Wednesday, August 16, 2017

அத்தியாயம் : 8 தொழுகை ஹதீஸ்கள் 468 முதல் 520 வரை



                                                                  அத்தியாயம் : 8

                                                                        كتاب الصلاة

                                                                      தொழுகை




(81)باب الأَبْوَابِ وَالْغَلَقِ لِلْكَعْبَةِ وَالْمَسَاجِدِ
பாடம் : 81

கஅபாவுக்கும் இதர இறையாலயங்களுக்கும் கதவுகள் பூட்டுகள் அமைத்தல்.

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قَالَ لِي ابْنُ أَبِي مُلَيْكَةَ يَا عَبْدَ الْمَلِكِ، لَوْ رَأَيْتَ مَسَاجِدَ ابْنِ عَبَّاسٍ وَأَبْوَابَهَا.

இப்னு ஜுரைஜ் (அப்துல் மாலிக் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் இப்னு அபீ முலைக்கா ஸுபைர் பின் அப்தில்லாஹ் அத்தைமீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது பள்ளிவாசல்களையும் அவற்றின் கதவுகளையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே! (அவற்றின் தூய்மையையும் உறுதியையும் கண்டு வியந்து போயிருப்பீர்கள்) என்றார்கள்.

٤٦٨حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَ مَكَّةَ، فَدَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ، فَفَتَحَ الْبَابَ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَبِلاَلٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، ثُمَّ أُغْلِقَ الْبَابُ، فَلَبِثَ فِيهِ سَاعَةً ثُمَّ خَرَجُوا‏.‏ قَالَ ابْنُ عُمَرَ فَبَدَرْتُ فَسَأَلْتُ بِلاَلاً فَقَالَ صَلَّى فِيهِ‏.‏ فَقُلْتُ فِي أَىٍّ قَالَ بَيْنَ الأُسْطُوَانَتَيْنِ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ فَذَهَبَ عَلَىَّ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى‏.‏

468 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவிற்கு வந்த போது உஸ்மான் பின் தல்ஹா அவர்களை வரச் சொன்னார்கள். அவர் (வந்து) இறையில்லம் கஅபாவின் கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும், பிலால், உசாமா பின் ஸைத், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டனர். அதில் சிறிது நேரம் இருந்து விட்டு பிறகு அனைவரும் வெளியே வந்தனர். நான் விரைந்து வந்து பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா? என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், (ஆம்) அதனுள் தொழுதார்கள் என்று பதிலளித்தார்கள். எ(ந்தப் பகு)தியில் தொழுதார்கள்? என்று கேட்தற்கு இரண்டு தூண்களுக்கிடையே என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள் என்று கேட்காமல் போய்விட்டேன்.

(82)باب دُخُولِ الْمُشْرِكِ الْمَسْجِدَ
பாடம் : 82

இணைவைப்பாளர் பள்ளிவாசலில் நுழைவது.

٤٦٩حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ‏.‏


469 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படைப் பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தனர்.

(83)باب رَفْعِ الصَّوْتِ فِي الْمَسَاجِدِ
பாடம் : 83

பள்ளிவாசலில் உரத்த குரலில் (வீண்பேச்சு) பேசுவது.

٤٧٠حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ‏.‏ فَجِئْتُهُ بِهِمَا‏.‏ قَالَ مَنْ أَنْتُمَا ـ أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ‏.‏ قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

470 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என் மீது பொடிக் கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்த போது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவருடனும் உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்), நீங்கள் யார்? அல்லது நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், நாங்கள் தாயிஃப்வாசிகள் என்று பதிலளித் தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், (நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய் விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந்திருந்தால் நிச்சய மாக நான் உங்கள் இருவரையும் (சவுக்கால்) நையப் புடைந்திருப்பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதரது பள்ளி வாசலில் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்னார்கள்.




٤٧١حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى ‏"‏ يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ ‏"‏‏.‏ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ‏.‏ قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ قُمْ فَاقْضِهِ ‏"‏‏.‏


471 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தரவேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கி, கஅப் பின் மாலிக்! கஅப்! என்று அழைத்தார்கள். உடனே நான், இதோ வந்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அப்போது அவர்கள் உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக என்று சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி), எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள் என்றார்கள்.

(84)باب الْحِلَقِ وَالْجُلُوسِ فِي الْمَسْجِدِ
பாடம் : 84

பள்ளிவாசலில் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்.

٤٧٢حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الْمِنْبَرِ مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ قَالَ ‏ "‏ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى ‏"‏‏.‏ وَإِنَّهُ كَانَ يَقُولُ اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِهِ‏.


472 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர், இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். (அதன் நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (கடைசியில்) ஒரு ரக்அத் தொழுது கொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள், உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள் ளுங்கள்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே பணித்தார்கள் என்று கூறுவார்கள்.


٤٧٣حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ ‏ "‏ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ ‏"‏‏.‏ قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ‏.‏

473 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு) உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, இரவுத் தொழுகை எவ்வாறு (தொழவேண்டும்)? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்; சுப்ஹுத் தொழுகையை (அதன் நேரம் நுழைந்து விட்டது பற்றி) நீங்கள் அஞ்சினால் (கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது முடித்தவற்றை அது ஒற்றையாக அக்கிவிடும் என்றார்கள்.

٤٧٤حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَأَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فَجَلَسَ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَلاَ أُخْبِرُكُمْ عَنِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ‏"‏‏.‏

474 அபூவாக்கித் அல்ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (மக்களுடன்) இருந்து கொண்டிருந்த போது மூன்று பேர் (அவர்களை நோக்கி) வந்தனர். (அவர்களில்) இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். பிறகு அவ்விருவரில் ஒருவரோ (வட்டமாக அமர்ந்திருந்த அந்த அவையில்) ஓர் இடைவெளியிலிருப்பதைக் கண்டு அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ (வெட்கப்பட்டுக் கொண்டு) அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவரோ திரும்பிச் சென்றுவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

(சற்று முன்னர் வந்த) அந்த மூன்று பேரைப் பற்றி உங்களுக்கு நான் சொல் லட்டுமா?

அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்வின் (அருளின்) அளவில் ஒதுங்கினார்; அல்லாஹ் வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றொருவரோ வெட்கப்பட்டு (அவையின் கடைக் கோடியில் உட்கார்ந்து) கொண்டார். எனவே அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (கருணைக் கண் காட்ட) வெட்கப்பட்டான்.

மூன்றாமவரோ (காரணமின்றி கல்வி அவையை) அலட்சியப்படுத்தினார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்து விட்டான்.

(85)باب الاِسْتِلْقَاءِ فِي الْمَسْجِدِ وَمَدِّ الرِّجْلِ
பாடம் : 85

பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்.

٤٧٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى‏.‏ وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كَانَ عُمَرُ وَعُثْمَانُ يَفْعَلاَنِ ذَلِكَ‏.‏


475 அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு (கீழாடை விலகாதவாறு) மல்லாந்து படுத்து (ஓய்வெடுத்துக்) கொண்டிருந்ததை நான் கண்டேன்.

சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

உமர் (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்.

(86)باب الْمَسْجِدِ يَكُونُ فِي الطَّرِيقِ مِنْ غَيْرِ ضَرَرٍ بِالنَّاسِ
பாடம் : 86

மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதையில் பள்ளிவாசல் அமையவேண்டும்.

وَبِهِ قَالَ الْحَسَنُ وَأَيُّوبُ وَمَالِكٌ


இதுவே ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.

٤٧٦حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَقِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ، وَأَبْنَاؤُهُمْ يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ‏.‏


476 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 என் பெற்றோர் (அபூபக்ர்-உம்முரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரு பக்ககங்ளான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது இனைவைப்பாளர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக் கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணைவைப்பாளர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.

(87)باب الصَّلاَةِ فِي مَسْجِدِ السُّوقِ
பாடம் : 87

கடைத்தெருவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவது.

وَصَلَّى ابْنُ عَوْنٍ فِي مَسْجِدٍ فِي دَارٍ يُغْلَقُ عَلَيْهِمُ الْبَابُ


கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாசலில் இப்னுஅவ்ன் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.

٤٧٧حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ ‏"‏‏.‏


477 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.

(88)باب تَشْبِيكِ الأَصَابِعِ فِي الْمَسْجِدِ وَغَيْرِهِ
பாடம் : 88

பள்ளிவாசல் முதலியவற்றில் இரு கைவிரல்களை (ஒன்றுடனொன்றை) கோத்துக் கொள்வது (குற்றமன்று).
     ٤٧٨, ٤٧٩
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرٍ، حَدَّثَنَا عَاصِمٌ، حَدَّثَنَا وَاقِدٌ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَوِ ابْنِ عَمْرٍو شَبَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَابِعَهُ‏

478,479 இப்னு உமர் அல்லது இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோத்துக் காட்டினார்கள்.

٤٨٠وَقَالَ عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، سَمِعْتُ هَذَا الْحَدِيثَ، مِنْ أَبِي فَلَمْ أَحْفَظْهُ، فَقَوَّمَهُ لِي وَاقِدٌ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبِي وَهُوَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا ‏"‏‏.‏


480 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ஸல் அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோத்துக் காட்டி) அப்துல்லாஹ் பின் அம்ரே! மக்களில் மகா மட்டமானவர் களுடன் இப்படி நீ வாழநேர்ந்தால் உனது நிலை எப்படியிருக்கும்? என்று கேட்டார்கள்.




٤٨١حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا ‏"‏‏.‏ وَشَبَّكَ أَصَابِعَهُ‏.‏


481 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٤٨٢حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ ـ قَالَ ابْنُ سِيرِينَ سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا ـ قَالَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ فَاتَّكَأَ عَلَيْهَا، كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ فَقَالُوا قَصُرَتِ الصَّلاَةُ‏.‏ وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ قَالَ ‏"‏ لَمْ أَنْسَ، وَلَمْ تُقْصَرْ ‏"‏‏.‏ فَقَالَ ‏"‏ أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ ‏"‏‏.‏ فَقَالُوا نَعَمْ‏.‏ فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ‏.‏ فَرُبَّمَا سَأَلُوهُ ثُمَّ سَلَّمَ فَيَقُولُ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ‏.‏


482 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகைகளில் ஒன்றை (லுஹ்ர்/அஸ்ர்) தொழுவித்தார்கள். - (இதன் அறிவிப்பாளரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் அதை மறந்து விட்டேன்.- (நான்கு ரக்அத்துடைய அத்தொழுகையில்) எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுவித்து விட்டு சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே எழுந்து பள்ளிக்குள் அகலவாட்டில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று ஏதோ கோபத்திலிருப்பவர்போன்று அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்து, கைவிரல்களை பின்னிக் கோத்துக் கொண்டார்கள். மேலும் தமது வலக் கன்னத்தை இடது புறங்கையின் மீது வைத்துக் கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்ளியின் வாயில்கள் வழியாக வெளியேறிய போது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது (போலும்) என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவர் (மரியாதை கலந்த) பயத்தில் இருந்தனர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இருகைகளுடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் துல்யதைன் (இரு கையாளர்) என்று அழைக்கப்படு வார். அவர், நீங்கள் மறந்து விட்டீர்களா, அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவுமில்லை என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), துல்யதைன் சொல்வது சரிதானா? என்று கேட்க, மக்கள் ஆம் (சரிதான்) என்று பதிலளித்தனர்.

உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று விடுபட்டதைத் தொழுது சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) சொல்லி (வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வது போன்று அல்லது அதைவிட நெடிய (நேரம்) சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தித் தக்பீர் சொன்னார்கள். பின்னர் தக்பீர் சொல்லி (வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்று அல்லது அதைவிட நெடிய (நேரம்) (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள்.

மக்கள் சில சந்தர்ப்பங்களில் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், (கடைசியாக நபி -ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று (அபூஹுரைரா தமது அறிவிப்பில்) கூறினார்களா? என்று கேட்பார்கள். அதற்கு முஹம்மத்

பின் சீரீன் (ரஹ்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் அவர்களிடமிருந்து எமக் கெட்டிய ஹதீஸில்தான் (மறதிக்குரிய சஜ்தா செய்த) பின்னர் நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. (அபூஹுரைராவின் அறிவிப்பில் அவ்வாறு இல்லை) என்று பதிலளிப்பார்கள்.

(89)بَابُ الْمَسَاجِدِ الَّتِي عَلَى طُرُقِ الْمَدِينَةِ
பாடம் : 89

(மக்காவிலிருந்து) மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும்.

وَالْمَوَاضِعِ الَّتِي صَلَّى فِيهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

٤٨٣حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا، وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ‏.‏ وَحَدَّثَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ‏.‏ وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلاَّ وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلاَّ أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ‏.



483 மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் சாலையோரத்தில் அமைந்த சில இடங்களைத் தேடிப்பிடித்து அங்கே தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர்-ரலி) அவர்கள் அந்த இடங்களில் தொழுதுவந்ததாகவும் அவ்விடங்களில் நபி (ஸல்) அவர்கள் தொழுததை தம் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்விடங்களில் தொழுது வந்ததாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறியுள்ளார்கள். சாலிம் (ரஹ்) அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்ட போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதன அனைத்து இடங்களைப் பற்றி நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். என்றாலும் (மதீனாவிலிருந்து இரண்டு நாள் தொலை தூரத்திலிருந்த) ஷரஃபுர் ரவ்ஹா எனும் சிற்றூரில் அமைந்த பள்ளிவாசல் விஷயத்தில் இருவரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர்.

