Friday, January 26, 2018

ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - தொடர் 06






2 - كتاب السنة
2 நபிவழி பற்றிய அத்தியாயம்

1 - الترغيب في اتباع الكتاب والسنة
1 குர் ஆன் , ஹதீஸை பின்பற்றுவதில் ஆர்வமூட்டல்


34 - (صحيح)
عن العرباض بن سارية رضي الله عنهـ قال:
وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا قال:
أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة
رواه أبو داود والترمذي وابن ماجه وابن حبان في صحيحه وقال الترمذي حديث حسن صحيح

34 நபி ஸல் அவர்கள் எங்களின் இதயங்கள் நடுங்கிட கண்கள் கண்ணீரைச்சிந்திடும் அளவுக்கு ஒரு உரை நிகழ்த்தினார்கள். இறைத்தூதர் அவர்களே ! எங்களுக்கு ( வஸிய்யத் செய்து ) உறுதி கேளுங்கள் என்று நாம் கூறினோம்.அப்போது அவர்கள் இறையச்சத்தையும் ஒரு அடிமை உங்களை ஏவினாலும் செவிமடுத்து கட்டுப்படுவதையும் உங்களிடம் உறுதி கேட்கிறேன். உங்களில் ஒருவர் கடுமையான குழப்பங்கள் நிறைந்த காலத்தை அடைந்தால் நீங்கள் என் வழிமுறையை நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையைப் பற்றிக் கொள்ளுங்கள் கடவாய் பற்களால் அதைப் பற்றிக் கொள்ளுங்கள் .புதிய செயல்களை உருவாக்குவதில் உங்களை எச்சரிக்கிறேன் ஒவ்வொரு புதிய செயல்களும் வழிகேடாகும் என்று நபி ஸல் கூறினார்கள்

அறிவிப்பவர் : இர்பாள் இப்னு ஸாரியா ( ரலி )
நூல்கள் : அபூதாவூத் ( 4607 ) திர்மிதீ ( 2676 ) இப்னுமாஜா , இப்னுஹிப்பான்


35 - (صحيح)
وعن أبي شريح الخزاعي قال:
خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال:
[أبشروا] أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قالوا بلى
قال إن هذا القرآن [سبب] طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا
رواه الطبراني في الكبير بإسناد جيد

35 நபி ஸல் அவர்கள் எங்களிடம் வந்து அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை என்றும் , நான் இறைத்தூதர் என்றும் சான்று பகரவில்லையா ?” என்று கேட்டதற்கு ஆம் பகர்கிறோம் என நபித்தோழர்கள் கூறினர் நிச்சயமாக இந்த குர் ஆன் அதன் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலும் அதன் மறுபகுதி உங்களின் கையில் உள்ளது இதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் அதன் பிறகு எக்காலமும் வழிகெடவோ அழிந்து விடவோ மாட்டீர்கள் என்று நபி ஸல் கூறினார்கள் .

அறிவிப்பவர் : அபூ ஷுரைஹ் ( ரலி ) நூல் : தப்ரானீ (483 )



36 - (صحيح)
وعنه أيضا [يعني ابن عباس] :
أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس في حجة الوداع فقال إن الشيطان قد يئس أن يعبد بأرضكم ولكن رضي أن يطاع فيما سوى ذلك مما تحاقرون من أعمالكم فاحذروا إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه الحديث
رواه الحاكم وقال:
صحيح الإسناد احتج البخاري بعكرمة واحتج مسلم بأبي أويس وله أصل في الصحيح

36. நிச்சயமாக ஷைத்தான் உங்களின் பூமியில் ( மக்காவில் ) தன்னை வணங்கப்படுவதில் நிராசையற்று விட்டான் .எனினும் இது அல்லாத சாதாரணமான நீங்கள் கருதும் உங்களின் செயல்களில் அவனுக்கு நீங்கள் கட்டுப்படுவதில் திருப்தி அடைகிறான் எச்சரிக்கையாக இருங்கள் .எதை நீங்கள் உறுதியாக பற்றிப் படித்தால் எக்காலமும் வழிகெட மாட்டீர்களோ அதை உங்களிடையே நான் விட்டுச் செல்கிறேன் ( அவை ) இறைவேதமும் அவனது நபியின் வழிமுறையுமாகும் என்று நபி ஸல் அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி ) நூல் : ஹாகிம் ( 289 )



37 - (صحيح موقوف)
وعن ابن مسعود رضي الله عنهـ قال:
الاقتصاد في السنة أحسن من الاجتهاد في البدعة
رواه الحاكم موقوفا وقال:
إسناده صحيح على شرطهما

37. “ பித் அத் விஷயத்தில் அதிகம் ஈடுபடுவரை விட , நபிவழியில் நடுத்தரமாக இருப்பது அழகியதாகும்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் ( ரலி ) நூல் : ஹாகிம் ( 323 )


38 - (صحيح)
وعن أبي أيوب الأنصاري (عن عوف بن مالك)
قال:
خرج علينا رسول الله صلى الله عليه وسلم وهو مرعوب فقال
أطيعوني ما كنت بين أظهركم وعليكم بكتاب الله أحلوا حلاله وحرموا حرامه "
رواه الطبراني في الكبير ورواته ثقات

38. நபி ஸல் அவர்கள் திடுக்குற்றவர்களாக எங்களிடையே வந்து உங்களிடையே நான் இருந்தபோது செய்தவற்றில் என்னை பின்பற்றுங்கள் .அல்லாஹ்வின் வேதத்தைப்பற்றிக் கொள்ளுங்கள் அது அனுமதித்ததை செய்யுங்கள் அது தடுத்தவற்றை தவிருங்கள் என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரீ ( ரலி )
நூல் : தப்ரானீ  ( 65 )


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: إِنَّ هَذَا الْقُرْآنَ شَافِعٌ مُشَفَّعٌ مَنِ اتَّبَعَهُ قَادَهُ إِلَى الْجَنَّةِ، وَمَنْ تَرَكَهُ أَوْ أَعْرَضَ عَنْهُ أَوْ كَلِمَةً نَحْوَهَا زُخَّ فِي قَفَاهُ إِلَى النَّارِ.
39. நிச்சயமாக இந்த குர் ஆன் பரிந்துரை செய்யக்கூடியதும் ஏற்கப்படக்கூடியதுமாகும் அதை பின்பற்றினால் அவரை அது சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் அதை ஒருவன் விட்டு விட்டால் அல்லது அதை புறக்கணித்தால் அவனை நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ( ரலி ) நூல் : தப்ரானீ ( 10450 )

مرفوعا من حديث جابر وإسناده جيد
40. மேற்கூறிய செய்தியே நபி ஸல் கூறியதாக ஜாபிர் ( ரலி ) அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment