ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - தொடர் 05
(صحيح لغيره)26-
وعن معاذ بن جبل عن رسول الله صلى الله عليه
وسلم قال:
ما من عبد يقوم في الدنيا مقام سمعة ورياء إلا
سمع الله به على رؤوس الخلائق يوم القيامة
رواه الطبراني بإسناد حسن
26.பிறர் புகழவும் , மெச்சவும் இவ்வுலகில் வணங்கும்
ஒருவரை அல்லாஹ் மறுமையில் தன்படைப்பின்ங்களிடத்தில் கேட்கச் செய்யாமல் இருப்பதில்லை
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் ( ரலி ) நூல் : தப்ரானீ(1031)
(حسن)27-
وعن ربيح بن عبد الرحمن بن أبي سعيد الخدري عن
أبيه عن جده قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر المسيح الدجال
فقال: ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال؟ فقلنا: بلى يا رسول الله
فقال: " الشرك الخفي أن يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل "
رواه ابن ماجه والبيهقي
27. நாங்கள் தஜ்ஜாலைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கும் போது எங்களிடம் நபி ( ஸல் ) அவர்கள் வந்தார்கள் ,” தஜ்ஜாலை விட என்னிடம் உங்கள்
விஷயத்தில் நான் அதிகம் அஞ்சும் ஒன்றைப்பற்றி உங்களிடம் அறிவிக்கட்டுமா ?” என்று நபி ஸல் கேட்டதும்
இறைத்தூதர் அவர்களே ! கூறுங்கள் என்றோம் .” ஒருவன் தொழுகிறான் பிறர் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காக தன் தொழுகையை அழகுறவும்
செய்கிறானே அத்தகையை சிறிய இணைவைத்தல் தான் நான் அதிகம் அஞ்சும் ஒன்று “ என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ ( ரலி ) நூல் : இப்னு மாஜா(4204) , பைஹகீ(6830)
(حسن)28-
وعن محمود بن لبيد قال: خرج النبي صلى الله عليه
وسلم فقال: يا أيها " الناس إياكم وشرك السرائر " قالوا يا رسول الله وما
شرك السرائر قال: " يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس
إليه فذلك شرك السرائر
"
رواه ابن خزيمة في صحيحه
28. மனிதர்களே ! சிறிய இணைவைத்தல்
பற்றி உங்களை எச்சரிக்கிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறியதும் இறைத்தூதர் அவர்களே
! சிறைய இணைவைத்தல் என்றால் என்ன ? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவர் தொழுகிறார் பிறமக்கள் தன்னைப் பார்த்து மெச்சிடவேண்டும்
என்பதற்காக முயற்சித்து தன் தொழுகையை அழகாக்குகிறார் இதுவே சிறிய இணைவைத்தலாகும் என்று
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹ்மூத் இப்னு லுபைத் ( ரலி ) நூல் : இப்னு குஸைமா (892)
(صحيح)29-
وعن محمود بن لبيد أن رسول الله صلى الله عليه
وسلم قال: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر
قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء
يقول الله عز وجل إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا
هل تجدون عندهم جزاء
رواه أحمد بإسناد جيد وابن أبي الدنيا والبيهقي
في الزهد وغيره
29.உங்களிடம் நான் அஞ்சுவதில்
அதிகம் அஞ்சுவது மிகச்சிறிய இணைவைத்தல் தான் என்று நபி ஸல் அவர்கள் கூறியதும்,இறைத்தூதர் அவர்களே ! சிறிய
இணைவைத்தல் என்றால் என்ன ?
என்று நபித் தோழர்கள் கேட்டனர். “ பிறர்மெச்ச செயல் படுவது தான் அது. மக்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கும்போதும்
அல்லாஹ் ( இவர்களை நோக்கி ) “ உலகில் எவர் பார்த்து மெச்சச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம்
கூலி கிடைக்குமா ?” என்று பாருங்கள் என்று
கூறுவான் என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஹ்மூத் இப்னு லுபைத் ( ரலி ) நூல்கள் : அஹ்மத்(23118) , பைஹகீ(6831),
(حسن)30-
وعن أبي سعيد بن أبي فضالة وكان من الصحابة قال
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
إذا جمع الله الأولين والآخرين ليوم القيامة
ليوم لا ريب فيه نادى مناد من كان أشرك في عمله لله أحدا فليطلب ثوابه من عنده فإن
الله أغنى الشركاء عن الشرك
رواه الترمذي في التفسير من جامعه وابن ماجه
وابن حبان في صحيحه والبيهقي
30.சந்தேகமே இல்லாத நாளான
மறுமை நாளில் அல்லாஹ் முந்தியவர்களையும் , பிந்தியவர்களையும் ஒன்று சேர்க்கும்போது அழைப்பாளர் ஒருவர் “ தன் செயலில் அல்லாஹ்வுக்கு
இணையாக அவனை ஆக்கியவன் தன் செயலுக்குரிய கூலியை அவனிடமே தேடட்டும். நிச்சயமாக அல்லாஹ்
இணைவைப்பாளர்களின் இணைவைத்தலை விடடும். தேவையற்றவன் என்று கூறுவார் என்று நபி ஸல் கூற
நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் இப்னு அபீ பழாழா ( ரலி ) நூல்கள் : திர்மிதீ(3154), இப்னுமாஜா(4203) , இப்னுஹிப்பான்(404), பைஹகீ(6817)
(صحيح)31-
وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم
قال:
قال الله عز وجل أنا أغنى الشركاء عن الشرك فمن
عمل لي عملا أشرك فيه غيري فأنا منه بريء وهو للذي أشرك
رواه ابن ماجه واللفظ له وابن خزيمة في صحيحه
والبيهقي ورواة ابن ماجه ثقات
31. நான் இணைவைப்பாளர்களில்
இணைவைத்தலைவிட்டும் தேவையற்றவன் ஒருவன் எனக்காக ஒரு செயலை செய்து அதில் நான் அல்லாஹ்
ஒருவனை இணைவைத்தால் நான் அவனை விட்டும் நீங்கிவிட்டேன் அவன் இணைவைத்தவனை சேர்ந்தவனாவான்
என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரலி ) நூல் : பைஹகீ(6815)
(صحيح)32-
وروى البيهقي عن يعلى بن شداد عن أبيه قال:
كنا نعد الرياء في زمن النبي صلى الله عليه وسلم
الشرك الأصغر
32. நபி ஸல் அவர்களின் காலத்தில்
நாங்கள் பிறர் மெச்ச செய்யும் செயலை சிறிய இணைவைத்தல் என்றே கருதினோம்.
அறிவிப்பவர் : ஷத்தாத் ( ரலி ) நூல்கள் : இப்னுமாஜா, இப்னு குஸைமா, பைஹகீ (6475)
33 - (حسن لغيره)
عن أبي علي رجل من بني كاهل قال:
خطبنا أبو موسى الأشعري فقال:
يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من
دبيب النمل فقام إليه عبد الله بن حزن وقيس بن المضارب فقال: والله لتخرجن مما قلت
أو لنأتين عمر مأذونا لنا أو غير مأذون فقال: بل أخرج مما قلت خطبنا رسول الله صلى
الله عليه وسلم ذات يوم فقال:
يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من
دبيب النمل
فقال له من شاء الله أن يقول وكيف نتقيه وهو
أخفى من دبيب النمل يا رسول الله قال قولوا اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه
ونستغفرك لما لا نعلمه
رواه أحمد والطبراني ورواته إلى أبي علي محتج
بهم في الصحيح
وأبو علي وثقه ابن حبان ولم أر أحدا جرحه
33. மனிதர்களே எறும்பு ஊர்வதைவிடவும்
இரகசியமான இணைவைத்தலை பயந்து கொள்ளுங்கள் என்று அபூ மூஸா அல் அஷ் அரீ ( ரலி ) அவர்கள்
எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது கூறினார்கள்.அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு ஹஸ்ன் ,கைஸ் இப்னுல் முழாரிப்
ஆகியோர் எழுந்து “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக
! நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும் அல்லது உமர் ( ரலி ) யிடம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நீங்கள் வந்தாக வேண்டும் என்றனர்.அதற்கவர் நான் கூறியதை நிரூபிக்கிறேன் எனக்கூறிவிட்டு
; எங்களிடம் ஒரு நாள் உரையாற்றும்போது
நபி ஸல் அவர்கள் “ மனிதர்களே ! எறும்பு ஊர்வதை
விட இரகசியமான இணைவைத்தலை அஞ்சுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே
! எறும்பு ஊர்வதைவிட இரகசியமான ஒன்றை எப்படி
அஞ்சமுடியும் ? என்று ஒருவர் கேட்டார்.” இறைவா ! எதையும் நாங்கள் அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறோம் “ நாங்கள் அறியாது உள்ளதை
செய்வது பற்றி உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று
நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அலி , நூல்கள் : அஹ்மத் (19108) தப்ரானீ
No comments:
Post a Comment