அத்தியாயம் : 10
كتاب الأذان
பாங்கு
(131) بَابُ يَسْتَقْبِلُ بِأَطْرَافِ رِجْلَيْهِ الْقِبْلَةَ
பாடம்
: 131
சஜ்தாவின்
போது கால் விரல்களைக் கிப்லாவை நோக்கி வைப்பது.
قَالَهُ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு
செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(132)باب إِذَا لَمْ يُتِمَّ السُّجُودَ
பாடம்
: 132
சஜ்தாவை
பூரணமாக (நிதானத்துடன்) செய்யாவிட்டால் (ஏற்படும் கேடுகள்).
٨٠٨حَدَّثَنَا
الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي
وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ،
فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ
قَالَ ـ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
808 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (ஆற அமர முறைப்படி) முழுமையாக்காத
ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி)
அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், நீர் தொழவே இல்லை. (இந்த நிலையில்)
நீர் இறந்துவிட்டால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதிலேயே இறந்தவராவீர்
என்று கூறினார்கள்.
(133)باب السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ
பாடம்
: 133
ஏழு உறுப்புகள்
தரையில் படுமாறு சிரவணக்கம் (சஜ்தா) செய்தல்.
٨٠٩حَدَّثَنَا
قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ
طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ
يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا
الْجَبْهَةِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالرِّجْلَيْنِ.
809 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நெற்றி, இரு(உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புக்கள்
படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள்.
(சஜ்தாவில்) தலை முடியோ ஆடையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டார்கள்.
٨١٠حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ
طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ " أُمِرْنَا أَنْ نَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلاَ
نَكُفَّ ثَوْبًا وَلاَ شَعَرًا ".
810 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புக்கள் படுமாறு
சஜ்தாச் செய்யும்படி நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்; ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு)
பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨١١حَدَّثَنَا
آدَمُ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
يَزِيدَ الْخَطْمِيِّ، حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ ـ وَهْوَ غَيْرُ
كَذُوبٍ ـ قَالَ كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا
قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ
حَتَّى يَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَبْهَتَهُ عَلَى الأَرْضِ.
811 அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உண்மைக்குப் புறம்பாகப்
பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின் வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்
பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின்
புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்கு சென்று) நெற்றியைத்
தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தம் முதுகை வளைக்க மாட்டார்கள்.
(134)باب السُّجُودِ عَلَى الأَنْفِ
பாடம்
: 134
மூக்கு
தரையில் படுமாறு சஜ்தாச் செய்தல்.
٨١٢حَدَّثَنَا
مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ قَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ
أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ ـ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ،
وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ
وَالشَّعَرَ ".
812 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு(உள்ளங்)கைகள், இரு முழங் கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள்
படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்
போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள்-
தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்
என்றும் கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(135)باب السُّجُودِ عَلَى الأَنْفِ وَالسُّجُودِ عَلَى
الطِّينِ
பாடம்
: 135
களிமண்ணில்
சஜ்தாச் செய்யும் போதும் மூக்குத் தரையில் படுமாறு சஜ்தாச் செய்வது.
٨١٣حَدَّثَنَا
مُوسَى، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ
انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقُلْتُ أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى
النَّخْلِ نَتَحَدَّثْ فَخَرَجَ. فَقَالَ قُلْتُ حَدِّثْنِي مَا، سَمِعْتَ مِنَ
النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي لَيْلَةِ الْقَدْرِ. قَالَ اعْتَكَفَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ الأُوَلِ مِنْ رَمَضَانَ،
وَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ
أَمَامَكَ. فَاعْتَكَفَ الْعَشْرَ الأَوْسَطَ، فَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ
جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ. فَقَامَ النَّبِيُّ صلى
الله عليه وسلم خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ "
مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلْيَرْجِعْ، فَإِنِّي
أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ، وَإِنِّي نُسِّيتُهَا، وَإِنَّهَا فِي الْعَشْرِ
الأَوَاخِرِ فِي وِتْرٍ، وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ ".
وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ
شَيْئًا، فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا، فَصَلَّى بِنَا النَّبِيُّ صلى الله
عليه وسلم حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ.
813 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்களிடம் சென்று, எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக்கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக் கொண்டிருக்கலாமே!
என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், லைலத்துல் கத்ர் (எனும் கண்ணியமிக்க
இரவு பற்றி நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்றேன்.
அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும்
இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் தேடக் கூடிய (லைலத்துல் கத்ர்
ஆன)து உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது என்றார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள்
நடுப்பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம்.
அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர் வரும்
(நாட்களில் உள்ளது) என்று கூறினார்கள்.
ரமளான் இருபதாம் நாள்
காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு)
குறிப்பிட்டார்கள்:
யார் நபியுடன் இஃதிகாஃப்
இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர்
இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்ட்டுவிட்டேன்.
நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி
மண்ணில் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கூரை, பேரீச்ச மட்டையினால் வேயப்பட்டிருந்தது.
வானத்தில் (மழைக்கான அறிகுறி) எதையும் நாங்கள் காண வில்லை. (இவ்வாறிருக்க) திடீரென
ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண்
படிந்திருக்கக் கண்டேன்.
(136)باب عَقْدِ الثِّيَابِ وَشَدِّهَا
பாடம்
: 136
(தொழும் முன்) ஆடையை முடிச்சிட்டுக்
கொள்வதும், அதை இறுக்கமாகக் கட்டிக்
கொள்வதும்,
وَمَنْ ضَمَّ إِلَيْهِ ثَوْبَهُ إِذَا خَافَ أَنْ
تَنْكَشِفَ عَوْرَتُهُ.
(தொழுது கொண்டிருக்கும் போது ஆடை நழுவி) மறைக்க வேண்டிய உறுப்புக்கள் வெளியில் தெரிந்துவிடும்
என அஞ்சினால் தொழுகையிலேயே ஆடையை அணைத்துப் பிடித்துக்கொள் வதும்.
٨١٤حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ
سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ كَانَ النَّاسُ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صلى الله
عليه وسلم وَهُمْ عَاقِدُو أُزْرِهِمْ مِنَ الصِّغَرِ عَلَى رِقَابِهِمْ فَقِيلَ
لِلنِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ
جُلُوسًا.
814 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி ஸல் அவர்கள் காலத்து) மக்கள் தங்கள் கீழாடை சிறியதாக இருந்தால் அதைத் தம் பிடரிகள்
மீது முடிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், ஆண்கள் இருப்பில் நேராக அமராத வரை நீங்கள்
உங்கள் தலையை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் என பெண்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
(137)باب لاَ يَكُفُّ شَعَرًا
பாடம்
: 137
(சஜ்தாவின் போது தரையில்
படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது.
٨١٥حَدَّثَنَا
أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ وَهْوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ
عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ
النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ
يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ.
815 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புக்கள் படுமாறு
சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். தமது ஆடையையோ முடியோ
(தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டார்கள்.
(138)باب لاَ يَكُفُّ ثَوْبَهُ فِي الصَّلاَةِ
பாடம்
: 138
தொழும்
போது (தரையில் படாதவாறு) தமது ஆடையைப் பிடிக்கக் கூடாது.
٨١٦حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ
طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ " أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا
وَلاَ ثَوْبًا ".
816 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புக்கள் படுமாறு
சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு)
பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(139)باب التَّسْبِيحِ وَالدُّعَاءِ فِي السُّجُودِ
பாடம்
: 139
சஜ்தாவில்
துதிப்பதும் பிரார்த்திப்பதும்.
٨١٧حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي
مَنْصُورٌ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ
أَنَّهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ فِي
رُكُوعِهِ وَسُجُودِهِ " سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ،
اللَّهُمَّ اغْفِرْ لِي " يَتَأَوَّلُ الْقُرْآنَ.
817 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின்
(110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும்
முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும்
அதிகமாக சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஹ்ஃபிர்லீ (இறைவா! எங்கள் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம். இறைவா எனக்கு
மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.
(140)باب الْمُكْثِ بَيْنَ السَّجْدَتَيْنِ
பாடம்
: 140
இரு சஜ்தாக்களுக்கு
இடையே (இருப்பில் சிறிது நேரம்) நிலைகொள்வது.
٨١٨حَدَّثَنَا
أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ
أَبِي قِلاَبَةَ، أَنَّ مَالِكَ بْنَ الحُوَيْرِثِ، قَالَ لِأَصْحَابِهِ: أَلاَ
أُنَبِّئُكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ:
وَذَاكَ فِي غَيْرِ حِينِ صَلاَةٍ، فَقَامَ، ثُمَّ رَكَعَ فَكَبَّرَ، ثُمَّ رَفَعَ
رَأْسَهُ، فَقَامَ هُنَيَّةً، ثُمَّ سَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ هُنَيَّةً،
فَصَلَّى صَلاَةَ عَمْرِو بْنِ سَلِمَةَ شَيْخِنَا هَذَا، قَالَ أَيُّوبُ: كَانَ
يَفْعَلُ شَيْئًا لَمْ أَرَهُمْ يَفْعَلُونَهُ كَانَ يَقْعُدُ فِي الثَّالِثَةِ
وَالرَّابِعَةِ،
818 அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாலிக் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் தம் தோழர்களிடம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அது எந்தத் தொழுகையின்
நேரமாகவும் இருக்கவில்லை.-
அவர்கள் (நிலையில்) நின்றார்கள்.
பின்னர் தக்பீர் கூறியவாறு ருகூஉச் செய்தார்கள். பிறகு தம் தலையை உயர்த்திச் சிறிது
நேரம் (நிலை கொண்டு) நின்றார்கள். பின்னர் (முதல்) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை
உயர்த்தி சிறிது நேரம் (நிலை கொண்டு) இருந்தார்கள். (சுருங்கச் சொன்னால்) இதே நம்முடைய
இந்தப் பெரியவர் அம்ர் பின் சலமா (ரஹ்) அவர்கள் தொழுவது போன்றே மாலிக் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் தொழுது காட்டினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அ(ந்தப் பெரிய)வர் (தொழும்
போது) ஒரு முறையைக் கையாளுவார். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை என்னால் காணமுடியவில்லை.
அவர் மூன்றாவது ரக்அத்தில் அல்லது நான்காவது ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டே எழுபவராக
இருந்தார்.
٨١٩قَالَ:
فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقَمْنَا عِنْدَهُ،
فَقَالَ: «لَوْ رَجَعْتُمْ إِلَى أَهْلِيكُمْ صَلُّوا صَلاَةَ كَذَا، فِي حِينِ
كَذَا صَلُّوا صَلاَةَ كَذَا، فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ،
فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»
819 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இளைஞர்களான) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம்
தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும் போது) நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும்
இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்.
தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்)
பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்.
٨٢٠حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، مُحَمَّدُ
بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، عَنِ الْحَكَمِ،
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ
سُجُودُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرُكُوعُهُ، وَقُعُودُهُ بَيْنَ
السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ.
820 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, அவர்களுடைய இரு சஜ்தாக்களுக்கு இடையிலான
அமர்வு ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன.
٨٢١حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ،
عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ إِنِّي لاَ آلُو أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا
رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي بِنَا. قَالَ ثَابِتٌ كَانَ
أَنَسٌ يَصْنَعُ شَيْئًا لَمْ أَرَكُمْ تَصْنَعُونَهُ، كَانَ إِذَا رَفَعَ
رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ.
وَبَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ.
821 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது
போன்று நான் உங்களுக் குத் தொழுவிப்பதில் எந்தக் குறைவும் வைக்க மாட்டேன் என்று கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்த போது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால் அதை நீங்கள் கடைப்பிடிப்பதைக்
காணமுடியவில்லை. அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம் நிலை
கொண்டு) நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று ஒருவர் கூற இடமுண்டு. இரு சஜ்தாக்களுக்கு
இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் நிலை கொண்டிருப்பார்கள்). எந்த அளவிற்கென்றால் அனஸ்
(ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று ஒருவர் கூற இடமுண்டு.
(141)باب لاَ يَفْتَرِشُ ذِرَاعَيْهِ فِي السُّجُودِ
பாடம்
: 141
சஜ்தாவில்
கைகளைப் பரப்பி வைக்கலாகாது.
وَقَالَ أَبُو حُمَيْدٍ سَجَدَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ
قَابِضِهِمَا.
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்)
தமது கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தாச் செய்தார்கள்
என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) கூறியுள்ளார்கள்.
٨٢٢حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ
حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ
يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ ".
822 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக்
கையாளுங்கள். உங்களில் எவரும் நாய் பரப்பிவைப்பது போன்று தமது கைகளைப் பரப்பி வைக்கவேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(142)باب مَنِ اسْتَوَى قَاعِدًا فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ
ثُمَّ نَهَضَ
பாடம்
: 142
தொழுகையில்
ஒற்றைப் படையான ரக்அத்களை முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுவது.
٨٢٣حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا
خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ
الْحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم
يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى
يَسْتَوِيَ قَاعِدًا.
823 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுவதை
நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தம் தொழுகையின் ஒற்றைப் படையான ரக்அத்களின் போது
நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழ மாட்டார்கள்.
(143)باب كَيْفَ يَعْتَمِدُ عَلَى الأَرْضِ إِذَا قَامَ مِنَ
الرَّكْعَةِ
பாடம்
: 143
ஒரு ரக்அத்தை
முடித்து அடுத்த ரக்அத்திற்காக எழும் போது பூமியில் கைகளை ஊன்றி எழ வேண்டுமா?
٨٢٤حَدَّثَنَا
مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي
قِلاَبَةَ، قَالَ جَاءَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ فَصَلَّى بِنَا فِي
مَسْجِدِنَا هَذَا فَقَالَ إِنِّي لأُصَلِّي بِكُمْ، وَمَا أُرِيدُ الصَّلاَةَ،
وَلَكِنْ أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم
يُصَلِّي. قَالَ أَيُّوبُ فَقُلْتُ لأَبِي قِلاَبَةَ وَكَيْفَ كَانَتْ صَلاَتُهُ
قَالَ مِثْلَ صَلاَةِ شَيْخِنَا هَذَا ـ يَعْنِي عَمْرَو بْنَ سَلِمَةَ ـ قَالَ
أَيُّوبُ وَكَانَ ذَلِكَ الشَّيْخُ يُتِمُّ التَّكْبِيرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ
عَنِ السَّجْدَةِ الثَّانِيَةِ جَلَسَ وَاعْتَمَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ قَامَ.
824 அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவிலிருந்த) எங்களிடம் மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன்.
(கடமையானத்)தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக்கண்டேனோ
அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம் என்று கூறிவிட்டு எங்களுடைய
இப்பள்ளிவாசலில் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அய்யூப்
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்போது நான் அபூகிலாபா
(ரஹ்) அவர் களிடம், மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா
(ரஹ்) அவர்கள், இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலமா அவர்கள்-தொழுவது போன்றிருந்தது என்று பதிலளித்தார்கள்.
அய்யூப் (ரஹ்) அவர்கள்
தொடர்ந்து கூறினார்கள்:
அந்தப் பெரியவர் தக்பீரை
முழுமையாக்கு பவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக எழும்
போது அமர்ந்து விட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி எழுவார்.
(144)باب يُكَبِّرُ وَهْوَ يَنْهَضُ مِنَ السَّجْدَتَيْنِ
பாடம்
: 144
இரண்டாம்
சஜ்தாவிலிருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போது தக்பீர் கூறவேண்டும்.
وَكَانَ ابْنُ الزُّبَيْرِ يُكَبِّرُ فِي نَهْضَتِهِ.
இரண்டாம் சஜ்தாவிலிருந்து
எழும் போது அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள்.
٨٢٥حَدَّثَنَا
يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ
بْنِ الْحَارِثِ، قَالَ صَلَّى لَنَا أَبُو سَعِيدٍ فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ
رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ، وَحِينَ رَفَعَ، وَحِينَ قَامَ
مِنَ الرَّكْعَتَيْنِ وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
825 சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது
அவர்கள் சஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போதும் சஜ்தாச் செய்யும் போதும் (சஜ்தாவிலிருந்து
தமது தலையை) உயர்த்தும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர்
கூறினார்கள். (அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது) நபி (ஸல்) அவர்களை
இவ்வாறே நான் (தொழக்)கண்டேன் என்று கூறினார்கள்.
٨٢٦حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ
حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ صَلَّيْتُ أَنَا
وَعِمْرَانُ، صَلاَةً خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ فَكَانَ
إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ
الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا سَلَّمَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي فَقَالَ
لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ
لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
826 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதாலிப் (ரலி)
அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகையைத் தொழுதோம். அலீ (ரலி)
அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவிலிருந்து தலையை) உயர்த்தும்
போதும் தக்பீர் கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள்
சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்
கொண்டு, இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள்
தொழுதது போன்று தொழுவித்தார் அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின்
தொழுகையை எனக்கு நினைவூட்டினார் என்று கூறினார்கள்.
(145)باب سُنَّةِ الْجُلُوسِ فِي التَّشَهُّدِ
பாடம்
: 145
அத்தஹிய்யாத்
இருப்பில் அமரும் முறை.
وَكَانَتْ أُمُّ الدَّرْدَاءِ تَجْلِسُ فِي صَلاَتِهَا
جِلْسَةَ الرَّجُلِ، وَكَانَتْ فَقِيهَةً.
உம்முத் தர்தா அஸ்ஸுஃக்ரா
(ரஹ்) அவர்கள் தமது தொழுகையில் ஆண்கள் உட்காருவது போன்றே உட்காருவார்கள். அவர் மார்க்கச்
சட்டங்களை நன்கு விளங்கிய பெண்மணியாக இருந்தார்கள்.
٨٢٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ
الْقَاسِمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ
أَنَّهُ، كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَتَرَبَّعُ
فِي الصَّلاَةِ إِذَا جَلَسَ، فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ،
فَنَهَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَقَالَ إِنَّمَا سُنَّةُ الصَّلاَةِ أَنْ
تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى وَتَثْنِيَ الْيُسْرَى. فَقُلْتُ إِنَّكَ تَفْعَلُ
ذَلِكَ. فَقَالَ إِنَّ رِجْلَىَّ لاَ تَحْمِلاَنِي.
827 அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது சம்மணமிட்டு
உட்கார்வதை நான் பார்ப்பேன். ஆகவே நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக
இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு செய்யக்
கூடாதென என்தைத் தடுத்துவிட்டு, தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால் உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து (படுக்க) வைப்பதாகும்
என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் கால்கள் என்னைத் தாங்காது என்று
பதிலளித்தார்கள்.
