صحيح الترغيب والترهيب
ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப்( ஆர்வமூட்டி , அச்சுறுத்தி வரும் நபிமொழி தொகுப்பு நூல் )
இந்நூல் அறிமுகம்
ஹிஜ்ரீ 581 ஆம் வருடம் ஷஃபான் மாதத்தில் பிறந்து ஹிஜ்ரீ 656 ஆம் வருடம் துல்கஃதாவில் இறந்த இமாம் முன்திரீஎன்று மக்களால் அழைக்கப்பட்ட அப்துல் அளீம் இப்னு அப்துல் கவிய்யி அல் முன் திரீ அவர்களால் எழுதப்பட்ட நூலின் பெயர் : அத்தர்ஃகீப் வத்தர்ஹீப்
இதன் பொருள் : ஆர்வமூட்டலும் அச்சுறுத்தலும்
கல்வி , தொழுகை , ஒழுக்கம் , நற்குணங்கள் , சொர்க்கம் , நரகம் போன்ற நிறைய தலைப்புகள் கீழ் நபி ஸல் அவர்கள் ஆர்வமூட்டியும் அச்சுறுத்தியும் கூறிய நபிமொழிகளை இமாம் முன் தீரி அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஆர்வமூட்டி , அச்சுறுத்தி வரும் நபிமொழிகளை தொகுத்துள்ள காரணத்தால் தான் தனது நூலுக்கு “ அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் “ என்று பெயரிடப்பட்டுள்ளார்கள்.
இந்நூலில் பலவீனமான , இட்டுக்கட்டபட்ட ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த நூலில் இருந்து பலவீனமான , இட்டுக்கட்டபட்ட ஹதீஸ்களை களைந்து தான் அறிந்த வகையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் தொகுத்து இமாம் நஸுருத்தீன் அல்பானீ அவர்கள் இந்நூலை சுருக்கியுள்ளார்கள்.
இவ்வாறு சுருக்கப்பட்ட நூல் தான் “ ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் “ என்ற இந்நூலாகும்.
இமாம் முன் திரி அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் நூலை இமாம் நஸு ருத்தீன் அல்பானீ அவர்கள் சுருக்கியுள்ள : ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் என்ற நூலே இங்கு பதியப்படுகிறது.
மேலும் இந்த நூல் தமிழியில் 1996 ஆண்டு K.M முஹம்மது முகைதீன் உலவி அவர்களால் தொகுக்கபட்டு சகோ P. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் சரி செய்யபட்டு “ யாசிர் பப்ளிகேஷன்ஸ் “ மூலம் வெளிந்தது என்பது குறிப்பிட தக்கது.
------------------------------
1 -
الترغيب في الإخلاص والصدق والنية الصالحة
1.
மனத் தூய்மை உண்மை பேசுதல் நல்ல எண்ணம் ஆகியவற்றில் ஆர்வமூட்டல்
1 - (صحيح)
عن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله
صلى الله عليه وسلم يقول انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار فدخلوا
فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار فقالوا إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن
تدعوا الله بصالح أعمالكم فقال رجل منهم اللهم كان لي أبوان شيخان كبيران وكنت لا أغبق
قبلهما أهلا ولا مالا فنأى بي طلب شجر يوما فلم أرح عليهما حتى ناما فحلبت لهما غبوقهما
فوجدتهما نائمين فكرهت أن أغبق قبلهما أهلا أو مالا فلبثت والقدح على يدي أنتظر استيقاظهما
حتى برق الفجر
زاد بعض الرواة والصبية يتضاغون عند قدمي فاستيقظا
فشربا غبوقهما
اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا
ما نحن فيه من هذه الصخرة
فانفرجت شيئا لا يستطيعون الخروج منها
قال النبي صلى الله عليه وسلم:
قال الآخر اللهم كانت لي ابنة عم كانت أحب الناس
إلي فأردتها عن نفسها فامتنعت مني حتى ألمت بها سنة من السنين فجاءتني فأعطيتها عشرين
ومائة دينار على أن تخلي بيني وبين نفسها ففعلت حتى إذا قدرت عليها قالت لا يحل لك
أن تفض الخاتم إلا بحقه فتحرجت من الوقوع عليها فانصرفت عنها وهي أحب الناس إلي وتركت
الذهب الذي أعطيتها اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه
فانفرجت الصخرة غير أنهم لا يستطيعون الخروج
منها
قال النبي صلى الله عليه وسلم:
وقال الثالث اللهم إني استأجرت أجراء وأعطيتهم
أجرتهم غير رجل واحد ترك الذي له وذهب فثمرت أجره حتى كثرت منه الأموال فجاءني بعد
