Thursday, December 7, 2017

புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 04 )




     புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 04 )

16. (நோன்புப் பெருநாள்) தர்மத்தைப் பெருநாளு(டைய தொழுகை)க்கு முன்பே கொடுத்தல்.

عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ( புஹாரி 1509 )

17. புனித பூமி மதீனா

عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَىْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنَ الْبَرَكَةِ "

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 1885 )

18. சுவனத்தின் வாசல் திறக்கப்படும் மாதம்

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ ‏"‏‏.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 1898 )

19. ரமலான் 10 இரவுகளில் இஃதிகாஃப் இருந்தல்

أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!'( புஹாரி 2025 )

20. அநீதம் மறுமையில் இருள்போன்று காட்சி தரும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 2447)

No comments:

Post a Comment