٤٨٤حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي الْحُلَيْفَةِ حِينَ يَعْتَمِرُ، وَفِي حَجَّتِهِ حِينَ حَجَّ، تَحْتَ سَمُرَةٍ فِي مَوْضِعِ الْمَسْجِدِ الَّذِي بِذِي الْحُلَيْفَةِ، وَكَانَ إِذَا رَجَعَ مِنْ غَزْوٍ كَانَ فِي تِلْكَ الطَّرِيقِ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ هَبَطَ مِنْ بَطْنِ وَادٍ، فَإِذَا ظَهَرَ مِنْ بَطْنِ وَادٍ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي عَلَى شَفِيرِ الْوَادِي الشَّرْقِيَّةِ، فَعَرَّسَ ثَمَّ حَتَّى يُصْبِحَ، لَيْسَ عِنْدَ الْمَسْجِدِ الَّذِي بِحِجَارَةٍ، وَلاَ عَلَى الأَكَمَةِ الَّتِي عَلَيْهَا الْمَسْجِدُ، كَانَ ثَمَّ خَلِيجٌ يُصَلِّي عَبْدُ اللَّهِ عِنْدَهُ، فِي بَطْنِهِ كُثُبٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَّ يُصَلِّي، فَدَحَا السَّيْلُ فِيهِ بِالْبَطْحَاءِ حَتَّى دَفَنَ ذَلِكَ الْمَكَانَ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِيهِ‏.


484 (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக (மக்கா செல்லும் போது) துல்ஹுலைஃபா எனும் இடத்தில் அமைந்துள்ள கருவேல மரமொன்றிற்குக் கீழே துல்ஹுலைஃபா பள்ளிவாசல் (இன்று) அமைந்துள்ள இடத்தில் இறங்கி இளைப்பாறுவார்கள். தமது (விடைபெறும்) ஹஜ்ஜிற்காகச் சென்றபோதும் (இங்கு) இறங்கி இளைப்பாறினார்கள்.

அறப்போரோ அல்லது ஹஜ்ஜோ உம்ராவோ செய்து விட்டு அந்தப் பாதையில் திரும்பி வ(ர நேர்)ந்தால் பத்னுல்வாதீ (அகீக்) பள்ளத்தாக்கு வழியாக இறங்குவார்கள். பத்னுல் வாதீ பள்ளத் தாக்கைத் தாண்டியதும் அதன் கரையிலுள்ள கிழக்கு பத்ஹாவில் தமது ஒட்டகத்தைப்படுக்க வைத்து அதிகாலையாகும் வரை ஒய்வெடுப்பார்கள்.

அந்த இடம், கற்களாலான இந்தப் பள்ளிவாசலின் அருகிலுமில்லை; பள்ளிவாசல் அமைந்துள்ள மேட்டிலுமில்லை.

அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அதன் அருகில் அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் தொழுவார்கள். அதன் நடுவே மணற்குவியல் இருந்தது. அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) பத்ஹாவிலுள்ள அந்த இடத்தில் வெள்ளம் புகுந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதுவந்த அந்த இடத்தை புதையுண்டுவிடச் செய்து விட்டது.

٤٨٥وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى حَيْثُ الْمَسْجِدُ الصَّغِيرُ الَّذِي دُونَ الْمَسْجِدِ الَّذِي بِشَرَفِ الرَّوْحَاءِ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ يَعْلَمُ الْمَكَانَ الَّذِي كَانَ صَلَّى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ثَمَّ عَنْ يَمِينِكَ حِينَ تَقُومُ فِي الْمَسْجِدِ تُصَلِّي، وَذَلِكَ الْمَسْجِدُ عَلَى حَافَةِ الطَّرِيقِ الْيُمْنَى، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، بَيْنَهُ وَبَيْنَ الْمَسْجِدِ الأَكْبَرِ رَمْيَةٌ بِحَجَرٍ أَوْ نَحْوُ ذَلِكَ‏.‏


485 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷரஃபுர் ரவ்ஹா எனும் சிற்றூரில் உள்ள பெரிய பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள சின்னப் பள்ளி வாசல் அமைந்திருக்கும் இடத்தில் தொழுதி ருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறிவிட்டு , அந்த இடத்தின் அடையாளம் பற்றிக் கூறுகையில், (நீ மதினாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில் பாதையின் வலப் பக்கம் அமைந்த பள்ளியில் (கிப்லாநோக்கி) நீ தொழுது கொண்டிருக்கும் போது அந்த இடம் உனது வலப் பக்கத்தில் இருக்கும். (நபி ஸல் அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் அந்தப் பெரிய பள்ளிவாசலுக்கும் இடையே கல்லெறியும் தூரம்தான் உள்ளது என்றோ அல்லது இதே கருத்திலமைந்த வேறொரு வார்த்தையோ குறிப்பிட்டார்கள்.

٤٨٦وَأَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُصَلِّي إِلَى الْعِرْقِ الَّذِي عِنْدَ مُنْصَرَفِ الرَّوْحَاءِ، وَذَلِكَ الْعِرْقُ انْتِهَاءُ طَرَفِهِ عَلَى حَافَةِ الطَّرِيقِ، دُونَ الْمَسْجِدِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْمُنْصَرَفِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ‏.‏ وَقَدِ ابْتُنِيَ ثَمَّ مَسْجِدٌ، فَلَمْ يَكُنْ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِي ذَلِكَ الْمَسْجِدِ، كَانَ يَتْرُكُهُ عَنْ يَسَارِهِ وَوَرَاءَهُ، وَيُصَلِّي أَمَامَهُ إِلَى الْعِرْقِ نَفْسِهِ، وَكَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الرَّوْحَاءِ، فَلاَ يُصَلِّي الظُّهْرَ حَتَّى يَأْتِيَ ذَلِكَ الْمَكَانَ فَيُصَلِّي فِيهِ الظُّهْرَ، وَإِذَا أَقْبَلَ مِنْ مَكَّةَ فَإِنْ مَرَّ بِهِ قَبْلَ الصُّبْحِ بِسَاعَةٍ أَوْ مِنْ آخِرِ السَّحَرِ عَرَّسَ حَتَّى يُصَلِّيَ بِهَا الصُّبْحَ‏.‏



486 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இரக் (இரக்குல் ழப்யா எனும் பள்ளத்தாக்கு அமைந்துள்ள) பகுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அந்த இரக் பள்ளத்தாக்கின் எல்லை நீ (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில், ரவ்ஹா கிராமத்தின் எல்லைக்கும் அங்குள்ள பள்ளிவாசலுக்கும் மத்தியில் அமைந்துள்ள சாலையில் முடிவடைகிறது. (அந்த இரக் பள்ளத்தாக்கில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.)

அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பள்ளிவாசலில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவதில்லை. தமது இடப் புறத்தில் தமக்குப் பின்னால் அந்தப் பள்ளிவாசல் இருக்கும் விதத்தில் அந்தப் பள்ளியைவிட (சற்று) முன்னால் நின்று கொண்டு அந்த இரக் பள்ளத்தாக்கை நோக்கிய வாறு அவர்கள் தொழுவார்கள். ரவ்ஹா எனும் கிராமத்திலிருந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்குப்) புறப்பட்டுச் செல்லும் போது (இரக் எனும்) அந்த இடத்தைச் சென்றடையும் முன் அவர்கள் லுஹ்ர் தொழுகையைத் தொழ மாட்டார்கள். இரக் வந்ததும்) அங்குதான் லுஹ்ர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பி வரும் போது சுப்ஹு நேரத்திற்கு சற்று முன்னர் அல்லது சஹர் நேரத்தின் கடைசிப் பகுதியில் அந்த (இரக் எனும்) இடத்தைக் கடக்க நேரிட்டால் அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள். (நேரம் வந்ததும்) அந்த இடத்தில் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.




٤٨٧وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ تَحْتَ سَرْحَةٍ ضَخْمَةٍ دُونَ الرُّوَيْثَةِ عَنْ يَمِينِ الطَّرِيقِ، وَوِجَاهَ الطَّرِيقِ فِي مَكَانٍ بَطْحٍ سَهْلٍ، حَتَّى يُفْضِيَ مِنْ أَكَمَةٍ دُوَيْنَ بَرِيدِ الرُّوَيْثَةِ بِمِيلَيْنِ، وَقَدِ انْكَسَرَ أَعْلاَهَا، فَانْثَنَى فِي جَوْفِهَا، وَهِيَ قَائِمَةٌ عَلَى سَاقٍ، وَفِي سَاقِهَا كُثُبٌ كَثِيرَةٌ‏.‏


487 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்கா செல்லும்) சாலையின் எதிர்த் திசையில் வலப் புறம் அமைந்துள்ள ருவைஸா எனும் சிற்றூருக்கு சற்று அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தினடியில் இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் விசாலமானதாகவும் பள்ளமான தாகவும் இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் தங்கிய அந்த இடம் அவ்வூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அந்த மரத்தின் மேற்கொப்புகள் முறிந்து அதன் மையப்பகுதிக்குள் மடங்கிக் கிடந்தன. அதன் அடிமரம் நின்று கொண் டிருந்தது, அந்த அடி மரத்தில் மணல் மிகுதியாக விந்து கிடந்தது.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٤٨٨وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي طَرَفِ تَلْعَةٍ مِنْ وَرَاءِ الْعَرْجِ وَأَنْتَ ذَاهِبٌ إِلَى هَضْبَةٍ عِنْدَ ذَلِكَ الْمَسْجِدِ قَبْرَانِ أَوْ ثَلاَثَةٌ، عَلَى الْقُبُورِ رَضْمٌ مِنْ حِجَارَةٍ عَنْ يَمِينِ الطَّرِيقِ، عِنْدَ سَلِمَاتِ الطَّرِيقِ، بَيْنَ أُولَئِكَ السَّلِمَاتِ كَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الْعَرْجِ بَعْدَ أَنْ تَمِيلَ الشَّمْسُ بِالْهَاجِرَةِ، فَيُصَلِّي الظُّهْرَ فِي ذَلِكَ الْمَسْجِدِ‏.‏


488 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நீ (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அர்ஜ் எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ சவக்குழிகள் இருந்தன. அக்குழிகள் மீது பெரும் கற்கள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்திருந்தது. அந்தச் சாலைக்கு கிளைச் சாலைகளும் இருந்தன என்று அப்துல்லாஹ் (ரலி) என்னிடம் கூறினார்கள். அந்த கிளைச் சாலைகளின் நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நடந்து அர்ஜ் எனும் சிற்றூருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அந்தப் பள்ளிவாசலில் நண்பகலில் சூரியன் உச்சி சாய்ந்ததும் லுஹ்ர் தொழுவார்கள்.



٤٨٩وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ عِنْدَ سَرَحَاتٍ عَنْ يَسَارِ الطَّرِيقِ، فِي مَسِيلٍ دُونَ هَرْشَى، ذَلِكَ الْمَسِيلُ لاَصِقٌ بِكُرَاعِ هَرْشَى، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ قَرِيبٌ مِنْ غَلْوَةٍ، وَكَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي إِلَى سَرْحَةٍ، هِيَ أَقْرَبُ السَّرَحَاتِ إِلَى الطَّرِيقِ وَهْىَ أَطْوَلُهُنَّ‏.‏
489 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கும் ஷாமுக்கும் இடையே உள்ள) ஹர்ஷா எனும் மலைக்கு அருகில் (ஷாம் செல்லும்) சாலையின் இடப் புறம் அமைந்த சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கின் அருகிலுள்ள மரங்களுக்குக் கீழே இறங்கித் தங்கினார்கள். அந்த சிற்றாறு ஹர்ஷா எனும் மலையின் அடிவாரத்தை ஒட்டிச் செல்கிறது. நபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடத்திற்கும் சாலைக்கும் மத்தியில் கிட்டத்தட்ட அம்பெய்தால் சென்றடையும் தொலைவே இருந்தது. சாலைக்கு மிக அருகிலும், அங்கிருந்த மரங்களில் மிக நெடியதுமான ஒரு மரத்திற்குப் பக்கத்தில் தொழுவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் வழக்கம்.

٤٩٠وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ فِي الْمَسِيلِ الَّذِي فِي أَدْنَى مَرِّ الظَّهْرَانِ، قِبَلَ الْمَدِينَةِ حِينَ يَهْبِطُ مِنَ الصَّفْرَاوَاتِ يَنْزِلُ فِي بَطْنِ ذَلِكَ الْمَسِيلِ عَنْ يَسَارِ الطَّرِيقِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، لَيْسَ بَيْنَ مَنْزِلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الطَّرِيقِ إِلاَّ رَمْيَةٌ بِحَجَرٍ‏.‏
490 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 மர்ருழ் ழஹ்ரான் எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள நீர் அரித்தோடிய மலையிடுக்கில் நபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறுவார்கள். அந்த மலையிடுக்கு (மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது (மர்ருழ்ழஹ்ரான் தாண்டியதும்) ஸஃப்ராவாத் எனும் இடத்தைக் கடந்ததும். சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறியன அந்த இடத்திற்கும் சாலைக்கும் இடையே ஒரு கல்லெறியும் தொலைவே உண்டு என அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

٤٩١وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي طُوًى وَيَبِيتُ حَتَّى يُصْبِحَ، يُصَلِّي الصُّبْحَ حِينَ يَقْدَمُ مَكَّةَ، وَمُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ، لَيْسَ فِي الْمَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ، وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ‏.


