باب ما جاء في خضاب رسول الله صلى الله عليه وسلم
பாடம் : 06 நபி ஸல் அவர்கள் தலைமுடிக்கு சாயம் பூசி இருந்ததை பற்றினது
45-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا هُشَيْمٌ
، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ
، قَالَ : أَخْبَرَنِي أَبُو رِمْثَةَ ، قَالَ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَعَ ابْنٍ لِي ، فَقَالَ : " ابْنُكَ هَذَا ؟ " فَقُلْتُ
: نَعَمْ , أَشْهَدُ بِهِ ، قَالَ : " لا يَجْنِي عَلَيْكَ ، وَلا تَجْنِي عَلَيْهِ
" ، قَالَ : وَرَأَيْتُ الشَّيْبَ أَحْمَرَ ، قَالَ أَبُو عِيسَى : هَذَا أَحْسَنُ
شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ ، وَأَفْسَرُ لأَنَّ الرِّوَايَاتِ الصَّحِيحَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَبْلُغِ الشَّيْبَ . وَأَبُو
رِمْثَةَ اسْمُهُ : رِفَاعَةُ بْنُ يَثْرِبِيٍّ التَّيْمِيُّ .
45. அபூரிம்ஸா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
என்னுடைய மகனுடன் நபி ஸல் அவர்களிடம் சென்றேன் அப்போது நபி ஸல் அவர்கள், “
இவர் உன் மகனா ? “ என கேட்டார்கள் நான் ஆம்! இதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்
என்றேன் அப்போது இவர் செய்யும் குற்றத்திற்கு நீயோ அல்லது நீ செய்யும்
குற்றத்திற்கு இவரோ பொறுப்பாக மாட்டார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் .
அப்போது நபி ஸல் அவர்கள் நரை முடிகள் சிவப்பு நிறமாக இருக்க கண்டேன்.
இந்த பட்சத்தில் அறிவிக்கப்பட்டவைகளில் இதுவே அழகானதும் விளக்கமானதுமாகும்
. ஏனெனில் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் நபி ஸல் அவர்கள் நரை ஏற்படும் நிலையை
அடையவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன . அபூ ரிம்ஸா அவர்கள் பெயர் ரிஃபா பின்
யஸ்ரீப் அத்தைமீ ஆகும் என்று அபூ ஈஸா என்ற திர்மிதீ கூறுகிறேன்.
குறிப்பு : இச்செய்தி திர்மிதீ ( 2812 ) அபூதாவூத் ( 4206 ) நஸயீ ( 1572) நூல்களில் பதிவாகி உள்ளது.
46-حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ ، قَالَ
: حَدَّثَنَا أَبِي ، عَنْ شَرِيكٍ ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ ، قَالَ : سُئِلَ
أَبُو هُرَيْرَةَ : هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
؟ قَالَ : " نَعَمْ " ، قَالَ أَبُو عِيسَى : وَرَوَى أَبُو عَوَانَةَ هَذَا
الْحَدِيثَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ، فَقَالَ : عَنْ أُمِّ
سَلَمَةَ .
46.உஸ்மான் பின் மவ்ஹப் அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் முடிகளுக்குச் சாயம் பூசியிருந்தார்களா ? என்று அபூஹுரைரா
ரழி அவர்களிடம் கேட்டேன் அதற்கு “ ஆம் “ என்று பதிலளித்தார்கள்.
அபூ ஆவானா அவர்கள் உஸ்மான் பின் மவ்ஹப் வழியாக உம்மு ஸலமா ( ரழி ) அவர்கள்
குறிப்பிட்டதாக பதிவு செய்துள்ளார்கள் என்று அபூ ஈஸா என்ற திர்மிதீ கூறுகின்றேன்.
47-حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ، قَالَ:
أَنْبَأَنَا النَّضْرُ بْنُ زُرَارَةَ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ،
عَنِ الْجَهْدَمَةِ، امْرَأَةِ بِشْرِ ابْنِ الْخَصَاصِيَّةِ، قَالَتْ: أَنَا رَأَيْتُ
رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَخْرُجُ مِنْ بَيْتِهِ يَنْفُضُ رَأْسَهُ وَقَدِ
اغْتَسَلَ، وَبِرَأْسِهِ رَدْعٌ مِنْ حِنَّاءٍ أَوْ قَالَ: رَدْغٌ شَكَّ فِي هَذَا
الشَّيْخُ.
47.பிஷ்ர் பின்
கஸாஸிய்யாவின் மனைவி ஜஹ்தமா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் குளித்து
விட்டு தலையை உதறியவர்களாக தன் வீட்டிலிருந்து வெளியேறினார்கள் அப்போது அவர்கள்
தலையில் மருதாணி சாயமிருந்ததை நான் பார்த்தேன்.
குறிப்பு : இச்செய்தி
தப்ரானீ ( 533 ) யில் இடம்பெற்று உள்ளது இதில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளரான
“ யஹ்யா பின் ஹய் “ பலவீனமானவர் ஆவார்.
48-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ
، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ
، قَالَ : حَدَّثَنَا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " رَأَيْتُ شَعْرَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا " .
48.அனஸ் ரழி அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்களின் முடி சாயம் பூசப்படிருந்ததை நான் பார்த்துள்ளேன்.
குறிப்பு : இச்செய்தி தப்ரானீ ( 2590 ) பதிவாகி உள்ளது.
49-قَالَ قَالَ حَمَّادٌ : وَأَخْبَرَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، قَالَ : " رَأَيْتُ شَعْرَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ مَخْضُوبًا
49. முஹம்மத் பின் அகீல் அவர்கள் கூறியதாவது
:
நபி ஸல் அவர்களின் சாயம் ஏற்றப்பட்டிந்த முடியை அனஸ் ரழி அவர்களிடம்
பார்த்தேன்.
குறிப்பு : இச்செய்தி தப்ரானீ ( 2590 ) பதிவாகி உள்ளது
No comments:
Post a Comment