19.ஸலாம் கூறுவதின் ஒழுங்குகள்
அனைவருக்கும் அழகிய முறையில் வாழ்த்து ( ஸலாம்) கூறுதல்
(86 ) وَاِذَا حُيِّيْتُمْ
بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ اِنَّ اللّٰهَ
كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால்
அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்!
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.(4:86 )
எல்லா வீடுகளிலும் வாழ்த்து கூற வேண்டும்
فَإِذَا دَخَلْتُم
بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ
مُبَارَكَةً طَيِّبَةً ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ
لَعَلَّكُمْ تَعْقِلُونَ(61 )
வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து
பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள்
விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்(24:61)
இஸ்லாமியப் பண்புகளில் சிறந்தது வாழ்த்து கூறுதல் ஆகும்
12-عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ
صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ " تُطْعِمُ الطَّعَامَ،
وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ".
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்
'இஸ்லாத்தில் சிறந்தது எது'
எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும்
ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்'
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.( புஹாரி
12)
முஸ்லிமின் கடமைகளில் ஒன்று முகமன் கூறுதல்
1240-أَنَّ
أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم يَقُولُ " حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ
السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ
الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ ". تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ
قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ. وَرَوَاهُ سَلاَمَةُ عَنْ عُقَيْلٍ.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய
வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது
ஆகியவையாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி
1240)
முதல் ஸலாம் கூறுபவரே அல்லாஹ்விடத்தில் நெருக்கமிக்கவர்
عَنْ أَبِي
أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ
أَوْلَى النَّاسِ بِاللَّهِ مَنْ بَدَأَهُمْ بِالسَّلاَمِ " .5197
-
حكم : صحيع
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர்
அவர்களில் முதல் ஸலாம் கூறுபவரே ஆவார்.
அறிவிப்பவர் : அபூ உமாமா ரழி ( நூல் : அபூதாவூத் 5197 தரம் : ஸஹீஹ் )
மலந்த முகத்துடன் சந்தித்தால்
2626-عَنْ
أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي
ذَرٍّ، قَالَ قَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَحْقِرَنَّ
مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ "
.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :
உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு
சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே
அறிவிப்பவர் : அபூதர் ரழி நூல் : முஸ்லிம்
2626
No comments:
Post a Comment