كتاب الطهارة
அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்
(11) باب الاِسْتِبْرَاءِ مِنَ الْبَوْلِ
பாடம்: 11 சிறுநீரை துப்புரவு செய்தல்
20-حَدَّثَنَا
زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ،
حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ عَنْ طَاوُسٍ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: " إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا
يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ،
وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ
فَشَقَّهُ بِاثْنَيْنِ، ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا
وَاحِدًا، وَقَالَ: لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا "،
قَالَ هَنَّادٌ: يَسْتَتِرُ مَكَانَ يَسْتَنْزِهُ،
[حكم
الألباني] : صحيح
20.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
இரு கப்ருகளுக்கருகில் நடந்து செல்லும் போது (பின்வருமாறு) கூறினார்கள்: (இந்தக் கப்ரில்
உள்ள) இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் பெரும் பாவத்திற்காக வேதனை
செய்யப்பட வில்லை. (இரு கப்ருகளையும் சுட்டிக்காட்டி, இந்த கப்ரில் உள்ள) இவர், சிறுநீரிலிருந்து தன்னை துப்புரவாக்கிக் கொள்ளவில்லை. (இந்தக்
கப்ரில் உள்ள) இவரோ கோள் சொல்லிக் கொண்டலைந்தார் என்ற சொல்லிவிட்டு அவர்கள் ஒரு பசுமையான
பேரீத்த மட்டையைக் கொண்டுவரச் செய்து, அதை இரண்டாகப்பிளந்து இதிலொன்றும் அதிலொன்றும நட்டினார்கள். பிறகு இவ்விரண்டும்
காயாதவரை இவ்விருவருக்கும் வேதனை எளிதாக்கப்படலாம் என்று கூறினார்கள் என இப்னுஅப்பாஸ்
(ரளி) அறிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
21-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ
مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِمَعْنَاهُ، قَالَ: «كَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ» وَقَالَ أَبُو
مُعَاوِيَةَ: «يَسْتَنْزِهُ»
[حكم
الألباني] : صحيح
21.மேலுள்ள ஹதீஸின் நபி (ஸல்) அவர்களிடமிருந்து
இப்னு அப்பாஸ், முஜாஹித், மன்சூர், ஜரீர் வழியாக உஸ்மான் பின் அபீஷைபா
அறிவிக்கின்ற போது (சிறுநீரிலிருந்த தன்னை துப்புரவாக்கிக் கொள்ள வில்லை என்பதற்கு
பதிலாக) சிறுநீர் கழிக்கும் போது தான் (பிறர் பார்வையிலிருந்து) மறைந்து கொள்ளவில்லை
என்று அறிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
22-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ،
عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَنَةَ، قَالَ:
انْطَلَقْتُ أَنَا وَعَمْرُو بْنُ الْعَاصِ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ وَمَعَهُ دَرَقَةٌ ثُمَّ اسْتَتَرَ بِهَا، ثُمَّ
بَالَ، فَقُلْنَا: انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ،
فَسَمِعَ ذَلِكَ، فَقَالَ: «أَلَمْ تَعْلَمُوا مَا لَقِيَ صَاحِبُ بَنِي إِسْرَائِيلَ،
كَانُوا إِذَا أَصَابَهُمُ الْبَوْلُ قَطَعُوا مَا أَصَابَهُ الْبَوْلُ مِنْهُمْ،
فَنَهَاهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مَنْصُورٌ: عَنْ
أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، فِي هَذَا الْحَدِيثِ قَالَ: جِلْدِ
أَحَدِهِمْ، وَقَالَ عَاصِمٌ: عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «جَسَدِ أَحَدِهِمْ»
[حكم
الألباني] : صحيح
22.நானும், அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம்.
அப்போது அவர்கள் தோல் கேடயத்தோடு வெளிவந்து, பின்பு அதை மறைப்பாக்கிக் கொண்டு சிறுநீர் கழித்தார்கள். அவர்களைப்
பாருங்களேன்! ஒரு பெண் சிறுநீர் கழிப்பது போன்று (மறைத்துக் கொண்டு) சிறுநீர் கழிக்கின்றார்கள்!
என்று நாங்கள் பேசிக் கொண்டோம். இதை செவியுற்ற அவர்கள், பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒருவர் அடைந்த (அவல) நிலையை நீங்கள்
அறிய வில்லையா? பனூஇஸ்ராயீலர் தங்கள் மீது சிறுநீர்
பட்ட பகுதியை வெட்டிக் கொள்வார்கள்! அவர்களில் ஒருவர் (அவ்வாறு செய்ய வேண்டாம் என்று)
அவர்களை தடுத்தார். எனவே அவர் அவரது கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
அபூமூஸா வாயிலாக அபூவாயில் மூலம் மன்சூர்
அறிவிக்கும் போது, இந்த ஹதீஸில் (தங்கள் மீது சிறுநீர்
பட்டு விட்ட பகுதியை வெட்டிக் கொள்வார்கள் என்ற வாசகத்திற்கு பதிலாக தங்கள் தோலை வெட்டி
விடுவார்கள் என்றும், அபூமூஸா வாயிலாக அபூவாயில் மூலம் ஆஸிம்
அறிவிக்கும் போது 'தங்களின் உடம்பில்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
(12) باب الْبَوْلِ قَائِمًا
பாடம்: 12 நின்று சிறுநீர் கழிக்கலாமா?
23-حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ،
ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ وَهَذَا لَفْظُ حَفْصٍ عَنْ
سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: أَتَى رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ «فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا
بِمَاءٍ [ص: 7] فَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ:
قَالَ: فَذَهَبْتُ أَتَبَاعَدُ فَدَعَانِي حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبِهِ
[حكم
الألباني] : صحيح
23.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு
வரச் செய்து தனது இரு காலுறைகளிலும் தடவிக் கொண்டார்கள் என்று ஹுதைபா (ரளி) அறிவிக்கிறார்கள்.
(அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது) (சற்று விலகி) தூர சென்ற போது என்னை அவர்கள் அழைத்தார்கள்.
உடனே நான் அவர்களது குதிகால்களுக்கு பின்னால் வந்து விட்டேன் என்றும் ஹுதைபா அவாகள்
தெரிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
(13) باب
فِي الرَّجُلِ يَبُولُ بِاللَّيْلِ فِي الإِنَاءِ ثُمَّ يَضَعُهُ عِنْدَهُ
பாடம்: 13 பாத்திரத்தில் சிறுநீர் கழித்து அதை அருகில்
வைத்துக் கொள்வது.
24-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ
حُكَيْمَةَ بِنْتِ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، عَنْ أُمِّهَا، أَنَّهَا
قَالَتْ: «كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ
عِيدَانٍ تَحْتَ سَرِيرِهِ، يَبُولُ فِيهِ بِاللَّيْلِ»
[حكم
الألباني] : حسن صحيح
24.நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கு
அடியில் மரப்பாத்திரம் (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் இரவில் அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள்
என்று உமைமா பின்து ருகையா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன் ஸஹீஹ்
(14) باب
الْمَوَاضِعِ الَّتِي نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْبَوْلِ فِيهَا
பாடம்: 14 சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்ட இடங்கள்.
25-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ
بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا اللَّاعِنَيْنِ»، قَالُوا:
وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ
النَّاسِ أَوْ ظِلِّهِمْ»
[حكم
الألباني] : صحيح
25.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
'சாபத்திற்குரிய இரண்டை - தவிர்த்துக்
கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அப்போது தோழர்கள்
அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை?
