தஜ்ஜால் பற்றின தகவல் ( ஹதீஸ்கள் பார்வையில் )- 02
தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்:
உலகம் பூராவும் சுற்றித்திரியும்
தஜ்ஜாலுக்கு மக்கா மதீனாவிற்குள் நுழையமுடியாத படி மலக்குகளால் பாதுக்கப்படும்.
عَنْ أَبِي بَكْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لاَ يَدْخُلُ المَدِينَةَ رُعْبُ المَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ
أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ»
மஸீஹுத் தஜ்ஜால் குறித்து
அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழை வாயில்கள் இருக்கும்.
ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவலர்கள்) காப்பதற் காக நியமிக்கப்பட்டு)
இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்ப வர்: அபூபக்ரா (ரழி), நூல்: புகாரி-7125)
صحيح مسلم (4ஃ 2242)
قَالَ رَسُولُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ
தஜ்ஜால் மக்கா மதீனாவிற்குள்
நுழைய மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)
مسند أحمد ط الرسالة
(39ஃ 90)
، وَلَا يَقْرَبُ أَرْبَعَةَ مَسَاجِدَ
مَسْجِدَ الْحَرَامِ، وَمَسْجِدَ الْمَدِينَةِ، وَمَسْجِدَ الطُّورِ، وَمَسْجِدَ الْأَقْصَى،
وَمَا يُشَبَّهُ عَلَيْكُمْ، فَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ
அஹ்மதில் வரக்கூடிய ரிவாயத்தில்
மக்கா . மஸ்ஜி துன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் மஸ்ஜதுத் தூர் ஆகிய பள்ளவாசல்களுக்கும் நுழைய மாட்டான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
صحيح البخاري (3ஃ 22)
حَدَّثَنِي أَنَسُ بْنُ
مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
قَالَ: «لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلَّا مَكَّةَ، وَالمَدِينَةَ،
لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ، إِلَّا عَلَيْهِ المَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا،
ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ
كَافِرٍ وَمُنَافِقٍ»
மக்காவையும் மதீனாவையும்
தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ் வொரு நுழைவாயிலிலும் வானவர்கள்
அணிவகுத்து நின்று மதீனா வைப் பாதுகாப்பார்கள். ஆகவே தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள)
உவர் நிலத்தில் இறங்கி தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலி
ருந்து ஒவ்வொரு இறை மறுப்பாளனும் நயவஞ் சகனும் அவனை நோக்கிப் புறப்படு வார்கள் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: முஸ்லிம்-5642,
புகாரி-7124)
இன்னுமொரு ரிவாயத்தில்,
صحيح مسلم (4ஃ 2266)
عَنْ أَنَسٍ، أَنَّ
رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَذَكَرَ نَحْوَهُ، غَيْرَ أَنَّهُ
قَالَ: «فَيَأْتِي سِبْخَةَ الْجُرُفِ فَيَضْرِبُ رِوَاقَهُ» وَقَالَ: «فَيَخْرُجُ
إِلَيْهِ كُلُّ مُنَافِقٍ وَمُنَافِقَةٍ»
தஜ்ஜால் அல் ஜுருஃப் எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று தனது கூடாரத்தை
அமைப் பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ் சகியும் அவனை நோக்கி (மதீனா விற்குள்ளிலிருந்து
புறப்படு வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: முஸ்லிம்-5642).
தஜ்ஜாலும் சிறுபான்மை அறேபியரும்:
அரபு சமுதாயத்தவர்கள்
குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது தஜ்ஜாலின் வருகை நிகழும்.
صحيح مسلم (4ஃ 2266)
أَنَّهُ سَمِعَ جَابِرَ
بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَتْنِي أُمُّ شَرِيكٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ
فِي الْجِبَالِ»، قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللهِ فَأَيْنَ الْعَرَبُ يَوْمَئِذٍ؟
قَالَ: «هُمْ قَلِيلٌ»،
மக்கள் தஜ்ஜாலிடமிருந்து
வெருண்டோடி மலை களுக்குச் சென்று விடுவார்கள் என நபி (ஸல்) அவர் கள் கூறக் கேட்டேன்.
அப்போது நான், அல்லாஹ் வின் தூதரே! அறேபியர் அப்போது எங்கே இருப்பார் கள் என்று கேட்டேன். அதற்கு
நபி (ஸல்) அவர் கள் அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக் கையிலேயே இருப்பார்கள் என்று
கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரழி), நூல்: முஸ்லிம்-5644)
பூமியில் தங்கும் நாட்கள்
தஜ்ஜாலின் குழப்பங்கள்
நாற்பது நாற்களுக்கு நிகழும். ஆனால் அந்த நாட்கள் சாதாரண நாட் களைப்போன்று இராது.
صحيح مسلم (4ஃ 2252)
قُلْنَا: يَا رَسُولَ
اللهِ وَمَا لَبْثُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٍ،
وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا:
يَا رَسُولَ اللهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ
يَوْمٍ؟ قَالَ: «لَا، اقْدُرُوا لَهُ قَدْرَهُ»
அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால்
பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்? என்று கேட்டோம். அதற்கு நாற்பது நாட்கள் என்று பதிலளித்த
நபியவர்கள் ஷஅன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும் மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும்
அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும் மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப்
போன் றும் இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த நாளில் வழக்கமாகத் தொழும்
(ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் இல்லை (போதாது) அந்த
(நீண்ட) நாளை அதற்கேற்ப மதிப்பிட்டுத் (தொழுது) கொள் ளுங்கள் என்று பதிலளித்தார்கள்.
(நூல்: முஸ்லிம் -5629)
உலகை சுற்றி வரும் வேகம்:
குறுகிய காலம் பூமியில்
இருந்தாலும் வேகமாக உலகை சுற்றிவருவான். மக்களை வழிகெடுப்பான்.
صحيح مسلم (4ஃ 2252)
قُلْنَا: يَا رَسُولَ
اللهِ وَمَا إِسْرَاعُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: ' كَالْغَيْثِ اسْتَدْبَرَتْهُ الرِّيحُ،
فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ
நாங்கள் அல்லாஹ்வின்
தூதரே! பூமியில் தஜ்ஜால் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் வேகம்
போன்று அவன் வேகமாக பூமியைச் சுற்றி வருவான்) என்றார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு
ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)
தஜ்ஜால் காட்டும் அற்புதங்களும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொள்வதும்-
தஜ்ஜால் மக்களை வழிகெடுப்பதற்காக
பல அற்புதங் களை காண்பிப்பான். அவை மனித சக்திக்கு அப்பாற் பட்டது. எனினும் அந்த அற்புதங்களை
அவனால் சுயமாக செய்யமுடியாது.
தன்னை கடவுள் என்பதற்காக
ஒருவரை கொலை செய்து உயிர்பித்துகாட்டுவான். இரண்டாம் முறை அவனால் அப்படி செய்ய முடியாமல்
இருக்கும். கட வுள் பலஹீனமானவனாக இருக்க முடியுமா?
. அவன் காட்டும் அற்புதங்களை
கண்டு மயங்கி அவனை கடவுள் என்று நம்பி ஈமானை பலி கொடுத்து விடக் கூடாது என்பதற்காக அவன் செய்யப்போகும் அற் புதங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் விவரிக்கிறார்கள்.
தஜ்ஜாலை கடவுள் என்று
ஏற்காதவர்களும் அவனை பின்தொடராதவர்களும் கடுமையான சோதனை களுக்கு ஆளாக்கப்படுவார்கள். தஜ்ஜாலுக்குப் பின் னால் அவனை ஏற்றுக் கொண்ட மக்களில்
ஆயுதம் ஏந்திய படைபிரிவும் இருக்கும். தஜ்ஜாலை கடவு ளாக ஏற்காதவர்களை தண்டிப்பார்கள்.
صحيح مسلم (4ஃ
عَنْ حُذَيْفَةَ، قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنَا أَعْلَمُ بِمَا مَعَ
الدَّجَّالِ مِنْهُ، مَعَهُ نَهْرَانِ يَجْرِيَانِ، أَحَدُهُمَا رَأْيَ الْعَيْنِ،
مَاءٌ أَبْيَضُ، وَالْآخَرُ رَأْيَ الْعَيْنِ، نَارٌ تَأَجَّجُ، فَإِمَّا أَدْرَكَنَّ
أَحَدٌ، فَلْيَأْتِ النَّهْرَ الَّذِي يَرَاهُ نَارًا وَلْيُغَمِّضْ، ثُمَّ لْيُطَأْطِئْ
رَأْسَهُ فَيَشْرَبَ مِنْهُ، فَإِنَّهُ مَاءٌ بَارِدٌ،
தஜ்ஜாலுடன் என்ன இருக்கும்
என்பதை அவனை விட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில்
ஒன்று வெளிப் பார் வைக்கு வென்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு
கொழுந்து விட்டெறி யும் நெருப்பாகக் காட்சி தரும்.