٨٢٨حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدٍ،
عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ
عَطَاءٍ،. وَحَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، وَيَزِيدَ
بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ
بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ
النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرْنَا صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم
فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ
حِذَاءَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ
هَصَرَ ظَهْرَهُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ
مَكَانَهُ، فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ قَابِضِهِمَا،
وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ، فَإِذَا جَلَسَ فِي
الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى، وَإِذَا
جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الأُخْرَى
وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ. وَسَمِعَ اللَّيْثُ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ
وَيَزِيدُ مِنْ مُحَمَّدِ بْنِ حَلْحَلَةَ وَابْنُ حَلْحَلَةَ مِنَ ابْنِ
عَطَاءٍ. قَالَ أَبُو صَالِحٍ عَنِ اللَّيْثِ كُلُّ فَقَارٍ. وَقَالَ ابْنُ
الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي
حَبِيبٍ أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرٍو حَدَّثَهُ كُلُّ فَقَارٍ.
828 முஹம்மது பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபித்தோழர்கள் சிலருடன்
அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டோம்.
அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான்
பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும் போது தமது கைகளை தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள்.
ருகூஉ (குனிவு) செய்யும் போது தம் கைகளை முழங்கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள். பின்னர்
தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்த்தார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்
போது தம் ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து
நிற்பார்கள். சஜ்தாச் செய்யும் போது அவர்கள் தமது கைகளைப் பரப்பி வைக்கவு மாட்டார்கள்; அவற்றை விலாவுடன் ஒடுக்கி வைக்கவும்
மாட்டார்கள்; தம் கால்விரல் முனைகளை கிப்லாவை நோக்கி வைப்பார்கள்.
இரண்டாவது ரக்அத்தில்
(அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை நட்டு
வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது இடது காலை (குறுக்கு
வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம்
தரையில் படியுமாறு உட்காருவார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(146)باب مَنْ لَمْ يَرَ التَّشَهُّدَ الأَوَّلَ وَاجِبًا
لأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ
وَلَمْ يَرْجِعْ
பாடம்
: 146
நபி (ஸல்)
அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டு மீண்டும் உட்காரவில்லை. ஆகவே, முதலாம் அத்தஹிய்யாத் இருப்பு கட்டாயம் அல்ல.
٨٢٩حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ، مَوْلَى بَنِي عَبْدِ الْمُطَّلِبِ
ـ وَقَالَ مَرَّةً مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ـ أَنَّ عَبْدَ اللَّهِ
ابْنَ بُحَيْنَةَ ـ وَهْوَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَبْدِ
مَنَافٍ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمُ الظُّهْرَ فَقَامَ فِي
الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى
إِذَا قَضَى الصَّلاَةَ، وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، كَبَّرَ وَهْوَ
جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ.
829 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை
எங்களுக்கு லுஹ்ர் தொழுகைத் தொழுவித்துக் கொண்டிருந்த போது முந்திய இரு ரக்அத் முடிந்ததும்
(அத்தஹிய்யாத் இருப்பில்) உட்காரமலேயே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டனர்.
தொழுகையை முடிக்கும் தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக்
கொண்டிருந்த போது அமர்ந்தபடியே அவர்கள் தக்பீர் கூறினார்கள்; சலாம் கொடுப்பதற்கு முன் (மறதிக்காக)
இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள்.
(147)باب التَّشَهُّدِ فِي الأُولَى
பாடம்
: 147
முதல் அத்தஹிய்யாத் இருப்பு.
٨٣٠حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ،
عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ
صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَامَ وَعَلَيْهِ
جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهْوَ
جَالِسٌ.
830 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள்.
(முதலாம் அத்தஹிய்யாத்) இருப்பில் அமரவேண்டியதிருக்க, அவர்கள் அதில் அமராமலேயே எழுந்து விட்டார்கள்.
தொழுகையின் இறுதியை அடைந்ததும் (சலாமுக்கு முன்) உட்கார்ந்தபடியே (மறதிக்குரிய) இரு
சஜ்தாக்கள் செய்தார்கள்.
(148)باب التَّشَهُّدِ فِي الآخِرَةِ
பாடம்
: 148
கடைசி இருப்பில்
அத்தஹிய்யாத் ஓதுவது.
٨٣١حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ
قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه
وسلم قُلْنَا السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ
وَفُلاَنٍ. فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ
" إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَقُلِ
التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ
أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا
وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ. فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا
أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
".
831 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்
பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும் போது அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வஃபுலான் (ஜிப்ரீல் மீதும் மீக்காயீல் மீதும் சலாம் உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார்
மீதும் சலாம் உண்டாகட்டும்)
என்று கூறுபவர்களாக இருந்தோம்.
(தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, நிச்சயமாக அல்லாஹ்தான் ஸலாம் ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழு(கையின்
இருப்பில் இருக்கு)ம் போது,
அத்தஹிய்யாத்து லில்லாஹி
வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக் காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும்
வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ்
வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர்
மீதும் சலாம் உண்டாகட்டும் என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள
அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு
வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹுஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான்
உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக
இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்ன என்றும் கூறட்டும் என்றார்கள்.
(149)باب الدُّعَاءِ قَبْلَ السَّلاَمِ
பாடம்
: 149
சலாம் கொடுப்பதற்கு
முன் செய்ய வேண்டிய பிரார்த்தனை.
٨٣٢حَدَّثَنَا
أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ:
أَخْبَرَنَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ: اللَّهُمَّ إِنِّي
أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ
الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ،
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ " فَقَالَ لَهُ
قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ المَغْرَمِ، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ
إِذَا غَرِمَ، حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»
832 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின்
அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம!
இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம் இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து
உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம்
பாதுகப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.
இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்ன என்று
கூறுவார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப்
பாதுகாப்புத் தேட என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு)
மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.
٨٣٣وَعَنِ
الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: أَنَّ عَائِشَةَ
رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
833 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன்.
٨٣٤حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي
حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي
بَكْرٍ الصِّدِّيقِ ـ رضى الله عنه ـ. أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي. قَالَ " قُلِ
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ
إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ
أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ ".
834 அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர் களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள்
என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன்
கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.
ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர்
ரஹீம் இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை
மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது
கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்!
என்றார்கள்.
