·
உயிர்னங்கள் தம் கடமையை நிறைவேற்ற அவைகளுக்கு
வாய்ப்பளித்தல்
இவ்வுலகில் வாழும் எந்தவொரு சிருஷ்டியும் தன் கடமையை நிறைவேற்ற
முடியாதவாறு அவை கடும் கஷ்டங்களுக்கு உட்படுத்தவும், தடுக்கப்படவும் இல்லை. மூஸா
(அலை) அவர்களிடம் பிர்அவ்ன் விசாரனை செய்த போது மூஸா (அலை) அவர் முன் வைத்த
ஆதாரங்களிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம். இதனை அல்லாஹ் இவ்வாறு
குறிப்பிடுகிறான்.
قَالَ
فَمَن رَّبُّكُمَا يَا مُوسَىٰ ﴿٤٩﴾ قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَىٰ كُلَّ شَيْءٍ
خَلْقَهُ ثُمَّ هَدَىٰ ﴿٥٠طه﴾
“அவன் மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?” என்றான் அதற்கு மூஸா
“எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவைகளைப்
பயன்படுத்தும்) வழியையும் அறிவித்தானோ அவன்தான்
எங்கள் இறைவன்” என்றார்” (20/49,50)
அதாவது நமது இறைவனோ எல்லா சிருற்டிகளையும் படைத்து
அவைகளுக்கு பருத்த, சிறிய, நடுத்தரமான உடலையும், அவற்றுக்குத் தேவையான
பண்புகளையும் கொடுத்து அவற்றைப்
பொருத்தமான வடிவில் உண்டாக்கியவன். பின்னர் ஒவ்வொரு சிருஷ்டியையும் என்ன
நோக்கத்திற்காக அவன் படைத்தானோ அதன் வழியையும் அவற்றுக்குக் காட்டித் தந்தான்,
அல்லாஹ்வின் இந்த வழிகாட்டலோ அத்தாட்சிகள் மூலமும், ‘இல்ஹாம்’ எனும் உள்ளுணர்வு
மூலமும் வழங்கப்பட்டதாகும். பூரணமான இந்த வழிகாட்டல், எல்லா சிருஷ்டிகளுக்கும்
பொதுவானது. எனவே இது எல்லா சிருஷ்டிகளிடமும் இருக்கின்ற படியால் படைப்பின் மூலம்
கிடைக்க வேண்டிய பயனை அவை அடைந்து கொள்வும், அதன் தீமைகளைத் தடுத்துக் கொள்ளவும்
அவை முயலுகின்றன. இத்தகைய வழிகாட்டலை விலங்குகளுக்கும் அல்லாஹ்
வழங்கியிருக்கிறான். அதன் மூலம் அவை தமக்குப் பயனுள்ளதை எடுத்து தீங்கு
விளைவிப்பதைத் தவிர்த்து தம் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. அல்லாஹ்
இவ்வாறு கூறுகிறான்:
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ
ۖ (سجدة\7)
“அவனே
ஒவ்வொரு பொருளையும் அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான்” சூரா ஸஜதா 7
எனவே எல்லா படைப்புக்களையும்
படைத்து அவற்றுக்கு மிக்க நல்ல தோற்றத்தையும் கொடுத்து அவை தம் நலன்களை அடைந்து
கொள்ள ஏற்ற வழியையும் எவன் வழங்கினானோ அவன்தான் நிஜமான இறைவன். அவன்தான் அல்லாஹ்.
உலகில் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவையான அனைத்தையும் அவன் தான் வழங்கினான். மேலும்
அவற்றிலிருந்து பயன் பெறும் வழியையும் அவற்றுக்குக் காண்பித்தான். மேலும் ஒவ்வொரு
இணத்திற்கும் பொருத்தமான கோலத்தையும், தோற்றத்தையும் அவனே அளித்தான் என்பதில் என்ன
சந்தேகம்! இன்னும் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொருத்தமான வடிவங்களை வழங்கியவனும்
அவனேதான். மேலும் ஒவ்வொரு உருப்பிலிருந்தும் உரிய பயனை அடையும் பொருட்டு
அவற்றுக்கு பொருத்தமான வடிவத்தையும் அவனே கொடுத்தான். இவை அனைத்திலும் அவன்தான்
சகலருக்குமான மிக மேலான இறைவன், அவனையன்றி வணக்கத்திற்குத் தகுதியான ஒன்றும் இல்லை
என்பதற்குப் பலமான அத்தாட்சிகள் இருக்கின்றன. ஆகையால் அத்தகைய இறைவனை நிராகரிப்பது
மிகப் பிரமாண்டமான படைப்புகளின் இருப்பை நிராகரிப்பதைப் போலாகும். அப்படியானால்
அது அகங்காரத்தினதும், மகா பொய்யினதும் விளைவே.. ஒரு கவிஞன் இவ்வாறு கூறுகின்றார்:
وَفِيْ كُلِّ شَيْئٍ لَهُ آيَةُ
تَدُلُّ عَلَى أنَّهُ الْوَاحِدُ
பொருள் யாவும் கூறுகிறதே.
அவன் ஒருவன். என்று
மேலும்
அதிகாரம் மற்றும் பரிபாலன விடயத்திலும் அல்லாஹ் ஏகனே. இவ்விடயத்திலும் அவனுக்கு
இணை எதுவமில்லை என்று இவ்விடயத்தில் ஏகத்துவத்தை உறுதி செய்ய வேண்டியதன் நோக்கம்
யாதெனில் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனையன்றி வேறு எதுவும்
வணக்கத்திற்குத் தகுதி பெறாது, என்பதை உறுதி படுத்துவதற்காகத்தான். இதுவே توحيد الألوهية தெய்வீகத்
தன்மையில் ஏகத்துவம் எனப்படுகிறது. எனவே توحيد الربوبية அதிகார, பரிபாலன
விடயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒருவன் توحيد الألوهية தெய்வீகத்
தன்மையில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது சரியான முறையில் அதனைக்
கடைப்பிடிக்காமல் இருந்தால் அவனை முஸ்லிம் என்றோ, ஏகத்துவ வாதி என்றோ கூற முடியாது. மாறாக அவன் ஒரு காபிர், இறை
நிராகரிப்பாலன் என்று கருதப்படுவான். இன்ஷா அல்லாஹ் இது பற்றி அடுத்து வரும்
அத்தியாயத்தில் பேசுவோம்.
No comments:
Post a Comment