அந்த இடத்தை அடைபவர்
நெருப்பாகக் காட்சி யளிக்கும் நதிக்குச் சென்று கண்ணை மூடிக் கொண்டு தலையைத் தாழ்த்தி
அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும்.... என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைபா (ரழி), நூல்: முஸ்லிம்-5624)
صحيح مسلم (4ஃ 2248)
عَنْ حُذَيْفَةَ، قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّجَّالُ أَعْوَرُ الْعَيْنِ
الْيُسْرَى، جُفَالُ الشَّعَرِ، مَعَهُ جَنَّةٌ وَنَارٌ، فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ
نَارٌ
தஜ்ஜாலுடன் சொர்க்கமொன்றும்
நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடமுள்ள சொர்க்கம் நரகமாகும்
என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உதைபா (ரழி), நூல்: முஸ்லிம்-5623,
5628)
صحيح مسلم (4ஃ 2257)
عَنِ الْمُغِيرَةِ بْنِ
شُعْبَةَ، قَالَ: مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ
الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُ، قَالَ: «وَمَا يُنْصِبُكَ مِنْهُ؟ إِنَّهُ لَا
يَضُرُّكَ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ الطَّعَامَ
وَالْأَنْهَارَ، قَالَ: «هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلِكَ»
நபி (ஸல்) அவர்களிடம்
தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதை விட அதிகமாக வேறெவரும் வினவி யதில்லை. நபி (ஸல்)
அவர்கள் (என்னிடம்) உமது கேள்வி என்ன? என்று கேட்டார்கள்.தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும்
நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
(இது என்ன பிரமாதம்?|) அவன் மூலம் அல்லாஹ் எதை யெல்லாம் காட்ட விருக்கிறானோ) அவற்றை விட இவை அல்லாஹ்வுக்கு மிகவும்
சாதாரணமான வையே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா (ரழி), நூல்: முஸ்லிம் - 5634,
புகாரி-7122)
صحيح مسلم (4ஃ 2252)
فَيَأْتِي عَلَى الْقَوْمِ
فَيَدْعُوهُمْ، فَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ، فَيَأْمُرُ السَّمَاءَ فَتُمْطِرُ،
وَالْأَرْضَ فَتُنْبِتُ، فَتَرُوحُ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ، أَطْوَلَ مَا كَانَتْ
ذُرًا، وَأَسْبَغَهُ ضُرُوعًا، وَأَمَدَّهُ خَوَاصِرَ، ثُمَّ يَأْتِي الْقَوْمَ، فَيَدْعُوهُمْ
فَيَرُدُّونَ عَلَيْهِ قَوْلَهُ، فَيَنْصَرِفُ عَنْهُمْ، فَيُصْبِحُونَ مُمْحِلِينَ لَيْسَ بِأَيْدِيهِمْ شَيْءٌ مِنْ أَمْوَالِهِمْ، وَيَمُرُّ
بِالْخَرِبَةِ، فَيَقُولُ لَهَا: أَخْرِجِي كُنُوزَكِ، فَتَتْبَعُهُ كُنُوزُهَا كَيَعَاسِيبِ
النَّحْلِ، ثُمَّ يَدْعُو رَجُلًا مُمْتَلِئًا شَبَابًا، فَيَضْرِبُهُ بِالسَّيْفِ
فَيَقْطَعُهُ جَزْلَتَيْنِ رَمْيَةَ الْغَرَضِ، ثُمَّ يَدْعُوهُ فَيُقْبِلُ وَيَتَهَلَّلُ
وَجْهُهُ، يَضْحَكُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللهُ الْمَسِيحَ ابْنَ
مَرْيَمَ،
.... தஜ்ஜால் ஒரு சமுதாயத்தாரிடம்
வந்து (தன்னை இறைவன் என்று கூறி ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான்.
அவர்களும் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதில ளிப்பார்கள். உடனே
வானத் திற்கு (மழை பொழியுமாறு) கட்டளையி டுவான். மழை பொழியும். பூமிக்கு(த் தாவரங்களை
முளைக்கச் செய்யுமாறு) கட்டளையி டுவான். பூமி தாவரங்களை முளைய வைக்கும்.
(அவற்றை மேய்ந்து) அவர்களின் கால் நடைகள் ஏற்கனவே இருந்ததை
விடநீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியதாகவும் மாலையில்
(வீடு) திரும்பும்.
பின்னர் மற்றொரு சமுதாயத்தாரிடம்
வந்து (தன் னை இறைவனாக ஏற்றுக் கொள்ளுமாறு) அவர் களுக்கு அழைப்பு விடுப்பான். ஆனால்
அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர் களிடமிருந்து அவன் திரும்பிச்
சென்று விடுவான். அதனால் அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக்
காலைப் பொழுதை அடை வார்கள். அவர் களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (மிஞ்சி) இருக்காது.
அவன் பாழடைந்த இடமொன்றைக்
கடந்து செல்வான். அதைப் பார்த்து உன்னிடம் இருக் கின்ற புதையல்களை வெளிப் படுத்து என்று
கூறு வான். அப்போது (வெளிப் படும்) அந்தப் புதையல்கள் இராணித் தேனீக்களை (பின்பற்றிச்
செல்லும் தேனீக் களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
பின்னர் அவன் வாட்டசாட்டமான
இளைஞர் ஒரு வரை அழைத்து அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி அப்பெய்யும் தூரத்திற்கு
இடைவெளி விட்டு (அவ்விரண் டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே
அந்த இளைஞர் முகம் பிரகாசிக்க சிரித்துக் கொண்டே எழுந்து வருவார்... என நபி (ஸல்) அவர்கள்
கூறி னார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)
தஜ்ஜாலை எதிர்த்து நிற்கும் இறை விசுவாசி:
நபி(ஸல்) அவர்கள் தஜ்ஜால்
குறித்து கூறிய முன்னறி விப்புக்கேற்ப அவனையும் அவனது குழப்பங்களையும் அடையாளம் கண்டு
கொள்ளும் முஃமின்கள் அவனை எதிர்த்து நிற்பார்கள்.
صحيح مسلم (4ஃ 2251)
نْ عَبْدِ الرَّحْمَنِ
بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ النَّوَّاسِ
بْنِ سَمْعَانَ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ
ذَاتَ غَدَاةٍ، فَخَفَّضَ فِيهِ وَرَفَّعَ، حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ،
فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا، فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟» قُلْنَا:
يَا رَسُولَ اللهِ ذَكَرْتَ الدَّجَّالَ غَدَاةً، فَخَفَّضْتَ فِيهِ وَرَفَّعْتَ، حَتَّى
ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَقَالَ: «غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَيْكُمْ،
إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ، فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ، وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ
فِيكُمْ، فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசிய
போது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும் (சில சமயம் குரலை) உயர்த்த வும் செய்தார்கள்.
கடைசியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்சமரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும்
அளவுக்குப் பேசினார்கள்.
பின்னர் நாங்கள் (மறுபடியும்)
மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில்
இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டு உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜா
லைப் பற்றிக் குறிப்பிட்டீர் கள். (அப்போது) அவனைப் பற்றி (குரலை) தாழ்த்தியும் உயர்த்தியும்
பேசினீர்கள். இறுதியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ
என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசி னீர்கள். அதுதான் எங்கள் அச்சத்திற் குக் காரணம்
என்று கூறினோம்.
அப்போது நபியவர்கள், நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல. நான் உங்களிடையே
(உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றி னால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன்.
நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால் அப் போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும்
தமக்காக வாதாடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக
இருப்பான் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம் 5629)
صحيح مسلم (4ஃ 2256)
حَدَّثَنَا رَسُولُ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَّالِ،
فَكَانَ فِيمَا حَدَّثَنَا، قَالَ: ' يَأْتِي، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ
نِقَابَ الْمَدِينَةِ، فَيَنْتَهِي إِلَى بَعْضِ السِّبَاخِ الَّتِي تَلِي الْمَدِينَةَ،
فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ - أَوْ مِنْ خَيْرِ النَّاسِ
- فَيَقُولُ لَهُ: أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتُمْ إِنْ
قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ، أَتَشُكُّونَ فِي الْأَمْرِ؟ فَيَقُولُونَ: لَا،
قَالَ فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللهِ مَا كُنْتُ
فِيكَ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْآنَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ஒரு நாள் தஜ்ஜா லைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி
எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறி வித்தவற்றில் இவையும் அடங்கும்.
மதீனாவின் தெருக்களில்
நுழைவது தடை செய்யப் பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா வையடுத்து (ஷாம்
நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்.
அந்த நாளிலே மக்களிலேயே
சிறந்தவர் களில் ஒரு மனிதர் அவனிடம் புறப்பட்டுச் சென்று, ஷஎவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன் னறிவிப்புச்
செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்| என்று கூறுவார்.
அப்போது தஜ்ஜால் நான்
இவரைக் கொன்று பிறகு உயிராக்கி விட்டால் அப்போதுமா (நான் இறைவன்தான் எனும்) விஷயத்தில்
சந்தேகம் கொள் வீர்கள் என்று (தம்முடன் உள்ளவர்களிடம்) கேட் பான். மக்கள் இல்லை என்று
பதிலளிப்பார்கள். உடனே அவன் அந்த மனிதரைக் கொன்று பிறகு உயிராக்குவான். உடனே அந்த மனிதர்
அல்லாஹ் வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதை விட நன்றாக வேறு எப்போதும்
அறிந்து கொண்ட தில்லை என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அம்மனிதரை கொல்ல விரும்பு வான்.
ஆனால் அவர் மீது அவனுக்கு ஆதிக்கம் (அதிகாரம்) வழங்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரழி), நூல்: புகாரி 7132,
1882)
صحيح مسلم (4ஃ 2256)
عَنْ أَبِي سَعِيدٍ
الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' يَخْرُجُ
الدَّجَّالُ فَيَتَوَجَّهُ قِبَلَهُ رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ، فَتَلْقَاهُ الْمَسَالِحُ
- مَسَالِحُ الدَّجَّالِ - فَيَقُولُونَ لَهُ: أَيْنَ تَعْمِدُ؟ فَيَقُولُ: أَعْمِدُ
إِلَى هَذَا الَّذِي خَرَجَ، قَالَ: فَيَقُولُونَ لَهُ: أَوَ مَا تُؤْمِنُ بِرَبِّنَا؟
فَيَقُولُ: مَا بِرَبِّنَا خَفَاءٌ، فَيَقُولُونَ: اقْتُلُوهُ، فَيَقُولُ بَعْضُهُمْ
لِبَعْضٍ: أَلَيْسَ قَدْ نَهَاكُمْ رَبُّكُمْ أَنْ تَقْتُلُوا أَحَدًا دُونَهُ، قَالَ:
فَيَنْطَلِقُونَ بِهِ إِلَى الدَّجَّالِ، فَإِذَا رَآهُ الْمُؤْمِنُ، قَالَ: يَا أَيُّهَا
النَّاسُ هَذَا الدَّجَّالُ الَّذِي ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
قَالَ: فَيَأْمُرُ الدَّجَّالُ بِهِ فَيُشَبَّحُ، فَيَقُولُ: خُذُوهُ وَشُجُّوهُ، فَيُوسَعُ
ظَهْرُهُ وَبَطْنُهُ ضَرْبًا، قَالَ: فَيَقُولُ: أَوَ مَا تُؤْمِنُ بِي؟ قَالَ: فَيَقُولُ:
أَنْتَ الْمَسِيحُ الْكَذَّابُ، قَالَ: فَيُؤْمَرُ بِهِ فَيُؤْشَرُ بِالْمِئْشَارِ
مِنْ مَفْرِقِهِ حَتَّى يُفَرَّقَ بَيْنَ رِجْلَيْهِ، قَالَ: ثُمَّ يَمْشِي الدَّجَّالُ
بَيْنَ الْقِطْعَتَيْنِ، ثُمَّ يَقُولُ لَهُ: قُمْ، فَيَسْتَوِي قَائِمًا، قَالَ: ثُمَّ
يَقُولُ لَهُ: أَتُؤْمِنُ بِي؟ فَيَقُولُ: مَا ازْدَدْتُ فِيكَ إِلَّا بَصِيرَةً، قَالَ:
ثُمَّ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَا يَفْعَلُ بَعْدِي بِأَحَدٍ مِنَ
النَّاسِ، قَالَ: فَيَأْخُذُهُ الدَّجَّالُ لِيَذْبَحَهُ، فَيُجْعَلَ مَا بَيْنَ رَقَبَتِهِ
إِلَى تَرْقُوَتِهِ نُحَاسًا، فَلَا يَسْتَطِيعُ إِلَيْهِ سَبِيلًا، قَالَ: فَيَأْخُذُ
بِيَدَيْهِ وَرِجْلَيْهِ فَيَقْذِفُ بِهِ، فَيَحْسِبُ النَّاسُ أَنَّمَا قَذَفَهُ إِلَى