(150)باب مَا يُتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ بَعْدَ
التَّشَهُّدِ وَلَيْسَ بِوَاجِبٍ
பாடம்
: 150
அத்தஹிய்யாத்துக்குப்
பின் (சலாம் கொடுப் பதற்கு முன்) விரும்பிய பிரார்த்தனை செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அது கட்டாயம் கிடையாது.
٨٣٥حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ،
حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا إِذَا كُنَّا مَعَ
النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ قُلْنَا السَّلاَمُ عَلَى اللَّهِ
مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ. فَقَالَ النَّبِيُّ صلى
الله عليه وسلم " لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ. فَإِنَّ
اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ
وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ
وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ.
فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ
السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ
أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ
إِلَيْهِ فَيَدْعُو ".
835 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்
தொழுது கொண்டிருக்கும் போது அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான் (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம்
உண்டாகட்டும்) என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் ஸலாம் ஆக இருக்கிறான். மாறாக, (சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும்
வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ்வின்
அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர் மீதும்
சலாம் உண்டாகட்டும் எனக் கூறுங்கள். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள்
மீதும் சலாம் கூறியதாக அமையும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை
என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ்வின்
அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்றும் கூறட்டும் இதன் பிறகு உங்களுக்கு
பிடித்தமான பிரார்த்தனையை தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள்.
(151)باب مَنْ لَمْ يَمْسَحْ جَبْهَتَهُ وَأَنْفَهُ حَتَّى
صَلَّى
பாடம்
: 151
தொழுது
முடிக்கும்வரை நெற்றி, மூக்கு ஆகியவற்றில் படிந்தவற்றைத்
துடைக்காமலிருப்பது.
٨٣٦حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي
سَلَمَةَ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقَالَ رَأَيْتُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ حَتَّى رَأَيْتُ
أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ.
836 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ஈரமான களிமண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதை நான் கண்டேன். அவர்களது நெற்றில்
களிமண் படிந்திருந்ததையும் நான் கண்டேன்.
(152)باب التَّسْلِيمِ
பாடம்
: 152
(தொழுகை முடிவில்) சலாம்
கொடுப்பது.
٨٣٧حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا
الزُّهْرِيُّ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ ـ رضى الله
عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ قَامَ
النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَمَكَثَ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ.
قَالَ ابْنُ شِهَابٍ فَأُرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ أَنَّ مُكْثَهُ لِكَىْ
يَنْفُذَ النِّسَاءُ قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ مَنِ انْصَرَفَ مِنَ الْقَوْمِ.
837 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்)
அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப் பார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகை
யில், அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து
திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவ தற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச்
சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்
என்றார்கள்.
(153)باب يُسَلِّمُ حِينَ يُسَلِّمُ الإِمَامُ
பாடம்
: 153
இமாம் சலாம்
கொடுக்கும்போதே (பின்பற்றித் தொழுபவர்களும்) சலாம் கொடுப்பது.
وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
يَسْتَحِبُّ إِذَا سَلَّمَ الإِمَامُ أَنْ يُسَلِّمَ مَنْ خَلْفَهُ.
இமாம் சலாம் கொடுக்கும்போதே
(அவரைப் பின்பற்றி) பின்னால் தொழுவோரும் சலாம் கொடுப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள்
விரும்பக் கூடியவர்களாய் இருந்தார்கள்.
٨٣٨حَدَّثَنَا
حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا
مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عِتْبَانَ،
قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمْنَا حِينَ
سَلَّمَ.
838 இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்
தொழுவோம். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுக்கும் போது நாங்களும் சலாம் கொடுப்போம்.
(154)باب مَنْ لَمْ يَرَ رَدَّ السَّلاَمِ عَلَى الإِمَامِ
وَاكْتَفَى بِتَسْلِيمِ الصَّلاَةِ
பாடம்
: 154
இமாமுக்கு, பதில் சலாம் கூறாமல் தொழுகைக்காக மட்டும் சலாம் கொடுப்பது.
٨٣٩حَدَّثَنَا
عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ
الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، وَزَعَمَ أَنَّهُ:
«عَقَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَقَلَ مَجَّةً
مَجَّهَا مِنْ دَلْوٍ كَانَ فِي دَارِهِمْ»
839 மஹ்மூத் பின் ரபீஉ
(ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களை எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த வாளியொன்றிலிருந்து
நீர் அள்ளி ஒரு முறை உமிழ்ந்ததையும் எனக்கு நினைவிருக்கிறது.
٨٤٠قَالَ:
سَمِعْتُ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصارِيَّ، ثُمَّ أَحَدَ بَنِي سَالِمٍ، قَالَ:
كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بَنِي سَالِمٍ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَإِنَّ السُّيُولَ
تَحُولُ بَيْنِي وَبَيْنَ مَسْجِدِ قَوْمِي، فَلَوَدِدْتُ أَنَّكَ جِئْتَ،
فَصَلَّيْتَ فِي بَيْتِي مَكَانًا حَتَّى أَتَّخِذَهُ مَسْجِدًا، فَقَالَ:
«أَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ»، فَغَدَا عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ مَعَهُ بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ،
فَاسْتَأْذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ،
فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ [ص: 168] مِنْ
بَيْتِكَ؟»، فَأَشَارَ إِلَيْهِ مِنَ المَكَانِ الَّذِي أَحَبَّ أَنْ يُصَلِّيَ
فِيهِ، فَقَامَ، فَصَفَفْنَا خَلْفَهُ، ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ
840 பனூசாலிம் குலத்தாரும்
அன்சாரியுமான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் சமுதாயத்தாரான
பனூசாலிம் குலத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திவந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம்
சென்று, (அல்லாஹ்வின் தூதரே!) நான்
என் கண்பார்வையை இழந்துவருகிறேன். (மழைக் காலங்களில்) என(து இல்லத்து)க்கும் என் சமுதாய
மக்களின் பள்ளிவாசலுக்கும் குறுக்கே (உள்ள பள்ளத்தாக்கில்) தண்ணீர் ஓடுகிறது. (ஆகவே
என்னால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை.) எனவே, நீங்கள் வந்து, என் இல்லத்தில் (ஓர் இடத்தில்)
தொழவேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்
என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் (அவ்வாறே) செய்கிறேன்
என்று கூறினார்கள். மறுநாள் நண்பகலில் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்
அபூபக்ர் (ரலி) அவர்களும் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி
கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன் அவர்கள் உட்காரக் கூட இல்லை. (அதற்குள்), (இத்பானே!) உங்கள் வீட்டில்
எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர்கள்
(என் வீட்டில்) எந்த இடத்தில் தொழவேண்டும் என நான் விரும்பினேனோ அந்த இடத்தை அவர்களுக்குச்
சுட்டிக் காட்டினேன். (அந்த இடத்தில்) நபி (ஸல்) அவர்கள் (தொழ) நின்றார்கள். உடனே நாங்களும்
அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுகை முடியும் போது) அவர்கள் சலாம்
கொடுத்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்த போது நாங்களும் சலாம் கொடுத்தோம்.
(155)باب الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ
பாடம்
: 155
தொழுகைக்குப்
பின் இறைவனைப் போற்றித் துதிப்பது.
٨٤١حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا
ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ
عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ
رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ
كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ عَبَّاسٍ
كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ.
841 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் கடமையான (ஃபர்ள்)
தொழுகையை முடிக்கும் போது சப்தமாக (இறைவனைப் போற்றி) திக்ரு செய்யும் நடைமுறை நபி
(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. அவ்வாறு மக்கள் கூறக்கேட்டால் அவர்கள் தொழுகையை
முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.
٨٤٢حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، {عَنْ عَمْرٍو،}
قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ
كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم
بِالتَّكْبِيرِ.
842 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை
முடித்துவிட்டார்கள் என்பதை தக்பீரை வைத்து நான் அறிந்து கொள்வேன்.
٨٤٣حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ
اللَّهِ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه
ـ قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا ذَهَبَ
أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلاَ وَالنَّعِيمِ
الْمُقِيمِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ
فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا، وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ،
وَيَتَصَدَّقُونَ قَالَ " أَلاَ أُحَدِّثُكُمْ بِأَمْرٍ إِنْ أَخَذْتُمْ
بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ،
وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ، إِلاَّ مَنْ عَمِلَ
مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ، وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا
وَثَلاَثِينَ ". فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ
ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنُكَبِّرُ أَرْبَعًا
وَثَلاَثِينَ. فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ " تَقُولُ سُبْحَانَ اللَّهِ،
وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ
ثَلاَثًا وَثَلاَثِينَ ".
843 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்)
அவர்களிடம் வந்து, செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு
போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு
நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படி யான செல்வங்கள்
மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய
எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே) என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த
சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப்
பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ
அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால்
தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு
தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்)
கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக
கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்
என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன்.
நபியவர்கள், சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை
சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவைக் கூறியதாக அமையும் என்று பதிலளித்தார்கள்.
٨٤٤حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ
عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَمْلَى
عَلَىَّ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتَابٍ إِلَى مُعَاوِيَةَ أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ
مَكْتُوبَةٍ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ
الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ
مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا
الْجَدِّ مِنْكَ الْجَدُّ ". وَقَالَ شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ
بِهَذَا، وَعَنِ الْحَكَمِ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ وَرَّادٍ
بِهَذَا. وَقَالَ الْحَسَنُ الْجَدُّ غِنًى.
844 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா (ரலி) அவர்கள்
முஆவியா (ரலி) அவர்களுக்கு என்னை எழுதச் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கடமையான
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம!
லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன்.
அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும்
அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மிதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன்
இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. எச்செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம்
எந்தப் பயனுமளிக்க முடியாது.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள்
கூறுகின் றார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) அல்ஜத்எனும் சொற்சொடருக்கு செல்வம் என்று பொருள்.
(156)باب يَسْتَقْبِلُ الإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ
பாடம்
: 156
சலாம் கொடுத்ததும்
இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.
٨٤٥حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ
حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ كَانَ النَّبِيُّ
صلى الله عليه وسلم إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ.
845 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுவித்து
முடித்ததும் எங்களை நோக்கித் தமது முகத்தை நேராகத் திருப்பி (அமர்ந்து)விடுவார்கள்.
٨٤٦حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ
عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ
بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ
اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ " هَلْ
تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ ". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ
أَعْلَمُ. قَالَ " أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ،
فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ
بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا
فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ ".
846 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.அன்றிரவு மழை பெய்திருந்தது.
தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை
நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு
அறிந்தவர்கள் என்று கூறினர்.
அப்போது என்னை நம்பக்
கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர்.
அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன
இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
٨٤٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ، سَمِعَ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ
أَخَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ ذَاتَ لَيْلَةٍ إِلَى
شَطْرِ اللَّيْلِ ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَلَمَّا صَلَّى أَقْبَلَ عَلَيْنَا
بِوَجْهِهِ فَقَالَ " إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَرَقَدُوا،
وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ ".
847 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள்
எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். பிறகு (எங்களுக்கு) தொழுவித்துவிட்டு தம் முகத்தை
எங்களை நோக்கி நேராகத் திருப்பி (அமர்ந்து), மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர்.
நீங்கள் ஓர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை அத்தொழுகையிலேயே
உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்) என்று சொன்னார்கள்.
(157)باب مُكْثِ الإِمَامِ فِي مُصَلاَّهُ بَعْدَ السَّلاَمِ
பாடம்
: 157
சலாம் கொடுத்த
பின் இமாம் தொழுத இடத்திலேயே இருப்பது.
٨٤٨وَقَالَ
لَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ
عُمَرَ يُصَلِّي فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ الْفَرِيضَةَ. وَفَعَلَهُ
الْقَاسِمُ. وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ لاَ يَتَطَوَّعُ الإِمَامُ
فِي مَكَانِهِ. وَلَمْ يَصِحَّ.
848 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள்
கடமையான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (சுன்னத், நஃபில் தொழுகைகளைத்) தொழுவார்கள்.
(அபூபக்ர் ஸித்தீக் ரலி அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.
இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) அதே இடத்திலேயே உபரியானத் தொழுகைகளை தொழக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவித்த தாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.
٨٤٩حَدَّثَنَا
أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ،
عَنْ هِنْدٍ بِنْتِ الحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَلَّمَ يَمْكُثُ فِي مَكَانِهِ يَسِيرًا»
قَالَ ابْنُ شِهَابٍ: «فَنُرَى وَاللَّهُ أَعْلَمُ لِكَيْ يَنْفُذَ مَنْ
يَنْصَرِفُ مِنَ النِّسَاءِ»
849 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சலாம்
கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் (அமர்ந்து) இருப்பார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தொழுகையை முடித்தப் பெண்கள்
(முதலில்) சென்றுவிடட்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்து கொண்டிருந்தார்கள்ன
என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கறிந்தவன்.
