ يَتَبَاهَوْنَ بِهَا، ثُمَّ لاَ يَعْمُرُونَهَا إِلاَّ قَلِيلاً.

وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُودُ وَالنَّصَارَى


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இருந்தது. உமர் (ரலி) அவர்களே (தமது ஆட்சிக் காலத்தில்) பள்ளிவாசலை (விரி வாக்கிக்) கட்டும்படி உத்தரவிட்டார்கள். (கட்டடப் பணி நடைபெறும் போது) மக்களை மழை நீரிலிருந்து பாதுகாக்கும் விதமாகக் கட்டுவீராக! சிவப்பு வர்ணமோ மஞ்சள் வர்ணமோ தீட்டவேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன். அதனால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடும் என்று (கட்டடப் பணியாளரிடம்) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு காலம் வரும். அக்காலத்தில்) பள்ளி வாசல்களின் மூலம் மக்கள் பெருமையடித்துக் கொள்வார்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவற்றை மிகக் குறைவாகவே புழங்குவார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

யூத, கிறிஸ்தவர்கள் (தங்கள் ஆலயங்களை) அலங்கரித்தது போன்றே நீங்கள் பள்ளிவாசல்களை அலங்கரிக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி.

٤٤٦حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الْجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّبِنِ وَالْجَرِيدِ، وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ، فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ، وَسَقَفَهُ بِالسَّاجِ‏.


446 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற்கற்களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவு படுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்சமர ஓலை ஆகியவற்றின் மூலமே அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்போன்றே பேரீச்சமரங்களால் அமைத்தார்கள்.

பின்னர் (ஆட்சிப்பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்தார்கள். அதில் அநேக விஷயங்களை அதிகப்படுத்தினார்கள்.

வேலைப்பாடுகள் பொறிக்கப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.

(63)باب التَّعَاوُنِ فِي بِنَاءِ الْمَسْجِدِ
பாடம் : 63

பள்ளிவாசல் கட்டும் பணியில் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பது.

{مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلاَّ اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ}.


குஃப்ரின் மீது தாங்களே சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கும், இந்த இணை வைப்பாளர்களுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிது களைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்) கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்து விட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள்; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள்மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைபிடித்து ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம், இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (9:17,18)

٤٤٧حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، قَالَ لِي ابْنُ عَبَّاسٍ وَلاِبْنِهِ عَلِيٍّ انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ‏.‏ فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً، وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ وَيَقُولُ ‏ "‏ وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الْجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ ‏"‏‏.‏ قَالَ يَقُولُ عَمَّارٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ‏.‏


447 (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான)ன இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ அவர்களிடமும், நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று அவருடைய ஹதீஸைச் செவிமடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேலாடையை எடுத்துப் போர்த்திக் கொண்ட பின் (பலஹதீஸ் களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். கடைசியாக மஸ்ஜிதுந் நபவீ கட்டியது பற்றிய பேச்சுக்கு வந்த போது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) செங்கற்களை ஒவ்வொன்றாக சுமந்து எடுத்துக் கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக சுமந்த வண்ணமிருந்தார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதியைத் தட்டிவிட்டு, பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அம்மார், அவர்களை சொர்க்கத்தி(ற்கு காரணமான தலைமைக்கு கட்டுப்படுவத)ன் பக்கம் அழைக்க, அந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமாக அமையும் நல்ல தலைமைக்கு எதிராகச் செயல் படுவத)ன் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள். (இதைக் கேட்ட உடன்) அம்மார் (ரலி) அவர்கள், அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று சொன்னார்கள்.

(64)باب الاِسْتِعَانَةِ بِالنَّجَّارِ وَالصُّنَّاعِ فِي أَعْوَادِ الْمِنْبَرِ وَالْمَسْجِدِ
பாடம் : 64

சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள் மற்றும் (தொழிற்) கலைஞர்களின் உதவியை நாடுதல்.

٤٤٨حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى امْرَأَةٍ أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ يَعْمَلْ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ‏.‏


448 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (அன்சாரிப்) பெண்ணிடம் ஆளனுப்பி, நான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்ந்து கொள்வதற்கு (ஏற்றவகையில் மேடை தயாரிக்க) எனக்கு மரச்சட்டங்களை செய்து தருமாறு தச்சு வேலை தெரிந்த உன் அடிமையைப் பணிப்பாயாக! என்று கூறினார்கள்.

٤٤٩حَدَّثَنَا خَلاَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ، فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا قَالَ ‏ "‏ إِنْ شِئْتِ ‏"‏‏.‏ فَعَمِلَتِ الْمِنْبَرَ‏.


449 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (அன்சாரிப்) பெண்மணி, அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஓர் அடிமை இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்கு செய்து தரலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்) என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.