491 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் போது தூத்துவா என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்கு (தற்போது) பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் நபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடமன்று; அந்தப் பள்ளிக்கு கீழ்ப் புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே நபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடமாகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

٤٩٢وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَقْبَلَ فُرْضَتَىِ الْجَبَلِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ الْكَعْبَةِ، فَجَعَلَ الْمَسْجِدَ الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ بِطَرَفِ الأَكَمَةِ، وَمُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم أَسْفَلَ مِنْهُ عَلَى الأَكَمَةِ السَّوْدَاءِ، تَدَعُ مِنَ الأَكَمَةِ عَشَرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا، ثُمَّ تُصَلِّي مُسْتَقْبِلَ الْفُرْضَتَيْنِ مِنَ الْجَبَلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ الْكَعْبَةِ‏.‏


492 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயை முன்னோக்கி (நின்று இறைவனை வணங்கி)னார்கள். அந்த இடத்திற்கும் உயரமான அந்த மலைக்கம் இடையே கஅபாவின் திசை அமைந்திருந்தது. எனவே, நான் (அந்த இடத்தில் தொழும் போது) அங்கு தற்போது கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலின் இடப் பக்கத்தை அந்த மேட்டின் ஒரு பகுதியில் வரும்படி செய்தேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அதைவிடக் கீழே ஒரு கறுப்பு மேட்டின் மீதே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் தொழுத அதே இடத்தில் நீ தொழ நினைத்தால் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ளன அந்த மேட்டிலிருந்து பத்து முழம் அல்லது அதைப் போன்றதை விட்டுவிட்டு, உனக்கும் கஅபாவிற்கும் இடையே அமைந்துள்ள அந்த மலைக் கணவாயை முன்னோக்கித் தொழு! என்று கூறினார்கள். இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிகிறார்கள்.

(90)باب سُتْرَةُ الإِمَامِ سُتْرَةُ مَنْ خَلْفَهُ
பாடம் : 90

(கூட்டுத் தொழுகையின் போது) இமாம் வைத்துக் கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னாலிருப்போருக்கும் போதுமானதாகும்.

٤٩٣حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَىَّ أَحَدٌ‏.‏


493 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்தவெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதை ஒன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன் (தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்க வில்லை

٤٩٤حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ‏.‏


494 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரு நாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காக தொழுகைத் திடல் நோக்கிப்) புறப்படும் போது ஈட்டியை எடுத்துவருமாறு (தம் ஊழியரைப்) பணிப்பார்கள். (தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளியில்) மக்களுக்கு முன்னால் அந்த ஈட்டியை (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் (குறுக்குச் சுவரில்லாத திறந்தவெளியில் தொழநேர்ந்தால்) இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள்.- இதனால்தான் (நம்) தலைவர்களும் ஈட்டியை (பெருநாள் முதலியவற்றில் முன்னால் கொணரும் வழக்கத்தை) ஏற்படுத்திக் கொண்டனர்.

٤٩٥حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ ـ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ ـ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْمَرْأَةُ وَالْحِمَارُ‏.


495 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புறநகர் மக்காவிலுள்ள) பத்ஹா எனுமிடத்தில் எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண்போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்களும் கழுதைகளும் நடந்து சென்றனர்.

(91)باب قَدْرِ كَمْ يَنْبَغِي أَنْ يَكُونَ بَيْنَ الْمُصَلِّي وَالسُّتْرَةِ
பாடம் : 91

தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடைவெளி இருக்க வேண்டும்?

٤٩٦حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ‏.‏


496 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத்திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஆடு ஒன்று நடமாடும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

حَدَّثَنَا الْمَكِّيُّ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كَانَ جِدَارُ الْمَسْجِدِ عِنْدَ الْمِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا‏.٤٩٧


497 சலமா பின் அக்வாஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மிம்பர் (மேடை) பக்கமிருந்த சுவரின் இடைவெளியில் ஓர் ஆடு கடந்து செல்லமுடியும்.

(92)باب الصَّلاَةِ إِلَى الْحَرْبَةِ
பாடம் : 92

(தொழுபவர் தமக்கு முன் தடுப்பாக நட்டுவைக்கப்பட்டுள்ள) ஈட்டியை நோக்கித் தொழுவது.


٤٩٨حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا‏.‏


498 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்(கள் திறந்த வெளியில் தொழும் போது அவர்)களுக்காக ஈட்டியை (பூமியில்) நட்டுவைக்கப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.

(93)باب الصَّلاَةِ إِلَى الْعَنَزَةِ

பாடம் : 93

கைத்தடியை (தடுப்பாக்கி அதை) நோக்கித் தொழுவது.

٤٩٩حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَصَلَّى بِنَا الظُّهْرَ وَالْعَصْرَ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ، وَالْمَرْأَةُ وَالْحِمَارُ يَمُرُّونَ مِنْ وَرَائِهَا‏.‏


499 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது உளூ (அங்கசுத்தி) செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அவர்கள் உளூ செய்து விட்டு எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து ஜம்உசெய்து) தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்மணிகள், கழுதைகள் அந்த கைத்தடிக்கு அப்பால் சென்று கொண்டிருந்தனர்.

٥٠٠حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، قَالَ حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ وَمَعَنَا عُكَّازَةٌ أَوْ عَصًا أَوْ عَنَزَةٌ وَمَعَنَا إِدَاوَةٌ، فَإِذَا فَرَغَ مِنْ حَاجَتِهِ نَاوَلْنَاهُ الإِدَاوَةَ‏.‏


500 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் எங்களுடன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியும் தண்ணீர் நிரம்பிய தோல்ப்பையும் இருக்க, அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர்கள் தமது தேவையை முடித்துக் கொண்டதும் நாங்கள் அவர்களிடம் அந்தத் தண்ணீர்பையைக் கொடுப்போம்.

(94)باب السُّتْرَةِ بِمَكَّةَ وَغَيْرِهَا
பாடம் : 94

மக்கா உட்பட எல்லா இடங்களிலும் (திறந்தவெளியில் தொழும் போது) தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

٥٠١حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ فَصَلَّى بِالْبَطْحَاءِ الظُّهْرَ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَنَصَبَ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً، وَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ‏.


501 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் புறப்பட்டுவந்து (புறநகர் மக்காவிலுள்ள) பத்ஹா எனுமிடத்தில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) இரண்டிரண்டு ரக்அத்களாக (எங்களுக்குத்) தொழுவித்தார்கள். தமக்கு முன்னால் கைத்தடி ஒன்றை (தடுப்பாக) நட்டுவைத்தார்கள். (தொழுகைக்காக) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்த போது அவர்கள் அங்க சுத்தி செய்த தண்ணீரில் எஞ்சியதை மக்கள் (தம் மேனியில்) தடவிக் கொண்டார்கள்.

(95)باب الصَّلاَةِ إِلَى الأُسْطُوَانَةِ
பாடம் : 95

தூண்களை நோக்கித் தொழுவது.

وَقَالَ عُمَرُ الْمُصَلُّونَ أَحَقُّ بِالسَّوَارِي مِنَ الْمُتَحَدِّثِينَ إِلَيْهَا. وَرَأَى عُمَرُ رَجُلاً يُصَلِّي بَيْنَ أُسْطُوَانَتَيْنِ فَأَدْنَاهُ إِلَى سَارِيَةٍ فَقَالَ صَلِّ إِلَيْهَا.


(பள்ளிவாசலில் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைவிட தொழுபவர்களே அத(னைத் தடுப்பாக வைத்துத் தொழுவ)தற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுது கொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்ட போது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, இதை நோக்கித் தொழுவீராக! என்று கூறினார்கள்.

٥٠٢حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ‏.‏ فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ‏.‏ قَالَ فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا‏.

502 யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூமுஸ்லிம் சலமா பின் அக்வஉ (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ பள்ளிக்கு) செல்வது வழக்கம். சலமா (ரலி) அவர்கள் குர்ஆன் (வைக்கப்படும் இடத்திற்கு) அருகிலுள்ள தூணருகேத் தொழுவார்கள். ஆகவே நான், அபூமுஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்த தூணைத் தேர்ந்தெடுத்துத் (அதை முன்னோக்கி நின்று) தொழுவைத நான் பார்த்திருக்கிறேன். (ஆகவேதான் நானும் இதைத் தேர்ந்தெடுத்து தொழுகிறேன்) என்று பதிலளித்தார்கள்.

٥٠٣حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ الْمَغْرِبِ‏.‏ وَزَادَ شُعْبَةُ عَنْ عَمْرٍو عَنْ أَنَسٍ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏


503 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மஃக்ரிப் (தொழுகைக்காக பாங்கு சொல்லும்) நேரம் முதல் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியேறும் வரை மூத்த நபித் தோழர்கள் (இரு ரக்அத்கள் முன் சுன்னத் தொழுவதற்காக பள்ளிவாச-லுள்ள) தூண்களை நோக்கி விரைவதை நான் பார்த்திருக்கிறேன்.

(96)باب الصَّلاَةِ بَيْنَ السَّوَارِي فِي غَيْرِ جَمَاعَةٍ
பாடம் : 96

கூட்டுத் தொழுகை அல்லாதவற்றை தூண்களுக்கு இடையே தொழுவது.

٥٠٤حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلاَلٌ، فَأَطَالَ ثُمَّ خَرَجَ، وَكُنْتُ أَوَّلَ النَّاسِ دَخَلَ عَلَى أَثَرِهِ فَسَأَلْتُ بِلاَلاً أَيْنَ صَلَّى قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ‏.‏


504 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்றனர். நீண்ட நேரம் உள்ளிருந்து விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (வெளியே வந்த கையோடு) அவர்களுக்குப் பின்னால் முதல் ஆளாக நானே கஅபாவினுள் நுழைந்தேன். பிலால் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் (கஅபாவுக்குள்) எங்கே (எந்த இடத்தில்) தொழுதார்கள்? என்று கேட்டேன். அதற்கு பிலால் முன்னால் உள்ள இரண்டு தூண்களுக்கு இடையில் என்று பதிலளித்தார்கள்

٥٠٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا، فَسَأَلْتُ بِلاَلاً حِينَ خَرَجَ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ، وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى‏.‏ وَقَالَ لَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ وَقَالَ عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ‏.‏

505 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத், பிலால், உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்று உள்தாழிட்டுக் கொண்டார்கள். (நிண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்(து கொண்டிருந்)த பிலால்

(ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்? என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ஒரு தூணை தமது இடபக்கமும் மற்றொரு தூணை தமது வலப் பக்கமும் மூன்று தூண் களை பின்புறமும் இருக்குமாறு செய்(து, தொழு)தார்கள் என்று கூறினார்கள். அன்று இறையில்லம் கஅபாவினுள் ஆறு தூண்கள் இருந்தன.



(அபூஅப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:)

(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான) மாலிக் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் தமது வலப் பக்கம் இரண்டு தூண்கள் (இருக்குமாறு தொழுதார்கள்) என்று இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(97)باب

பாடம் : 97

٥٠٦حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، كَانَ إِذَا دَخَلَ الْكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ الْبَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى الْمَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِيهِ‏.‏ قَالَ وَلَيْسَ عَلَى أَحَدِنَا بَأْسٌ إِنْ صَلَّى فِي أَىِّ نَوَاحِي الْبَيْتِ شَاءَ‏.‏

506 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும் போது கஅபாவை நோக்கி நோராகச் சென்று அதன் கதவு தமது முதுகுகிற்குப் பின்னால் இருக்குமாறு தமக்கும் எதிர் சுவருக்குமிடையே மூன்று முழ இடைவெளி இருக்கும் விதத்தில் நெருக்கமாக நின்று தொழுவார்கள். (அதாவது,) நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் எந்த இடத்தில் நின்று தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் தெரிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். நம்மில் ஒருவர் கஅபாவில் தாம் நாடிய எந்தப் பகுதியில் நின்று தொழுதாலும் தவறேதுமில்லை என்றும் கூறுவார்கள்.

(98)باب الصَّلاَةِ إِلَى الرَّاحِلَةِ وَالْبَعِيرِ وَالشَّجَرِ وَالرَّحْلِ
பாடம் : 98

வாகன ஒட்டகம், சிவிகை (ஆகியவற்றை தடுப்பாக்கி தொழுவது போன்று) ஒட்டகம், மரம் ஆகியவற்றை(த் தடுப்பாக வைத்து அவற்றை) நோக்கித் தொழுவது.

٥٠٧حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا‏.‏ قُلْتُ أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ‏.‏ قَالَ كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ ـ أَوْ قَالَ مُؤَخَّرِهِ ـ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَفْعَلُهُ‏.‏


507 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் (திறந்தவெளியில் தொழும் போது) தமது வாகன ஒட்டகத்தை குறுக்கே (தடுப்பாக) நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் (அவர்களிடம்), ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்...? என்று கேட்டேன். இந்த சிவிகையை எடுத்து அதை நேராக வைத்து அதன் (பின் கடை) சாய்மானத்தை நோக்கித் தொழுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறே செய்துவந்தார்கள்.

(99)باب الصَّلاَةِ إِلَى السَّرِيرِ
பாடம் : 99

கட்டிலை நோக்கித் தொழுவது.

٥٠٨حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَعَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَىِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي‏.‏


508 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நாய்கள், கழுதைகள், பெண்கள் தொழுபவருக்கே குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறிய ஒருவரிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், எங்களை ஏன் நாயுக்கும் கழுதைக்கும் சமமாக்கினீர்கள்? நான் கட்டிலில் சாய்ந்து படுத்திருப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்கள் பார்வையில் படும் விதமாக படுத்திருக்கப் பிடிக்காமல் கட்டிலின் இரு கால்களினூடே நுழைந்து வெளியேறிவிடுவேன்; எனது போர்வையிலிருந்தும் நழுவிச் சென்றேவிடுவேன்

(100)باب يَرُدُّ الْمُصَلِّي مَنْ مَرَّ بَيْنَ يَدَيْهِ
பாடம் : 100

தொழுது கொண்டிருப்பவர் தமக்கு முன்னால் குறுக்கே நடந்து செல்பவரைத் தடுப்பது.

