Monday, December 25, 2017

அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல் ஹதீஸ் 83 முதல் 134 வரை

كتاب الطهارة

அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்



(41) باب الْوُضُوءِ بِمَاءِ الْبَحْرِ
பாடம்: 41 கடல் நீரில் உலூச் செய்தல்

83-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، مِنْ آلِ ابْنِ الْأَزْرَقِ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ - وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ - أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»

[حكم الألباني] : صحيح

83.அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த அளவு தண்ணீரையே எடுத்துச் செல்கிறோம்.

நாங்கள் அந்தத் தண்ணீரை உலூச் செய்யப் பயன்படுத்தினால் தாகத்தால் கஷ்டப்படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'கடல் நீர் சுத்தம் செய்ய ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டதாகும்' என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(42) باب الْوُضُوءِ بِالنَّبِيذِ
பாடம்: 42 'நபீத்' என்ற பானத்தில் உலூச் செய்தல்.

84-حَدَّثَنَا هَنَّادٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالَا: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ: «مَا فِي إِدَاوَتِكَ؟»، قَالَ: نَبِيذٌ، قَالَ: «تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ»، قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ: سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ أَبِي زَيْدٍ، أَوْ زَيْدٍ، كَذَا قَالَ شَرِيكٌ، وَلَمْ يَذْكُرْ هَنَّادٌ لَيْلَةَ الْجِنِّ

[حكم الألباني] : ضعيف

84.ஜின்கள் வருகைதந்த இரவில் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்களை நோக்கி, 'உம்முடைய தோல் பாத்திரத்தில் என்ன உள்ளது?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்கள் 'நபீத்' என பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், '(அதில் போடப்பட்டுள்ளது) நல்ல பேரீத்தம் பழமாகும் (இந்த) தண்ணீரும் தூய்மையானதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்களிடமிருந்து அபூஸைத் என்பவர் தெரிவிக்கிறார்.

அபூஸைத் அல்லது ஸைத் கூறுவதாக ஷரீக் தெரிவிக்கிறார் என அறிவிப்பாளர் சுலைமான் பின் தாவூது குறிப்பிடுவதாக இமாம் அபூதாவூது கூறுகிறார்கள். ஹன்னாத் அவர்கள் 'ஜின்'கள் வருகை தந்த இரவு என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை.

தரம் : ளயீப்

[இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூஸைத் யாரென்றே அறியப்படாதவர்.]

85-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ [ص: 22] ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: مَنْ كَانَ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟، فَقَالَ: «مَا كَانَ مَعَهُ مِنَّا أَحَدٌ»

[حكم الألباني] : صحيح

85.ஜின்' கள் வருகை தந்த இரவில் உங்களில் யாராவது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்களா? என்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்களிடம் வினவிய போது, 'எங்களில் யாரும் அவர்களுடன் இருக்கவில்லை' என்று அவர்கள் பதிலளித்தார்கள் என அல்கமா அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

86-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنَّهُ كَرِهَ الْوُضُوءَ بِاللَّبَنِ وَالنَّبِيذِ، وَقَالَ: «إِنَّ التَّيَمُّمَ أَعْجَبُ إِلَيَّ مِنْهُ»

[حكم الألباني] : صحيح

86.பாலிலும், நபீதிலும் உலூச் செய்வதை 'அதாஃ' அவர்கள் வெறுத்தார்கள். இதைவிட தயம்மும் செய்வதே என்னைப் பொறுத்த வரை சிறந்தது' எனவும் கூறியுள்ளனர் என இப்னுஜுரைஜ் அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ் 

87-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ: سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ، عَنْ رَجُلٍ أَصَابَتْهُ جَنَابَةٌ، وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ، وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ؟ قَالَ: «لَا»

[حكم الألباني] : صحيح

87.ஒருவருக்கு குளிப்பு கடமை ஆகிவிட்டது. தண்ணீர் இல்லையானால் 'நபீத்' என்ற பானம் உள்ளது. அதைக் கொண்டு அவர் குளிக்கலாமா? என்று நான் அபுல் ஆலியா அவர்களிடம் கேட்ட போது அவர் 'கூடாது' என்று பதிலளித்ததாக அபூகல்தா அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்
(43) باب أَيُصَلِّي الرَّجُلُ وَهُوَ حَاقِنٌ

பாடம்: 43 ஒருவர் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழலாமா?

88-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ، أَنَّهُ خَرَجَ حَاجًّا، أَوْ مُعْتَمِرًا وَمَعَهُ النَّاسُ، وَهُوَ يَؤُمُّهُمْ، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلَاةَ، صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ قَالَ: لِيَتَقَدَّمْ أَحَدُكُمْ وَذَهَبَ إِلَى الْخَلَاءِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلَاءَ وَقَامَتِ الصَّلَاةُ، فَلْيَبْدَأْ بِالْخَلَاءِ»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَى وُهَيْبُ بْنُ خَالِدٍ، وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ، وَأَبُو ضَمْرَةَ، هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ وَالْأَكْثَرُ الَّذِينَ رَوَوْهُ، عَنْ هِشَامٍ، قَالُوا: كَمَا قَالَ زُهَيْرٌ

[حكم الألباني] : صحيح

88.அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக்காகவோ புறப்பட்டார்கள். அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார். ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்த தயாரானார். அப்போது அவர்களை நோக்கி, உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன்வாருங்கள். ஏனெனில் 'உங்களில் ஒருவருக்கு அவர் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்கு செல்வாராக!' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு கழிப்பிடத்திற்கு சென்று விட்டார் என உர்வா பின் ஜுபைர் (ரளி) அவர்கள் தமது தந்தை ஜுபைர் (ரளி) வழியாக அறிவிக்கிறார்.

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்களிடமிருந்து தன் தந்தைக்கு ஒருவர் அறிவித்ததாகவும் பின் தன் தந்தையார் வழியாக ஹிஷாம் பின் உர்வா அறிவித்ததாக உஹைப் பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஷாக், அபூ ழம்ரா ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஹிஷாம் அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அதிகமான அறிவிப்பாளர்கள் ஜுஹைர் அவர்கள் அறிவிப்பது போன்றே அறிவிக்கின்றனர்.

தரம் : ஸஹீஹ்

89-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، وَمُحَمَّدُ بْنُ عِيسَى الْمَعْنَى قَالُوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي حَزْرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ - قَالَ ابْنُ عِيسَى فِي حَدِيثِهِ: ابْنُ أَبِي بَكْرٍ - ثُمَّ اتَّفَقُوا أَخُو الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ - قَالَ: كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا، فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»

[حكم الألباني] : صحيح

89.நாங்கள் அன்னை ஆயிஷா அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்கர் ஸித்தீக் (ரளி) அவர்களின் பேரன்) காஸிம் அவர்கள் தொழத் துவங்கினார். அப்போது அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் உணவு தயாராக இருக்கும் போது, மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் எனக் கூறினார்கள் என காஸிம் பின் முஹம்மது பின் அபூபக்ர் அவர்களின் சகோதரர் அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்

90-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " [ص: 23] ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمُّ رَجُلٌ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَنْظُرُ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ "

[حكم الألباني] : ضعيف

90.(ஒரு கூட்டத்தினருக்கு) தொழுகை நடத்தும் போது பிரார்த்தனையில் அவர்களை விட்டு தனக்காக மட்டும் பிரார்த்தனை செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவர்களுக்கு அவர் துரோகம் இழைத்து விட்டார். ஒரு வீட்டில் நுழைய அனுமதி பெறுவதற்கு முன்பு அவ்வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது. அவ்வாறு அவர் பார்த்து விட்டால் (அனுமதி பெறாமலேயே) வீட்டில் நுழைந்தவர் போலாவார். மலஜலம் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. ஆக இம்மூன்று காரியங்களும் செய்ய உங்களில் யாருக்கும் அனுமதி இல்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப்

[ இதில் யாரென்றே அறியப்படாத பலர் இடம் பெற்றுள்ளனர்.]

91-حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ثَوْرٌ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي حَيٍّ الْمُؤَذِّنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يُصَلِّيَ وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ» - ثُمَّ سَاقَ نَحْوَهُ عَلَى هَذَا اللَّفْظِ قَالَ: «وَلَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَؤُمَّ قَوْمًا إِلَّا بِإِذْنِهِمْ، وَلَا يَخْتَصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»، قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا مِنْ سُنَنِ أَهْلِ الشَّامِ لَمْ يُشْرِكْهُمْ فِيهَا أَحَدٌ»

[حكم الألباني] : صحيح إلا جملة الدعوة

91.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ள ஒருவர் மலஜலம் கழிக்க வேண்டியது ஏற்பட்டால் அதை முடிக்காமல் அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இதே வார்த்தையில் இப்படியே இந்த ஹதீஸ் தொடர்கிறது. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒருவர் ஒரு கூட்டத்தினருக்கு தொழுகை நடத்தும் போது அவர்களின் அனுமதியின்றி தொழுகை நடத்தக் கூடாது. மேலும் பிரார்த்தனையில் அவர்களுக்குச் சேர்த்துக் கேட்காமல் தனக்காக மட்டும் பிரார்த்திப்பது கூடாது. அவ்வாறு அவர் செய்தால் அவர்களுக்கு அவர் துரோகமிழைத்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்.

இது சிரியா (ஷாம்) நாட்டு அறிவிப்பாளர்களின் அறிவிப்பாகும். (அபூஹுரைரா (ரளி) அவர்கள் தவிர) வேறு அறிவிப்பாளர்கள் யாரும் இந்த அறிவிப்பில் கூட்டாக வில்லை.

தரம் : ளயீப்

[மேற்கண்ட ஹதீஸின் குறிப்பை காண்க.]

(44) باب مَا يُجْزِئُ مِنَ الْمَاءِ فِي الْوُضُوءِ

பாடம்: 44 உலூச் செய்யப் போதுமான அளவு தண்ணீர்.

92-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ أَبَانُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ صَفِيَّةَ

[حكم الألباني] : صحيح

92.நபி (ஸல்) அவர்கள் ஒரு 'முத்து' (இரு கை கொள்ளளவு) தண்ணீரில் உலூச் செய்து விடுபவர்களாகவும் ஒரு 'ஸாவு' (இரு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) தண்ணீரில் குளித்து விடுபவர்களாகவும் இருந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.

இதை அப்பான் அவர்கள் கதாதா வாயிலாக அறிவிக்கும் போது ஸபிய்யா அவர்களிடம் கேட்டதாக இமாம் அபூதாவூத் கூறுகிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

93-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»

[حكم الألباني] : صحيح

93.மேற்கண்ட ஹதீஸே ஜாபிர் (ரளி) அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அபூயஸீத் கூபாவாசிகள் மூலம் அறிவித்தால் அது ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.

தரம் : ஸஹீஹ்

94-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سَمِعْتُ عَبَّادَ بْنَ تَمِيمٍ، عَنْ جَدَّتِهِ وَهِيَ أُمُّ عُمَارَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرُ ثُلُثَيِ الْمُدِّ»

[حكم الألباني] : صحيح

94.நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை உலூச் செய்தனர். ஒரு முத்து (இரு கைகள் கொள்ளளவு) நீரில் மூன்றில் இருபங்கு தண்ணீர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது' என உம்மு உமாரா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

95-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِإِنَاءٍ يَسَعُ رَطْلَيْنِ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، قَالَ: عَنِ ابْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ، قَالَ: وَرَوَاهُ سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، حَدَّثَنِي جَبْرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، سَمِعْتُ أَنَسًا إِلَّا أَنَّهُ قَالَ: «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ» وَلَمْ يَذْكُرْ رَطْلَيْنِ، قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ، يَقُولُ: «الصَّاعُ خَمْسَةُ أَرْطَالٍ، وَهُوَ صَاعُ ابْنُ أَبِي ذِئْبٍ، وَهُوَ صَاعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
 
حكم :(حديث: كان النبي صلى الله عليه وسلم يتوضأ بإناء.... ويغتسل بالصاع) ضعيف، (حديث: كان النبي صلى الله عليه وسلم يتوضأ بمكوك) صحيح   (الألباني)
95.நபி (ஸல்) அவர்கள் 'இரண்டு ராத்தல்' கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் உலூச் செய்தார்கள். ஒரு 'ஸாவு' (இரண்டு கை கொள்ளளவு தண்ணிரின் நான்கு மடங்கு) தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்.

[தரம் : ளயீப் ]

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
இந்த ஹதீஸை ஷரீக் என்பார் வாயிலாக யஹ்யா பின் ஆதம் அறிவிக்கும் போது (அப்துல்லாஹ் பின் ஜப்ர் என்பதற்கு பதிலாக) இப்னு ஜப்ர் பின் அதீக் எனக் கூறியுள்ளார். அப்துல்லாஹ் பின் ஈஸா என்பார் வழியாக இதை சுஃப்யான் அறிவிக்கும் போது எனக்கு ஜப்ர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் ஜப்ர் அவர்கள் அனஸ் (ரளி) அவர்களிடம் கேட்டதாக ஷுஃபா அறிவிக்கின்றார். எனினும் ஷுஃபா அவர்கள் இரண்டு ராத்தல்கள் எனக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மக்கூக் அளவு தண்ணீரில் உலூச் செய்வார்கள் என அறிவிக்கிறார்.

[ தரம் : ஸஹீஹ்]

மேலும் இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
ஸாவு என்பது ஐந்து ராத்தல்கள் என இமாம் அஹ்மது பின் ஹன்பல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். இப்னு அபூதிஃப் என்பாரின் 'ஸாவு' அளவும் நபி (ஸல்) அவர்களின் ஸாவு அளவும் ஒன்றே எனவும் அபூதாவூத் கூறியுள்ளனர்.

(45) باب الإِسْرَافِ فِي الْوَضُوءِ
பாடம்: 45 தண்ணீரை விரயமாக்குதல்.