٨٥٠وَقَالَ
ابْنُ أَبِي مَرْيَمَ: أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، قَالَ: أَخْبَرَنِي
جَعْفَرُ بْنُ رَبِيعَةَ: أَنَّ ابْنَ شِهَابٍ كَتَبَ إِلَيْهِ، قَالَ:
حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الحَارِثِ الفِرَاسِيَّةُ، عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَكَانَتْ مِنْ صَوَاحِبَاتِهَا -
قَالَتْ: «كَانَ يُسَلِّمُ، فَيَنْصَرِفُ النِّسَاءُ، فَيَدْخُلْنَ بُيُوتَهُنَّ
مِنْ قَبْلِ أَنْ يَنْصَرِفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
وَقَالَ ابْنُ وَهْبٍ: عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَتْنِي هِنْدُ
الفِرَاسِيَّةُ، وَقَالَ عُثْمَانُ بْنُ عُمَرَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ
الزُّهْرِيِّ، حَدَّثَتْنِي هِنْدُ الفِرَاسِيَّةُ، وَقَالَ الزُّبَيْدِيُّ:
أَخْبَرَنِي الزُّهْرِيُّ: أَنَّ هِنْدَ بِنْتَ الحَارِثِ القُرَشِيَّةَ
أَخْبَرَتْهُ - وَكَانَتْ تَحْتَ مَعْبَدِ بْنِ المِقْدَادِ، وَهُوَ حَلِيفُ بَنِي
زُهْرَةَ، وَكَانَتْ تَدْخُلُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ - وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَتْنِي هِنْدُ
القُرَشِيَّةُ، وَقَالَ ابْنُ أَبِي عَتِيقٍ عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ
الفِرَاسِيَّةِ، وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَهُ
عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ، حَدَّثَتْهُ عَنِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
850 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சலாம் கொடுப்பார்கள். அவர்கள் (தம் இல்லத்திற்கு) திரும்புவதற்கு முன் பெண்கள்
திரும்பிச் சென்று தம் இல்லங்களுக்குள் நுழைந்திருப்பார்கள். குறைந்த பட்சம் அவ்வளவு
நேரம் நபி (ஸல்) அவர்கள் வீற்றிருப்பார்கள்.
இன்னும் பல அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் சில வற்றில் இந்த ஹதீஸை உம்மு சலமா (ரலி)
அவர்களிடமிருந்து அறிவிப்பவர் ஹிந்து பின்த் அல்ஹாரிஸ் ஃபிராஸிய்யா என்றும் வேறு சில
அறிவிப்புகளில் ஹிந்து பின்த்தில் கர்ஷிய்யா என்றும் இன்னோர் அறிவிப்பில் குறைஷிப்
பெண்மணி என்றும் பலவாறாக வந்துள்ளது.
(158)باب مَنْ صَلَّى بِالنَّاسِ فَذَكَرَ حَاجَةً
فَتَخَطَّاهُمْ
பாடம்
: 158
தொழுகை
நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு
வந்தவுடன் இமாம் (அமராமல்) மக்களைக் கடந்து செல்வது.
٨٥١حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ
سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ، قَالَ
صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الْعَصْرَ
فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ
حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ،
فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ " ذَكَرْتُ شَيْئًا
مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ
".
851 உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப்
பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும்
மக்களைத் தாண்டிக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள்.
அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (திரும்பி)
வந்த போது தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்றிருப்பதைக் கண்டார்கள். எனவே, எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி
ஒன்று (தொழுது கொண்டி ருக்கும் போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகையில்
கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே நான் (சென்று)
அதைப் பங்கிட்டுவிடுமாறு பணித்(துவந்)தேன் என்று கூறினார்கள்.
(159)باب الاِنْفِتَالِ وَالاِنْصِرَافِ عَنِ الْيَمِينِ،
وَالشِّمَالِ
பாடம்
: 159
(தொழுது முடித்தபின் இமாம்)
வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும், திரும்பிச் செல்வதும்.
وَكَانَ أَنَسٌ يَنْفَتِلُ عَنْ يَمِينِهِ وَعَنْ
يَسَارِهِ، وَيَعِيبُ عَلَى مَنْ يَتَوَخَّى، أَوْ مَنْ يَعْمِدُ الاِنْفِتَالَ
عَنْ يَمِينِهِ.
அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது
முடித்த பின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப்பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள்.
வலப் பக்கம் திரும்புவதை மட்டுமே தேர்வு செய்வோரை அவர்கள் கண்டிப்பார்கள்.
٨٥٢حَدَّثَنَا
أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُمَارَةَ
بْنِ عُمَيْرٍ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لاَ يَجْعَلْ
أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاَتِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ
أَنْ لاَ يَنْصَرِفَ إِلاَّ عَنْ يَمِينِهِ، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله
عليه وسلم كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ.
852 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வலப் பக்கம் திரும்புவதே
கடமை என்று எண்ணிக்கொள்வதன் மூலம் உங்களில் எவரும் தம் தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும்
இடமளித்து விடவேண்டாம். நபி (ஸல்) அவர்கள் நான் பார்த்திருக்கிறேன். பலசமயங்களில் அவர்கள்
தம் இடப் பக்கமும் திரும்புவார்கள்.
(160)باب مَا جَاءَ فِي الثُّومِ النَّىِّ وَالْبَصَلِ
وَالْكُرَّاثِ
பாடம்
: 160
சமைக்கப்படாத
வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டுள்ளி (போன்ற வாடையுள்ளவற்றைச்) சாப்பிடுவது குறித்து வந்துள்ளவை
وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَكَلَ الثُّومَ أَوِ الْبَصَلَ مِنَ الْجُوعِ أَوْ غَيْرِهِ فَلاَ
يَقْرَبَنَّ مَسْجِدَنَا».
பசி காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ
வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச்
சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் எனும் நபி
மொழியும்.
٨٥٣حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي
نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه
وسلم قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ
ـ يَعْنِي الثُّومَ ـ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا ".
853 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போரின் போது நபி
(ஸல்) அவர்கள், இந்தச் செடியிலிருந்து -அதாவது வெள்ளைப்பூண்டுடைச் சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்கு
நெருங்கவேண்டாம் என்று கூறினார்கள்.
