உணவு ஒரு இஸ்லாமியப் பார்வை ( தொடர்
கட்டுரை - பாகம் 3 )
பிஸ்மி சொல்லாத உண்னவில் ஷைத்தான் :
தனது வீட்டில் நுழையும்
ஒருவர் உள்ளே நுழையும் போதும் , தனது ( உணவை ) உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால்
ஷைத்தான் ( தன் சகாக்களிடம் இன்று இரவு ) உங்களுக்கு உணவும் இல்லை, தங்குமிடமும் இல்லை
எனக் கூறுவான்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى
الله عليه وسلم يَقُولُ " إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ
اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ
وَلاَ عَشَاءَ . وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ
الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ . وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ
طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ " .
ஒருவர் தன் வீட்டில் நுழையும்
போதும் உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறவில்லையென்றால் ( இன்று இரவு ) உங்களுக்கு
உணவும் தங்குமிடமும் கிடைத்து விட்டது எனக் கூறுவான் . என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் பின்
அப்தில்லாஹ் ( ரழி )
நூல்கள் : முஸ்லிம் (
3762 ) அபூதாவூத் ( 3273 ) இப்னு மாஜா ( 3877 ) அஹ்மத் ( 14202,15576 )
அல்லாஹ்வின் பெயர் கூறாமல்
உண்ணும் போது அந்த உணவின் முழு பயனையும் நம்மால் அடைந்து கொள்ள முடியாது . ஏனெனில்
அந்த உணவை நாம் மட்டும் உண்ணவில்லை அதில் ஷைத்தானும் நம்மோடு பங்கு போடுக் கொள்கிறான்.
மேலும் நம்மைக் கெடுக்கும் ஷைத்தானுக்கு நாமே உணவளிக்கும் மோசமான நிலையும் எற்பட்டு
விடுகிறது.
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் :
سنن الترمذي ت شاكر (4 / 288):
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا
فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ، فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ: بِسْمِ
اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ "
__________
[حكم الألباني] : صحيح
உங்களில் ஒருவர் உணவு உண்ணும்
போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லட்டும் , ஆரம்பத்தில் ( சொல்ல ) மறந்து விட்டால் “ பிஸ்மில்லாஹி
ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி “ என்று கூறட்டும் என நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (
ரழி )
நூல்கள் : திர்மிதீ (
1781 ) அபூதாவூத் ( 3275) இப்னு மாஜா ( 3255 ) அஹ்மத் ( 23954,24551,24895,25089 )
வலது கரத்தால் சாப்பிடுதல் :
صحيح مسلم (3 / 1598):
عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ
جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ
فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ
بِشِمَالِهِ»
உங்களில் ஒருவர் உண்ணும்
போது தனது வலக்கரத்தால் உண்ணட்டும் . குடிக்கும் போது வலக்கரத்தால் குடிக்கட்டும்
, ஏனெனில் ஷைத்தான் தனது இடது கரத்தால் சாப்பிடுகிறான் இடது கரத்தாலே குடிக்கிறான்
என அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்
( ரழி )
நூல்கள் : முஸ்லிம் (
3764 , 3765 ) திர்மிதீ ( 1721,1722 ) அபூதாவூத் ( 3283 ) அஹ்மத் (
4309,4654,5257,5583,5843,5908,6050)
No comments:
Post a Comment