حين فقال لي يا عبد الله أد إلي أجري فقلت كل ما ترى من أجرك من الابل والبقر والغنم
والرقيق
فقال يا عبد الله لا تستهزىء بي فقلت إني لا
أستهزىء بك فأخذه كله فساقه فلم يترك منه شيئا اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج
عنا ما نحن فيه
فانفرجت الصخرة فخرجوا يمشون
وفي رواية أن رسول الله صلى الله عليه وسلم قال
بينما ثلاثة نفر ممن كان قبلكم يمشون إذ أصابهم مطر فأووا إلى غار فانطبق عليهم فقال
بعضهم لبعض إنه والله يا هؤلاء لا ينجيكم إلا الصدق فليدع كل رجل منكم بما يعلم أنه
قد صدق فيه فقال أحدهم اللهم إن كنت تعلم أنه كان لي أجير عمل لي على فرق من أرز فذهب
وتركه وإني عمدت إلى ذلك الفرق فزرعته فصار من أمره إلى أن اشتريت منه بقرا وإنه أتاني
يطلب أجره فقلت له اعمد إلى تلك البقر فإنها من ذلك الفرق فساقها فإن كنت تعلم أني
فعلت ذلك من خشيتك ففرج عنا فانساحت عنهم الصخرة
رواه البخاري ومسلم والنسائي
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'(முன்காலத்தில்) மூன்று
மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில்
நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில்
மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர்.
அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த
பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே
சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம்
கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும்
என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை
எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை
இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ
அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு
(பாறை விலகி) இடைவெளி உண்டானது.
மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின்
உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன்
என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள்.
நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள்.
உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக
நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு
கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார்.
அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும்
விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம்
உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று
கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச்
செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச்
சிரமம் விலகியது.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி (
2215 ) முஸ்லிம் ( 2743 )
2 - (صحيح)
ورواه ابن حبان في صحيحه
من حديث أبي هريرة رضي الله عنهـ باختصار ويأتي لفظه في بر الوالدين إن شاء الله تعالى
قوله " وكنت لا أغبق
قبلهما أهلا ولا مالا "
2. மேற்கூறிய ஹதீஸே சுருக்கமாக அபூஹுரைரா ரழி அவர்கள் அறிவிப்பதாக
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் நூலிலும் இடம்பெற்றுள்ளது இந்த ஹதீஸ் இதே நூலின் பெற்றோருக்கு
நலம் செய்தல் என்ற பாட்த்தின் கீழும் இடம்பெறும்.
3 - (صحيح لغيره)
وعن أبي سعيد الخدري عن
النبي صلى الله عليه وسلم أنه قال في حجة الوداع نضر الله امرءا سمع مقالتي فوعاها
فرب حامل فقه ليس بفقيه
ثلاث لا يغل عليهن قلب
امرىء مؤمن إخلاص العمل لله والمناصحة لائمة المسلمين ولزوم جماعتهم فإن دعاءهم يحيط
من ورائهم
رواه البزار بإسناد حسن
3 எனது இந்த சொல்லைக்கேட்டு
அதை மனனம் செய்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ! ஏனென்றால் எத்தனையோ
சட்டங்களை மனனம் செய்து இருப்பவர் சட்ட நிபுணராக இருப்பதில்லை.
மூன்று விஷயங்கள்
உள்ள அவைகளை விரும்பும் எந்த முஃமீனின் இதயமும் மோசடி செய்யப்படமாட்டாது
1. அல்லாஹ்வுக்காக ( மட்டும் ) மனத் தூய்மையாக அமல் செய்வது
2. முஸ்லிம்களின் தலைவர்களிடம் நல்லவிதமாக நடப்பது
3. முஸ்லிம்களின் கூட்டமைப்பைப் பற்றிக் கொள்வது ஏனெனில் முஸ்லிம்களின்
பிரார்த்தனை அவர்களுக்குப் பின்னே சூழ்ந்திருக்கும்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரீ ( ரழி ) நூல் : பஸ்ஸார்
4 -
(صحيح)
ورواه ابن حبان في صحيحه
من حديث زيد بن ثابت ويأتي في سماع الحديث إن شاء الله تعالى
4 மேற்கூறிய ஹதீஸே
ஸைது இப்னு தாபித் ( ரழி ) அறிவிப்பதாக இங்கே இடம்பெற்றுள்ளது “ இது ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
“ நூலில் பதிவாகியுள்ளது “ ஹதீஸை கேட்குதல் “ என்ற பாட்த்தின் கீழும் இனிவரும்
5 -
(صحيح)
وعن مصعب بن سعد عن أبيه
رضي الله عنهـ
أنه ظن أن له فضلا على
من دونه من أصحاب رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم:
إنما ينصر الله هذه الأمة
بضعيفها بدعوتهم وصلاتهم وإخلاصهم
رواه النسائي وغيره وهو
في البخاري وغيره دون ذكر الإخلاص
5 ஸஃது ( ரழி ) அவர்கள்
தனக்குக் கீழுள்ள நபித்டோழர்களை விட தனக்கு சில சிறப்பு உண்டு என எண்ணியிருந்தார்கள்.
அது சமயம் நபி ஸல் அவர்கள் “ இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் உதவி புரியக் காரணம் ( அவர்களிலுள்ள
) பலவீனமானவர்களால் தான் ( அதாவது ) அவர்களின் பிரார்த்தனை அவர்கள்லின் மனத்தூய்மை
ஆகியவையனால் தான் “ என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : முஸ்
அப் இப்னு ஸஃது ( ரழி ) நூல் : நஸயீ
குறிப்பு : “ அவர்களின்
மனத்தூய்மை “ என்ற வாசகம் மட்டும் இல்லாமல் புஹாரியிலும் இது இடம் பெற்றுள்ளது
6 -
(حسن)
وعن أبي أمامة قال جاء
رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له
فقال رسول الله صلى الله عليه وسلم:
لا شيء له
فأعادها ثلاث مرار ويقول
رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال إن الله عز وجل لا يقبل من العمل إلا
ما كان له خالصا وابتغي وجهه
رواه أبو داود والنسائي
بإسناد جيد وسيأتي أحاديث من هذا النوع في الجهاد إن شاء الله تعالى
6 நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து “ ஒருவர் போரில் கலந்து
கொள்கிறார் அவர் ( மறுமையில் ) நன்மையையும் விரும்புகிறார் ( இன்மையில் ) புகழையும்
விரும்புகிறார் இவருக்கு ( இவர் நினைப்பது ) கிடைக்குமா ? என்று கூறுங்கள் எனக்கேட்டார்
. “ எதுவும் கிடைக்காது “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அவர் மூன்று முறை ( அக்கேள்விகளைக்
) கேட்டார் “ எதுவும் இல்லை “ என்று நபி ஸல் அவர்களும் கூறிவிட்டு “ நிச்சயமாக அல்லாஹ்
தனக்காக மனத் தூய்மையுடனும் தன் திருப்தியை மட்டும் வேண்டி செய்யப்படும் அமல்களைத்
தவிர வேறு எதையும் ஒப்புக் கொள்ளமாட்டான் “ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா ( ரழி ) நூல் : அபூதாவூத் , நஸயீ
7 - (حسن لغيره)
وعن أبي الدرداء عن النبي
صلى الله عليه وسلم قال:
الدنيا ملعونة ملعون ما
فيها إلا ما ابتغي به وجه الله تعالى
رواه الطبراني بإسناد
لا بأس به
7 இறைவனின் திருப்தியை
நாடி செய்யப்படும் செயல்களைத்தவிர உலகமும் உலகத்தில் உள்ளவைகளும் சாபத்திற்குரியவைகளே