وَرَدَّ ابْنُ عُمَرَ فِي التَّشَهُّدِ وَفِي الْكَعْبَةِ وَقَالَ إِنْ أَبَى إِلاَّ أَنْ تُقَاتِلَهُ فَقَاتِلْهُ


தொழுகை இருப்பின் போதும் (மக்கள் நடமாட்டம் நிறைந்த) கஅபாவிற்குள் தொழும் போதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் குறுக்கே சென்றவரைத் தடுத்திருக்கிறார்கள். சண்டையிட்டுத் தான் அ(வ்வாறு செல்ப)வரைத் தடுக்க முடியுமென்றால் அவ்வாறு செய்து கொள்! என்றும் கூறுவார்கள்.

٥٠٩حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يُونُسُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي صَالِحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَحَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ قَالَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ الْعَدَوِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو صَالِحٍ السَّمَّانُ قَالَ رَأَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فِي يَوْمِ جُمُعَةٍ يُصَلِّي إِلَى شَىْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ شَابٌّ مِنْ بَنِي أَبِي مُعَيْطٍ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ أَبُو سَعِيدٍ فِي صَدْرِهِ، فَنَظَرَ الشَّابُّ فَلَمْ يَجِدْ مَسَاغًا إِلاَّ بَيْنَ يَدَيْهِ، فَعَادَ لِيَجْتَازَ فَدَفَعَهُ أَبُو سَعِيدٍ أَشَدَّ مِنَ الأُولَى، فَنَالَ مِنْ أَبِي سَعِيدٍ، ثُمَّ دَخَلَ عَلَى مَرْوَانَ فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ مِنْ أَبِي سَعِيدٍ، وَدَخَلَ أَبُو سَعِيدٍ خَلْفَهُ عَلَى مَرْوَانَ فَقَالَ مَا لَكَ وَلاِبْنِ أَخِيكَ يَا أَبَا سَعِيدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَىْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ‏"‏‏.‏


509 அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். எனவே, அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையால் உந்தினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடை பாதையேதும் இல்லையெனக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப் போனார். எனவே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரை முன்பைவிடக் கடுமையாக உந்தினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்து கொண்டது பற்றி முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள்.

அப்போது மர்வான், உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்குமிடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே? என்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும் போது, எவரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்து செல்ல முயன்றால் அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அவருடன் சண்டையி(ட்டுத்த)டுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்து கொண்டேன்) என்று கூறினார்கள்.

(101)باب إِثْمِ الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي
பாடம் : 101

தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே (அவர் சஜ்தா செய்யும் எல்லைக்குள்) நடந்து செல்வது பாவச்செயலாகும்.

٥١٠حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ ‏"‏‏.‏ قَالَ أَبُو النَّضْرِ لاَ أَدْرِي أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً‏.‏


510 புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே நடந்து செல்பவர் அடைந்து கொள்ளும் பாவம் என்ன என்பது பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று அபூஜுஹைம் அப்துல்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டுவருமாறு ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்)தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீ உமைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா? அல்லது மாதங்களில் நாற்பது என்று கூறினார்களா அல்லது வருடங்களில் நாற்பது என்று குறிப்பிட்டார்களா? என்று எனக்குத் தெரியவில்லை.

(102)باب اسْتِقْبَالِ الرَّجُلِ صَاحِبَهُ أَوْ غَيْرَهُ فِي صَلاَتِهِ وَهُوَ يُصَلِّي
பாடம் : 102

தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமரலாமா?

وَكَرِهَ عُثْمَانُ أَنْ يُسْتَقْبَلَ الرَّجُلُ وَهُوَ يُصَلِّي، وَإِنَّمَا هَذَا إِذَا اشْتَغَلَ بِهِ، فَأَمَّا إِذَا لَمْ يَشْتَغِلْ فَقَدْ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ مَا بَالَيْتُ إِنَّ الرَّجُلَ لاَ يَقْطَعُ صَلاَةَ الرَّجُلِ.


தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமர்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள். தம்மால் தொழுபவரின் கவனம் சிதறும் என்றால்தான் இந்த நிலை. கவனம் சிதறாது என்றால் (அதனால் தவறில்லை. ஏனெனில்,) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், இவ்வாறு முன்னோக்கினால் என்ன (தவறு)? ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் தொழுகையை முறித்து விடமுடியாது என்று கூறியுள்ளார்கள்.

٥١١حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ ـ يَعْنِي ابْنَ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ فَقَالُوا يَقْطَعُهَا الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ‏.‏ قَالَتْ قَدْ جَعَلْتُمُونَا كِلاَبًا، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ يُصَلِّي، وَإِنِّي لَبَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، وَأَنَا مُضْطَجِعَةٌ عَلَى السَّرِيرِ، فَتَكُونُ لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَسْتَقْبِلَهُ فَأَنْسَلُّ انْسِلاَلاً‏.‏ وَعَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ نَحْوَهُ‏.‏


511 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது சிலர், (தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்லும்) நாயும் கழுதையும் பெண்ணும் தொழுகையை முறித்து விடுவன என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள, (பெண்களாகிய) எங்களை நாய்களுக்கு சமாமாக்கிவிட்டீர்களே? நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான் கட்டிலிருந்து) ஒரே நழுவு நழுவிவிடுவேன் என்று கூறினார்கள்.

இந்த கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது

(103)باب الصَّلاَةِ خَلْفَ النَّائِمِ
பாடம் : 103

தூங்கிக் கொண்டிருப்பவரை நோக்கித் தொழுவது.

٥١٢حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةٌ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ‏.‏


512 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ருத் தொழ எண்ணும் போது என்னை எழுப்புவார்கள் (அதன் பின்) நான் வித்ருத் தொழுவேன்.

(104)باب التَّطَوُّعِ خَلْفَ الْمَرْأَةِ
பாடம் : 104

பெண்ணை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுவது (செல்லும்).

٥١٣حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا‏.‏ قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ‏.‏


513 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் சிரவணக்கம் செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் சிரவணக்கத்திற்கு வரும் போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இல்லை

(105)باب مَنْ قَالَ لاَ يَقْطَعُ الصَّلاَةَ شَىْءٌ
பாடம் : 105

தொழும் போது குறுக்கே செல்லும் எதுவும், தொழுகையை முறிக்காது எனும் கூற்று.

٥١٤حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ،‏.‏ قَالَ الأَعْمَشُ وَحَدَّثَنِي مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ فَقَالَتْ شَبَّهْتُمُونَا بِالْحُمُرِ وَالْكِلاَبِ، وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، وَإِنِّي عَلَى السَّرِيرِ ـ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ مُضْطَجِعَةً فَتَبْدُو لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَجْلِسَ فَأُوذِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَنْسَلُّ مِنْ عِنْدِ رِجْلَيْهِ‏.‏


514 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை முறிப்பவை குறித்துப் பேசப்பட்டது. நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுப வருக்கு குறுக்கே செல்வது தொழுகையை முறித்து விடுவன என்று கூறினர்.). அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களை கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் படுத்துக் கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற் பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களுக்கு இடையூறு செய்யப் பிடிக்காமல் கட்டிலின் இரு கால்களினூடே நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.

