22.பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய
முறைகள்
பெற்றோரை சீ என்று கூட கூறக் கூடாது :
۞ وَقَضَىٰ
رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ
إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل
لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا (23)
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا
كَمَا رَبَّيَانِي صَغِيرًا (24)
"என்னைத் தவிர வேறு யாரையும்
வணங்காதீர்கள் ! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன்
கட்டளையிட்டுள்ளான்,
உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ,
இருவரில் ஒருவரோ முதுமையை அடை ந்து விட்டால்
அவ்விருவரை நோக்கி "சீ" எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டதே ! மரியாதை
யான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும்
தாழ்த்துவீராக !"சிறுவனாக இருக்கும் போது என்னை
இருவரும் பராமரித்தது போல் இறைவா !இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!" என்று
கேட்பீராக!
அல்குர் ஆன் 17 : 23-24
பெற்றோரைப் பேணுதல் :
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ
وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ
الْمَصِيرُ( 14)
மனிதனுக்கு அவனது பெற்றோரைக்
குறித்தும் வலியுறுத்தியுள்ளோம்.அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல்
பலவீனப்பட்டவளாக சுமந்தாள்.அவன் பாலரு ந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்,எனக்கும்,உனது பெற்றோருக்கும் நன்றி
செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு
அல்குர் ஆன் 31 : 14
சிரமத்துடன் பெற்று வளர்த்ததற்காக பெற்றோரைப் பேணவேண்டும்
وَوَصَّيْنَا
الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ
كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ
أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ
نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ
صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ
وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ(15 )
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு
மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள்.
அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.
அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும்
என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும்,
நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக!
எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான்
முஸ்லிம்களில்ஒருவன்'' என்று கூறுகிறான்.( 46:15 )
தொழுகைக்கு அடுத்த நற்செயல் பெற்றோரைப் பேணுவது தான் :
وَأَشَارَ إِلَى
دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ
الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ " الصَّلاَةُ عَلَى وَقْتِهَا
". قَالَ ثُمَّ أَىُّ قَالَ " ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ
". قَالَ ثُمَّ أَىُّ قَالَ " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ
". قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
நான் நபி (ஸல்) அவர்களிடம்
அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்க்கு மிகவும் நெருக்கமானது எது ?
என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
"தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?" என்று கூறினார்கள்."
அடுத்து எது?
அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன்,
அதற்கு " தாய் தந்தையருக்கு நன்மை புரிவது"
என்றார்கள்....(ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்
மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 527
நட்பு கொள்வதற்கு
முதல் தகுதியானவர்கள்
عَنْ أَبِي
هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي قَالَ
" أُمُّكَ ". قَالَ ثُمَّ مَنْ قَالَ " أُمُّكَ
". قَالَ ثُمَّ مَنْ قَالَ " أُمُّكَ ". قَالَ ثُمَّ
مَنْ قَالَ " ثُمَّ أَبُوكَ ". وَقَالَ ابْنُ شُبْرُمَةَ
وَيَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ مِثْلَهُ.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர்
வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில்
உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர்,
'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர்,
'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,
'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.( நூல் : புஹாரி 5971)
No comments:
Post a Comment