அல்குர்ஆனிலும்
ஸுன்னாவிலும் வரும் “றப்பு” எனும் சொல்லின்
விளக்கமும்.
“றுபூபிய்யத்”-- அதிகாரம்,
பரிபாலித்தல் விடயத்தில் வழிதவறிய சமூகங்களின் மனப்பாங்கும், அகற்கு பதிலும்
1-அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வரும் “றப்பு” எனும்
சொல்லின் விளக்கம்
“றப்ப”
என்பதன் தொழிற் பெயரே “றப்புன்” என்பது. அதன் கருத்து ஒரு பொருளைக் கட்டம் கட்டமாக
வளர்த்தல் என்பதாகும். “றப்புன்” என்ற சொல் தொழிற் பெயராக இருப்பினும் அதனை
வளர்த்தல் என்று கூறாமல் வளர்ப்பவன் எனும் பொருளிலேயே அது பயன் படுகிறது. எனினும்
الرَّبُّ என்று
பொதுவாகக் கூறும் போது அதன் மூலம் படைப்புக்கள் அனைத்தையும் சீரமைக்கும்
பொருப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அலாஹ்வையல்லாது வேறு எவரும் கருதப்பட மாட்டாது. உதாரனமாக رَبِّ الْعًلَمًيْنَ “சர்வலோக
இரட்சகன்,” (1/2). மேலும்
رَبُّكُمْ وَرَبُّ ءَابَائِكُمُ
الأَوَّلًيْنَ “உங்களுடையவும்,
உங்கள் மூதாதைகளினதும் இறைவன்” (26/26) எனும் வாசகத்தில் “றப்பு” எனும் சொல்
அல்லாஹ்வையே குறித்து நிற்பதைக் குறிப்பிடலாம்.
எனவே
இச்சொல்லை வேரொரு சொல்லுடன் இணைத்துக் கூறுமிடத்து, அது எந்த சொல்லுடன்
இணைக்கப்படுகின்றதோ அப்பொழுது அது அதனுடன் வரையருத்த பொருளைத் தரும் உதாரணமாக رَبُّ الدّار, رَبُّ الْفَرَس என்பது போல. இங்கு றப்பு என்பது அதன் உரிமையாளனைக்
குறிக்கின்றது. எனவே இதன்படி இந்த வாசகங்கள் வீட்டின் உரிமையாளன், ஒட்டகத்தின்
உரிமையாளன் எனும் பொருளைத் தரும். இவ்வாறுதான் பின் வரும் இறை வசனங்களில்
வந்துள்ள “றப்பு” எனும் சொல்லும் அல்லாஹ் என்பதைக் குறிக்காமல் வேறு நபர்களை
குறித்துக் காட்டுவதைக் காணலாம். யூஸுப் (அலை) சிறையில் இருக்கும் போது தன்
சிறைச்சாலைத் தோழனிடம் கூறிய செய்தியை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
اُذْكُرْنِي
عِندَ رَبِّكَ فَأَنسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ (يوسف\42)
“நீ
உன் எஜமானிடம் என்னைப் பற்றிக் கூறுவாயாக என்று சொன்னார். எனினும் இவன் தன்
எஜமானிடம் கூற இருந்ததை ஷைத்தான் மறக்கடித்து விட்டான்.” (12/42)
قَالَ
ارْجِعْ إِلَىٰ رَبِّكَ(يوسف\50)
“நீங்கள் உங்கள் எஜமானிடம்
திரும்பிச் செல்லுங்கள், என்றார் (யூஸுப்) (12/50)
أَمَّا
أَحَدُكُمَا فَيَسْقِي رَبَّهُ خَمْرًا ۖ(يوسف\41)
“உங்களில்
ஒருவன் தன் தன் எஜமானனுக்கு திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான்.”(12/41)
(என்று யூஸுப் கூறினார்.)
மேலும்
காணாமல் போன ஒட்டகத்தை யாரேனும் கண்டெடுத்துக் கொள்ளாமா? என்று ரஸூல் (ஸல்)
அவர்களிடம் வினவப்பட்ட போது நபியவர்கள்,
حَتَّى
يَجِدَهَا رَبُّهَا (الحديث)
“அதனை
அதன் உரிமையாளன் கண்டு கொள்ளும் வரை விட்டு வையுங்கள்” என்றார்கள்.
இங்கு
அல்குர்ஆனில் குறிப்பிட்ட்டுள்ள யூஸுப் (அலை), அவர்களுக்கும், அவர்களின்
தோழனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலிலும் மற்றும் ஹதீஸிலும் வந்துள்ள “றப்பு”
எனும் வாசகம் அல்லாஹ்வைக் குறிப்பிட வில்லை. அது வேரொரு எஜமானனையும்,
உரிமையாளனையுமே குறித்து நிற்கிறது, என்பது விளங்குகிறது..
எனவே
பொதுவாக الرَّبُّ என்று சொல்லும் போதும், இன்னும் அதனை العالمين, الناس எனும் சொல்லுடன் இனைத்து, رب العالمين , رب الناس என்று கூறும் போது அது அல்லாஹ் என்ற பொருளையல்லாது வேறு
பொருளைத் தராது. மேலும் “றப்பு” எனும் செல்லை இதர சொல்லுடன் இணைத்து உதாரணமாக ربُّ الدَّار, رب الْمَنْزِل,
رب الإِبْل என்று
சொல்லும் போது அது அல்லாஹ் என்ற கருத்தைத் தராது வீட்டின் எஜமான், இல்லத்தின்
எஜமான், ஒட்டகத்தின் எஜமான் எனும் கருத்தை குறித்து நிற்கிறது, என்பது இதிலிருந்து
தெளிவாகின்றது.
மேலும்
رب العالمين சர்வலோக இறைவன் என்றால் அதன் விரிந்த
கருத்து உலகத்தாரை சிருஷ்டிப்பவன், அவர்களின் உரிமையாளன், அவர் களைச் சீர்திருத்தி
தன்னுடைய சௌபாக்கியங்களைக் கொண்டும், மற்றும் தன்னுடைய தூதர்களையும், வேதங்களையும்
அவர்களின் பால் அனுப்பி அவர்களை பரிபாலிப்பவன், அவர்களின் செயல்களுக்குத்
தகுந்த கூலி கொடுப்பவன் என்பதாகும்.
மேலும் “றுபூபிய்யத்” அதிகாரம், பரிபாலித்தல் எனும் போது அது தன் அடியார்களுக்கு
அல்லாஹ் விடுக்கும் ஏவல் விலக்கலையும், நல்லோரின் நற்செயலுக்கு வழங்கும்
நற்கூலியையும் மற்றும் தீயோரின் தீய செயலுக்கு வழங்கும் தண்டனையும் உள்
வாங்கியதாகும். இதுதான் “றுபூபிய்யத்” என்பதன் சரியான கருத்து என இப்னுல் கையிம்
(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்”
கருத்து
فَأَقِمْ
وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّـهِ الَّتِي فَطَرَ النَّاسَ
عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّـهِ ۚ(الروم\30)
“நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள்
உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே)
மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அல்லாஹ் படைத்ததை
மாற்றி விட முடியாது” (30/30)
وَإِذْ
أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ
عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا بَلَىٰ ۛ شَهِدْنَا ۛ(الأعراف\172)
“உங்களுடைய இறைவன் ஆதமின் சந்ததியினர் அவர்களின்
முதுகுகளில் இருக்கும் போது அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாக வைத்து, நான்
உங்களின் இறைவனாக இல்லையா? என்று கேட்டதற்கு, அவர்கள் “ஏன் இல்லை அதற்கு நாம்
சாட்சியம் கூறுகிறோம்” என்று கூறினர்” (7/172)
இந்த
திரு வசனங்களில் குறிப்பிட்டுள்ளது போன்று இயற்கையில் ஏகத்துவத்தை ஏற்றுக்
கொள்ளும் சுபாவமும் சிருஷ்டி கர்த்தாவான இறைவனை அறிந்து கொள்ளும் சபாவமும்
உடையவனாகவே சிருஷ்டிகளை அல்லாஹ் படைத்திருக்கின்றான்..என்பது தெளிவு.
