அத்தியாயம் : 9
كتاب مواقيت الصلاة
தொழுகை நேரங்கள்
(21)باب وَقْتِ
الْعِشَاءِ إِذَا اجْتَمَعَ النَّاسُ أَوْ تَأَخَّرُوا
பாடம் : 21
மக்கள் கூடுவதற்கேற்ப, அல்லது தாமதிப்பதற்கேற்ப இஷா நேரத்தை அமைத்துக் கொள்வது.
٥٦٥حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ
إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ـ هُوَ ابْنُ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ـ
قَالَ سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلاَةِ النَّبِيِّ، صلى الله
عليه وسلم فَقَالَ كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ
وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ إِذَا كَثُرَ
النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ، وَالصُّبْحَ بِغَلَسٍ.
565 முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின்
அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை
(நேரம்) பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹ்ர் தொழுகையைத் தொழுவார்கள். சூரியன் (ஒளி குன்றாமல்)
தெளிவாக இருக்கும் போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள்.
(அதிக) மக்கள் குழுமிவிட்டால் இஷாவை சீக்கிரமாக (அதன் முன்னேரத்திலேயே) தொழுவார்கள்; மக்கள் குறைவாக இருந்தால் தாமதப்படுத்தியும் தொழுவார்கள். சுப்ஹுத்
தொழுகையை இருளிருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழுவார்கள்
(22)باب
فَضْلِ الْعِشَاءِ
பாடம் : 22
இஷாத் தொழுகையி(னை எதிர்பார்ப்பத)ன் சிறப்பு.
٥٦٦حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ
شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، أَعْتَمَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً بِالْعِشَاءِ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ
الإِسْلاَمُ، فَلَمْ يَخْرُجْ حَتَّى قَالَ عُمَرُ نَامَ النِّسَاءُ
وَالصِّبْيَانُ. فَخَرَجَ فَقَالَ لأَهْلِ الْمَسْجِدِ " مَا
يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ غَيْرُكُمْ ".
566 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஸ்லாம் (மதீனாவிற்கு வெளியே) பரவுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
ஓர் (நாள்) இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள்,(தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து) பெண்களும் சிறுவர்களும்
உறங்கி விட்டனர் எனத் தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து தொழுகை
நடத்தப்) புறப்பட்டு வரவில்லை. பிறகு புறப்பட்டு வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி, (தற்போது) பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இதை
எதிர் பார்த்துக் காத்திருக்கவில்லை என்று கூறினார்கள்.
٥٦٧حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ،
عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنْتُ أَنَا وَأَصْحَابِي
الَّذِينَ، قَدِمُوا مَعِي فِي السَّفِينَةِ نُزُولاً فِي بَقِيعِ بُطْحَانَ،
وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ، فَكَانَ يَتَنَاوَبُ النَّبِيَّ
صلى الله عليه وسلم عِنْدَ صَلاَةِ الْعِشَاءِ كُلَّ لَيْلَةٍ نَفَرٌ مِنْهُمْ،
فَوَافَقْنَا النَّبِيَّ ـ عليه السلام ـ أَنَا وَأَصْحَابِي وَلَهُ بَعْضُ
الشُّغْلِ فِي بَعْضِ أَمْرِهِ فَأَعْتَمَ بِالصَّلاَةِ حَتَّى ابْهَارَّ
اللَّيْلُ، ثُمَّ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى بِهِمْ، فَلَمَّا
قَضَى صَلاَتَهُ قَالَ لِمَنْ حَضَرَهُ " عَلَى رِسْلِكُمْ، أَبْشِرُوا
إِنَّ مِنْ نِعْمَةِ اللَّهِ عَلَيْكُمْ أَنَّهُ لَيْسَ أَحَدٌ مِنَ النَّاسِ
يُصَلِّي هَذِهِ السَّاعَةَ غَيْرُكُمْ ". أَوْ قَالَ " مَا
صَلَّى هَذِهِ السَّاعَةَ أَحَدٌ غَيْرُكُمْ ". لاَ يَدْرِي أَىَّ
الْكَلِمَتَيْنِ قَالَ. قَالَ أَبُو مُوسَى فَرَجَعْنَا فَفَرِحْنَا بِمَا
سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
567 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் (யமன் நாட்டிலிருந்து) என்னுடன் வருகை புரிந்த என் தோழர்களும் (மதீனாவிலிருந்த)
பகீஉ புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில்
இருந்தார்கள். ஒவ்வோர் இரவும் இஷாத் தொழுகை நேரத்தில் எங்களில் ஒரு குழுவினர் முறைவைத்து
நபி (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்த போது) நானும் என் தோழர்களும்
நபி (ஸல்) அவர்களிடம் சென்ற நேரம் அவர்கள் (போர் ஆயத்தம் சம்பந்தப்பட்ட) ஒரு விவகாரத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் நள்ளிரவு நேரமாகும் வரை இஷாவைப் பிற்படுத்தினார்கள். பிறகு
நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து மக்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள். தொழுது
முடித்த போது வந்திருந்தோரை நோக்கி,
அப்படியே இருங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள்!
என்று கூறிவிட்டு, இந்த நேரத்தில் உங்களைத் தவிர மக்களில்
வேறு யாரும் தொழவில்லை' அல்லது உங்களைத் தவிர வேறு யாரும் தொழவில்லை' என்று கூறினார்கள் -இந்த இரண்டு வாக்கியங்களில் எதை நபி (ஸல்)
அவர்கள் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.- இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த
அருட்கொடைகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து
செவியேற்ற விஷயத்தைக் கேட்டு பேருவகையடைந்தவர்களாக நாங்கள் திரும்பினோம்.
(23)باب مَا يُكْرَهُ
مِنَ النَّوْمِ قَبْلَ الْعِشَاءِ
பாடம் : 23
இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவது வெறுக்கத்தக்க செயலாகும்.
٥٦٨حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ،
قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي
بَرْزَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ النَّوْمَ
قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا.
568 அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின்
(உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.
(24)باب النَّوْمِ
قَبْلَ الْعِشَاءِ لِمَنْ غُلِبَ
பாடம் : 24
இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்.
٥٦٩حَدَّثَنَا
أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ،
قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ
عَائِشَةَ، قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعِشَاءِ
حَتَّى نَادَاهُ عُمَرُ الصَّلاَةَ، نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ
فَقَالَ " مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ غَيْرُكُمْ
". قَالَ وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلاَّ بِالْمَدِينَةِ، وَكَانُوا
يُصَلُّونَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ
الأَوَّلِ.
569 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் (தங்களை எதிர் பார்த்துக் காத்திருந்து)
உறங்கிவிட்டனர். தொழுவிக்க வாருங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைக்கும்
வரை அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் வந்து,
உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும்
இதை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்க வில்லை என்று கூறினார்கள். அன்றைய தினத்தில்
மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது
முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில்
மக்கள் இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.
٥٧٠حَدَّثَنَا
مَحْمُودٌ يَعْنِي ابْنَ غَيْلاَنَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ،
قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، قَالَ:
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ عَنْهَا لَيْلَةً، فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي
المَسْجِدِ، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ
خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ:
«لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ يَنْتَظِرُ الصَّلاَةَ غَيْرُكُمْ» وَكَانَ ابْنُ
عُمَرَ: «لاَ يُبَالِي أَقَدَّمَهَا أَمْ أَخَّرَهَا، إِذَا كَانَ لاَ يَخْشَى
أَنْ يَغْلِبَهُ النَّوْمُ عَنْ وَقْتِهَا، وَكَانَ يَرْقُدُ قَبْلَهَا»، قَالَ
ابْنُ جُرَيْجٍ: قُلْتُ لِعَطَاءٍ [ص: 119] :
570 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அலுவல் காரணமாக ஓர் இரவு இஷாத் தொழுகையைப்
பிற்படுத்தினார்கள். நாங்கள் பள்ளியிலேயே உறங்குவதும் விழிப்பதும். பின்னர் உறங்குவதும்
விழிப்பதுமாக இருந்தோம். பிறகு எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும் இத்தொழுகையை எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கவில்லை என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இஷாநேரத்தைத் தாண்டி தூக்கம் தம்மை மிகைத்துவிடும் என்ற அச்சமில்லாத போது இஷாத்
தொழுகையை முன்னேரத்தில் தொழுவதையோ பின்னேரத்தில் தொழுவதையோ இப்னு உமர் (ரலி) அவர்கள்
ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள். (சில நேரம் முன்னேரம் தொழுவார்கள்; சில நேரம் பின்னேரம் தொழுவார்கள்).
