Sunday, December 17, 2017

அடியார்கள் மீதான முதல் கடமை என்ன ?



கேள்வி : 03



அடியார்கள் மீதான  முதல் கடமை என்ன?

பதில் :

 அடியார்கள் மீதான முதல் கடமையையும், அடியார்கள் அழைக்கப் பட வேண்டிய முதல் விடயத்தையும் முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும்போது நபியவர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட செய்தி தெளிவு படுத்துகிறது. நபியவர்கள்  அவரை நோக்கி பின்வருமாறு குறிப்பிட்டார்கள் நீ தற்போது வேதம் கொடுக்கப் பட்டவர்களிடம் செல்லப் போகிறாய், ஆகவே அவர்களை வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மைக் கடவுள் இல்லை யெனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் எனவும்  ஏற்று சாட்சி சொல்வதன்  பால்  முதலில் அழைக்க வேண்டும்.[1]

எனவே அல்லாஹ்வை ஒருவனாக ஏற்று நபியவர்களை தூதர் என ஏற்று சான்று பகருவதும் தான் அடியார்களின் மீதுள்ள முதல் கடமையாகும்.
இவ்விரண்டு அடிப்படைகள்  மூலம் தான் எல்லா  வணக்கங்களும்  ஏற்றுக் கொள்ளப் படுவற்குரிய பின்வரும் இரு நிபந்தனைகளும் அமையப் பெறுகின்றன. அவைகளில் முதலாவது  அல்லாஹ் வுக்கென மாத்திரம் எந்த காரியத்தையும் மேற் கொள்ளல் எனும் இஹ்லாஸ் إخلاص  மனத்தூய்மை, இரண்டாவது செயல்கள் யாவும் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றியதாக இருத்தல் என்ற  முதாபஆ متابعة  போன்றனவாகும்.

ஆகவே அல்லாஹ்வை ஒருவனாக ஏற்று நபி ஸல் அவர்களை தூதுத்துவத்திற்கு சான்று பகர்ந்து ஏற்றுக் கொள்வதுதான் அடியார்களின் முதல் கடமை. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகமானது ஓரிறைக் கொள்கையின் முழுக் கருத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.


1. புஹாரி (1458) ஸஹீஹ்


No comments:

Post a Comment