என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா
( ரழி ) நூல் : தப்ரானீ
08 - (صحيح)
عن عمر بن الخطاب رضي
الله عنهـ قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
إنما الأعمال بالنية وفي
رواية بالنيات وإنما لكل امرىء ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله
ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه
رواه البخاري ومسلم وأبو
داود والترمذي والنسائي
8 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும்
அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால்
அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ
அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப்
( ரழி ) நூல் : புஹாரி, முஸ்லிம் , அபூதாவூத் ,திர்மிதீ, நஸயீ
09 - (صحيح)
وعن عائشة قالت: قال:
رسول الله صلى الله عليه وسلم يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم
وآخرهم
قالت قلت يا رسول الله
كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون
على نياتهم
رواه البخاري ومسلم وغيرهما
9 ஒரு படையினர் கஃபாவின்
மீது போர் தொடுப்பர் , பூமியின் திறந்த வெளியில் அவர்கள் இருக்கும் போது அவர்கள் முழுமையாக
பூமிக்குள் உயிருடன் இழுக்கப்படுவர் என்று நபி ஸல் என்று நபி ஸல் கூறினார்கள் அப்பொழுது
நான் அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் முழுமையாக உயிருடன் பூமிக்குள் ஏன் இழுக்கப்பட வேண்டும்
? அவர்களில் வியாபாரிகளும் அதில் சம்பந்தப்படாதவர்களும் இருப்பார்களே ! என்று கேட்டார்
அதற்கு நபி ஸல் அவர்கள் அவர்கள் அனைவரும் தாம் புதையுண்டு போவார்கள் பின்னர் அவர்களின்
எண்ணங்களுக்கேற்ப எழுப்ப படுவார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா
( ரழி ) நூல் : புஹாரி , முஸ்லிம்
10 - (صحيح)
وعن أنس بن مالك رضي الله
عنهـ قال:
رجعنا من غزوة تبوك مع
النبي صلى الله عليه وسلم فقال:
:
إن أقواما خلفنا بالمدينة
ما سلكنا شعبا ولا واديا إلا وهم معنا حبسهم العذر
رواه البخاري وأبو داود
ولفظه أن النبي صلى الله عليه وسلم قال: لقد تركتم بالمدينة أقواما ما سرتم مسيرا ولا
أنفقتم من نفقة ولا قطعتم من واد إلا وهم معكم
قالوا يا رسول الله وكيف
يكونون معنا وهم بالمدينة قال حبسهم المرض
10 நாங்கள் தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்ண்டிருந்தோம்
அப்போது நபி ஸல் அவர்கள் நம்முடன் வராமல் மதினாவில் சில மக்கள் உள்ளனர்.
ஒரு ஒடைய்யோ கணவாயையோ நாம் கடந்து சென்றால் அந்த மக்களும்
நம்முடன் உள்ளனர் நோய்தான் அவர்களைத் தடுத்து விட்டது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரழி ) நூல் : புஹாரி
மதீனாவில் நீங்கள் சிலரை விட்டு வந்துள்ளீர்கள் அவர்கள் உங்களுடன்
இருந்தே தவிர நீங்கள் எந்த இட்த்தையும் கடப்பதுமில்லை எதையும் செலவு செய்வதுமில்லை
எந்த ஒடையையும் கடப்பதுமில்லை என்று நபி ஸல் கூறியபோது “ இறைத்தூதர் அவர்களே ! மதீனாவில்
அவர்கள் இருக்க்க் எங்களுடன் இருப்பதாக எப்படி அமையும் என்று நபித்தோழர்கள் கேட்டனர்
அவர்களை நோய் தான் தடுத்துள்ளது ( அவர்களின் எண்ணமோ இங்குள்ளது ) என்று நபி ஸல் பதில்
கூறினார்கள்.
இந்த வாசகம் அபூதாவூதில் உள்ளது
No comments:
Post a Comment