96-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَعَامَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الْأَبْيَضَ، عَنْ يَمِينِ الْجَنَّةِ إِذَا دَخَلْتُهَا، فَقَالَ: أَيْ بُنَيَّ، سَلِ اللَّهَ الْجَنَّةَ، وَتَعَوَّذْ بِهِ مِنَ النَّارِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ يَعْتَدُونَ فِي الطَّهُورِ وَالدُّعَاءِ»

[حكم] : ضعيف

96.'யா அல்லாஹ்! நான் சுவனத்தில் நுழைந்ததும் அதன் வலப்பக்கத்தில் எனக்கு வெள்ளை மாளிகையை அருள்வாயாக என உன்னிடம் வேண்டுகிறேன்' என்று தனது மகன் பிரார்த்தனை செய்வதை செவியுற்ற அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரளி) அவர்கள் தமது மகனை நோக்கி, 'என்னருமை மகனே! நீ அல்லாஹ்வின் சுவனத்தை கேள், (பிரார்த்தனையில் வரம்பு மீறாதே) ஏனெனில் 'சுத்தம் செய்வதிலும் பிரார்த்தனை புரிவதிலும் வரம்பு மீறும் ஒரு கூட்டம் எனது இந்த சமுதாயத்தில் இனி உருவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என அறிவுரை வழங்கினார்கள்.

தரம் : ளயீப்

[ குறிப்பு : அப்துல்லாஹ் இப்னு முகப்பல் அவர்களின் மகன் என்பவர் யார் என தெரியாதவர்.]

(46) باب فِي إِسْبَاغِ الْوُضُوءِ
பாடம்: 46 உலூவை பூரணமாகச் செய்தல்.

97-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى قَوْمًا وَأَعْقَابُهُمْ تَلُوحُ، فَقَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ»

[حكم الألباني] : صحيح

97.தங்களது குதிங்கால்களில் தண்ணீர் படாமல் தோற்றமளித்த ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (உலூச் செய்யும் போது நன்றாக நனையாத) குதிகால்களுக்கு நரகம் என்ற நாசம் உண்டாவதாக! (இதை அஞ்சி) உலூவை பூரணமாக செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்
(47) باب الْوُضُوءِ فِي آنِيَةِ الصُّفْرِ
பாடம்: 47 பித்தளை பாத்திரத்தில் உலூச் செய்தல்.

98-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنِي صَاحِبٌ لِي، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَوْرٍ مِنْ شَبَهٍ»،

صحيح : ] حكم  [  

98.நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் பித்தளைப் பாத்திரத்தில் குளிப்போம்' என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

99-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَنَّ إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ حَدَّثَهُمْ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ رَجُلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ

[حكم الألباني] : صحيح

99.மேற்கண்ட ஹதீஸ் உர்வா அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.
(குறிப்பு: 98 வது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உள்ளது. அதிலே அறியப்படாத ஒருவரும் இடம் பெறுகிறார். 99 வது ஹதீஸ் தொடர்பு துண்டிக்கப்படா விடினும் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார். எனவே இவ்விரண்டு ஹதீஸ்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல.)

தரம் : ஸஹீஹ்

100-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَسَهْلُ بْنُ حَمَّادٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ: «جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ»

[حكم الألباني] : صحيح

100.'எங்களிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுக்கு உலூச் செய்ய பித்தளை பாத்திரத்தில் நீர் வழங்கினோம். அவர்கள் உலூச் செய்தார்கள்' என அப்துல்லாஹ் பின் ஸைது (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(48) باب التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ

பாடம்: 48 உலூச் செய்யத் துவங்கும் போது பிஸ்மி கூறுதல்.

101-حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ»

[حكم الألباني] : صحيح

101.யார் உலூவின் போது அல்லாஹ்வின் பெயரைக் கூற வில்லையோ அவருக்கு உலூ இல்லை. யாருக்கு உலூ இல்லையோ அவலுக்கு தொழுகை இல்லை' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப்

[இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் யஃகூப்பின் சலமா தனது தந்தையிடம் செவியுற்றதில்லை. அவரது தந்தை அபூஹுரைரா (ரளி) அவர்களிடம் செவியுற்றதில்லை. எனவே இது தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியாகிறது.]

102-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، قَالَ: وَذَكَرَ رَبِيعَةُ، أَنَّ تَفْسِيرَ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ

[حكم الألباني] : صحيح مقطوع

102.யார் உலூச் செய்யும் போது அல்லாஹ்வின் பெயர் கூறவில்லையோ அவருக்கு உலூ இல்லை என்ற நபிமொழியின் விளக்கமாவது, ஒருவர் (தொழுகைக்கு) உலூச் செய்வார், கடமையான குளிப்பின் போது கடமையான குளிப்புக்காக குளிக்கிறேன் எனவும் மனதில் எண்ணி இருக்கமாட்டார் என்பது தான் என ரபீஆ (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(49) باب فِي الرَّجُلِ يُدْخِلُ يَدَهُ فِي الإِنَاءِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا

பாடம்: 49 கைகளைக் கழுவாமலேயே பாத்திரத்தில் நுழைத்தல்.

103-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي رَزِينٍ، وَأَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»،

[حكم الألباني] : صحيح دون الثلاث

103.இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தால் மூன்று முறை (கைகளில் தண்ணீர் ஊற்றிக்) கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விட வேண்டாம். எனெனில் இரவில் அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

104-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي بِهَذَا الْحَدِيثِ، قَالَ: مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا وَلَمْ يَذْكُرْ أَبَا رَزِينٍ

[حكم الألباني] : صحيح

104.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெறுகிறது. ஆனால் இரண்டு முறை அல்லது மூன்று முறை கைகளைக் கழுவாமல் பாத்திரத்தில் விட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் : ஸஹீஹ்

105-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، قَالَا [ص: 26] : حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي مَرْيَمَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ، أَوْ أَيْنَ كَانَتْ تَطُوفُ يَدُهُ»

[حكم الألباني] : صحيح

105.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் 'அவரது கை இரவில் எங்கெங்கு உலவியது' என அவருக்கு தெரியாது என்று அதிகப்படியாக உள்ளது இதை அபூமர்யம் (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(50) باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم

பாடம்: 50 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்த விதம்.

106-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلَاثًا فَغَسَلَهُمَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ قَدَمَهُ الْيُمْنَى ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»،

[حكم الألباني] : صحيح

106.உஸ்மான் (ரளி) அவர்கள் உலூச் செய்த போது தன் இரு கைகளிலும் தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தை மும்முறை கழுவினார்கள். பின்னர் 'வலது கையை' முழங்கை உட்பட மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இடது கையையும் அதே போலக் கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் வலதுகாலை மூன்று முறை கழுவினார்கள். அதே போல இடது காலையும் கழுவினார்கள்.

