Tuesday, October 17, 2017

அத்தியாயம் : 10 பாங்கு ஹதீஸ் 603 முதல் 616 வரை



                                                    அத்தியாயம் : 10

                                                             كتاب الأذان

                                                              பாங்கு


(1)باب بَدْءُ الأَذَانِ
பாடம் : 1

பாங்கின் துவக்கம்.

وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلاَةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لاَ يَعْقِلُونَ} وَقَوْلُهُ: {إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ}.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாகமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (5:58)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (62:9)



٦٠٣حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا الْيَهُودَ وَالنَّصَارَى، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ‏.‏

603 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக் கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள் கருதிய போது) மக்கள் (அக்னி ஆராதகர்களைப் போன்று) நெருப்பு மூட்டலாம் என்றும், மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் (ஆலோசனை) கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் (மறுப்புக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கு (அதான்) எனும் தொழுகை அறிவிப்பிற் குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (எனும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.

٦٠٤حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ، لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى‏.‏ وَقَالَ بَعْضُهُمْ بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ‏.‏ فَقَالَ عُمَرُ أَوَلاَ تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ ‏"‏‏.‏
604 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்! என்று கூறினார்கள்.


(2)باب الأَذَانُ مَثْنَى مَثْنَى
பாடம் : 2

பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும்.

٦٠٥حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ إِلاَّ الإِقَامَةَ‏.‏

605 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும்படியும் இகாமத்தின் வாசகங்களை கத் காமத்திஸ்ஸலாத் (தொழுகை ஆரம்பமாகிவிட்டது) எனும் வாசகத்தை தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.

٦٠٦حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا كَثُرَ النَّاسُ قَالَ ـ ذَكَرُوا ـ أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَىْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ‏.‏

606 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமான போது அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகை யின் நேரத்தை அறிவிப்புச் செய்திட (அல்லது அறிந்துகொள்ள) ஆலோசித்தனர். அப்போது, நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம் என்று (பல்வேறு கருத்துக்களைப்) பேசினர். ஆனால், பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும்படியும் (கத்காமத்திஸ் ஸலாத்எனும் வாசகத்தை தவிரவுள்ள) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

(3)باب الإِقَامَةُ وَاحِدَةٌ، إِلاَّ قَوْلَهُ قَدْ قَامَتِ الصَّلاَةُ
பாடம் : 3

இகாமத்தின் வாசகங்களில் கத்காமத்திஸ் ஸலாத் என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும்.


٦٠٧حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ‏.‏ قَالَ إِسْمَاعِيلُ فَذَكَرْتُ لأَيُّوبَ فَقَالَ إِلاَّ الإِقَامَةَ‏.‏

607 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும் படியும் இகாமத்தின் வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயில் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸை நான் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள், கத் காமத்திஸ் ஸலாத் எனும் வாசகத்தை தவிர என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.

(4)باب فَضْلِ التَّأْذِينِ
பாடம் : 4

பாங்கு சொல்வதன் சிறப்பு.

٦٠٨حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا‏.‏ لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى ‏"‏‏.‏


608 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார் என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங் களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(5)باب رَفْعِ الصَّوْتِ بِالنِّدَاءِ
பாடம் : 5

உரத்த குரலில் பாங்கு சொல்வது.

وَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَذِّنْ أَذَانًا سَمْحًا وَإِلاَّ فَاعْتَزِلْنَا

(மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்லும் பொறுப்பிலிருந்தவரிடம்), (இராகமிட்டுக் கொண்டிராமல்) குரலெடுத்து பாங்கு சொல்லுங்கள்: அல்லது இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள் ளுங்கள் என்று கூறினார்கள்.

٦٠٩حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الأَنْصَارِيِّ، ثُمَّ الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ لَهُ ‏ "‏ إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ بِالصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَىْءٌ إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏

609 அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ஆட்டையும் பாலை வனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ அல்லது பாலைவனத்திலோ ; இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒழிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன என்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.

(6)باب مَا يُحْقَنُ بِالأَذَانِ مِنَ الدِّمَاءِ
பாடம் : 6

பாங்கு சொல்லப்படுவதால் (ஓர் ஊரின் மீது) போர் செய்யலாகாது.