٥١٥حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، أَنَّهُ سَأَلَ عَمَّهُ عَنِ الصَّلاَةِ، يَقْطَعُهَا شَىْءٌ فَقَالَ لاَ يَقْطَعُهَا شَىْءٌ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ فَيُصَلِّي مِنَ اللَّيْلِ، وَإِنِّي لَمُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ


515 முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தையின் சகோதரர் (முஹம்மது பின் முஸ்லிம் பின் ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ - ரஹ்) அவர்களிடம், எவை (குறுக்கே செல்வது) தொழுகையை முறிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், தொழுகையை எதுவும் முறிக்காது என்று கூறிவிட்டு உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக (பின்வருமாறு) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தம் குடும்ப விரிப்பில் தொழுவார்கள். அப்போது நான் அவர்களுக்கும் அவர்களின் கிப்லாவிற்கும் (சிரவணக்கம் செய்யும் இடத்திற்கும்) இடையே குறுக்கு வாட்டில் படுத்துக் கொண்டிருப்பேன்.

(106)باب إِذَا حَمَلَ جَارِيَةً صَغِيرَةً عَلَى عُنُقِهِ فِي الصَّلاَةِ
பாடம் : 106

தொழும் போது ஒரு சிறுமியை தமது தோளில் தூக்கி ஒருவர் சுமந்தால்...?

٥١٦حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا‏.‏


516 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் - அபுல் ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் (தமது தோளில்) சுமந்து கொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; நிலைக்குச் செல்லும் போது (மீண்டும்) உமாமாவை (தமது தோளில்) தூக்கிக் கொள்வார்கள்.

(107)باب إِذَا صَلَّى إِلَى فِرَاشٍ فِيهِ حَائِضٌ
பாடம் : 107

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் படுத்திருக்கும் படுக்கை அருகில் தொழுவதால்...?

٥١٧حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، قَالَ أَخْبَرَتْنِي خَالَتِي، مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ قَالَتْ كَانَ فِرَاشِي حِيَالَ مُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرُبَّمَا وَقَعَ ثَوْبُهُ عَلَىَّ وَأَنَا عَلَى فِرَاشِي‏.


517 மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது படுக்கை விரிப்பு நபி (ஸல்) அவர்களின் தொழுகை விரிப்புடன் பட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் நான் எனது படுக்கையில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் ஆடை என் மே(னியி)ல்படுவதுண்டு.

٥١٨حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، سُلَيْمَانُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ مَيْمُونَةَ، تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا إِلَى جَنْبِهِ نَائِمَةٌ، فَإِذَا سَجَدَ أَصَابَنِي ثَوْبُهُ، وَأَنَا حَائِضٌ‏.‏ وَزَادَ مُسَدَّدٌ عَنْ خَالِدٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، وَأَنَا حَائِضٌ‏.‏


518 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் நான் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவர்களது ஆடை என் மீது படும். அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன்.

அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன் எனும் குறிப்பு முசத்தத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே அதிகப் படியாக இடம்பெற்றுள்ளது.

(108)باب هَلْ يَغْمِزُ الرَّجُلُ امْرَأَتَهُ عِنْدَ السُّجُودِ لِكَىْ يَسْجُدَ
பாடம் : 108

ஒருவர் சஜ்தா செய்யும் போது சஜ்தாச் செய்திட (இடம் விடுமாறு சமிக்ஞை செய்ய உறங்கிக் கொண்டிருக்கும்) தம் துணைவி யைத் தொட்டுணர்த்தலாமா?

٥١٩حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنَا الْقَاسِمُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ بِئْسَمَا عَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ، لَقَدْ رَأَيْتُنِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي، وَأَنَا مُضْطَجِعَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَإِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ غَمَزَ رِجْلَىَّ فَقَبَضْتُهُمَا‏.‏


519 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கும் அவர்களது (சிரவணக்க இடமான) கிப்லாவுக்கும் இடையே சாய்ந்து படுத்திருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யச் செல்லும் போது எனது கால்களைத் தொட்டு (என்னை) உணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க (தொழுபவருக்கு குறுக்கே நாயும், கழுதையும் பெண்ணும் செல்வது தொழுகையை முறித்து விடும் என்று கூறுவதன் மூலம் பெண்களாகிய) எங்களை நாயுக்கும் கழுதைக்கும் நீங்கள் சமமாக்கியது தவறாகும். (நாகரீகமற்றதாகும்).

(109)باب الْمَرْأَةِ تَطْرَحُ عَنِ الْمُصَلِّي، شَيْئًا مِنَ الأَذَى
பாடம் : 109

தொழுது கொண்டிருப்பவர் மீது விழுந்துள்ள அசுத்தத்தை ஒரு பெண் அப்புறப்படுத்துவது.


٥٢٠حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ السُّرْمَارِيُّ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ، وَجَمْعُ قُرَيْشٍ فِي مَجَالِسِهِمْ إِذْ قَالَ قَائِلٌ مِنْهُمْ أَلاَ تَنْظُرُونَ إِلَى هَذَا الْمُرَائِي أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ آلِ فُلاَنٍ، فَيَعْمِدُ إِلَى فَرْثِهَا وَدَمِهَا وَسَلاَهَا فَيَجِيءُ بِهِ، ثُمَّ يُمْهِلُهُ حَتَّى إِذَا سَجَدَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ فَانْبَعَثَ أَشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ، وَثَبَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا، فَضَحِكُوا حَتَّى مَالَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ مِنَ الضَّحِكِ، فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلَى فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ وَهْىَ جُوَيْرِيَةٌ، فَأَقْبَلَتْ تَسْعَى وَثَبَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا حَتَّى أَلْقَتْهُ عَنْهُ، وَأَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَالَ ‏"‏ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ ـ ثُمَّ سَمَّى ـ اللَّهُمَّ عَلَيْكَ بِعَمْرِو بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَعُمَارَةَ بْنِ الْوَلِيدِ ‏"‏‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَوَاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَوْمَ بَدْرٍ، ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَأُتْبِعَ أَصْحَابُ الْقَلِيبِ لَعْنَةً ‏"‏‏.‏


520 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி ஸல் அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.

அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள்அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிராத்தித்தார்கள்:

இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, அல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.

தொடர்ந்து அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எவர்களுக்கெதிராகப் பிராத்தித்தார்களோ ஒருவர் நீங்கலாக) அவர்கள் அனைவரும் பத்ருப்போர் நாளில் (உடல் உப்பி நிறமாறி) உருமாறி மாண்டு கிடந்ததையும் பின்னர் கலீபு பத்ர் எனும் பாழுங் கிணற்றை நோக்கி அவர்களை இழுத்துச் செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த பாழுங்கிணற்றிலுள்ளோரை (இனியும்) சாபம் தொடரும் என்று கூறினார்கள்


No comments:

Post a Comment