எனவே
அல்லாஹ்வின் அதிகார, பரிபாலனப் பண்பை ஏற்றுக் கொள்வதும்,
அவனின் பால் மாத்திரம் கவணம் செலுத்த வேண்டு மென்பதும் இயற்கை நியதியாகும். மேலும்
அவனுக்கு இணை வைக்கும் காரியமோ தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வாகும். எனவே “எல்லா
குழந்தையும் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே பிறக்கிறது. எனினும் அதன் பெற்றோர்களே
அதனை யூதனாக அல்லது கிரிஸ்தவனாக, அல்லது நெருப்பு வணங்கியாக மாற்றுகின்றனர்” எனும்
நபி மொழி இங்கு குறிப்பிடத் தக்கதாகும். எனவே எப்பொழுது அடியானும் அவனின்
சுபாவமும் இணையை விட்டும் விலகி விடுமோ, அப்பொழுது அவன் ஏகத்துவத்தின் பால்
திரும்பி விடுவான். மேலும் ரஸூல்மார்கள்
கொண்டு வந்த தூதையும், அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியவைகளையும், உலகில்
ஏகத்துவத்தை உறுதி படுத்தும் அத்தாட்சிகளையும் அவன் ஏற்றுக் கொள்வான். எனினும் வழி
தவறிய பரிபாலனமும், தீய நாஸ்திகக் கொள்கையுமாகிய இரண்டு காரியங்களும்தான்
குழந்தையின் திசையை மாற்றி விடுகின்றன. அதனால்தான் பிள்ளைகள் பெற்றோரின் வழிகேடான
மற்றும் தவறான கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
ஒரு
ஹதீஸ் குத்ஸீயில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான், “நான் என் அடியார்களைத் தூய்மையான வர்களாகப்
படைத்தேன், எனினும் அவர்களை ஷைத்தான் திருப்பி விட்டான்”. அதாவது அவர்களை அவன்
சிலை வணக்கத்தின் பாலும், மேலும் அல்லாஹ்வைத் தவிர்த்து அவைகளைத் தங்களின் கடவுள்களாக எடுத்துக்
கொள்வதின் பக்கமும் திருப்பிவிட்டான். அதன் காரணமாக அவர்கள் வழிகேட்டிலும்,
பிரிவினையிலும், முரண்பாடுகளிலும் மாட்டிக் கொண்டனர். மேலும்
فَذَٰلِكُمُ
اللَّـهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ
(يونس\32)
“அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான்
உங்களது உண்மையான இறைவன். எனவே உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர வேறு
என்னதான் இருக்க முடியும்?” (10/32) என்று அல்லாஹ் குறிப்பிடுவது போன்று, அவர்கள்
உண்மையான றப்பை - இறைவனை கைவிட்டதன் காரணமாக அவர்கள் தாங்கள் விரும்பியதை எல்லாம்
தங்களின் கடவுளாக ஆக்கிக் கொண்டனர். இதனால் அவர்கள் தவறான பல தெய்வக் கொள்கையின்
சோதனைக்கு இலக்காகினர். மேலும் வழிகேட்டுக்கு எல்லையுமில்லை, முடிவும் இல்லை. எனவே
யாரெல்லாம் உண்மையான றப்பை - இறைவனைப் புறக்கணிக்கின்றரோ அவர்களை வழிகேடு
பிடித்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இதனை அடுத்து வரும் அல்லாஹ்வின் வாக்கு தெளிவு
படுத்துகிறது:
أَأَرْبَابٌ
مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّـهُ الْوَاحِدُ الْقَهَّارُ ﴿٣٩﴾ مَا
تَعْبُدُونَ مِن دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم
مَّا أَنزَلَ اللَّـهُ بِهَا مِن سُلْطَانٍ (يوسف\39
(40,
“வெவ்வேறு தெய்வங்கள்
நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற அல்லாஹ் ஒருவனே நன்றா?” (12/ 39,40).
“அல்லாஹ்வையன்றி நீங்கள்
வணங்குபவை அனைத்தும் நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும்
பெயர்களேயன்றி வேரில்லை. அல்லாஹ் இதற்கு யாதொரு
ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை.” (12/39,40) என்று
யூஸுப் (அலை) அவர்கள் தங்களின் சிறைத் தோழர்களிடம் கூறிய செய்தியை அல்குர்ஆன்
இவ்வாறு குறிப்பிடுகின்றது
மேலும் பரிபாலன, அதிகார
விடயத்தில் இணையை நிறுவும் போது ஒரே வகையான பண்பும் செயற் திறனும் கொண்ட பல
சிருஷ்டி கர்த்தாக்கள் இருக்கின்றனர் என்று முஷ்ரிகீன்கள் கூறவில்லை. எனவேதான்
சில முஷ்ரிகீன்கள் தங்களின் கடவுள்கள் இவ்வுலகில் சில காரியங்களை நடாத்தி வைக்கும்
ஆதிக்கத்தைப் பெற்றுள்ளனர் என்று கூறுகின்றனர். இதன் மூலம் இந்தக் கடவுள்களை
அவர்கள் வணங்கும்படி செய்து அவர்களுடன் ஷைத்தான் விளையாடுகின்றான். இவ்வாறு
ஒவ்வொரு சமூகத்துடனும் அவரவரின் அறிவுக்கேற்றபடி அவர்களுடன் ஷைத்தான் விளையாடி
வருகிறான். நூஹ் நபியின் கூட்டத்தினர் போன்று சில கூட்டத்தினரை, அவர்களின் இறந்து
போன மூதாதையினரின் உருவங்களைத் தீட்டச் செய்து அவற்றை கண்ணியப்படுத்துதல் என்ற
போர்வையில் அவன் அவர்களை வணங்கச் செய்கின்றான். இன்னும் சில கூட்டத்தினர் நட்சத்திரங்கள்
உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை, என்று நினைத்துக் கொண்டு அவற்றை சிலைகளாக
வடித்து அவற்றுக்கென இல்லங்களையும், கோவில்களையும் அமைத்து அவற்றை வணங்கி
வருகின்றனர்.