(65)باب مَنْ بَنَى مَسْجِدًا
பாடம் : 65

பள்ளி வாசல் கட்டியவர் (அடையப் பெறும் வெகுமதிகள்).


٤٥٠حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ بَنَى مَسْجِدًا ـ قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ‏"‏‏.


450 உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின்காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்ட போது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ) என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன்.

(66)باب يَأْخُذُ بِنُصُولِ النَّبْلِ إِذَا مَرَّ فِي الْمَسْجِدِ
பாடம் : 66

பள்ளியினுள் செல்லும் போது (கையில் அம்புகளை வைத்திருப்பவர்) அம்பின் முனைப் பகுதியை பிடித்துக் கொள்ள வேண்டும்.

٤٥١حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَمْسِكْ بِنِصَالِهَا ‏"‏‏.


451 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் முனைகளைப் பிடித்துக் கொள்! என்று சொன்னார்கள்.

(67)باب الْمُرُورِ فِي الْمَسْجِدِ
பாடம் : 67

(அம்பின் முனையைப் பிடித்துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லலாம்.

٤٥٢حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ مَرَّ فِي شَىْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا ‏"‏‏.‏


452 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அம்புடன் நமது பள்ளி வாசல்களிலோ நமது கடைவீதிகளிலோ நடந்து செல்பவர் அதன் முனையைப் பிடித்துக் கொள்ளட்டும்; தமது கையால் எந்த முஸ்-மையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்..

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(68)باب الشِّعْرِ فِي الْمَسْجِدِ
பாடம் : 68

பள்ளிவாசலில் கவிபாடுதல்.

٤٥٣حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏"‏‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ‏.‏


453 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பள்ளிவாசலுக்குள் கவிபாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்த போது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் மூலம்) துணைபுரிவாயாக! என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் (செவியுற்றிருக்கிறேன்) என்று பதிலளித்தார்கள்.

(69)باب أَصْحَابِ الْحِرَابِ فِي الْمَسْجِدِ
பாடம் : 69

பள்ளிவாசலில் ஈட்டி வீரர்கள் (வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது).

٤٥٤حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي وَالحَبَشَةُ يَلْعَبُونَ فِي المَسْجِدِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ»

454 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாசலில் நின்று கொண்டிருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீர விளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன். அவர்களின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டிருந்தார்கள்.

٤٥٥زَادَ إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ»


455 இப்ராஹீம் பின் முன்திர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், அபிசீனியர்கள் தமது ஈட்டிகளால் (வீரவிளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களை (இவ்வாறு நிற்பதைக்) கண்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

(70)باب ذِكْرِ الْبَيْعِ وَالشِّرَاءِ عَلَى الْمِنْبَرِ فِي الْمَسْجِدِ
பாடம் : 70

பள்ளிவாசலில் உள்ள சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்பது வாங்குவது பற்றிப் பேசுவது.

٤٥٦حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الْوَلاَءُ لِي‏.‏ وَقَالَ أَهْلُهَا إِنْ شِئْتِ أَعْطَيْتِهَا مَا بَقِيَ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً إِنْ شِئْتِ أَعْتَقْتِهَا وَيَكُونُ الْوَلاَءُ لَنَا ـ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَّرَتْهُ ذَلِكَ فَقَالَ ‏"‏ ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ ‏"‏‏.‏ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَصَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ فَقَالَ ‏"‏ مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ ‏"‏‏.‏ قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى وَعَبْدُ الْوَهَّابِ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ‏.‏ وَقَالَ جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عَمْرَةَ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ‏.‏ رَوَاهُ مَالِكٌ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ أَنَّ بَرِيرَةَ‏.‏ وَلَمْ يَذْكُرْ صَعِدَ الْمِنْبَرَ‏.
456 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக உதவி கோரியபடி) என்னிடம் வந்தார். நான், நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்திவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகிவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் பரீராவின் எஜமானர்கள் என்னிடம், நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டிய பாக்கித் தொகையைத் தந்து (பரீராவை விடுதலை செய்து) கொள்ளலாம் என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கையில் நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்து கொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகி விடவேண்டும். என (பரீராவின் எஜமானர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்த போது நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், அவரை வாங்கி விடுதலை செய்து விடு! ஏனெனில் வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலிலுள்ள) சொற்பொழிவு மேடை மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்), மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்து விட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! எவர் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று குறிப்பிட்டார்கள்.

இன்னும் மூன்று அறிவிப்பாளர்தொடர் வழியாக இந்த ஹதீஸ் வந்துள்ளது.

மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் சொற்பொழிவு மேடை மீது நபி (ஸல்) அவர்கள் ஏறியது பற்றியக் குறிப்பு இல்லை.


No comments:

Post a Comment