தஜ்ஜால் பற்றின தகவல் ( ஹதீஸ்கள் பார்வையில் )- 03
யூதர்கள் தஜ்ஜாலுடன் ஒன்றிணைதல்:
தஜ்ஜால் வெளிப்பட்டவுடன்
அவனுடன் யூதர்கள் ஒன்று சேர்வார்கள். முஸ்லிம்களுக்கு பகைமை பாராட்டும் யூதர்கள் அந்த
பகைமையின் இன்னுமொரு வடிவமாக ஈமானுக்கெதிராக செயற்படும் தஜ்ஜாலுடன் இணைந்து கொள்வார்கள்.
அதுபோல் அகலமான முகங்களைக் கொண்ட மக்களும் முஸ்லிம்களுக்கெதிராக தஜ்ஜாலு டன் ஒன்றினைவார்கள்.
இவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெற்றிக் கொள்வார்கள்.
صحيح مسلم (4ஃ 2266)
عَنْ عَمِّهِ أَنَسِ
بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتْبَعُ
الدَّجَّالَ مِنْ يَهُودِ أَصْبَهَانَ، سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمُ الطَّيَالِسَةُ»
தஜ்ஜாலைப் பின்தொடர்ந்து
அஸ்ப ஹான்| நாட்டைச் சேர்ந்த யூதர்களில் எழுபதாயிரம் பேர் வருவார்கள். அப்போது அவர்கள் தயாலிசா| எனும் (கோடு போட்ட கெட்டியான) ஒருவகை ஆடை அணிந்திருப் பார்கள் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: முஸ்லிம்-5643)
سنن الترمذي ت شاكر
(4ஃ 509)
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ
قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' الدَّجَّالُ
يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالمَشْرِقِ يُقَالُ لَهَا: خُرَاسَانُ، يَتْبَعُهُ أَقْوَامٌ
كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ ':
தஜ்ஜால் (மதீனாவின்)
கிழக்குப் பகுதியில் குராஸான் எனும் இடத்திலிருந்து வெளியாகுவான். தோலால் மூடப்பட்ட
கேடயங்களைப் போன்று அகலமான முகங் களையுடைய கூட்டத் தினர்கள் அவனை பின்தொடர்ந்து செல்வார்கள்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்; அபூபக்கர் ஸித்தீக்(ரலி) நூல்: திரிமதி
صحيح البخاري (4ஃ 43)
حَدَّثَنَا عَمْرُو
بْنُ تَغْلِبَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ
أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ
مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ
المَجَانُّ المُطْرَقَةُ
முடியாலான செருப்புகளை
அணிகிற ஒரு சமுதாயத் தினருடன் நீங்கள் போரிடுவது, இறுதி நாளின் அடை யாளங்களில்
ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தினருடன்
நீங்கள் போரிடுதும் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.
முஸ்லிம்கள் யூதர்களை
வெற்றி கொள்ளல்:
யூதர்கள் முஸ்லிம்களுக்கெதிராக
நடாத்தி வரும் அட்ட காசங்கள்; அனியாயங்கள் தஜ்ஜால் வந்த பிறகும் தொடர்ந்தாலும் அவை
அனைத்தையும் முஸ்லிம்கள் இறுதியாக வெற்றிக் கொள்வார்கள்.
صحيح مسلم (4ஃ 2239)
أَنَّ عَبْدَ اللهِ
بْنَ عُمَرَ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
' تُقَاتِلُكُمُ الْيَهُودُ فَتُسَلَّطُونَ عَلَيْهِمْ، حَتَّى يَقُولَ الْحَجَرُ:
يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ
நீங்கள் யூதர்களுடன்
போர் புரிந்து அவர்களை வெற்றி கொள்வீர்கள். அவர்கள் மீது உங்களுக்குச் செல்வாக்கு ஏற்படும்.
எந்தளவுக்கென்றால் (கல்லுக்குப் பின் ஒரு யூதன் ஒலிந்து கொள்வான்) அப்போது அந்தக் கல்
முஸ்லிமே! இதோ ஒரு யூதன் எனக்குப் பின்னால் இருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு
என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரழி), நூல்: முஸ்லிம்-5598,
5601)
صحيح مسلم (4ஃ 2239)
عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' لَا تَقُومُ السَّاعَةُ
حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى
يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ
أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ
فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ
'
முஸ்லிம்கள் யூதர்களுடன்
யுத்தம் புரியும் வரை மறுமைநாள் வராது. அப்பொழுது யூதர் கள் கற்களுக்கும் மரங்களுக்கும்
பின்னால் ஒலிந்து கொள்வர். அக்கற்களும் மரங்களும் முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால்
ஒரு யஹுதி ஒலிந்துள்ளான். வாரும்! அவனை கொன்று விடுவீராக என்று கூறும். ஷஹர்கத்| என்ற மரத்தை தவிர, அது யஹுதிகளின் மரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (அறிவிப்பவர்: அபூ
ஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம்)
தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு கோரல்:
தஜ்ஜால் வந்ததும் மக்கள்
மலைகளின் பக்கம் விரண் டோடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
உம்மு ஷரீக் (ரழி) நூல்: முஸ்லிம்)
தஜ்ஜாலின் குழப்பம் மிகப்
பெரும் அபாயகரமானதாக இருக்கும் என்பதனால் அவனை சந்திக்கவேண்டும் என்பதோ அவன் காலத்தில்
வாழவேண்டும் என்று
எதிர்பார்ப்போ இருக்கக்கூடாது. தஜ்ஜாலின் பித்தனா
விலிருந்து பாதுகாப்பு பெறுமாறு நபி(ஸல்) அவர்கள்
ஏவி யுள்ளார்கள்.
صحيح مسلم (4ஃ 2266)
نَأْتِي عِمْرَانَ بْنَ
حُصَيْنٍ، فَقَالَ ذَاتَ يَوْمٍ: إِنَّكُمْ لَتُجَاوِزُونِي إِلَى رِجَالٍ، مَا كَانُوا
بِأَحْضَرَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، وَلَا أَعْلَمَ
بِحَدِيثِهِ مِنِّي، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:
«مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ خَلْقٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ»،
(முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது முதல்
யுக முடிவு நாள் ஏற்படும்வரை தஜ்ஜாலை விட (குழப்பத்தை ஏற்படுத்துகின்ற மிகப் பெரும்
படைப் பேதும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள். அறிவிப்பவர் :இம்றான் ஹூசைன் (ரலி) நூல் : முஸ்லிம்
صحيح مسلم (1ஃ 555)
عَنْ أَبِي الدَّرْدَاءِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ
مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».
எவர் சூரதுல் கஹ்பின்
முதல் பத்து வசனங்களை மனன மிடுகிறாரோ அவர் தஜ்ஜாலிருந்து பாதுகாக்கப் படுவார் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூதர்தா(ரலி) நுர்ல்: முஸ்லிம்
صحيح مسلم (1ஃ 412)
أَنَّ عَائِشَةَ، زَوْجَ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ
مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ
بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ
وَالْمَغْرَمِ»
அல்லாஹ்வின் தூதர் நபி
(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்தித்து வந்தார்கள்.
யாஅல்லாஹ்! உன்னிடம்
நான் நரகத் தின் சோதனை யிலிருந்தும் நரகத்தின் வேத னையிலிருந்தும் மண்ண றை (கப்றுடைய)
சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேத னையிலிருந்தும் செல்வத்தின் தீங்கிலிருந்தும் வறுமையின்
சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜா லின் சோதனையின்
தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (அறிவிப்பவர்: அயிஷா (ரழி), நூல்: முஸ்லிம்-5242)
முஸ்லிம்களின் வெற்றியும் தஜ்ஜாலின் தோழ்வியும்;
தஜ்ஜாலின் வருகையும் செயற்பாடுகளும் மிகப் பெரும் குழப்பங்களை நிகழ்த்தினாலும்
அதற்கு முன் முஸ்லிம் கள் பல வெற்றிகளை பெறும் நிலமை உருவாகும். அதிலும் குறிப்பாக
முஸ்லிம்களுக்கெதிராக படைத்தி ரட்டிவரும் கிறிஸ்தவர்களின் முற்றுகைகளை முஸ் லிம்கள்
தகர்த்து முன்னேறுவார்கள். வெற்றிக் கொள் வார்கள். சத்தியத்திற்காக போராடும் ஒரு கூட்டம்
கியாமத் வரை போடிக் கொண்டே இருப்பார்கள். அதன் முடிவிலே ஈஸா நபியின் வருகையும் நிகழும்
தஜ்ஜா லின் அட்டகாசங்களுககான முடிவும் எட்டப்புடும்.
பாபுல் லுத் எனும் இடத்தில்வைத்து
தஜ்ஜாலை ஈஸா( நபி) கொலை செய்வார்கள்.
தஜ்ஜாலின் குழப்பங்களால்
சோதனைகளுக்குள்ளான முஃமின்களுக்கு ஈஸா நபியின் வருகை புத்துயிர் ஊட் டக்கூடியதாக அமையும்.
சோதனைகளுக்குள்ளான மக் களின் முகங்களை தடாவி அவர்களுக்கு அல்லாஹ் விடம் கிடைக்கவிருக்கும்
அந்தஸ்துகள் குறித்து நன் மாராயம் கூறுவார்கள்.
صحيح مسلم (4ஃ 2221)
عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' لَا تَقُومُ السَّاعَةُ
حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ، فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ
مِنَ الْمَدِينَةِ، مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ، فَإِذَا تَصَافُّوا،
قَالَتِ الرُّومُ: خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ،
فَيَقُولُ الْمُسْلِمُونَ: لَا، وَاللهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا،
فَيُقَاتِلُونَهُمْ، فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللهُ عَلَيْهِمْ أَبَدًا، وَيُقْتَلُ
ثُلُثُهُمْ، أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللهِ، وَيَفْتَتِحُ الثُّلُثُ، لَا يُفْتَنُونَ
أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ، فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ،
قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ، إِذْ صَاحَ فِيهِمِ الشَّيْطَانُ: إِنَّ
الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ، فَيَخْرُجُونَ، وَذَلِكَ بَاطِلٌ، فَإِذَا
جَاءُوا الشَّأْمَ خَرَجَ، فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ، يُسَوُّونَ الصُّفُوفَ،
إِذْ أُقِيمَتِ الصَّلَاةُ، فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَأَمَّهُمْ، فَإِذَا رَآهُ عَدُوُّ اللهِ، ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ
فِي الْمَاءِ، فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ، وَلَكِنْ يَقْتُلُهُ اللهُ
بِيَدِهِ، فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ '
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ரோம பைசாந்தியர்கள்; (சிரியாவிலுள்ள) அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய இடங்களில் நிலை கொள்ளாத வரை யுகமுடிவு
நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனா விலிருந்து ஒருபடை புறப்படும். அன்றைய நாளில்
பூமியில் வசிப்போரில் அவர்களே சிற்நதவர்களாயிருப்பர். அவர்கள் அணிவகுத்து நிற்கும்
போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக் கைதிகளாப் பிடிக்கப்ப டோருக்குமிடையே நாங்கள் போர்
செய்ய எங்களை விட்டு விடுங்கள்|| என்று கூறுவார்கள்.
அப்போது முஸ்லிம்கள், இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் சகோதரர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்க
மாட்டோம்| என்று சொல்வார்கள். ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது
முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோடு வார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும்
மன்னிக் கவே மாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள்
அல்லாஹ் விடத்தில் மிகச் சிறந்த உயிர்த் தியாகி களாவர். மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை
வெற்றி கொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக் குள் ளாக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கொன்ஸ் தாந்து நோபிளை வெற்றி கொள்வார்கள்.
அவர்கள் தம்வாட்களை ஆலிவ்
மரங்களில் தொங்க விட்டுப் போர்ச் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக் கும்போது, அவர்களிடையே ஷைத்தான்,
நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத் தாரிடையே மஸீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்| என்று குரலெழுப்புவான்.
உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை
நோக்கிப் புறப் பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தி யாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு
(சிரியா) வரும் போது மஸீஹ்|
(தஜ்ஜால்) புறப்படுவான். இந்நிலை யில் அவர் கள் போருக்காக ஆயத்தமாகி
அணிகளைச் சீர்செய்து கொண்டிருக்கும் போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப் படும். அப்போது மர்யமின்
புதல்வர் ஈஸா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வந்து அவர் களுக்குத் தலைமையேற்பார்கள்.
அவரை அல்லாஹ்வின் விரோதி
(தஜ்ஜால்) காணும் போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாயமல் விட்டு விட்டால்
கூட அவன் தானாகக் கரைந்து அழிந்து விடுவான். ஆயினும் ஈஸாவின் கரத்தால் அவனை அல்லாஹ்
அழிப்பான். அப்போது ஈஸா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை
மக்களுக்குக் காட்டுவார்கள். இதை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
صحيح مسلم (1ஃ 137)
أَنَّهُ سَمِعَ جَابِرَ
بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ
إِلَى يَوْمِ الْقِيَامَةِ»، قَالَ: ' فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُ أَمِيرُهُمْ: تَعَالَ صَلِّ لَنَا، فَيَقُولُ: لَا،
إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللهِ هَذِهِ الْأُمَّةَ '
எனது சமூகத்தில் ஒரு
கூட்டம் மறுமை நாள் ஏற்படும் வரை சத்தியத்திற்காக போராடி மேலோங்கி நிற்பார் கள்.அப்போது
மர்யமின் மகன் ஈஸா(அலை) இறங்கு வார். அப்போது
எங்களுக்கு தொழுகை நடாத் துங்கள் என ஈஸா (அலை)இடம் அக்கூட் டத்தின் தலைவர் கூறு வார்.