இப்னு உமர் (ரலி) அவர்கள் (தூக்கம் தம்மை மீறிவிடும் என்ற அச்சமற்றிருந்ததால்)
இஷாவுக்கு முன் உறங்குபவர்களாக இருந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
٥٧١وَقَالَ:
سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِالعِشَاءِ، حَتَّى رَقَدَ النَّاسُ
وَاسْتَيْقَظُوا، وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَامَ عُمَرُ بْنُ الخَطَّابِ
فَقَالَ: الصَّلاَةَ - قَالَ عَطَاءٌ: قَالَ ابْنُ عَبَّاسٍ -: فَخَرَجَ نَبِيُّ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الآنَ،
يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَهُ عَلَى رَأْسِهِ، فَقَالَ: «لَوْلاَ أَنْ
أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوهَا هَكَذَا» فَاسْتَثْبَتُّ
عَطَاءً كَيْفَ وَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِهِ
يَدَهُ، كَمَا أَنْبَأَهُ ابْنُ عَبَّاسٍ فَبَدَّدَ لِي عَطَاءٌ بَيْنَ
أَصَابِعِهِ شَيْئًا مِنْ تَبْدِيدٍ، ثُمَّ وَضَعَ أَطْرَافَ أَصَابِعِهِ عَلَى
قَرْنِ الرَّأْسِ، ثُمَّ ضَمَّهَا يُمِرُّهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ، حَتَّى
مَسَّتْ إِبْهَامُهُ طَرَفَ الأُذُنِ، مِمَّا يَلِي الوَجْهَ عَلَى الصُّدْغِ،
وَنَاحِيَةِ اللِّحْيَةِ، لاَ يُقَصِّرُ وَلاَ يَبْطُشُ إِلَّا كَذَلِكَ، وَقَالَ:
«لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوا هَكَذَا»
571 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள்.
(பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும்
மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து
தொழுகைக்கு வாருங்கள் என்று (நபி ஸல்அவர்களை) அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்
தம் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்(து தமது தலையிலிருந்து தண்ணீரைத்
துடைத்)தவர்களாக புறப்பட்டு வந்ததை இன்றும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது அவர்கள், என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லை
யாயின் அவர்களை இவ்வாறே (இந்த நேரத்தி லேயே) தொழுமாறு பணித்திருப்பேன் என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுரைஜ்
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம்,
நபி (ஸல்) அவர்கள் தம் கைகளைத் தலையில்
எவ்வாறு வைத்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்? என்று கேட்டேன். அப்போது அதாஉ (ரஹ்) அவர்கள் தமது விரல்களைச்
சற்று விரித்து விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்தார்கள். பிறகு விரல்களை இணைத்து முகத்தை
ஒட்டி அமைந்துள்ள நெற்றிப் பொட்டருகிலுள்ள காதுகளின் ஓரம், தாடியின் ஓரம் ஆகியவற்றில் படுமாறு தமது பெருவிரலை அப்படியே
தடவிக் கொண்டே சென்றார்கள். அப்போது தாமதிக்காமலும் அவசரப்படாமலும் இப்னு அப்பாஸ்
(ரலி) செய்து காட்டியது போன்றே செய்து காட்டியபடி என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும்
என்ற அச்சம் எனக்கில்லையாயின் இவ்வாறே (இந்த நேரத்திலேயே இஷாத் தொழுகையைத்) தொழுமாறு
அவர்களை நான் பணித்திருப்பேன் என்று (நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டதாகக்) கூறினார்கள்.
(25)باب وَقْتِ
الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ
பாடம் : 25
இஷா நேரம் பாதி இரவு வரை உள்ளது.
وَقَالَ أَبُو بَرْزَةَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ تَأْخِيرَهَا
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை பிற்படுத்துவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்
என அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
٥٧٢حَدَّثَنَا
عَبْدُ الرَّحِيمِ الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ حُمَيْدٍ
الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، قَالَ أَخَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ
الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ صَلَّى ثُمَّ قَالَ " قَدْ
صَلَّى النَّاسُ وَنَامُوا، أَمَا إِنَّكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا
". وَزَادَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ
حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ
لَيْلَتَئِذٍ.
572 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள் இரவு) இஷாத் தொழுகையை பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள்.
பிறகே தொழு(வித்)தார்கள். பின்னர்,
மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர்.
அறிந்துகொள்ளுங்கள்: ஓர் தொழுகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள்
அத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (என்றே கருதப்படுகிறது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், அன்றிரவு நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த மோதிரம் இலங்கியதை
இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது
(26)باب
فَضْلِ صَلاَةِ الْفَجْرِ
பாடம் : 26
ஃபஜ்ர் தொழுகையின் சிறப்பு.
٥٧٣حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ،
قَالَ لِي جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه
وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ " أَمَا
إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُّونَ ـ أَوْ لاَ
تُضَاهُونَ ـ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى
صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ".
ثُمَّ قَالَ " فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ
وَقَبْلَ غُرُوبِهَا ".
573 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
முழுநிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது
அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி,
அறிந்து கொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள்
நெரிசல் இல்லாமல்' அல்லது குழப்பமடையாமல்' காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.
எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும்
விஷயத் தில் (வெளிவேலைகள், உறக்கம் உள்ளிட்டவை யால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க
இயலுமானால் அதைச் செய்யுங்கள் (அதாவது அந்நேரங்களில் தொழுங்கள்). என்று கூறிய பின், சூரியன் உதய மாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும்
(50:39 ஆவது) இறைவசனத்தை ஓதி(க் காட்டி)னார்கள்
٥٧٤حَدَّثَنَا
هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنِي أَبُو جَمْرَةَ،
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم قَالَ " مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ
". وَقَالَ ابْنُ رَجَاءٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ أَبِي جَمْرَةَ أَنَّ
أَبَا بَكْرِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ أَخْبَرَهُ بِهَذَا. حَدَّثَنَا
إِسْحَاقُ، عَنْ حَبَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، عَنْ
أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم مِثْلَهُ.
574 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகலின் இரு ஓரங்களிலுள்ள
(ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இருநேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில்
நுழைவார்.
இதை அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ் அல் அஷ்அரீ-ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(27)باب
وَقْتِ الْفَجْرِ
பாடம் : 27
ஃபஜ்ர் தொழுகையின் நேரம்.
٥٧٥حَدَّثَنَا
عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ،
أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ أَنَّهُمْ، تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صلى
الله عليه وسلم ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ. قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ
قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ ـ يَعْنِي آيَةً ـ ح.
575 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் நோன்பு நோற்க உணவருந்தி (சஹர் செய்து)விட்டுப் பின்னர்
ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்தோம்.
இதை ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (ஸைத் ரலின அவர்களிடம்), உணவு உட் கொண்டு (சஹர் செய்து முடிப்ப)தற்கும்
தொழுகைக்(காக இப்னு உம்மி மக்தூம் ரலி அவர்கள் பாங்கு செல்வதற்)கு மிடையே எவ்வளவு நேரம்
இடை வெளி இருந்தது? என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித்
(ரலி) அவர்கள், ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்)
அளவு நேரம் (இடைவெளி இருந்தது) என்று பதிலளித்தார்கள்.
٥٧٦حَدَّثَنَا
حَسَنُ بْنُ صَبَّاحٍ، سَمِعَ رَوْحًا، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَزَيْدَ بْنَ
ثَابِتٍ تَسَحَّرَا، فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا قَامَ نَبِيُّ اللَّهِ
صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ فَصَلَّى. قُلْنَا لأَنَسٍ كَمْ كَانَ
بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ قَالَ
قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً.
576 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (ஒன்றாக நோன்பு நோற்க) சஹர்
உணவு உட் கொண்டனர். அவர்கள் இருவரும் சஹர் செய்து முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர்
தொழுகைக்காக எழுந்து (சென்று) தொழுதார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) கத்தாதா பின் திஆமா
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், அவர்கள் இருவரும் சஹர் உணவு உட் கொண்டு
முடிப்பதற்கும் தொழுகையில் ஈடுபடுவதற்குமிடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது? என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி இருந்தது)
என்று பதிலளித்தார்கள்.
٥٧٧حَدَّثَنَا
إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي
حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، يَقُولُ كُنْتُ أَتَسَحَّرُ فِي
أَهْلِي ثُمَّ يَكُونُ سُرْعَةٌ بِي أَنْ أُدْرِكَ صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم.
577 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் குடும்பத்தாருடன் நோன்பு நோற்க (சஹர்) உணவருந்திவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் (வைகறைத்) தொழுகையில்
கலந்துகொள்வதற்காக அவசர (மாகப் புற)ப்படுவேன்.
٥٧٨حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ
شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ،
أَخْبَرَتْهُ قَالَتْ، كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ،
ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ
يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ.
578 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர் களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர் களாக இருந்தனர். தொழுகையை
முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை
யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது.
(28)باب مَنْ أَدْرَكَ
مِنَ الْفَجْرِ رَكْعَةً
பாடம் : 28
ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து
கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாகக்கட்டும்).
٥٧٩حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ
عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ،
يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ " مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ
فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ
تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ ".
579 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர் சுப்ஹுத்
தொழுகையை அடைந்துகொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை
அடைந்து கொண்டவர் அஸ்ர் தொழுகையை அடைந்துகொள்கிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(29)باب مَنْ أَدْرَكَ
مِنَ الصَّلاَةِ رَكْعَةً
பாடம் : 29
பொதுவாகத் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து
கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாக்கட்டும்).
٥٨٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ،
عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ
الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ ".
580 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் அந்தத் தொழுகையை
அடைந்துகொள்கிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(30)باب الصَّلاَةِ
بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
பாடம் : 30
ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சூரியன் உயரும் வரை தொழுவது (கூடாது).
٥٨١حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي
الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ
وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ
الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ
حَتَّى تَغْرُبَ.
581 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (உயர்ந்து) சுடர்விடும்
வரை தொழுவதையும், அஸ்ர் தொழுகைக்குப் பின்னால் சூரியன்
மறையும் வரைத் தொழுவதையும் தடை செய்தார்கள் என (மார்க்கப் பற்று, வாய்மை ஆகியவற்றில்) திருப்திக்குரிய சிலர் என்னிடம் உறுதிபடக்
கூறினர். அவர்களில் என்னிடம் மிகவும் திருப்திக்குரியவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
٥٨٢حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ
أَبَا العَالِيَةِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَنِي نَاسٌ بِهَذَا
582 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள்
தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٥٨٣حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، قَالَ:
أَخْبَرَنِي أَبِي، قَالَ: أَخْبَرَنِي ابْنُ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَحَرَّوْا بِصَلاَتِكُمْ طُلُوعَ
الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا»
وَقَالَ: حَدَّثَنِي ابْنُ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ
فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَرْتَفِعَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ
فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ» تَابَعَهُ عَبْدَةُ
583 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரிய வட்டத்தின் ஒரு பகுதி தோன்றும் போது (தொழாமல்), அது (முழுமையாக) உயரும்
வரைத் தொழுவதை பிற்படுத்துங்கள். சூரிய வட்டம் மறையும் போது அது (முழுமையாக) மறையும்
வரை தொழுகையை பிற்படுத்துங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٥٨٤حَدَّثَنَا
عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ
خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعَتَيْنِ
وَعَنْ لِبْسَتَيْنِ وَعَنْ صَلاَتَيْنِ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ
حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ
اشْتِمَالِ الصَّمَّاءِ وَعَنْ الاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي
بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ، وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلاَمَسَةِ.
584 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு வியாபார முறைகளையும், இரு ஆடை அணியும் முறைகளையும், இரண்டு நேரத்தில் தொழுவதையும் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும்
வரையிலும், அஸ்ர் தொழுகைக்குப்
பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறையும் வரையிலும் தொழவேண்டாமெனத் தடை செய்தார்கள்.
ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு
மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி
ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக்
கொண்டு (அவற்றைக் கைகளால்கட்டியபடி) உட்கார்ந்திருப்ப தற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். முனாபதா, முலாமஸா எனும் இரண்டு வியாபார முறைகளையும்
தடை செய்தார்கள். ( காண்க : ஹதீஸ்எண்கள் : 367, 368)
No comments:
Post a Comment