முன்னுரை
உலகத்தார் யாவரையும்
பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் சொந்தம். மேலும் அல்லாஹ்வின்
அருளும் சாந்தியும், உண்மையாளரும், நம்பிகைக்குரியவருமான அல்லாஹ்வின் தூதரும் நமது
நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார், மற்றும் தோழர்கள்
மீதும் உண்டாவதாக.
ஏகத்துவ
ஞானம் பற்றிய இந்நூலை மிகுந்த கவணத்துடன் இலகுவான சொற்கள் மூலம், சுருக்கமாக எழுதியுள்ளேன்.
மேலும் இந்நூலில் அடங்கியிருக்கும் விடயங்கள் நமது மார்க்க மேதைகளான ஷைகுல்
இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இப்னுல் கையிம் (ரஹ்), முஹம்மத் இப்னு அப்துல்
வஹ்ஹாப் (ரஹ்) என்போரினதும், மற்றும் அவர்களின் சீடர்களினதும் நூல்களில் இருந்து
எடுத்துக் கொண்டவைகளாகும்.
மனிதன் மேற்
கொள்ளும் காரியம் சரியாகவும், அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும்
இருப்பதற்கு இஸ்லாமிய அகீதா- கோட்பாடுகள் பற்றிய அறிவைக் கற்பதும், அதனைக் கற்றுக்
கொடுப்பதும் மிகவும் அவசியம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக இஸ்லாமியக் கொள்கைக் கோட்பாடுகளை
விட்டு விலகிச் செல்லும் நாஸ்திகம், சூபித்துவம், துறவரம், மற்றும் ரஸூல் (ஸல்)
அவர்களின் வழிகாட்டலுக்குப் புறம்பான அநாச்சாரங்கள் என்பன மலிந்து போயுள்ள
இந்நாளில் இஸ்லாமிய அகீதாவின் பால் கவணம் செலுத்துவது மிகவும் கட்டாயக்
காரியமாகும். ஏனெனில் இஸ்லாத்தின் சரியான அகீதா எனும் ஆயுதம் ஏந்தாத முஸ்லிம்
பிரஜையைப் பொருத்த மட்டில் இவை ஆபத்தானவை என்பதில் சந்தேக மில்லை. எனவே இஸ்லாமிய
அகீதா-கோட்பாடுகளை அதன் அடிப்படை ஆதார நூல்களிலிருந்து பெற்று அதனை முஸ்லிம்
சமூகத்திற்குக் கற்றுக் கொடுப்பது மிக மிக அவசியம் என்ற முறையில் இந்நூலை நான்
முன் வைக்கின்றேன்..
وصلى
الله وسلم على نبينا محمد وآله وصحبه
(ஆசிரியர்)
No comments:
Post a Comment