மேலும் நட்சத்திரத்தை
பூஜித்து வரும் முஷ்ரிகீன்கள் ஒரே வகையான நட்சத்திரத்தை வணங்குவதில்லை. அதிலும்
எத்தனையோ வகை. சிலர் சூரியனை என்றால் இன்னும் சிலர் சந்திரனை வழிபடுகின்றனர். வேறு
சிலர் இவ்விரண்டுமல்லாத வேறு நட்சத்திரங்களை வழிப்படுகின்றனர். இவைகளுக்கென
தனித்தனி கோயில்களையும் நிறுவிக் கொள்கின்றனர். இதுவல்லாமல் இன்னும் சிலர்
நெருப்பை வணங்கி வருகின்றனர், இவர்கள்தான் மஜூஸிகள். மேலும் இந்தியாவில் நிகழுவது
போன்று சிலர் பசுவை வணங்குகின்றனர். மேலும் சிலர் மலக்குகளையும், மரங்களையும்,
கற்களையும் வணங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ கல்லறைகளையும், சமாதிகளையும்
வழிபட்டு வருகின்றனர். இப்படி யெல்லாம் இவர்கள் செய்யக் காரணம் அவைகளிடம்
பரிபாலிக்கும்படியான, காப்பாற்றும் படியான ஏதோ சில விசேட அதிகாரங்கள் இருக்கின்ற
என்று அவர்கள் நினைக்கின்ற படியால்தான்.
மேலும் அவர்களில் சிலர்
இந்த விக்கிரகங்கள் யாவும் மறைவான சில பொருள்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன
என்று நம்புகின்றனர். இது பற்றி
இப்னுல்கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, “உண்மையில் மறைவான கடவுளைப்
பிரதிநிதித்துவப் படுத்தும் அடிப்படையிலேயே விக்கிரகம் நிர்மாணிக்கப் படுகிறது.
எனவே சிலை வணங்கிகள் அந்த மறைவான கடவுளுக்குப் பதிலாக அதன் பிரதிநிதியாக தங்களின்
கரத்தால் அதன் தோற்றத்தில் சிலைகளை வடித்து அவற்றை வணங்குகின்றனர்.” என்று
குறிப்பிட்டுள்ளர்கள்.
மேலும் கப்ருகளில்
சமாதியுற்றிருக்கும் பிரேதங்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்கின்றன
என்றும், அல்லாஹ்விடம் தங்களின் தேவையை நிறைவேற்றித் தரும் இடைத் தரகர்களாக அவை
இருக்கின்றன என்றும் முற்கால மற்றும் நவீன கால கப்ரு வணங்கிகள் நினைக்கின்றனர்.
அல்லாஹ்வின் திரு வசனம் இதனைத் தெளிவு படுத்துகிறது:
مَا
نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّـهِ زُلْفَىٰ (الزمر/3)
“அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு
மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை” (39/3)
என்கின்றனர்
وَيَعْبُدُونَ
مِن دُونِ اللَّـهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ
هَـٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّـهِ ۚ (يونس/18)
“தங்களுக்கு யாதொரு நன்மையும்
தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை அவர்கள் வணங்குவதுடன் “இவை
அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர்” (10/18)
மேலும் சில அரபு
முஷ்ரிகீன்களும், கிரிஸ்தவர்களும் தங்களின் தெய்வங்களை அல்லாஹ்வின் பிள்ளைகள்
என்று நினைத்தனர். இன்னும் சில அரபு
முஷ்ரிகீன்கள் மலக்குகளை அல்லாஹ்வின் புத்திரிகள் என்ற நினைப்பில அவர்களை
வணங்கினர். அவ்வாறே சில கிரிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் குமாரன் என்ற
எண்ணத்தில் அவரை வணங்க ஆரம்பித்தனர்.
No comments:
Post a Comment