باب ما
جاء في شيب رسول الله صلى الله عليه وسلم
பாடம் : 05 நபி ஸல் அவர்களுக்கு இருந்த நரைமுடிகள்
37-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو
دَاوُدَ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: قُلْتُ لأَنَسِ
بْنِ مَالِكٍ: هَلْ خَضَبَ رَسُولُ اللهِ صلى الله
عليه وسلم؟ قَالَ: لَمْ يَبْلُغْ
ذَلِكَ، إِنَّمَا كَانَ شَيْبًا فِي صُدْغَيْهِ وَلَكِنْ أَبُو بَكْرٍ، خَضَبَ بِالْحِنَّاءِ
وَالْكَتَمِ.
37.கதாதா அவர்கள் கூறியதாவது :
நான் அனஸ் பின் மாலிக் ரழி அவர்களிடம் ,” அல்லாஹ்வின் தூதர்
ஸல் அவர்கள் ( தலைமுடிக்குச்) சாயம் பூசுயிருந்தார்களா ?” என்று கேட்டேன் .அதற்கு அவர்கள்
,”சாயம் பூசுகின்ற அளவுக்கு ( நரை முடிகள் ) அவர்களுக்கு இல்லை.அவர்களது இரு நெற்றி
பொட்டுகளில் ( சில முடிகள் ) நரைத்திருந்தன என்று கூறினார்கள்.
எனினும் “ அபூபக்ர் ( ரழி ) அவர்கள் மருதாணி இலையாலும் “கத்தம்
“ செடியின் இலையாலும் சாயம் பூசியிருந்தார்கள் என்று கூறினார்கள்.
குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம்யில் ( 4673) பதிவாகி உள்ளது
38-حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالا:
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ:
مَا عَدَدْتُ فِي رَأْسِ
رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَلِحْيَتِهِ، إِلا أَرْبَعَ
عَشْرَةَ شَعَرَةً بَيْضَاءَ.
38. அனஸ் ரழி
கூறியதாவது :
நபி ஸல் அவர்களின் தலையிலும்
தாடியிலும் பதிநான்கு வெள்ளை முடிகளுக்கு மேல் அதிகமாக நான் எண்ணமுடியவில்லை.
குறிப்பு : இச்செய்தி அஹ்மத்
( 12279) இப்னு ஹிப்பான் ( 6293) பதிவாகி உள்ளது
39-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، قَالَ : أَخْبَرَنَا أَبُو
دَاوُدَ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، قَالَ : سَمِعْتُ
جَابِرَ بْنَ سَمُرَةَ ، وَقَدْ سُئِلَ عَنْ شَيْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّم ، فَقَالَ : " كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ
شَيْبٌ ، وَإِذَا لَمْ يَدْهِنْ رُئِيَ مِنْهُ
"
39. சிமாக் பின்
ஹர்ப் அவர்கள் கூறியதாவது :
ஜாபிர் பின் சமுரா ரழி
அவர்களிடம் நபி ஸல் அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப்பட்ட்து அதற்கு அவர்கள் நபியவர்கள்
தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரைமுடிகூட்த்
தென்படாது;அவர்கள் எண்ணெய் தேய்த் திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும் என்று சொன்னார்கள்.
குறிப்பு : இச்செய்தி முஸ்லிம்
( 4680 ) நஸயீ ( 5025 ) பதிவாகி உள்ளது
40-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ
الْكُوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، عَنْ عُبَيْدِ
اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: إِنَّمَا
كَانَ شَيْبُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم نَحْوًا مِنْ عِشْرِينَ شَعَرَةً بَيْضَاءَ.
40.அப்துல்லாஹ் பின் உமர் ரழி அவர்கள் கூறியதாவது :
நபி அவர்களுக்கு சுமார் இருபது வெள்ளை முடிகளே இருந்தன.
41-حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاءِ، قَالَ: حَدَّثَنَا
مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ شَيْبَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عِكْرِمَةَ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللهِ، قَدْ شِبْتَ،
قَالَ: شَيَّبَتْنِي هُودٌ، وَالْوَاقِعَةُ، وَالْمُرْسَلاتُ، وَعَمَّ يَتَسَاءَلُونَ،
وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ.
