அத்தியாயம் : 8
كتاب الصلاة
தொழுகை
(71)باب التَّقَاضِي وَالْمُلاَزَمَةِ فِي الْمَسْجِدِ
பாடம்
: 71
(பள்ளி வாசலுக்குள் கடனாளியிடம்) கடனைக் கேட்பதும், அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும்.
٤٥٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ
أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ
مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ
عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى
كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى " يَا كَعْبُ ". قَالَ
لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا
". وَأَوْمَأَ إِلَيْهِ أَىِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا
رَسُولَ اللَّهِ. قَالَ " قُمْ فَاقْضِهِ ".
457 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத்
அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில்
வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு)
எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக்
கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும்
நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, கஅப்! என்றழைத்தார்கள். நான், இதோ வந்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்து விடு! என்று கூறி பாதியளவு கடனைக்
குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) எழுந்து சென்று கடனை அடைப்பீராக! என்று
சொன்னார்கள்.
(72)باب كَنْسِ الْمَسْجِدِ وَالْتِقَاطِ الْخِرَقِ
وَالْقَذَى وَالْعِيدَانِ
பாடம்
: 72
பள்ளிவாசலைப்
பெருக்குவதும் துண்டுத் துணிகள், குப்பை, குச்சிகள் (கிடந்தால் அவற்றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும்.
٤٥٨حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ،
عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَسْوَدَ ـ أَوِ
امْرَأَةً سَوْدَاءَ ـ كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ
صلى الله عليه وسلم عَنْهُ فَقَالُوا مَاتَ. قَالَ " أَفَلاَ كُنْتُمْ
آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ ". ـ أَوْ قَالَ قَبْرِهَا
ـ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
458 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்பு ஆண் அல்லது ஒரு
கறுப்புப் பெண் இறந்து விட்டார். (அவர் இறந்த செய்தி நபி ஸல் அவர்களுக்குத் தெரியாமலிருந்தது.)
ஆகவே அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், அவர் இறந்து விட்டார் எனக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? அவருடைய அடக்கத்தலத்தை அல்லது அந்தப்
பெண்மணியின் அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச்
சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.
(73)باب تَحْرِيمِ تِجَارَةِ الْخَمْرِ فِي الْمَسْجِدِ
பாடம்
: 73
மதுபானங்கள்
விற்பது விலக்கப்பட்டது (ஹராம்) என்று பள்ளிவாசலில் அறிவிப்பது.
٤٥٩حَدَّثَنَا
عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ،
عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَ الآيَاتُ مِنْ سُورَةِ الْبَقَرَةِ فِي
الرِّبَا، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَسْجِدِ، فَقَرَأَهُنَّ
عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ تِجَارَةَ الْخَمْرِ.
459 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்பகரா அத்தியாத்தின்
(இறுதி) வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலுக்கு
புறப்பட்டு வந்து அவற்றை மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மது வியாபாரத்தைத்
தடைசெய்தார்கள்.
(74)باب الْخَدَمِ لِلْمَسْجِدِ
பாடம்
: 74
பள்ளிவாசலுக்கென
சேவகர்கள் இருப்பது.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي
مُحَرَّرًا} لِلْمَسْجِدِ يَخْدُمُهُ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும்
அர்ப்பணிக்க நான் நேர்ந்து கொள்கிறேன் எனும் (3:35 ஆவது) வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல்
இந்த மஸ்ஜிது(ல் அக்ஸா பள்ளிவாலு)க்கு சேவகம் செய்வதற்காக (நேர்ந்து கொள்கிறேன்) என்று
கூறினார்கள்.
٤٦٠حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ وَاقِدٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي
رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً ـ أَوْ رَجُلاً ـ كَانَتْ
تَقُمُّ الْمَسْجِدَ ـ وَلاَ أُرَاهُ إِلاَّ امْرَأَةً ـ فَذَكَرَ حَدِيثَ
النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهِ.
460 அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை ஒரு ஆண் அல்லது ஒரு பெண் பெருக்குபவராக இருந்தார்.
என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். - ஒரு பெண்மணி என்று அவர்கள் கூறியதாகவே
நான் கருது கிறேன்.- பிறகு அவரது அடக்கத்தலத்தில் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைத்
தொழுகை தொழுதது பற்றிய (மேற்கண்ட 458 ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.
(75)باب الأَسِيرِ أَوِ الْغَرِيمِ يُرْبَطُ فِي الْمَسْجِدِ
பாடம்
: 75
கைதிகளையும்
குற்றவாளிகளையும் பள்ளிவாசலில் கட்டிவைப்பது.
٤٦١حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ
جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ عِفْرِيتًا مِنَ
الْجِنِّ تَفَلَّتَ عَلَىَّ الْبَارِحَةَ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ لِيَقْطَعَ
عَلَىَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ
إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا
إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا
لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي ". قَالَ رَوْحٌ فَرَدَّهُ
خَاسِئًا.
461 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று
வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு
சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந்
நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா!
எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35)
என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள்
செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.
ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்)
அவர்களின் அறிவிப்பில் ஆகவே, அதை நான் இழிந்த நிலையில் விரட்டி அடித்து விட்டேன் என்றும் இடம்பெற்றுள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(76)بَابُ الاِغْتِسَالِ إِذَا أَسْلَمَ، وَرَبْطِ الأَسِيرِ
أَيْضًا فِي الْمَسْجِدِ
பாடம்
: 76
இஸ்லாத்தைத்
தழுவும் போது குளிப்பதும், பள்ளிவாசலில் கைதியைக்
கட்டிவைப்பதும்.
وَكَانَ شُرَيْحٌ يَأْمُرُ الْغَرِيمَ أَنْ يُحْبَسَ
إِلَى سَارِيَةِ الْمَسْجِدِ.
(கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் ஹர்ஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள், குற்றவாளியைப் பள்ளிவாசலின் தூணில்
கட்டிவைக்குமாறு ஆணையிடுவார்கள்.
٤٦٢حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنَا
سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَ النَّبِيُّ
صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي
حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ
سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ
" أَطْلِقُوا ثُمَامَةَ ". فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ
الْمَسْجِدِ، فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ
إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ.
462 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதவது:
நபி (ஸல்) அவர்கள் நஜ்த்
பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா
குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக்
கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் (மக்கள்)
கட்டிவைத்தனர். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள்
என்று கூறினார்கள். அவர் பள்ளி வாசலுக்கு அருகிலிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச்
சொந்தமானன பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளிவாசலுக்குள் வந்து
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன் என்றார்.
(77)باب الْخَيْمَةِ فِي الْمَسْجِدِ لِلْمَرْضَى
وَغَيْرِهِمْ
பாடம்
: 77
நோயாளிகளுக்காகவும்
மற்றவர்களுக்காகவும் பள்ளிவாசலில் கூடாரம் அமைப்பது.
٤٦٣حَدَّثَنَا
زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ
حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُصِيبَ سَعْدٌ يَوْمَ
الْخَنْدَقِ فِي الأَكْحَلِ، فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْمَةً فِي
الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ، فَلَمْ يَرُعْهُمْ ـ وَفِي الْمَسْجِدِ
خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ ـ إِلاَّ الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ فَقَالُوا يَا
أَهْلَ الْخَيْمَةِ، مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ فَإِذَا سَعْدٌ
يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ فِيهَا.
463 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது சஅத்
பின் முஆத் (ரலி) அவர்கள் நாடி நரம்பில் (ஹிப்பான் பின் அரிஃகா என்பவனால்) தாக்குண்டார்கள்.
அப்போது அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்
நபவீ) பள்ளி வாசலிலேயே (அவருக்காக) கூடாரமொன்றை அமைத்தார்கள். (அவருடைய கூடாரத்திற்கு
அருகில்) கூடாரம் இட்டிருந்த பனூ கிஃபார் குலத்தாரை நோக்கி வழிந்தோடிய சஅத் (ரலி) அவர்களின்
இரத்தம் அவர்களை திடுக்கிடச் செய்து விட்டது. அப்போது மக்கள், கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து
எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டே, அங்கே பார்த்த போது, தமது காயத்திலிருந்து இரத்தம் வழிய
சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அ(ந்த நோயிலேயே அல்லது அந்த கூடாரத்) திலேயே சஅத்
(ரலி) அவர்கள் இறந்தார்கள்.
(78)باب إِدْخَالِ الْبَعِيرِ فِي الْمَسْجِدِ لِلْعِلَّةِ
பாடம்
: 78
தேவை நிமித்தம்
ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டுவருவது.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ طَافَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعِيرٍ.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்
மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள் என்று இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
٤٦٤حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي
سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم أَنِّي أَشْتَكِي. قَالَ " طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ
وَأَنْتِ رَاكِبَةٌ ". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ.
464 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றுள்ளேன் என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து
(கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக! என்று சொன்னார்கள். அவ்வாறே நான், சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாத்தை ஓதியவாறு கஅபாவின்
ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.
(79)باب
பாடம்
: 79
٤٦٥حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ
حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ رَجُلَيْنِ،
مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى
الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ
يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ
مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ.
465 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில்
இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு)
நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி
வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும்
வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.
(80)باب الْخَوْخَةِ وَالْمَمَرِّ فِي الْمَسْجِدِ
பாடம்
: 80
பள்ளிவாசலில்
நுழைவாயில் அமைப்பதும் நடைபாதை ஏற்படுத்துவதும்.
٤٦٦حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنَا أَبُو
النَّضْرِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ
" إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ،
فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ ". فَبَكَى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ
فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ
عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ،
فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْعَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ
أَعْلَمَنَا. قَالَ " يَا أَبَا بَكْرٍ لاَ تَبْكِ، إِنَّ أَمَنَّ
النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ
مُتَّخِذًا خَلِيلاً مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ
الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ باب إِلاَّ سُدَّ
إِلاَّ باب أَبِي بَكْرٍ ".
466 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு
முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த
உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
படி சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக்
கொண்டார், என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம்
அல்லது தன்னிடமிருப்பது - ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம்
அளித்த போது அ(ந்த அடியாரன)வர், அல்லாஹ் விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்.? என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள்தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி)
அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக
இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று
கூறிவிட்டு தன் நட்பிலும் தனது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர்
அபுபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்
கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும்
அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான்
செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்கவேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர என்று சொன்னார்கள்.
٤٦٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ
جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ
عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى
الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " إِنَّهُ
لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَىَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي
بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلاً
لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ،
سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرَ خَوْخَةِ أَبِي
بَكْرٍ ".
467 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப்
போட்டவர்களாக (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்)
மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு, தன் நட்பிலும், தனது செல்வத்திலும் எனக்கு அபூபக்ரைவிட
வேறெவரும் பேருதவி புரிந்தவர் கிடையாது. (இறைவனைத் தவிர) மக்களில் ஒருவரை நான் (என்)
உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே உற்ற நண்பராக ஆக்கிக்
கொண்டிருப்பேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதைவிட) இஸ்லாமிய அடிப்படையிலான
நேசமே சிறந்ததாகும் என்று கூறி விட்டு, இந்தப் பள்ளிவாசலில் என்னிடம் வருவதற்காக
உள்ள எல்லா நுழைவாயில் (சுவர்ப்புழை)களையும் அடைத்து விடுங்கள்; அபூபக்ரின் நுழைவாயிலைத் தவிர என்று
கூறினார்கள்.
No comments:
Post a Comment