பின்பு, 'நான் இப்போது உலூச் செய்தது போலவே நபி (ஸல்) அவர்களையும் உலூச் செய்யப் பார்த்திருக்கிறேன்' என்றார்கள். 'யார் நான் உலூச் செய்தது போலவே உலூச் செய்து அவர் தனது மனதில் எவ்வித எண்ணங்களுக்கும் இடமளிக்காமல் இரண்டு ரக்அத் தொழுதால் அவரது முன் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் (ரளி) அறிவிக்கிறார்கள். இதை உஸ்மான் (ரளி) அவர்களின் அடிமை அபான் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

107-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَرْدَانَ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي حُمْرَانُ، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ، فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَذْكُرِ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ، وَقَالَ فِيهِ: وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ هَكَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ دُونَ هَذَا كَفَاهُ» وَلَمْ يَذْكُرْ أَمْرَ الصَّلَاةِ

[حكم الألباني] : حسن صحيح

107.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் வாய் கொப்பளித்தலும், நாசிக்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்துவதும் கூறப்படவில்லை. எனினும் தலைக்கு மூன்று முறை மஸஹ் செய்தார்கள். தமது இரு கால்களையும் மும்முறை கழுவினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை இவ்வாறு உலூச் செய்வதைக் கண்டேன் என்றும், யார் இதற்கு குறைவாக உலூச் செய்தாலும் அது அவருக்குப் போதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் உஸ்மான் (ரளி) கூறினார்கள். பின்னர் இரண்டு ரக்அத் தொழுவது பற்றிய விபரம் இடம் பெறவில்லை. இதை ஹும்ரான் (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

108-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْإِسْكَنْدَرَانِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ يُونُسَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ زِيَادٍ الْمُؤَذِّنُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، قَالَ: سُئِلَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْوُضُوءِ، فَقَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ سُئِلَ عَنِ الْوُضُوءِ «فَدَعَا بِمَاءٍ، فَأُتِيَ بِمِيضَأَةٍ فَأَصْغَاهَا عَلَى يَدِهِ الْيُمْنَى، ثُمَّ أَدْخَلَهَا فِي الْمَاءِ فَتَمَضْمَضَ ثَلَاثًا، وَاسْتَنْثَرَ [ص: 27] ثَلَاثًا، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَأَخَذَ مَاءً فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ، فَغَسَلَ بُطُونَهُمَا وَظُهُورَهُمَا مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»، ثُمَّ قَالَ: أَيْنَ السَّائِلُونَ عَنِ الْوُضُوءِ؟ «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ»، قَالَ أَبُو دَاوُدَ: " أَحَادِيثُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ الصِّحَاحُ كُلُّهَا تَدُلُّ عَلَى مَسْحِ الرَّأْسِ أَنَّهُ مَرَّةً، فَإِنَّهُمْ ذَكَرُوا الْوُضُوءَ ثَلَاثًا، وَقَالُوا فِيهَا: وَمَسَحَ رَأْسَهُ وَلَمْ يَذْكُرُوا عَدَدًا كَمَا ذَكَرُوا فِي غَيْرِهِ "

[حكم الألباني] : حسن صحيح

108.உலூச் செய்யும் முறை பற்றி இப்னு அபி முலைக்கா அவர்களிடம் வினவப்பட்ட போது, அவர் 'உஸ்மான் (ரளி) அவர்களிடம் உலூச் செய்யும் முறை பற்றி வினவப்பட்டது. அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படி சொன்னார்கள். அவர்களிடம் ஒரு தண்ணீர் பாத்திரம் கொண்டு வரப்பட்டதும் அதை தனது வலது கையில் சாய்த்து (நீர்; விட்டு கழுவிய பின்) கையை தண்ணீர் பாத்திரத்திற்குள் செலுத்தி மூன்று முறை வாய் கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு செலுத்தி சுத்தம் செய்தார்கள். மும்முறை முகத்தைக் கழுவினார்கள். பின்பு மூன்று முறை வலது கையையும், மூன்று முறை இடது கையையும் கழுவினார்கள். பின்பு கையை தண்ணீருக்குள் செலுத்தி தண்ணீர் எடுத்து தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். (காதுகளுக்கு மஸஹ் செய்யும் போது) காதுகளின் உட்புறமும் வெளிப்புறமும் ஒரு தடவை கழுவினார்கள். பின்பு இரு கால்களையும் கழுவினார்கள். பிறகு உலூவின் முறை பற்றிக் கேட்டவர் எங்கே? (என்று வினவி) இவ்வாறே நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டேன் என்று உஸ்மான் பின் அப்பாஸ் (ரளி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தைமியி.

உஸ்மான் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்ற சஹீஹான அனைத்து ஹதீஸ்களும் 'தலைக்கு ஒருமுறை தான் மஸஹ் செய்ய வேண்டும்' என அறிவிக்கின்றன. ஏனெனில் மற்ற உறுப்புக்களை மும்முறை கழுவி உலூச் செய்ய வேண்டும் என்றே அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர். அந்த அறிவிப்புக்களில் தலைக்கு மஸஹ் செய்தார்கள் என்றே (எண்ணிக்கையைக் குறிப்பிடாமல்) அறிவிக்கின்றனர். மற்றவைகளுக்கு எண்ணிக்கையை குறிப்பிட்டது போல இதற்கு எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

109-حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ يَعْنِي ابْنَ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي عَلْقَمَةَ، أَنَّ عُثْمَانَ «دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، فَأَفْرَغَ بِيَدِهِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، ثُمَّ غَسَلَهُمَا إِلَى الْكُوعَيْنِ»، قَالَ: «ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا، وَذَكَرَ الْوُضُوءَ ثَلَاثًا»، قَالَ: «وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِثْلَ مَا رَأَيْتُمُونِي تَوَضَّأْتُ»، ثُمَّ سَاقَ نَحْوَ حَدِيثِ الزُّهْرِيِّ وَأَتَمَّ

[حكم الألباني] : حسن صحيح

109.உஸமான் (ரளி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உலூச் செய்யலானார்கள். அப்போது இடக்கையின் மீது வலது கையால் தண்ணீர் ஊற்றி பிறகு இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு மும்முறை வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவியதாக அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார். தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள் என்று கூறி 'என்னை எவ்வாறு உலூச் செய்யக் கண்டீர்களோ அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன்' என்று உஸ்மான் (ரளி) கூறியதாக அபூஅல்கா அறிவிக்கிறார். பிறகு ஜுஹ்ரீ அவர்களது (மேற்கண்ட 106 வது) ஹதீஸை போன்று முழுமையாக அறிவிக்கிறார்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

110-حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقِ بْنِ جَمْرَةَ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ «غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ قَالَ: تَوَضَّأَ ثَلَاثًا فَقَطْ

[حكم الألباني] : حسن صحيح

110.நான் உஸ்மான் (ரளி) அவர்களை தன் இரு முழங்கைகளையும் மும்முறை கழுவக் கண்டேன். மேலும் தலையை மூன்று முறை மஸஹ் செய்யவும் கண்டேன் என்று கூறி 'நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை இதே போன்று உலூச் செய்யக் கண்டேன்' என்று உஸ்மான் (ரளி) கூறியதாக ஷகீக் பின் ஸலமா அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை இஸ்ராயீல் மூலம் வகீஃ அவர்கள் அறிவிக்கும் போது உஸ்மான் (ரளி) அவர்கள் எல்லா உறுப்புகளையும் மும்முறை கழுவி உலூச் செய்ததாக மட்டும் அறிவிக்கிறார்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

111-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ: أَتَانَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَدْ صَلَّى فَدَعَا بِطَهُورٍ، فَقُلْنَا مَا يَصْنَعُ بِالطَّهُورِ وَقَدْ صَلَّى مَا يُرِيدُ، إِلَّا لِيُعَلِّمَنَا، فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ «فَأَفْرَغَ مِنَ الْإِنَاءِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، فَمَضْمَضَ وَنَثَرَ مِنَ الْكَفِّ الَّذِي يَأْخُذُ فِيهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الشِّمَالَ ثَلَاثًا، ثُمَّ جَعَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَرِجْلَهُ الشِّمَالَ ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَعْلَمَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ هَذَا»،

[حكم الألباني] : صحيح

111.அலி (ரலி) அவர்கள் தொழுது முடித்துவிட்டு எங்களிடம் வந்தார்கள். தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். அவர்கள் தொழுது முடித்து விட்ட நிலையில் தண்ணீர் கொண்டு வருமாறு சொல்வது நமக்கு (உலூவின் முறைகளைக்) கற்றுக் தருவதற்காகவே என நாங்கள் பேசிக் கொண்டோம். தண்ணீருள்ள பாத்திரமும் (உலூச் செய்த நீரைப் பிடிப்பதற்காக) ஒரு தட்டும் கொண்டு வரப்பட்டது. அப்பாத்திரத்திலிருந்து தனது வலது கையில் தண்ணீர் ஊற்றி தமது இரு கைகளையும் மும்முறை கழுவினார்கள். பிறகு மூன்று தடவை வாய் கொப்பளித்து மூன்று தடவை நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள். அப்போது தான் அள்ளுகிற ஒரு கை நீரிலேயே வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். (இரண்டிற்கும் தனித் தனியாக மூன்று முறை நீர் அள்ளவில்லை) பிறகு தமது முகத்தை மூன்று தடவையும், வலது கையை மூன்று தடவையும், இடது கையை மூன்று தடவையும் கழுவினார்கள்.

பிறகு பாத்திரத்தில் கையை விட்டு தலைக்கு ஒரே ஒரு முறை மஸஹ் செய்தார்கள். பிறகு வலது காலை மூன்று முறையும், இடது காலை மூன்று முறையும் கழுவி பின்னர், 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களது உலூச் செய்யும் முறையை அறிய ஆவலுள்ளவருக்கு இது போதும்' என்று கூறினார்கள். இதை அப்துகைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

112-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَلْقَمَةَ الْهَمْدَانِيُّ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ: صَلَّى عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ الْغَدَاةَ، ثُمَّ دَخَلَ الرَّحْبَةَ فَدَعَا بِمَاءٍ فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، قَالَ: «فَأَخَذَ الْإِنَاءَ بِيَدِهِ الْيُمْنَى، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى، وَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَمَضْمَضَ ثَلَاثًا وَاسْتَنْشَقَ ثَلَاثًا»، ثُمَّ سَاقَ قَرِيبًا مِنْ حَدِيثِ أَبِي عَوَانَةَ، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخِّرَهُ مَرَّةً» ثُمَّ سَاقَ الْحَدِيثَ نَحْوَهُ،

[حكم الألباني] : صحيح

112.அலி (ரலி) அவர்கள் சுப்ஹு தொழுது விட்டு (கூபாவிலுள்ள இடமான) ரஹ்பாவிற்கு சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். அப்போது ஒரு சிறுவர் தண்ணீர் பாத்திரத்தையும் கை கழுவும் தட்டையும் கொண்டு வந்தார். அவர்கள் தமது வலது கையினால் பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு தமது இடது கைக்கு தண்ணீர் ஊற்றி தமது இரு முன் கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து மூன்று தடவை வாய் கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு நீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள் என்று அறிவித்து விட்டு (மேற்கண்ட) அபூஅவானா ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவிக்கிறார். பிறகு தலையின் முன் நெற்றியிலிருந்த தலையின் பின்புறம் வரை மஸஹ் செய்தார்கள். பின்னர் மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்

113-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ مَالِكَ بْنَ عُرْفُطَةَ، سَمِعْتُ عَبْدَ خَيْرٍ، رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «أُتِيَ بِكُرْسِيٍّ فَقَعَدَ عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِكُوزٍ مِنْ مَاءٍ فَغَسَلَ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ مَعَ الِاسْتِنْشَاقِ بِمَاءٍ وَاحِدٍ»، وَذَكَرَ الْحَدِيثَ،

[حكم الألباني] : صحيح

113.அலி (ரலி) அவர்களுக்கு ஒரு நாற்காலி கொண்டுவரப் பட்டு அதில் அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். பின்னர் தண்ணீர் கூசா ஒன்று கொண்டு வரப்பட்டது. தனது கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ஒரு கை நீராலேயே வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று அப்து கைர் அறிவித்து விட்டு மேற்கண்ட ஹதீஸையே அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்

114-حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا رَبِيعَةُ الْكِنَانِيُّ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، وَسُئِلَ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ: «وَمَسَحَ عَلَى رَأْسِهِ حَتَّى لَمَّا يَقْطُرْ، وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

[حكم الألباني] : صحيح

114.மேற்கண்ட கருத்துள்ள ஹதீஸே இங்கும் இடம் பெற்று உள்ளது. அதில் அலீ (ரலி) அவர்கள் தமது தலைக்கு நீர் சொட்டு சொட்டாக வழியாத அளவுக்கு மஸஹ் செய்தார்கள் என்று அதிக விளக்கம் இடம் பெற்றுள்ளது.

தரம் : ஸஹீஹ்

115-حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الطُّوسِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا فِطْرٌ، عَنْ أَبِي فَرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً»، ثُمَّ قَالَ: «هَكَذَا تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

[حكم الألباني] : صحيح

115.அலி (ரலி) அவர்களை உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் உலூச் செய்யும் போது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தலையை ஒரு முறை மஸஹ் செய்தார்கள். பின்னர் இப்படித்தான் ரஸுல் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள் எனவும் அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

116-حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو تَوْبَةَ، قَالَا: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، ح وحَدَّثَنَا [ص: 29] عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَذَكَرَ وُضُوءَهُ كُلَّهُ ثَلَاثًا ثَلَاثًا»، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ»، ثُمَّ قَالَ: «إِنَّمَا أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

[حكم الألباني] : صحيح

116.நான் அலி (ரலி) அவர்களை உலூச் செய்யக் கண்டேன் என்று அபூஹய்யா அவர்கள் அறிவிக்கும் போது, அவர்கள் எல்லா உறுப்புக்களையும் மும்முறை கழுவி உலூச் செய்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். பின்னர் அவர்கள் தலையை மஸஹ் செய்தார்கள். பின்னர் தம் இருகால்களை கரண்டைக் கால் வரை கழுவினார்கள் பின்னர் நான் உங்களுக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் உலூச் செய்யும் முறையை காண்பிக்க விரும்பினேன் என்றும் சொன்னார்கள்.

தரம் : ஸஹீஹ்

117-حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ دَخَلَ عَلَيَّ عَلِيٌّ يَعْنِي ابْنَ أَبِي طَالِبٍ، وَقَدْ أَهْرَاقَ الْمَاءَ فَدَعَا بِوَضُوءٍ، فَأَتَيْنَاهُ بِتَوْرٍ فِيهِ مَاءٌ، حَتَّى وَضَعْنَاهُ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ، أَلَا أُرِيكَ كَيْفَ كَانَ يَتَوَضَّأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: بَلَى، قَالَ: «فَأَصْغَى الْإِنَاءَ عَلَى يَدِهِ فَغَسَلَهَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فَأَفْرَغَ بِهَا عَلَى الْأُخْرَى، ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَدْخَلَ يَدَيْهِ فِي الْإِنَاءِ جَمِيعًا، فَأَخَذَ بِهِمَا حَفْنَةً مِنْ مَاءٍ فَضَرَبَ بِهَا عَلَى وَجْهِهِ، ثُمَّ أَلْقَمَ إِبْهَامَيْهِ مَا أَقْبَلَ مِنْ أُذُنَيْهِ، ثُمَّ الثَّانِيَةَ، ثُمَّ الثَّالِثَةَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ أَخَذَ بِكَفِّهِ الْيُمْنَى قَبْضَةً مِنْ مَاءٍ، فَصَبَّهَا عَلَى نَاصِيَتِهِ فَتَرَكَهَا تَسْتَنُّ عَلَى وَجْهِهِ، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ مَسَحَ رَأْسَهُ وَظُهُورَ أُذُنَيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَيْهِ جَمِيعًا فَأَخَذَ حَفْنَةً مِنْ مَاءٍ فَضَرَبَ بِهَا عَلَى رِجْلِهِ، وَفِيهَا النَّعْلُ فَفَتَلَهَا بِهَا، ثُمَّ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ» قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ أَبُو دَاوُدَ: " وَحَدِيثُ ابْنِ جُرَيْجٍ، عَنْ شَيْبَةَ، يُشْبِهُ حَدِيثَ عَلِيٍّ، لِأَنَّهُ قَالَ فِيهِ حَجَّاجُ بْنُ مُحَمَّدِ بْنِ جُرَيْجٍ: وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً وَاحِدَةً، وَقَالَ ابْنُ وَهْبٍ فِيهِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَمَسَحَ بِرَأْسِهِ ثَلَاثًا "

[حكم الألباني] : حسن

117.அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து சிறுநீர் கழித்து விட்டு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரும் படிச் சொன்னார்கள். நாங்கள் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தைக் கொண்டு வந்து அவர்கள் முன்னால் வைத்தோம். அப்போது அவர்கள், 'இப்னு அப்பாஸே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உலூச் செய்தார்கள் என்று உமக்கு நான் செய்து காண்பிக்கவா? என்று கேட்க, நான் ஆம் என்றேன். அப்போது அவர்கள் பாத்திரத்தை தனது கையில் சாய்த்து அதைக் கழுவினார்கள். பிறகு (கழுவிய) தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு அதைக் கொண்டு மற்றொரு கையில் நீர் ஊற்றி பின் தமது இரு முன்னங்கைகளையும் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து, மூக்கையும் சுத்தப்படுத்தினார்கள். பின் இரு கைகளையும் இணைத்து பாத்திரத்தில் செலுத்தி அவ்விரு கைகளினாலும் நீர் அள்ளி அதைத் தமது முகத்தில் அடித்து தனது இரு பெருவிரல்களையும் தனது இரு காதுகளின் முற்பகுதியில் திணித்தார்கள். இது போன்று இரண்டாவது முறையும், பின்னர் மூன்றாவது முறையும் செய்தார்கள். பிறகு தனது வலது கையினால் ஒரு கையளவு தண்ணீர் எடுத்து தனது முகத்தில் வழியவிட்டார்கள். பிறகு தனது இரு முழங்கைகளையும் முட்டுக்கை உட்பட மும்முறை கழுவினார்கள். பிறகு தனது தலையையும் தம்மிரு காதுகளின் பின்புறத்தையும் மஸஹ் செய்தார்கள். பிறகு தன் இருகைகளையும் சேர்த்து பாத்திரத்தில் நுழைத்து இரு கையளவு நீரெடுத்து அதை செருப்புடன் கூடிய தமது காலில் அடித்து தண்ணீரில் (நனையும் படி அசைத்து) திருகி விட்டார்கள். இதைப் போன்றே மற்றொரு காலிலும் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூற நான், செருப்புடன் இருக்கும் போதா? என்ற கேட்க, செருப்பு அணிந்திருக்கும் போது தான் என்று பதில் அளித்தார்கள். செருப்பு அணிந்திருக்கும் போது தானா? என்று நான் மீண்டும் கேட்க செருப்பு அணிந்திருக்கும் போது தான் என்றார்கள். செருப்பு அணிந்திருக்கும் போதா? என்று நான் மீண்டும் கேட்க செருப்பு அணிந்திருக்கும் போது தான் என்று கூறினார்கள் என உபைதுல்லாஹ் அல்கவ்லானி அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவிக்கிறார்கள்.

இமாம் அபூதாவூது குறிப்பிடுகின்றார்கள்: அதாவது ஷைபா அவர்களிடமிருந்து இப்னு ஜுரைஜ் அவர்கள் அறிவிக்கின்ற (இந்த) ஹதீஸ் அலீ (ரலி) அவர்களின் ஹதீஸிற்கு ஒத்து இருக்கிறது. ஏனெனில் இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது அறிவிக்கின்ற ஹதீஸில் 'அகி (ரலி) அவர்கள் தமது தலைக்கு ஒரு தடவைதான் மஸஹ் செய்தார்கள் என்று அறிவிக்கின்றார். அதே இப்னு ஜுரைஜ் அவர்களிடம் இருந்து இப்னு வஹ்ப் அறிவிக்கின்ற போது 'தமது தலைக்கு மூன்று தடவை மஸஹ் செய்தார்கள்' என அறிவிக்கிறார்.

தரம் : ஹஸன்

118-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ [ص: 30] ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ -: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: نَعَمْ، «فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»،

[حكم الألباني] : صحيح

118.யஹ்யா அல்மாஸினி அவர்கள் தன் தந்தை அப்துல்லாஹ் பின் ஸைது ஆஸிம் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உலூ செய்தார்கள்? என்பதை எனக்கு செய்து காட்ட முடியுமா? என்று வினவினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்து விட்டு தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை தமது இருகைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு மூன்று முறை வாய் கொப்பளித்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்பு தனது இருகைகளையும் முட்டுக்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தனது இருகைகளாலும் தலையின் முன் பாகத்தில் துவங்கி பிடரி வரை கொண்டு சென்று ஆரம்பித்த இடத்திற்கே கைகளைத் திருப்பிக் கொண்டு வந்து மஸஹ் செய்தார்கள். பிறகு இருகால்களையும் கழுவினார்கள் என இப்னு யஹ்யா அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்

119-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ بِهَذَا الْحَدِيثِ، قَالَ: «فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ» يَفْعَلُ ذَلِكَ، ثَلَاثًا، ثُمَّ ذَكَرَ نَحْوَهُ

[حكم الألباني] : صحيح

119.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு கையளவு தண்ணீரில் வாய் கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தி மூக்கையும் சுத்தம் செய்ததாகவும் அதை மும்முறை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தரம் : ஸஹீஹ்

120-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ حَبَّانَ بْنَ وَاسِعٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيَّ، يَذْكُرُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ وُضُوءَهُ، وَقَالَ: «وَمَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ، وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا»

[حكم الألباني] : صحيح


120.அப்துல்லாஹ் பின் ஸைது பின் ஆஸிம் அல்மாஸின் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டதாக அறிவிக்கும் போது, நபி (ஸல்) அவர்கள், (கையில் உள்ள ஈரத்தைக் கொண்டு தலைக்கு மஸஹ் செய்யாமல்) புதிதாக தண்ணீர் எடுத்து தலைக்கு மஸஹ் செய்ததாகவும் தமது இருகால்களையும் (அவற்றிலுள்ள அழுக்கு போய்விடும் அளவு) நன்கு சுத்தமாவது வரை கழுவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். அறிவிப்பவர்: வாஸிஃ.

தரம் : ஸஹீஹ்

121-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا حَرِيزٌ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْسَرَةَ الْحَضْرَمِيُّ، سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ مَعْدِي الْكِنْدِيَّ، قَالَ: «أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا»

[حكم الألباني] : صحيح

121.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உலூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டதும், அவர்கள் உலூச் செய்யத் துவங்கி தமது முன்னங்கைகளை மூன்று முறையும், தமது முகத்தை மூன்று முறையும், முழங்கைகளை மும்மூன்று முறைகளும் கழுவினார்கள். பின்பு மூன்று முறை வாய் கொப்பளித்து, நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள். பிறகு தலைக்கு மஸஹ் செய்து இரு காதுகளின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் மஸஹ் செய்தார்கள் என மிக்தாம் பின் மஃதீகரிப் அல்கின் திய்யீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

122-حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَيَعْقُوبُ بْنُ كَعْبٍ الْأَنْطَاكِيُّ - لَفْظُهُ - قَالَا: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَيْسَرَةَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَلَمَّا بَلَغَ مَسْحَ رَأْسِهِ، وَضَعَ كَفَّيْهِ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ، فَأَمَرَّهُمَا حَتَّى بَلَغَ الْقَفَا، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ»، قَالَ مَحْمُودٌ: قَالَ: أَخْبَرَنِي حَرِيزٌ،

[حكم الألباني] : صحيح

122.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் தலைக்கு மஸஹ் செய்யும் கட்டத்தை அடைந்த போது தன் இரு முன்னங்கைகளையும் தமது முன்னந்தலையில் வைத்து அவற்றை பிடரி வரை கொண்டு சென்று பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே தம் கைகளைக் கொண்டு வந்தார்கள் என மிக்தாம் பின் மஃகீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

மஹ்மூது பின் காலித் அவர்கள் தமக்கு முந்தைய அறிவிப்பாளராக வலீத் பின் முஸ்லிமைக் கூறாமல் அதற்கடுத்த அறிவிப்பாளரான ஹரீஸ் தமக்கு அறிவித்ததாக குறிப்பிடுகிறார்.

தரம் : ஸஹீஹ்

123-حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَهِشَامُ بْنُ خَالِدٍ، الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا الْوَلِيدُ بِهَذَا الْإِسْنَادِ، قَالَ: «وَمَسَحَ بِأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا»، زَادَ هِشَامٌ «وَأَدْخَلَ أَصَابِعَهُ فِي صِمَاخِ أُذُنَيْهِ»

[حكم الألباني] : صحيح

123.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் 'தனது இரு காதுகளின் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் மஸஹு செய்தார்கள் என அறிவிப்பாளர் வலீது பின் முஸ்லிம் அறிவிக்கிறார். 'தமது விரல்களை காதுகளின் துவாரத்தில் செலுத்தினார்கள்' என்று ஹிஷாம் மேலதிகமாக அறிவிக்கின்றார்.

தரம் : ஸஹீஹ்

124-حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو الْأَزْهَرِ الْمُغِيرَةُ بْنُ فَرْوَةَ، وَيَزِيدُ بْنُ أَبِي مَالِكٍ، أَنَّ مُعَاوِيَةَ، تَوَضَّأَ لِلنَّاسِ كَمَا «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، فَلَمَّا بَلَغَ رَأْسَهُ غَرَفَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَتَلَقَّاهَا بِشِمَالِهِ حَتَّى وَضَعَهَا عَلَى وَسَطِ رَأْسِهِ حَتَّى قَطَرَ الْمَاءُ، أَوْ كَادَ يَقْطُرُ، ثُمَّ مَسَحَ مِنْ مُقَدَّمِهِ إِلَى مُؤَخَّرِهِ، وَمِنْ مُؤَخَّرِهِ إِلَى مُقَدَّمِهِ»،

[حكم الألباني] : صحيح

124.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டது போன்று முஆவியா (ரலி) அவர்கள் மக்களுக்கு உலூச் செய்து காட்டினார்கள். அப்போது அவர்கள் தலைக்கு மஸஹ் செய்யும் கட்டத்தை அடைந்ததும் ஒரு சிரங்கை அளவு தண்ணீரை இடது கையால் அள்ளி வழிந்தோடும் அளவுக்கு (அல்லது வழிந்தோடத் துவங்கும அளவுக்கு) நடுத்தலையில் விட்டு பின்னர் தமது தலையின் முன்புறத்திலிருந்து பின்புறம் வரையிலும் 

பின்புறத்திலிருந்து முன்புறம் வரைக்கும் மஸஹ் செய்தார்கள் என முகீரா பின் ஃபர்வா, யஸீத் பின் அபீமாலிக் (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

தரம் : ஸஹீஹ்
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، بِهَذَا الْإِسْنَادِ، قَالَ: «فَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وَغَسَلَ رِجْلَيْهِ بِغَيْرِ عَدَدٍ»125
-
[حكم الألباني] : صحيح

125.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று முறை கழுவி உலூச் செய்தார்கள் எனவும், எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் இரு கால்களையும் கழுவினார்கள் எனவும் வலீது பின் முஸ்லிம் அறிவிக்கின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

126-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْتِينَا فَحَدَّثَتْنَا أَنَّهُ قَالَ: «اسْكُبِي لِي وَضُوءًا»، فَذَكَرَتْ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فِيهِ: فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، وَوَضَّأَ وَجْهَهُ ثَلَاثًا، وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مَرَّةً، وَوَضَّأَ يَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ بِمُؤَخَّرِ رَأْسِهِ، ثُمَّ بِمُقَدَّمِهِ وَبِأُذُنَيْهِ كِلْتَيْهِمَا ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا، وَوَضَّأَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا مَعْنَى حَدِيثِ مُسَدَّدٍ،

[حكم الألباني] : حسن

126.எங்களிடம் ரஸுல் (ஸல்) அவர்கள் அடிக்கடி வந்து செல்பவர்களாக இருந்தனர். அப்போது அவர்கள் உலூச் செய்வதற்காக எனக்கு தண்ணீர் ஊற்றுங்கள் எனக் கூறினார்கள். (ஊற்றத் துவங்கியதும்) இரண்டு முன்கைகளையும் மூன்று தடவையும், முகத்தை மூன்று தடவையும் கழுவினார்கள். ஒரு முறை வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். இரு கைகளையும் மும்மூன்று முறை கழுவினார்கள். தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள். அதாவது தமது தலையின் பின்புறம் துவங்கி முன்புறம் கொண்டு வந்தார்கள். பிறகு முன்புறம் துவங்கி பின்புறம் கொண்டு சென்றார்கள். (இதன் மூலம்) உட்புறம், வெளிப்புறம் அனைத்திலும் மஸஹ் செய்தார்கள். பிறகு இரண்டு கால்களையும் மும்மூன்று முறை கழுவினார்கள் என ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

இமாம் அபூதாவூத் அவர்கள் இது முஸத்தத் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து எனக் கூறியுள்ளார்கள்.

தரம் : ஹஸன்

126-حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَقِيلٍ بِهَذَا الْحَدِيثِ، يُغَيِّرُ بَعْضَ مَعَانِي بِشْرٍ، قَالَ فِيهِ: «وَتَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا»

[حكم الألباني] : شاذ

127.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. எனினும் இதில் மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கை சுத்தம் செய்ததாகக் காணப்படுகிறது.

தரம் : ஷாத்

128-حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدٍ الْهَمْدَانِيُّ، قَالَا: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ [ص: 32] ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ عِنْدَهَا فَمَسَحَ الرَّأْسَ كُلَّهُ، مِنْ قَرْنِ الشَّعْرِ كُلِّ نَاحِيَةٍ، لِمُنْصَبِّ الشَّعْرِ، لَا يُحَرِّكُ الشَّعْرَ عَنْ هَيْئَتِهِ»

[حكم الألباني] : حسن

128.என்னிடம் வந்திருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அப்போது தலையின் மேல் பாகம் முதல் கீழ்ப்பாகம் வரை தலை முழுவதையும் மஸஹ் செய்தார்கள். தலைமுடி அதன் அமைப்பை விட்டும் கலைந்து விடாத முறையில் மஸஹ் செய்தார்கள் என்று முஅவ்வித் பின் அஃப்ராஃ (ரலி) அவர்களின் மகளார் ருபைய்யி (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன்

129-حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، أَنَّ رُبَيِّعَ بِنْتَ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ، أَخْبَرَتْهُ قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ قَالَتْ: «فَمَسَحَ رَأْسَهُ وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ وَمَا أَدْبَرَ، وَصُدْغَيْهِ وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً»

[حكم الألباني] : حسن

129.நான் அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்களை உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் தமது தலைக்கு மஸஹ் செய்யும் போது முற்பகுதியிலும், பிற்பகுதியிலும், தமது நெற்றிப்பொட்டு, காதுகளிலும் ஒரு தடவையே மஸஹ் செய்தார்கள் என ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன்

130-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ بِرَأْسِهِ مِنْ فَضْلِ مَاءٍ كَانَ فِي يَدِهِ»

[حكم الألباني] : حسن

130.நபி (ஸல்) அவர்கள் (கைகளை முழங்கை உட்பட கழுவிய பின்னர்) கையில் எஞ்சியிருந்த தண்ணீரினால் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள் என ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன்

131-حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي حُجْرَيْ أُذُنَيْهِ»

[حكم الألباني] : حسن

131.நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது தனது இரு விரல்களையும் தம் இரு காதுகளின் துவாரங்களில் செலுத்தினார்கள் என ருபையி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன்

132-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، وَمُسَدَّدٌ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ لَيْثٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَاحِدَةً حَتَّى بَلَغَ الْقَذَالَ - وَهُوَ أَوَّلُ الْقَفَا، وَقَالَ مُسَدَّدٌ - مَسَحَ رَأْسَهُ مِنْ مُقَدَّمِهِ إِلَى مُؤَخَّرِهِ حَتَّى أَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِ أُذُنَيْهِ»، قَالَ مُسَدَّدٌ: فَحَدَّثْتُ بِهِ يَحْيَى فَأَنْكَرَهُ، قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت أَحْمَدَ، يَقُولُ: «إِنَّ ابْنَ عُيَيْنَةَ زَعَمُوا أَنَّهُ كَانَ يُنْكِرُهُ، وَيَقُولُ إِيشْ هَذَا طَلْحَةُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ»

[حكم الألباني] : ضعيف

132.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உலூவில்) மஸஹ் செய்யும் போது கைகள் பிடரியின் ஆரம்பப் பகுதியை அடையும் வரை ஒரு தடவை தலைக்கு மஸஹ் செய்யக் கண்டேன் என தல்ஹா பின் முஸர்ரிஃப் அவர்கள் தமது பாட்டனாரிடமிருந்து தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்.

இந்த ஹதீஸை முஸத்தத் அவர்கள் அறிவிக்கும் போது 'அவர்கள் தன் தலைக்கு அதன் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை மஸஹ் செய்து முடித்து இறுதியில் தன் கைகளை இரு காதுகளின் கீழ்புறமாக வெளிக்கொணர்ந்தனர்' என அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை நான் யஹ்யா பின் ஸயீது அல்கத்தான் அவர்களிடம் எடுத்துரைத்த போது இதை அவர்கள் நிராகரிக்கத்தக்கது (முன்கரான ஹதீஸ்) என்று கூறிவிட்டார்கள் எனவும் முஸத்தத் தெரிவிக்கிறார்.

இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்: இமாம் சுஃப்யான் பின் உயைனா அவர்கள் இதை நிராகரிக்கத் தக்கது என்று கூறியதாக ஹதீஸ்களை வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்றும் தல்ஹா அவர்கள் தமது தந்தை வாயிலாக பாட்டனார் மூலம் அறிவிக்கின்ற இத்தொடரை இது ஒரு அறிவிப்புத் தொடரே இல்லை என்று விமர்சிப்பதாகவும் இமாம் அஹ்மது பின் ஹன்பல் கூறக் கேட்டேன்.

தரம் : ளயீப்

133-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ [ص: 33] مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ - فَذَكَرَ الْحَدِيثَ - كُلَّهُ ثَلَاثًا ثَلَاثًا»، قَالَ: «وَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ مَسْحَةً وَاحِدَةً»

[حكم الألباني] : ضعيف جدا

133.உலூச் செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று முறை கழுவி தலைக்கும் இருகாதுகளுக்கும் ஒரே தடவை மஸஹ் செய்யக் கண்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

தரம் : ளயீப்

134-حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، وَذَكَرَ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ الْمَأْقَيْنِ»، قَالَ: وَقَالَ: «الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ»، قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ: يَقُولُهَا: أَبُو أُمَامَةَ، قَالَ قُتَيْبَةُ: قَالَ حَمَّادٌ: لَا أَدْرِي هُوَ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مِنْ أَبِي أُمَامَةَ - يَعْنِي قِصَّةَ الْأُذُنَيْنِ - قَالَ قُتَيْبَةُ: عَنْ سِنَانٍ أَبِي رَبِيعَةَ، قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ ابْنُ رَبِيعَةَ كُنْيَتُهُ أَبُو رَبِيعَةَ

[حكم الألباني] : ضعيف

134.அபூஉமாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உலூவின் முறையை விவரிக்கும் போது 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இருகண்களின் குழிகளையும் தேய்த்துக் கழுவுவார்கள்' என்று கூறிவிட்டு, 'இருகாதுகளும் தலையின் ஒரு பகுதி தான்' என்றும் கூறினார்கள் என அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(இருகாதுகளும் தலையின் ஒரு பகுதியே என்ற) இந்த கருத்தை அபூஉமாமா (ரலி) அவர்கள் தான் கூறுகிறார்கள் என சுலைமான் பின் ஹர்ப் அறிவிக்கிறார்.


'இரு காதுகளும் தலையின் ஒரு பகுதியே' என்ற சொல் நபி (ஸல்) அவர்கள் கூறியதா? அல்லது அபூஉமாமா (ரலி) கூறியதா? என்ற விபரத்தை நான் அறியேன் என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாத் குறிப்பிடுவதாக குதைபா தெரிவிக்கின்றார்.

தரம் : ளயீப்

No comments:

Post a Comment