٦١٠حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ، فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ عَلَيْهِمْ، قَالَ فَخَرَجْنَا إِلَى خَيْبَرَ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يَسْمَعْ أَذَانًا رَكِبَ وَرَكِبْتُ خَلْفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدَمَ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ قَالَ فَخَرَجُوا إِلَيْنَا بِمَكَاتِلِهِمْ وَمَسَاحِيهِمْ فَلَمَّا رَأَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ‏.‏ قَالَ فَلَمَّا رَآهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏"‏‏.‏

610 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். (சுப்ஹு நேரம் வந்ததும்) கவனிப்பார்கள். (எதிர் தரப்பிலிருந்து) பாங்குச் சொல்லும் சப்தத்தைச் செவியுற்றால் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; பாங்கு சொல்லும் சப்தத்தைச் செவியுறாவிட்டால் அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பார்கள். இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையான போது பாங்கு சப்தம் வராததால் (அவர்களை நோக்கி தமது வாகனத்தில்) பயணமானார்கள். நான் அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில் அமர்ந்து) பயணம் செய்தேன். அப்போது எனது கால் நபி (ஸல்) அவர்களது காலில் உராயும் (அந்த அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்). அப்போது யூதர்கள் தம் மண் வெட்டிகளையும் தம் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த னர். நபி (ஸல்) அவர்களை அவர்கள் பார்த்ததும், முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (இதோ வருகின்றனர்) என்று கூறினர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததும், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோ மாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று கூறினார்கள்





(7)باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي
பாடம் : 7

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

٦١١حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ ما يَقُولُ الْمُؤَذِّنُ ‏"‏‏.


611 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٦١٢حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَوْمًا فَقَالَ مِثْلَهُ إِلَى قَوْلِهِ ‏ "‏ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏"‏‏.‏

612 ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (பாங்கு சப்தத்தைச்) செவியுற்றபோது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பது வரை பாங்கு சொல்பவர் கூறியது போன்றே சொன்னார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது.

٦١٣حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، نَحْوَهُ‏.‏ قَالَ يَحْيَى وَحَدَّثَنِي بَعْضُ، إِخْوَانِنَا أَنَّهُ قَالَ لَمَّا قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ‏.‏ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ‏.‏ وَقَالَ هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صلى الله عليه وسلم يَقُولُ‏.‏


613 யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:

பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று கூறிய போது, முஆவியா (ரலி) அவர்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்  (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலக முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவியலாது) என்று கூறினார்கள். மேலும், இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் என்றும் கூறினார்கள்.

(8)باب الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ
பாடம் : 8

பாங்கு முடிந்த பின் ஓதவேண்டிய பிரார்த்தனை.

٦١٤حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏


614 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது அல்லாஹ்ம்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவி ருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் ஸல் அவர்களுக்கு மட்டுமே உரித்தான சொர்க்கத்தின்ன உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ் திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக) என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(9)باب الاِسْتِهَامِ فِي الأَذَانِ
பாடம் : 9

பாங்கு சொல்வதற்காக (போட்டி நிலவும் போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது.

وَيُذْكَرُ أَنَّ أَقْوَامًا اخْتَلَفُوا فِي الأَذَانِ فَأَقْرَعَ بَيْنَهُمْ سَعْدٌ.


பாங்கு (சொல்லும் பொறுப்பு) விஷயத்தில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலா)னார்கள்.

٦١٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ‏"‏‏.


615 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(10)باب الْكَلاَمِ فِي الأَذَانِ
பாடம் : 10

பாங்கு சொல்பவர் மற்ற பேச்சுக்கள் பேசுவது.

وَتَكَلَّمَ سُلَيْمَانُ بْنُ صُرَدٍ فِي أَذَانِهِ.

وَقَالَ الْحَسَنُ لاَ بَأْسَ أَنْ يَضْحَكَ وَهْوَ يُؤَذِّنُ أَوْ يُقِيمُ.


சுலைமான் பின் ஸுரத் ரலி) அவர்கள் பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதே (இதரப் பேச்சுக்கள்) பேசினார்கள்.

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதோ இகாமத் சொல்லிக் கொண்டி ருக்கும்போதோ ஒருவர் சிரிப்பது குற்றமல்ல என்று கூறினார்கள்.

٦١٦حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَعَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ وَعَاصِمٍ الأَحْوَلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ رَدْغٍ، فَلَمَّا بَلَغَ الْمُؤَذِّنُ حَىَّ عَلَى الصَّلاَةِ‏.‏ فَأَمَرَهُ أَنْ يُنَادِيَ الصَّلاَةُ فِي الرِّحَالِ‏.‏ فَنَظَرَ الْقَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ فَعَلَ هَذَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَإِنَّهَا عَزْمَةٌ‏.‏

616 அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


சேறும் சகதியும் நிறைந்த (மழை தூறிக் கொண் டிருந்த) ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்லப்போன போது உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் (அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கச் சொன்னார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதோ இ(ந்த பாங்கு சொல்ப)வரை விடவும் சிறந்தவளரான நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும் கூட இவ்வாறுதான் செய்தார்கள் என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment