Tuesday, December 5, 2017

குப்ரு பற்றிய விளக்கம்


                      குப்ரு பற்றிய விளக்கம்

                                                                                                          - ஆசிரியர் சாலிஹ் அல் பவுஸான்

குப்ரு என்பது மறைத்தல் மூடுதல் என்ற பொருளில் அரபு மொழியில் பயன்படுத்தப் படுகிறது. ஈமான் எனும் சொல்லுக்கு எதிர்பதமே குப்ர் ஆகும்.

 " عدم الإيمان بالله ورسله ، سواءً كان معه تكذيب أو لم يكن معه تكذيب ، بل شك وريب ، أو إعراض عن الإيمان حسدا ًأو كبراً أو اتباعا لبعض الأهواء الصارفة عن اتباع الرسالة فالكفر صفةٌ لكل من جحد شيئاٌ مما افترض الله تعالى الإيمان به ، بعد أن بلغه ذلك سواء جحد بقلبه دون لسانه، أو بلسانه دون قلبه ، أوبهما معاٌ ، أو عمل عملاٌ جاء النص بأنه مخرج له بذلك عن اسم الإيمان " انظر [مجموع الفتاوى لشيخ الإسلام ابن تيمية  12/335]
அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பொய்ப்பித்த நிலையில் அல்லது பொய்ப்பிக் காத நிலையில் ஈமான் கொள்ளாமல் இருப்பதே குப்ராகும். சந்தேகம், பொறாமை, பெருமை அல்லது மமதை காரணமாக இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு ஈமான் கொள்ள மறுத்தலும் குப்ராகும். மேலும் இறைத்தூதர்களை உண்மை யென ஏற்றுக் கொண்டு  பொறாமையின் காரணமாக விசுவாசம் கொள்ளாது நிராகரிப் பதும் குப்ராகும். (நூல்:மஜ்மூஉல் பதாவா ஷைய்குல் இஸ்லாம்.)
குப்ரின் வகைகள்-   இருவகைப்படும்.


1.            குப்ர் அக்பர். பெரும் நிராகரிப்பு:

இந்நிராகிப்பு மார்க்கத்திலிருந்து வெளியேற்றி விடும்; இது ஐந்து பிரிவாகும்.


முதலாவது பிரிவு:

பொய்பித்து நிராகரிப்பதாகும்.

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْكَافِرِينَ

  அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?( 29:68)

இரண்டாம் பிரிவு:

உண்மையென புரிந்து கர்வம், ஆணவம் காரணமாக நிராகரிப்பது.

{وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (2:34)

மூன்றாவது பிரிவு:   
    
சந்தேகத்தின் காரணமாக நிராகிரப்பது.

وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا (35) وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا (36) قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا (37) لَكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا }

தனக்குத்தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்துக்குள் நுழைந்தான். "இது அழிந்து விடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை'' என்றான். "யுகமுடிவு நேரம் வரும் எனவும் நான் நினைக்கவில்லை. நான் எனது இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டால் இதை விடச் சிறந்த தங்குமிடத்தையே பெறுவேன்'' (என்றான்). அவனுடன் உரையாடிய அவனது தோழர் "மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும் உன்னைப் படைத்துப் பின்னர் மனிதனாக உன்னைச் சீரமைத்தவனை நீ மறுக்கிறாயா?'' என்று கேட்டார். "எனினும் அவனே அல்லாஹ். எனது அதிபதி. என் இறைவனுக்கு எவரையும் இணை கற்பிக்க மாட்டேன்'' (18:35-38)
நான்காவது பிரிவு:
புறக்கணித்து நிராகரிப்பது.
{وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا مُعْرِضُونَ

எனினும் நிராகரிப்பவர்களோ எச்சரிக்கை செய்யப்படுவதை புறக்கனிப்பவர்களாகவே இருக்கின்றனர்.(46:3)
ஐந்தாவது பிரிவு:

நயவஞ்சகம் காரணமாக நிராகரிப்பது.

{ذَلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُون

 அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏகஇறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (63:3)

2.            குப்ரு அஸ்கர் . சிறிய நிராகரிப்பு.

இது மார்க்கத்திலிருந்து வெளியேற்றாது. இது அமல் சார்ந்த குப்ராகும். அல்குர்ஆனும் சுன்னாவும் குப்ரு என குறிப்பிடும் பாவங்களை இது குறிப்பிடும். குப்ரு அக்பர் என்ற நிலைக்கு இது இட்டுச் செல்லாது.

உதாரணமாக அல்லாஹ்வின் அருட் கொடைகளை நிரா கரிப்பது

அல்லாஹ் கூறுகிறான்:

{وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ}

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாராளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான். (16:112)

 ஒரு முஸ்லிமை கொலை செய்வது

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(  நூல் : முஸ்லிம் 116 )

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்  கொள்வது

عَنْ جَرِيرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» فَقَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ
'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார். ( நூல் : புஹாரி 121 )

அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்வது

ابْنُ عُمَرَ: لَا يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ

அல்லாஹ் அல்லாத வற்றின் மீது சத்தியம் செய்பவன் குப்ரு செய்து விட்டான், இணைவைத்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர்(ரலி)  (நூல் திர்மிதி 1535)
(இத்தகைய) பெரும் பாவங்களை செய்யக் கூடியவர்களை முஃமின்கள் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى}


நம்பிக்கை கொண்டோரே கொலை செய்யப்பட்டோர் விஷயத்தில் பழிவாங்குவது உங்கள் மீது விதியாக்கப்பட் டுள்ளது.(2:178)


சகோதர முஸ்லிமை கொலை செய்த கொலை யாளியை முஸ்லிம்களின் வட்டத்திலிருந்து அகற்றி விடாமல் அவனை கொலை செய்யப்பட்டவனின் சகோதரன் என்று கூறுகிறான்.

{فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ }


கொலை செய்தவனுக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனின் (இஸ்லாமியச்) சகோதரன் மூலம் அவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.(2:178)
{وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}


நம்பிக்கையாளர்களில் இருசாரார் தங்களுக் கிடையில் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங் கள்(49:9)
குப்ரு அக்பர் மற்றும் குப்ரு அஸ்கருக்குமிடையிலுள்ள வேறுபாடுகள்
இதனை  பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்
1.குப்ரு அக்பர் செய்யக்கூடியவனை மார்க்கத்திலிருந்து வெளியேற்றி விடுவதுடன் அவனது எல்லா நன்மைகளும்  அழிந்து விடும்.
குப்ரு அஸ்கர் செய்பவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடாதவனாகவும் அவனது  நன்மைகைளயும் அழித்து விடாததாகவும் இருக்கும். அவனது செயலுக்கேற்ப நன்மைகள் குறைந்து போகக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நிலையை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அவன் எச்சரிக்கைக்கு உட்பட்டவனாக இருப்பான்.
2.குப்ரு அக்பர் செய்யக்கூடியவன் நிரந்தர நரகவாதியாக இருப்பான். குப்ரு அஸ்கர் செய்பவன் நரகத்தில் நுழைந்தாலும் நிரந்தர மாக இருக்கமாட்டான். அல்லாஹ் அவனது குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடியவனாக இருப்பான்.
3. குப்ரு அக்பர் செய்யக்கூடியவனின் இரத்தமும் சொத்தும் ஹலாலானது. குப்ரு அஸ்கர் செய்பவனின் நிலை அப்படியானதல்ல.
4. குப்ரு அக்பர் செய்யக்கூடியவனுக்கும் முஃமின்களுக்கு மிடையில் குரோதம் காணப் படும். முஃமின்கள் அவர்களை நேசிப்பதோ பாகாவலராக ஏற்பதோ கூடாது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.
ஆனால் குப்ரு அஸ்கரை செய்பவனை ஒரேயடி யாக பகைப்பது கூடாது. அவன் அவனது ஈமானுக்கேற்ப நேசிப்பதோ அவனது பாவங்களுக்கேற்ப கோபிக்கவோ படுவான்.


No comments:

Post a Comment