41.இப்னு அப்பாஸ் ரழி கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதரே ! உங்களுக்கு நரை ஏற்பட்டுவிட்டதே! என்று
கேட்ட போது ஹுத் ,அல்வாகி ஆ , அல்முர்ஸலாத்,அம்ம யதஸாலூன் , இதஸ் ஸம்சு குவ்விரத் ஆகிய
அத்தியாயங்கள் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டன என்று பதிலளித்தார்கள்.
குறிப்பு : இச்செய்தி திர்மிதீ ( 3219) ஹாகிம் ( 3314 ) தப்ரானீ
( 5672) நூல்களில் இடம்பெற்று உள்ளது.
42-حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ بِشْرٍ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ،
قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللهِ، نَرَاكَ قَدْ شِبْتَ، قَالَ: قَدْ شَيَّبَتْنِي
هُودٌ وَأَخَوَاتُهَا.
42.அபூ ஜுஹைஃபா ரழி அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதரே ! உங்களுக்கு நரைத்துவிட்டதை நாங்கள் பார்க்கிறோமே
! என்று கேட்ட போது ஹுதும் அதன் சகோதர அத்தியாயங்களும் என்னை நரைக்கச் செய்துவிட்டன
என்று கூறினார்கள்.
குறிப்பு : இச்செய்தி முஸ்னத் அபீயஃலா ( 880 ) தப்ரானீ (
318 ) பதிவாகி உள்ளது
43-حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ
صَفْوَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ الْعِجْلِيِّ،
عَنْ أَبِي رِمْثَةَ التَّيْمِيِّ، تَيْمِ الرَّبَابِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ
صلى الله عليه وسلم، وَمَعِي ابْنٌ لِي، قَالَ: فَأَرَيْتُهُ، فَقُلْتُ لَمَّا رَأَيْتُهُ:
هَذَا نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ، وَلَهُ
شَعَرٌ قَدْ عَلاهُ الشَّيْبُ، وَشَيْبُهُ أَحْمَرُ
.
43.அபூ ரம்ஸா
ரழி அவர்கள் கூறியதாவது :
நான் நபி ஸல் அவர்களிடம்
சென்றேன் .அப்போது எனது மகன் என்னுடன் இருந்தான்.( அங்கிருந்தவர்கள் நபி ஸல் அவர்களை
) எனக்கு காட்டினார்கள்.அப்போது நான் இவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னேன் அந்த
நேரத்தில் அவர்கள் பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள் அவர்களின் சில முடிகளின் நரை
பேலோங்கியிருந்த்து அவை சிவப்பு நிறமாக இருந்தன.
குறிப்பு : இச்செய்தி திர்மிதீ
( 2812 ) அபூதாவூத் ( 4206 ) நஸயீ ( 1572) பதிவாகி உள்ளது
44-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ
بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ
حَرْبٍ، قَالَ: قِيلَ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكَانَ فِي رَأْسِ رَسُولِ اللهِ
صلى الله عليه وسلم شَيْبٌ؟ قَالَ: لَمْ يَكُنْ فِي رَأْسِ رَسُولِ اللهِ صلى الله
عليه وسلم، شَيْبٌ إِلا شَعَرَاتٌ فِي مَفْرِقِ رَأْسِهِ، إِذَا ادَّهَنَ وَارَاهُنَّ
الدُّهْنُ.
44. ஸிமாக் பின் ஹர்ப் கூறியதாவது :
நபி ஸல் அவர்களின் தலையில் நரைமுடிகள் இருந்தனவா ?என்று ஜாபிர்
பின் ஸமுரா ரழி அவர்களிடம் வினவினேன் அதற்கவர்கள் அவர்கள் வகிடு எடுக்கும் பகுதியில்
சில முடிகளைத் தவிர வேறு எங்கும் நரைமுடிகள் இருக்கவில்லை ( அது கூட ) எண்ணெய் தேய்த்திருந்தால்
அவற்றை எண்ணெய் மறைத்துவிடும் என்று பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment