அத்தியாயம் : 10
كتاب الأذان
பாங்கு
(111)باب جَهْرِ
الإِمَامِ بِالتَّأْمِينِ
பாடம்
: 111
(சப்தமாக ஓதும் தொழுகையில்) இமாம் (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய
பின்) உரத்த குரலில் ஆமீன் கூறுவது.
وَقَالَ عَطَاءٌ آمِينَ دُعَاءٌ. أَمَّنَ ابْنُ
الزُّبَيْرِ وَمَنْ وَرَاءَهُ حَتَّى إِنَّ لِلْمَسْجِدِ لَلَجَّةً. وَكَانَ أَبُو
هُرَيْرَةَ يُنَادِي الإِمَامَ لاَ تَفُتْنِي بِآمِينَ.
وَقَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ لاَ يَدَعُهُ
وَيَحُضُّهُمْ، وَسَمِعْتُ مِنْهُ فِي ذَلِكَ خَيْرًا.
ஆமீன் என்பது பிரார்த்தனையாகும்
என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸுபைர்
(ரலி) அவர்களும் அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளிவாசலில் பேரொளி எழும் அளவுக்கு (உரத்த குரலில்) ஆமீன் கூறினர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
தலைமைத் தாங்கித் தொழுவிப்பவரை அழைத்து, ஆமீன் கூறும் வாய்ப்பை எனக்குத் தவறும்படி செய்து விடாதீர் என்று கூறுவார்கள்.
நாபிஃஉ (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள்
ஆமீன் கூறாமல் இருக்க மாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமுட்டுவார்கள். ஆமீன் கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக
அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
٧٨٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ،
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ
أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه
وسلم قَالَ " إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ
تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
". وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
يَقُولُ " آمِينَ ".
780 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன்
(அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள்.ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வாவனவர்கள்
ஆமீன் கூறுகின்ற (நேரத்)து டன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள்
மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (அவர்களின் மற்றோர் அறிவிப்பில்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
(112)باب فَضْلِ
التَّأْمِينِ
பாடம்
: 112
ஆமீன் கூறுவதன்
சிறப்பு.
٧٨١حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ
الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم قَالَ " إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ. وَقَالَتِ
الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ. فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى،
غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
781 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஆமீன்
என்று கூற, விண்ணுலகில் வானவர்களும் ஆமீன் கூற, ஆக இருசாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில்
அமைந்துவிட்டால் அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(113)باب جَهْرِ
الْمَأْمُومِ بِالتَّأْمِينِ
பாடம்
: 113
பின்பற்றித்
தொழுபவர் (மஃமூம்) ஆமீன் கூறுவது.
٧٨٢حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ
أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ " إِذَا قَالَ الإِمَامُ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ
الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ. فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ
الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ". تَابَعَهُ
مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه.
782 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)
என்று சொல்லுங்கள். ஏனெனில் எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற
(நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(114)باب إِذَا رَكَعَ
دُونَ الصَّفِّ
பாடம்
: 114
தொழுகை
வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டால்... (தொழுகை நிறைவேறுமா?)
٧٨٣حَدَّثَنَا مُوسَى
بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الأَعْلَمِ ـ وَهْوَ زِيَادٌ
ـ عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى
الله عليه وسلم وَهْوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ،
فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " زَادَكَ
اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ ".
783 அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் சென்று வரிசையில்
சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம்
தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக!
இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்
(115)باب إِتْمَامِ التَّكْبِيرِ
فِي الرُّكُوعِ
பாடம்
: 115
ருகூஉவின்
போது தக்பீரை முழுமையாகக் கூறுவது.
قَالَهُ ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ. فِيهِ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ.
இது குறித்து நபி (ஸல்)
அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மாலிக் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் அறிவித்துள்ள (818ஆவது) ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.
٧٨٤حَدَّثَنَا
إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ
أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ صَلَّى
مَعَ عَلِيٍّ ـ رضى الله عنه ـ بِالْبَصْرَةِ فَقَالَ ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ
صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ
أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ.
784 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பஸ்ரா நகரில் இம்ரான்
பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்த
பின் அலீ (ரலி) அவர்களைச் சுட்டிக் காட்டி) இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள்
தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார் என்று இம்ரான் (ரலி) அவர்கள்
கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் நிமிரும் போதும் தாழும் போதும் தக்பீர் கூறுவார்கள் என்றும்
குறிப்பிட்டார்கள்.
٧٨٥حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي
سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُصَلِّي بِهِمْ، فَيُكَبِّرُ
كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَفَ قَالَ إِنِّي لأَشْبَهُكُمْ صَلاَةً
بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
785 அபூசலமா (பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
மக்களுக்குத் தொழுவிக்கும் போது குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
தொழுகையை முடித்த பின், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போன்றே
தொழுவிக்கிறேன் என்று குறிப்பிடுவார்கள்.
(116)باب إِتْمَامِ
التَّكْبِيرِ فِي السُّجُودِ
பாடம்
: 116
சஜ்தாவின்போதும்
தக்பீரை முழுமையாகக் கூறுவது.
٧٨٦حَدَّثَنَا أَبُو
النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ
مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي
طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ،، فَكَانَ إِذَا سَجَدَ
كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ
كَبَّرَ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ
فَقَالَ قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ
قَالَ لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
786 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் இம்ரான் பின் ஹுஸைன்
(ரலி) அவர்களும் அலீ பின் அபீ தாலிப் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள்
சஜ்தா செய்யும் போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்
போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள்.
தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு,
இவர் எனக்கு முஹம்மத்
(ஸல்) அவர்களின் தொழுகையை நினைவூட்டினார் அல்லது முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத
முறைப்படி நமக்குத் தொழுவித்தார் என்று கூறினார்கள்.
٧٨٧حَدَّثَنَا عَمْرُو
بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ،
قَالَ رَأَيْتُ رَجُلاً عِنْدَ الْمَقَامِ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ
وَإِذَا قَامَ وَإِذَا وَضَعَ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ
قَالَ أَوَلَيْسَ تِلْكَ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ أُمَّ لَكَ.
787 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையானன
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இறையில்லம் கஅபா அருகிலுள்ள) மகாமு
இப்ராஹீம் அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர்
ஒவ்வொரு குனி விலும் நிமிர்விலும் எழும் போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். (விளக்கம்
கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்த போது
அவர்கள், தாயற்றுப்போவாய்! அது
நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை போன்று இல்லையா? என்று கூறினார்கள்.
(117)باب التَّكْبِيرِ إِذَا قَامَ مِنَ السُّجُودِ
பாடம்
: 117
சஜ்தாவிலிருந்து
எழும் போது தக்பீர் கூறுவது.
٧٨٨حَدَّثَنَا مُوسَى
بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ،
قَالَ صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ
تَكْبِيرَةً، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّهُ أَحْمَقُ. فَقَالَ ثَكِلَتْكَ
أُمُّكَ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم. وَقَالَ مُوسَى
حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا عِكْرِمَةُ.
788 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப்
பின்னால் (லுஹ்ர் தொழுகை)தொழுதேன். (அத் தொழுகையில்) அவர், இருபத்தி இரண்டு தக்பீர்கள்
கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், அவர் ஓர் அறிவில்லாதவர்
என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உன்தாய் உன்னை இழக்கட்டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்)
அவர்களின் வழிமுறைதான் என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
٧٨٩حَدَّثَنَا يَحْيَى
بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،
قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ
سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا
قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ،
ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لَمِنْ حَمِدَهُ. حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ
الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا لَكَ الْحَمْدُ ـ قَالَ
عَبْدُ اللَّهِ {بْنُ صَالِحٍ عَنِ اللَّيْثِ} وَلَكَ الْحَمْدُ ـ ثُمَّ
يُكَبِّرُ حِينَ يَهْوِي، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ
يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ
يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلاَةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا، وَيُكَبِّرُ حِينَ
يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الْجُلُوسِ.
789 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தொழுகைக்காகச் சென்றால் நிலையில் நின்று தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉச்
செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தமது முதுகை உயர்த்தும்
போது சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்)
என்று கூறுவார்கள். பிறகு நிலையில் நின்றவாறு ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே
உரியது) என்பார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர்
அறிவிப்பில், ரப்பனா வல(க்) கல் ஹம்து என்று இடம்பெற்றுள்ளது.-
பின்னர் (சஜ்தாவுக்காகக்)
குனியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போதும்
தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்.
பிறகு (அந்த சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு தொழுகையை
முடிக்கும் வரை தொழுகையின் எல்லா ரக்அத் களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து
(அத்தஹிய்யாத் முதல்) இருப்பை முடித்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
(118)باب وَضْعِ الأَكُفِّ عَلَى الرُّكَبِ فِي الرُّكُوعِ
பாடம்
: 118
ருகூஉவின்
போது உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைப்பது.
وَقَالَ أَبُو حُمَيْدٍ فِي أَصْحَابِهِ أَمْكَنَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ.
அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான்
அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே
(உரையாற்றுகையில்) நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்)கைகளை முழங்கால்கள்
மீது ஊன்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
٧٩٠حَدَّثَنَا أَبُو
الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ سَمِعْتُ
مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ
كَفَّىَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَىَّ، فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا
نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِيَنَا عَلَى
الرُّكَبِ.
790 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சஅத்
பின் அபீவக்காஸ் ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும்
கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை
அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம்.
பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.
(119)باب إِذَا لَمْ يُتِمَّ الرُّكُوعَ
பாடம்
: 119
ருகூவைப்
பூரணமாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் குற்றம்).
٧٩١حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ
زَيْدَ بْنَ وَهْبٍ، قَالَ رَأَى حُذَيْفَةُ رَجُلاً لاَ يُتِمُّ الرُّكُوعَ
وَالسُّجُودَ قَالَ مَا صَلَّيْتَ، وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الْفِطْرَةِ
الَّتِي فَطَرَ اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم.
791 ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் (முறைப்படி) முழுமையாக்காத ஒரு மனிதரை
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), நீர் தொழவே இல்லை (இந்த நிலையில்) நீர்
இறந்துவிட்டால் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு
மாற்றமானதிலேயே இறக்கிறீர் என்று கூறினார்கள்.
(120) بَابُ اسْتِوَاءِ الظَّهْرِ فِي الرُّكُوعِ
பாடம்
: 120
ருகூவில்
முதுகைச் சமமாக வைப்பது.
وَقَالَ أَبُو حُمَيْدٍ فِي أَصْحَابِهِ رَكَعَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ هَصَرَ ظَهْرَهُ.
அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான்
அஸ்ஸாஇதீ( ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்), நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள்.
பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக) சாய்த்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment