14. மலம் ஜலம் கழிப்பதின் ஒழுங்குகள்
மறைவான இடத்திற்கு செல்ல வேண்டும்
عَنِ
الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا
ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ
நபி ஸல் அவர்கள் கழிப்பிடத்திற்குச்
சென்றால் ( மக்களை விட்டும் ) மிகவும் தூரமாக உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா ( ரழி ) நூல் : அபூதாவூத் ( 01)
சிறு நீர் கழிக்கும் போது மறைக்காதவருக்கு கப்ரில்
தண்டனை உண்டு
عَنِ
ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ فَقَالَ
" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا
أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ
يَمْشِي بِالنَّمِيمَةِ ". ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا
نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً. قَالُوا يَا رَسُولَ اللَّهِ،
لِمَ فَعَلْتَ هَذَا قَالَ " لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ
يَيْبَسَا ". قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا وَكِيعٌ قَالَ
حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ " يَسْتَتِرُ
مِنْ بَوْلِهِ ".
நபி ஸல் அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து
சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக
( பாவத்திற்காக ) இவர்கள் வேதனை செய்யப்படவில்லை . அவ்விருவரில் ஒருவர் தாம் சிறு நீர்
கழிக்கும் போது மறைப்பதில்லை மற்றொருவர் கோள் செல்த்திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி ) நூல் : புஹாரி ( 218 )
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறை உறுப்புக்களைப்பார்க்கக்
கூடாது
حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي،
قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ
قَالَ " احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مِمَّا مَلَكَتْ
يَمِينُكَ " . فَقَالَ الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ قَالَ "
إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ " . قُلْتُ
وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا . قَالَ " فَاللَّهُ أَحَقُّ أَنْ
يُسْتَحْيَا مِنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَجَدُّ
بَهْزٍ اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ وَقَدْ رَوَى
الْجُرَيْرِيُّ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ وَالِدُ بَهْزٍ
எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் ? எவற்றை மறைக்காமல் இருக்கலாம்
? என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் உன் மனைவி உடன் அடிமை
பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புக்களை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள்
ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா ? என்று
கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக் கொள்ள
முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள்.
ஒரு மனிதர் தனிமையில் இருக்கும் போது ( மறைவுறுப்பை வெளிப்படுத்தலாமா ?) என்று
கேட்டேன் . அதற்கு நபியவர்கள் அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகத் தகுதியானவர் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : மு ஆவியா பின் ஹைதா ( ரழி ) நூல் : திர்மிதீ ( 2693 )
தரம் : ஹஸன்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ،
حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، قَالَ
أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ
الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "
لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى
عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ
وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ " .
ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய
மறும உறுப்பை பார்க்க வேண்டாம் .ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம்
. ஒரு பெண் மற்றொரு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரீ ( ரழி ) நூல் : முஸ்லிம் ( 565 )
கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ உட்காரக்
கூடாது
عَنْ
أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ
يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا ".
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “ உங்களில்
ஒருவர் மலம் ஜலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கக் கூடாது தமது முதுகுப் புறத்தால்
பின்னோக்கவும் கூடாது “
அறிவிப்பவர் : அபூ அய்யூப் ( ரழி ) நூல் : புஹாரி ( 144 )
மறைப்பு ( சுவர் ) இருந்தால் கிப்லாவை முன்னோக்குவதில்
தவறில்லை
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا
قَعَدْتَ عَلَى حَاجَتِكَ، فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ بَيْتَ
الْمَقْدِسِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا
عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى
لَبِنَتَيْنِ مُسْتَقْبِلاً بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ. وَقَالَ لَعَلَّكَ
مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ، فَقُلْتُ لاَ أَدْرِي وَاللَّهِ.
قَالَ مَالِكٌ يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ
وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ
நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால்
கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர்
சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன்.
அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக
மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 145 )
கழிப்பறைக்குள் நுழையும்
போது ஓத வேண்டிய துஆ
قَالَ
سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ
الْخَلاَءَ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ
وَالْخَبَائِثِ ". تَابَعَهُ ابْنُ عَرْعَرَةَ عَنْ شُعْبَةَ. وَقَالَ
غُنْدَرٌ عَنْ شُعْبَةَ إِذَا أَتَى الْخَلاَءَ. وَقَالَ مُوسَى عَنْ حَمَّادٍ
إِذَا دَخَلَ. وَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ إِذَا
أَرَادَ أَنْ يَدْخُلَ
கழிப்பிடத்திற்குச் சென்றபோது,( அல்லாஹும்ம இன்னீ அவூது
பிக மினல் குப்ஸி வல் கபாயிஸி ) 'இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 142 )
கழிவறைக்குள் ஸலாம் சொல்வதற்கும் , பதில் சொல்வதற்கும்
தடையுள்ளது
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، مَرَّ وَرَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ
நபி ஸல் அவர்கள் சிறு நீர் கழிக்கும் போது அவர்களைக்
கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார் . நபியவர்கள் அவருக்கு பதிலளிக்கவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரழி ) நூல் : முஸ்லிம் ( 606 )
கழிவறையிருந்து வெளியேறும் போது ஒத வேண்டியது
عَنْ
عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا
خَرَجَ مِنَ الْخَلاَءِ قَالَ " غُفْرَانَكَ "
நபி ஸல் அவர்கள் கழிப்பறையிருந்து வெளியேறும் போது ”குஃப்ரானக “ என்று
கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) நூல் : திர்மிதீ ( 7)
தரம் : ஸஹீஹ்
No comments:
Post a Comment