இல்லை உங்களில் சிலர் சிலருக்கு தலைவராக இருக்கின்றீர்கள் (அது) இந்த (முஹம்மத் நபியின்)
சமூகத்திற்கு அல்லாஹ் செய்த கண்ணியமாகும் என ஈஸா (அலை) கூறுவார்கள் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் (அறிவிப்பவர்: ஐபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (4ஃ 2253)
فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ
إِذْ بَعَثَ اللهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ، فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ
شَرْقِيَّ دِمَشْقَ، بَيْنَ مَهْرُودَتَيْنِ، وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ
مَلَكَيْنِ، إِذَا طَأْطَأَ رَأْسَهُ قَطَرَ، وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ
كَاللُّؤْلُؤِ، فَلَا يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إِلَّا مَاتَ، وَنَفَسُهُ
يَنْتَهِي حَيْثُ يَنْتَهِي طَرْفُهُ، فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ،
فَيَقْتُلُهُ، ثُمَّ يَأْتِي عِيسَى ابْنَ مَرْيَمَ قَوْمٌ قَدْ عَصَمَهُمُ اللهُ مِنْهُ،
فَيَمْسَحُ عَنْ وُجُوهِهِمْ وَيُحَدِّثُهُمْ بِدَرَجَاتِهِمْ فِي الْجَنَّةِ، فَبَيْنَمَا
هُوَ كَذَلِكَ إِذْ أَوْحَى اللهُ إِلَى عِيسَى: إِنِّي قَدْ أَخْرَجْتُ عِبَادًا لِي،
لَا يَدَانِ لِأَحَدٍ بِقِتَالِهِمْ، فَحَرِّزْ عِبَادِي إِلَى الطُّورِ وَيَبْعَثُ اللهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ
தஜ்ஜாலின் அட்டகாசம்
நடந்து கொண் டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு அனுப்பி
வைப்பான் அவர்(சிரியாவின் தலை நகர் டமஸ்கஸ் எனும்) திமிஷ்க் நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள
வெள்ளை கோபு ரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள் மீது தம் கைகளை வைத்த வாறு
இறங்குவார்.
அற்போது அவர் குங்குமப்
பூ நிறத்தில் இரு ஆடைகள் அனிந்திருப்பார். அவர் தனது தலையை தாழ்த்தினால் நீர்த் துளி
சொட்டும். தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக்காற்றைச்
சுவாசிக்கும் எந்தவொர் இறை மறுப்பாளனும் சாகாமல் இருக்க மாட்டான். அவர் விடும் மூச்சானது
பார்வை எட்டும் தூரம் வரை செல்லும்.
பின்னர் ஈஸா (அலை) அவர்கள்
தஜ்ஜாலை தேடிச் செல்வார்கள் இறுதியில் (பாலஸ்தீனிலுள்ள) பாபு லுத்து' எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு கொலை செய்து விடுவார்கள். (தஐ;ஐhல் மூலம் நடந்து வந்த அத்தனை அட்டகாசங்களும் முடிவுக்கு வந்து விடும். (பிறகு மக்கள்
ஏழு ஆண்டு காலம் வாழ் வார்கள் அவர்களில் இருவருக்கிடையில் குரோதம் கூட இருக்காது)
பிறகு (தஜ்ஜாலை இறைவனாக
ஏற்க மறுத்து சோதனைக்குள்ளாகி) தஜ்ஜாலிடம் மிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமூதா
யத்தார் மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர் களிடம் வருவார்கள்.அவர்களின் முகங் களை ஈஸா (அலை)
தடவி சுவர்க்கத்தில் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் (தரஜாத்துகள்) படித் தரங்கள் குறித்து
அவர்களுக்கு நற்செய்தி தெரிவிப் பார்.(இந்நிலையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அல்லாஹ்
வெளியாக்குவான். (நூல்:முஸ்லிம்)
سنن الترمذي ت شاكر
(4ஃ 515)
سَمِعْتُ عَمِّي مُجَمِّعَ
ابْنَ جَارِيَةَ الأَنْصَارِيَّ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَقْتُلُ ابْنُ مَرْيَمَ الدَّجَّالَ بِبَابِ لُدٍّ»
ஈஸா(அலை) அவர்கள் தஜ்ஜாலை பாபுல்லுத் எனும் இடத்தில் வைத்து கொலை செய்வார்கள்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:திர்மிதி
முற்றும்
No comments:
Post a Comment