பிழையான கற்பனை வாதத்துக்கு பதில்
பிழையான இந்த எல்லா
கற்பனை வாதத்திற்கும் பின் வருமாறு அல்லாஹ் பதிலளிக்கின்றான்.:
أَفَرَأَيْتُمُ
اللَّاتَ وَالْعُزَّىٰ ﴿١٩﴾ وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ ﴿٢٠\النجم﴾
“லாத், உஜ்ஜாக்களை நீங்கள் கவனித்தீர்களா?”
(53/19)
மற்றொரு மூன்றாவது, மனாத்தைப் பற்றியும் நீங்கள்
சிந்தித்தீர்களா?” (53/20)
இத்திரு
வசனங்களுக்கு இமாம் அல்குர்துபீ அவர்கள் விளக்கம் தரும் போது “நீங்கள் இந்த
தெய்வங்களைக் கவனித்தீர்களா? ஏனெனில் இவற்றை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக்
கொள்கிறீர்களே! அப்படியாயின் இவற்றின் மூலம் ஏதேனும் நன்மையோ தீமையோ ஏற்படுவதையோ,
அவற்றை நபியவர்களும் அவர்களின் தேழர்களும் இடித்துத் தள்ளிய சந்தர்ப்பத்தில்
அவைகளால் தம்மை காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா? என்பதையோ நீங்கள் கவனித்தீர்களா?”
என்பதே இதன் கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அல்லாஹ் இவ்வாறு
கூறுகிறான்:
وَاتْلُ
عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ ﴿٦٩﴾ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا
تَعْبُدُونَ ﴿٧٠﴾ قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ ﴿٧١﴾
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ ﴿٧٢﴾ أَوْ يَنفَعُونَكُمْ أَوْ
يَضُرُّونَ ﴿٧٣﴾ قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ ﴿الشعراء٧٤﴾
“இன்னும் அவர்களுக்கு இப்ராஹீமுடைய
சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள்.
அவர் தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி “நீங்கள் எதை
வணங்குகிறீர்கள்?” என்று கேட்டதற்கு,
அவர்கள் “நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம். அவற்றை
தெடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்.” என்றார்கள்.
அதற்கு அவர் “அவைகளை நீங்கள் அழைத்தால் அவை உங்களுக்கு செவி
கொடுக்கின்றனவா?
அல்லது உங்களுக்கு ஏதும் நன்மையோ தீமையோ செய்கின்றனவா?”
என்று கேட்டார்.
அதற்கவர்கள் “இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே
செய்துக்கொண்டிருக்க நாங்கள் கண்டோம்” என்றார்கள்” (26-69 முதல் 74)
இதிலிருந்து இந்த சிலைகள் கேட்கவும்
மாட்டாது, அவை எந்த வொரு நன்மையையும் தீமையையும் ஏற்படுத்தவும் மாட்டாது என்பதும்,
அவர்கள் இவற்றை வழிப்பட்டு வந்ததெல்லாம் அவர்களின் பெற்றோர்களைப்
பின்பற்றியேயாகும் என்பதும் தெளிவாகின்றது. ஆனால் வெறுமனே பெற்றோர்களைப்
பின்பற்றுதல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத, பிழையான ஆதாரமாகும்.
மேலும் நட்சத்திர வழிபாட்டையும்
சூரிய சந்திர வழிபாட்டையும் அல்லாஹ்வின் இந்த வாக்குகள் மறுத்துரைக்கின்றான்:
وَالشَّمْسَ
وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ (الأعراف\54)
“அவனது கட்டளைக்கு
உட்பட்ட சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் அவனே படைத்தான்” (7/54)
وَمِنْ
آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا
لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّـهِ الَّذِي خَلَقَهُنَّ إِن
كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ﴿٣٧ فصلت ﴾
“இரவும், பகலும்,
சூரியனும், சந்திரனும் அவனின் அத்தாட்சிகளாக இருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள்
அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம்
பணியாதீர்கள். இவைகளைப் படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்.(41/37)
மேலும் மலக்குகளையும்,
ஈஸா (அலை) அவர்களையும் வணங்குபவர்களுக்கு அல்லாஹ் பதில் தரும் போது இவ்வாறு
கூறுகிறான்:
مَا
اتَّخَذَ اللَّـهُ مِن وَلَدٍ(المؤمنون\91)
‘அல்லாஹ்
சந்ததி எடுத்துக் கொளவில்லை” (23/91)
أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ
تَكُن لَّهُ صَاحِبَةٌ ۖ(الأنعام\101)
“அவனுக்கு
எவ்வாறு சந்ததி ஏற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே!” (6/101)
لَمْ
يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤\الإخلاص﴾
“அவன் பெறவுமில்லை,
பெறப்படவுமில்லை” (112/3)
No comments:
Post a Comment