النَّارِ، وَإِنَّمَا أُلْقِيَ فِي الْجَنَّةِ ' فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَعْظَمُ النَّاسِ شَهَادَةً عِنْدَ رَبِّ الْعَالَمِينَ
தஜ்ஜால் புறப்பட்டு வரும்
போது இறை நம்பிக்கை யாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வாhர். அப்போது அவரை ஆயுதம் ஏந்திய தஜ்ஜாலின் பாகாப்புப் படையினர் எதிர் கொண்டு எங்கே
செல் கிறாய் என்று கேட்பார்கள். அந்த மனிதர் இப்போது புறப்பட்டு இருக்கும் இந்த மனிதனை
நோக்கிச் செல்கிறேன் என்று பதிலளிப்பார். அதற்கவர்கள் நம் இறைவனை(தஜ்ஜாலை) நீ நம்ப
வில்லையா என்று கேட்பார்கள். அந்த மனிதர் நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல என்று
கூறுவார். அதற் கவர்கள் இவனை கொல்லுங்கள் என்று கூறுவார்கள். அப்போது அவர்களில் சிலர்
சிலரிடம் உங்கள் இறைவன் (தஜ்ஜால்) யாரையும் தானின்றி கொல் லக்கூடாது என உங்களுக்கு
தடை விதிக்க வில்லையா? என்று கூறுவார். ஆகவே அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டு செல்வார்கள். அந்த
இறை நம்பிக்கை யாளர் தஜ்ஜாலை காணும் போது மக்களே இவன் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்.என்று சொல்வார்.
உடனே தஜ்ஜாலின் உத்தரவின்
போரில் அவர் பிடித்து கொண்டுவரப்பட்டு தூண்களுக்கிடையே நிறுத்தப்படுவார். இவனைப்பிடித்து
இவனது தலை யை பிளந்து விடுங்கள். என்று அவன் கட்டளை யிடுவான் அப்போது அவர் முதுகும்
வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார். பிறகு தஜ்ஜால் என்மீது நீ நம்பிக்கை கொள்ள
வில்லையா என்று கேட்பான் அதற்கு அந்த மனிதர் நீபெரும் பொய்யன் மஸீஹ் ஆவாய் என்று கூறுவார்.
பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள் வரை தனித்தனியே
பிளக்கும் படி கட்டளையிடப்படும்.
அவ்வாறே செய்து அவரது
உடலை இருதுண்டு களாக்கியதும் அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடநது வருவான். பிறகு
அந்த உடலைப் பார்த்து எழு என்பான் உடனே அந்த மனிதர் உயிர் பெற்று நேராக எழுந்து நிற்பார்.
பிறகு அவரிடம் என்மீது நம்பிக் கொள்கிறாயா? என்று தஜ்ஜால் கேட்பான் அமதற்கு அந்த மனிதர் உன்னைப்பற்றி
இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன் என்று சொல்வார்.
பிறகு அந்த மனிதர் மக்களே!
(இவன் இவ்வா றெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என்று நம்பிவிடாதீர்கள் இவன் எனக்குப்பிறகு
மக்களில் வேறெவரையும் எதுவும் செய்யமுடியாது என்று கூறுவார்.
உடனே தஜ்ஜதல் அவரை அறுப்பதற்காகப்பிடிப்பான்
ஆனால் அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எழும்பு வரையிலுள்ள பகுதி செம்பாக மாறிவிடும்.
ஆகவே அவனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையம்
பிடித்து தூக்கி எறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் விட்டான் என மக்கள் எண்ணிக்
கொள்வார்கள். ஆனால் அவர் சுவர்க் கத்தில் தான் வீசப்பட்டிருப்பார். இந்த மனிதர் தான்
அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களி லேயே மகத்தான உயிர் தியாகம் செய்தவராவார
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயிதுல்
குத்ரி(ரலி) (நூல் :முஸ்லிம்
No comments:
Post a Comment