என்து வினவியதும், 'மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில்
ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
தரம் : ஸஹீஹ்
26-حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ أَبُو حَفْصٍ،
وَحَدِيثُهُ أَتَمُّ أَنَّ سَعِيدَ بْنَ الْحَكَمِ، حَدَّثَهُمْ قَالَ:
أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ
أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اتَّقُوا الْمَلَاعِنَ
الثَّلَاثَةَ: الْبَرَازَ فِي الْمَوَارِدِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَالظِّلِّ "
[حكم
الألباني] : حسن
26.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். சாபத்திற்குரிய மூன்று காரியங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்துறைகள்,
நடுப்பாதை, நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மல, ஜலம் கழிப்பதாகும் என்று முஆத் பின் ஜபல் (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன்
[குறிப்பு : முஆத் பின்
ஜபல் (ரளி) வழியாக அறிவிக்கும் அபூஸயீத் அல்ஹிம்யரீ என்பார் முஅத் அவர்களிடம் எதையும்
செவியுற்றதில்லை என்று இப்னுல் கத்தான் கூறுவதாக ஹாபிள் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள்.
எனவே இது முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும். நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 4
பக்கம் 528 ]
(15) باب فِي الْبَوْلِ فِي الْمُسْتَحَمِّ
பாடம்: 15 குளியலறையில் சிறுநீர் கழித்தல்.
27-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالَا:
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَحْمَدُ: حَدَّثَنَا مَعْمَرٌ، أَخْبَرَنِي
أَشْعَثُ، وَقَالَ الْحَسَنُ: عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: " لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ ثُمَّ
يَغْتَسِلُ فِيهِ قَالَ أَحْمَدُ: ثُمَّ يَتَوَضَّأُ فِيهِ فَإِنَّ عَامَّةَ
الْوَسْوَاسِ مِنْهُ "
[حكم
الألباني] : صحيح دون قول: " قال أحمد …. الخ
27.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு
அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான்
பெருமளவு வஸ்வாஸ் (மனக்குழப்பம்) உள்ளது என்று அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரளி) அறிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
28-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ،
عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: لَقِيتُ
رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو
هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ، أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ»
[حكم
الألباني] : صحيح
28.நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா
(ரளி) அவர்கள் தோழமை கொண்டது தோழமை கொண்ட நபித்தோழர் ஒருவரை நான் சந்தித்தேன். எங்களில்
ஒருவர் தினந்தோறும் தலைவாரிக் கொள்வதையும் தான் குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதையும்
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர் என்று அவர் அறிவித்தார்
என ஹுமைத் அல் ஹிம்யரி என்பார் அறிவிக்கிறார்.
தரம் : ஸஹீஹ்
(16) باب
النَّهْىِ عَنِ الْبَوْلِ، فِي الْجُحْرِ
பாடம்: 16 பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை.
29-حَدَّثَنَا
عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ،
حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، «أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُبَالَ فِي الْجُحْرِ»،
قَالُوا لِقَتَادَةَ: مَا يُكْرَهُ مِنَ الْبَوْلِ فِي الْجُحْرِ؟ قَالَ: كَانَ
يُقَالُ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ
[حكم
الألباني] : ضعيف
29.பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை
நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள்.
பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன்
காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள்
வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார்.
தரம் : ளயீப்
(17) باب
مَا يَقُولُ الرَّجُلُ إِذَا خَرَجَ مِنَ الْخَلاَءِ
பாடம்: 17 கழிப்பிடத்திலிருந்து வெளியாகும் போது ஒருவர்
என்ன சொல்ல வேண்டும்.
30-حَدَّثَنَا
عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ،
حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ،
حَدَّثَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ»
[حكم
الألباني] : صحيح
30.நபி (ஸல் ) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து
வெளிவரும் போது 'குப்ரானக்' (இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறுவார்கள் என ஆயிஷா (ரளி)
அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(18) باب
كَرَاهِيَةِ مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ فِي الاِسْتِبْرَاءِ
பாடம்: 18 சுத்தம் செய்யும் போது வலக்கரத்தால் தொடுதல்
ஆகாது.
