13. கனவின் ஒழுங்குங்கள்
நல்ல கனவு நபித்துவத்தில் நாற்பத்தாறில்
ஒன்று
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "
الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ
وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ".
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் நல்ல மனிதன் காணுகின்ற நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு
பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர் : அனஸ் ( ரழி ) நூல் : புஹாரி (6983)
நல்ல கனவின் போதும் தீய கனவின் போதும்
செய்ய வேண்டியவை :
حَدَّثَنَا
سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ،
قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ لَقَدْ كُنْتُ أَرَى الرُّؤْيَا فَتُمْرِضُنِي
حَتَّى سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُولُ وَأَنَا كُنْتُ لأَرَى الرُّؤْيَا
تُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "
الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ اللَّهِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلاَ
يُحَدِّثْ بِهِ إِلاَّ مَنْ يُحِبُّ، وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ
بِاللَّهِ مِنْ شَرِّهَا، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَلْيَتْفِلْ ثَلاَثًا وَلاَ
يُحَدِّثْ بِهَا أَحَدًا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ".
அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ
கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல் நலம்
பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், 'நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத்
தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும்
அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக்
கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப்
பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது' என்று கூறியதைக் கேட்டேன்.
நூல் : புஹாரி ( 7044 )
கெட்ட கனவு கண்டால் தொழ வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ
وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ
خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثَةٌ فَرُؤْيَا
الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللَّهِ وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ
وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا
يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ
…நபி ஸல் அவர்கள்
கூறினார்கள் உங்களில் ஒருவர் தாம் வெறுக்கக் கூடிய கனவைக் கண்டால் எழுந்து தொழட்டும்
அதை மக்களிடம் சொல்ல வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) முஸ்லிம் (2263 )
தூங்கி எழுந்தவுடன் ஓத வேண்டிய து ஆ
صحيح البخاري (8 / 69):
عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، قَالَ: كَانَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ:
«بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا قَامَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا
بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்)
என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி)
அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.
நூல் : புஹாரி ( 6312 )
தூங்கி எழுந்தவுடன் கை கழுவாமல் பாத்திரத்திற்குள் நுழைக்கக் கூடாது
صحيح البخاري (1 /
44):
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ
فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ، ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، وَإِذَا
اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا
فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»
'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம்
மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக்
கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால்
அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம்
கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும்
அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 162 )
தூங்கி எழுந்தவுடன் உளூச் செய்வதற்கு முன்னால் பல் துலக்குதல்
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُوضَعُ
لَهُ وَضُوءُهُ وَسِوَاكُهُ فَإِذَا قَامَ مِنَ اللَّيْلِ تَخَلَّى ثُمَّ اسْتَاكَ
.
நபி ஸல் அவர்களுக்கு உளூச் செய்யும் தண்ணீரும் பல் துலக்கும் குச்சியும் வைக்கப்படும் அவர்கள் இரவில் ( தூக்கத்திருந்து ) எழும்போது இயற்க்கைத் தேவையை நிறைவேற்றுவார்கள் பிறகு பல் துலக்குவார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) நூல் : அபூதாவூத் 51
தூங்கி எழுந்தவுடன் மூக்கை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்
صحيح
البخاري (4 / 126):
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
قَالَ: «إِذَا اسْتَيْقَظَ أُرَاهُ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ
ثَلاَثًا، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ»
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி)
நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 3295 )
No comments:
Post a Comment