31-حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَا: حَدَّثَنَا
أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ
أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا
بَالَ أَحَدُكُمْ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَإِذَا أَتَى الْخَلَاءَ
فَلَا يَتَمَسَّحْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلَا يَشْرَبْ نَفَسًا وَاحِدًا»
[حكم
الألباني] : صحيح
31.உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்
போது, தனது வலது கையால் தனது மர்மஉறுப்பைத்
தொட வேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால், தனது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம்,
மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த
வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரளி)
அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
32-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي
زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ يَعْنِي الْإِفْرِيقِيَّ، عَنْ
عَاصِمٍ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، وَمَعْبَدٍ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ
الْخُزَاعِيِّ، قَالَ: حَدَّثَتْنِي حَفْصَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ
يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ، وَيَجْعَلُ شِمَالَهُ
لِمَا سِوَى ذَلِكَ»
[حكم
الألباني] : صحيح
32.நபி (ஸல்) அவர்கள் தனது வலது கையை
உண்ணுவதற்கும், குடிப்பதற்கும்,
உடை உடுத்துவதற்கும் பயன் படுத்துவார்கள். இதல்லாத காரியங்களுக்கு
தன்து இடது கையை பயன்படுத்துவார்கள் என்று ஹஃப்ஸா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
33-حَدَّثَنَا
أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي عِيسَى بْنُ يُونُسَ، عَنِ
ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَائِشَةَ،
قَالَتْ: «كَانَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْيُمْنَى لِطُهُورِهِ وَطَعَامِهِ، وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ،
وَمَا كَانَ مِنْ أَذًى»،
[حكم ] : ضعيف
33.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களது
வலது கை அவர்களது தூய்மைக்காகவும் (உலூவுக்காகவும்) அவர்களது உணவுக்காகவும் ஆயிற்று.
அவர்களது இடது கை (மல, ஜலம் கழித்தால்) சுத்தம் செய்வதற்காகவும்
அசுத்தமானவற்றிற்காகவும் ஆயிற்று என்று ஆயிஷா (ரளி) அறிவிக்கின்றார்கள்.
தரம் : ளயீப்
[குறிப்பு : இரண்டாம் அறிவிப்பாளரான இப்ராகீம் அவர்கள் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடமிருந்து
எதனையும் செவியுறவில்லை. எனவே இந்த ஹதீஸ் முன்கதிஃ என்ற வகையைச் சார்ந்தது ஆகும்.]
34-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بُزَيْعٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنِ
عَطَاءٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ
الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِمَعْنَاهُ
[حكم
الألباني] : صحيح
34.இதே கருத்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து
ஆயிஷா (ரளி) வழியாக வேறு அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.
தரம் : ஸஹீஹ்
(19) باب الاِسْتِتَارِ فِي الْخَلاَءِ
பாடம்: 19 மல, ஜலம் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளல்.
35-حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ
ثَوْرٍ، عَنِ الْحُصَيْنِ الْحُبْرَانِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ
اكْتَحَلَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقْدَ أَحْسَنَ، وَمَنْ لَا فَلَا حَرَجَ،
وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ، وَمَنْ لَا فَلَا
حَرَجَ، وَمَنْ أَكَلَ فَمَا تَخَلَّلَ فَلْيَلْفِظْ، وَمَا لَاكَ بِلِسَانِهِ
فَلْيَبْتَلِعْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ
أَتَى الْغَائِطَ فَلْيَسْتَتِرْ، فَإِنْ لَمْ يَجِدْ إِلَّا أَنْ يَجْمَعَ
كَثِيبًا مِنْ رَمْلٍ فَلْيَسْتَدْبِرْهُ، فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ
بِمَقَاعِدِ بَنِي آدَمَ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فَلَا حَرَجَ»،
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرٍ، قَالَ: حُصَيْنٌ
الْحِمْيَرِيُّ، وَرَوَاهُ عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، عَنْ ثَوْرٍ،
فَقَالَ أَبُو سَعِيدٍ الْخَيْرُ، قَالَ أَبُو دَاوُدَ: «أَبُو سَعِيدٍ الْخَيْرُ
هُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
[حكم
الألباني] : ضعيف
35.நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப்படையாக தீட்டுவாராக. எவர் (அவ்வாறு) செய்தாரோ
அவர் நல்லதை செய்தவராவார்! எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் கற்களை
வைத்து சுத்தம் செய்கின்றாரோ அவர் (கற்களை) ஒற்றைப் படையாக்குவாராக! எவர் (அவ்வாறு)
செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை.
எவரேனும் சாப்பிட்டதும் பற்குத்தினால் (அதை) துப்பி விடுவாராக! அவர் தனது நாவால் துளாவியதை
விழுங்கி விடுவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு)
செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் மலம் கழிக்கச் செலகிறாரோ அவர் மறைப்பை தேடிக்கொள்வாராக!
(திறந்த வெளியில்) மணல் மேட்டை குவித்து அதில் மறைந்திருப்பதை தவிர அவர் (வேறு வசதியை)
பெறவில்லை எனில் அதை பின்னோக்கி கொள்வாராக! எனெனில் ஷைத்தான் ஆதமுடைய மக்களின் பிட்டத்தில்
விளையாடுகிறான். எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதைச் செய்தார். எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ
அதனால் தவறில்லை. இதை அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம்: ளயீப்
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் ஹுஸைன் அல்ஹிம்யரீ என்பவர்
யாரெனத் தெரியாதவர். நூல் தக்ரீபுத் தஹ்தீப் (256 ص ) ]
(20) باب مَا يُنْهَى عَنْهُ أَنْ يُسْتَنْجَى
بِهِ
பாடம்: 20 சுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்டவை
36-حَدَّثَنَا
يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ،
حَدَّثَنَا الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ الْمِصْرِيَّ، عَنْ عَيَّاشِ
بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، أَنَّ شِيَيْمَ بْنَ بَيْتَانَ، أَخْبَرَهُ عَنْ
شَيْبَانَ الْقِتْبَانِيِّ، قَالَ: إِنَّ مَسْلَمَةَ بْنَ مُخَلَّدٍ اسْتَعْمَلَ
رُوَيْفِعَ بْنَ ثَابِتٍ [ص: 10] عَلَى أَسْفَلِ الْأَرْضِ، قَالَ شَيْبَانُ:
فَسِرْنَا مَعَهُ مِنْ كَوْمِ شَرِيكٍ، إِلَى عَلْقَمَاءَ أَوْ مِنْ عَلْقَمَاءَ
إِلَى كَوْمِ شَرِيكٍ يُرِيدُ عَلْقَامَ فَقَالَ رُوَيْفِعٌ: «إِنْ كَانَ
أَحَدُنَا فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْخُذُ
نِضْوَ أَخِيهِ عَلَى أَنَّ لَهُ النِّصْفَ مِمَّا يَغْنَمُ، وَلَنَا النِّصْفُ،
وَإِنْ كَانَ أَحَدُنَا لَيَطِيرُ لَهُ النَّصْلُ وَالرِّيشُ، وَلِلْآخَرِ
الْقِدْحُ» ثُمَّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «يَا رُوَيْفِعُ لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي،
فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا،
أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ، أَوْ عَظْمٍ فَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ بَرِيءٌ»،
[حكم
الألباني] : صحيح
36.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
(வாழும்) காலத்தில் எங்களில் ஒருவர் (போருக்குச் செல்லும் போது) தான் எதிரிகளிடமிருந்து
கைப்பற்றும் செல்வத்தில் உடமையாளருக்குப் பாதி, தமக்குப் பாதி என்ற நிபந்தனையின் அடிப்படையில்
தமது சகோதரனுடைய மெலிந்த ஒட்டகத்தை (வாடகைக்கு) எடுத்துக் செல்வார். (அதன்படி போரில்
ஒரு அம்பு கிடைத்தால்) எங்களில் ஒருவருக்கு அம்புத் தலையும் இறகுகளும், இன்னொருவருக்கு அம்பின் அடிப்பாகமும் கிடைக்கும்.
பிறகு ருவைபிஃ சொன்னார்கள்: எனக்கு
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ருவைபிஃ! எனக்குப்
பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம்! அப்போது நீ மக்களுக்கு, 'யார் தனது தாடிக்கு முடிச்சுப் போட்டுக் கொள்கிறாரோ அல்லது யார் கழுத்தில் கயிறு
அணிகின்றாரோ, அல்லது மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு சுத்தம் செய்கின்றாரோ நிச்சயமாக
அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி விட்டார்கள் என்று அறிவித்திடுக!
மஸ்லமா பின் முகல்லத் மூலம் எகிப்தின்
கீழ்பகுதிக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ருவைபிஃ பின் சாமித் (ரளி) அவர்கள் கூம்ஷரீக்
எனும் ஊரிலிருந்து அல்கமா என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அல்லது அல்கமா என்ற ஊரிலிருந்து
கூம்ஷரீக் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் இதை அறிவித்ததாக ஷைபான் குறிப்பிடுகிறார்.
தரம் : ஸஹீஹ்
37-حَدَّثَنَا
يَزِيدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنْ عَيَّاشٍ، أَنَّ شِيَيْمَ بْنَ
بَيْتَانَ، أَخْبَرَهُ بِهَذَا الْحَدِيثِ أَيْضًا، عَنْ أَبِي سَالِمٍ
الْجَيْشَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، يَذْكُرُ ذَلِكَ وَهُوَ
مَعَهُ مُرَابِطٌ بِحِصْنِ بَابِ أَلْيُونَ، قَالَ أَبُو دَاوُدَ: «حِصْنُ
أَلْيُونَ بِالْفِسْطَاطِ عَلَى جَبَلٍ»، قَالَ أَبُو دَاوُدَ: «وَهُوَ شَيْبَانُ
بْنُ أُمَيَّةَ يُكْنَى أَبَا حُذَيْفَةَ»
[حكم
الألباني] : صحيح
37.அப்துல்லாஹ் பின் அம்ர் (ரளி) அவர்களுடன்
அல்யூன் என்ற கோட்டை வாயிலைக் காத்துக் கொண்டிருக்கும் போது (மேற்கண்ட) இந்த ஹதீஸை
(தமக்கு) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரளி) அறிவித்ததாக அபூஸாலிம் அல் ஜுஷானி அறிவிக்கின்றார்.
அல்யூன் என்ற கோட்டை ஃபிஸ்தாஸ் என்ற
ஊரிலுள்ள மலையில் இருக்கிறது என இமாம் அபூதாவூது (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். ஷைபானில்கித்பானி
என்பவர் அபூஹுதைபா என அழைக்கப்படும் ஷையான் உமைய்யா ஆவார்.
தரம் : ஸஹீஹ்
38-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ،
حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ
سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَمَسَّحَ بِعَظْمٍ أَوْ بَعْرٍ»
[حكم
الألباني] : صحيح
38.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எலும்பு அல்லது விட்டையைக் கொண்டு சுத்தம் செய்வதை தடை செய்து விட்டார்கள் என ஜாபிர்
பின் அப்துல்லாஹ் (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
39-حَدَّثَنَا
حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ يَحْيَى
بْنِ أَبِي عَمْرٍو السَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِيِّ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَدِمَ وَفْدُ الْجِنِّ عَلَى رَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا مُحَمَّدُ: انْهَ
أُمَّتَكَ أَنْ يَسْتَنْجُوا بِعَظْمٍ أَوْ رَوْثَةٍ أَوْ حُمَمَةٍ، فَإِنَّ
اللَّهَ تَعَالَى جَعَلَ لَنَا فِيهَا رِزْقًا، قَالَ: «فَنَهَى رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»
[حكم
الألباني] : صحيح
39.ஜின் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம்
வருகையுற்று முஹம்மது (ஸல்) அவர்களே! எலும்பு அல்லது விட்டை அல்லது கரித்துண்டு ஆகியவற்றினால்
சுத்தம் செய்வதை விட்டும் உமது சமுதாயத்தினரை தடை செய்த விடுங்கள். ஏனெனில் அல்லாஹுத்
தஆலா அவற்றில் எங்களுக்கு உணவை அமைத்திருக்கிறான் என்று கூறினார்கள். எனவே நபி (ஸல்)
அவர்கள் தடை செய்துவிட்டார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
No comments:
Post a Comment