٨٥٤حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنَا
ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ
اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ مِنْ
هَذِهِ الشَّجَرَةِ ـ يُرِيدُ الثُّومَ ـ فَلاَ يَغْشَانَا فِي مَسَاجِدِنَا
". قُلْتُ مَا يَعْنِي بِهِ قَالَ مَا أُرَاهُ يَعْنِي إِلاَّ نِيئَهُ.
وَقَالَ مَخْلَدُ بْنُ يَزِيدَ عَنِ ابْنِ جُرَيْجٍ إِلاَّ نَتْنَهُ.
854 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு இந்தச் செடியிலிருந்து
சாப்பிட்டவர் நம் பள்ளிக்குள் வர வேண்டாம் என்று கூறினார்கள் என்றார்கள். அவர்களிடம் நான்,எந்த வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்ட
நபியவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சமைக்கப் படாத வெள்ளைப் பூண்டைக் கருத்தில்
கொண்டே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் இப்னு
ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் நெடிவீசும் பூண்டைக் கருத்தில் கொண்டே கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
٨٥٥حَدَّثَنَا
سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ
شِهَابٍ، زَعَمَ عَطَاءٌ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، زَعَمَ أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً
فَلْيَعْتَزِلْنَا ـ أَوْ قَالَ ـ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا، وَلْيَقْعُدْ فِي
بَيْتِهِ ". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِقِدْرٍ
فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا
فِيهَا مِنَ الْبُقُولِ فَقَالَ " قَرِّبُوهَا " إِلَى بَعْضِ
أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ " كُلْ
فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي ".
وَقَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ عَنِ ابْنِ وَهْبٍ أُتِيَ
بِبَدْرٍ. قَالَ ابْنُ وَهْبٍ يَعْنِي طَبَقًا فِيهِ خُضَرَاتٌ. وَلَمْ
يَذْكُرِ اللَّيْثُ وَأَبُو صَفْوَانَ عَنْ يُونُسَ قِصَّةَ الْقِدْرِ، فَلاَ
أَدْرِي هُوَ مِنْ قَوْلِ الزُّهْرِيِّ أَوْ فِي الْحَدِيثِ.
855 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர்
நம்மை விட்டும் விலகியிருக்கட்டும் அல்லது நம் பள்ளிவாசலை விட்டும் விலகியிருக்கட்டும் அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்)
தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும் என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
அவர்கள் கூறினார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் சில கீரைகள்
இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அதில் நெடிவீசக் கண்டார்கள். ஆகவே அவற்றைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத்
தம்முடனிருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அதைச் சாப்பிட்ட
அத்தோழரும் வெறுப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சாப்பிடுங்கள் ஏனெனில், நீங்கள் உரையாடாத சில (வானோ)ரிடம் நான்
உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிட வில்லை) என்று கூறினார்கள்.
அஹ்மது பின் சாலிஹ் (ரஹ்)
அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி
(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்)
அவர்கள் அறிவித்ததாகவும் பத்ர் என்பது கீரைகள் இருந்த தட்டையே குறிக்கும் என்று அதற்கு விளக்கம் கூறிய
தாகவும் இடம்பெற்றுள்ளது.
லைஸ் (ரஹ்) அவர்கள் தமது
அறிவிப்பில் பாத்திரம் சம்பந்தமான குறிப்பெதையும் கூறவில்லை ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின்
உரையா அல்லது நபி மொழியின் மூலத்திலேயே உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.
٨٥٦حَدَّثَنَا
أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ،
قَالَ سَأَلَ رَجُلٌ أَنَسًا مَا سَمِعْتَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فِي
الثُّومِ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ مِنْ
هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا، أَوْ لاَ يُصَلِّيَنَّ مَعَنَا ".
856 அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அனஸ் (ரலி)
அவர்களிடம், வெள்ளைப் பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்ன செவியேற்றுள்ளீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி)
அவர்கள், இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்)
சாப்பிட்டவர் நம்மை நெருங்க வேண்டாம் அல்லது நம்முடன் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என்றார்கள்.
(161)باب وُضُوءِ الصِّبْيَانِ
பாடம்
: 161
சிறுவர்கள்
அங்கசுத்தி (உளூ) செய்வது
وَمَتَى يَجِبُ عَلَيْهِمُ الْغَسْلُ وَالطُّهُورُ
وَحُضُورِهِمِ الْجَمَاعَةَ وَالْعِيدَيْنِ وَالْجَنَائِزَ وَصُفُوفِهِمْ.
குளியலும் உளூவும் அவர்களுக்கு
எப்பருவத்தில் கடமையாகும் என்பதும், கூட்டுத் தொழுகை (ஜமாஅத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்து கொள்வதும், அவர்கள் தொழுகை வரிசை யில் (மற்றவர்களுடன்)
நிற்பதும்.
٨٥٧حَدَّثَنَا
ابْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ
سَمِعْتُ سُلَيْمَانَ الشَّيْبَانِيَّ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ
أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ
مَنْبُوذٍ، فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ. فَقُلْتُ يَا أَبَا عَمْرٍو مَنْ
حَدَّثَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ.
857 சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மையவாடியின்)
ஓரத்திலிருந்த ஒரு அடக்கக்குழி (கப்று)அருகே சென்று மக்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்
தொழுகை) தொழுவித்தார்கள். மக்கள் அந்த அடக்கக்குழி அருகில் அணிவகுத்து நின்றார்கள்
என்று நபி (ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் என்னிடம் கூறினார் என ஷஅபீ
(ரஹ்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் , அபூஅம்ரே! உங்களுக்கு இதைக் கூறிய அவர்
யார்? என்று கேட்டேன். அதற்கு ஷஅபீ (ரஹ்)
அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்று
பதிலளித்தார்கள்.
٨٥٨حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي
صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ
وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ ".
858 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக் கிழமை (ஜுமுஆ)
தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨٥٩حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ
أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ عِنْدَ
خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً، فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا
كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ
مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا ـ يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ
جِدًّا ـ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ،
ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ،
ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ،
فَأَتَاهُ الْمُنَادِي يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ،
فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ. قَالَ
عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ إِنَّ رُؤْيَا الأَنْبِيَاءِ
وَحْىٌ ثُمَّ قَرَأَ {إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ}.
859 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார்
மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்)
அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று) தொங்கவிடப்பட்டிருந்த தோல்ப்பையிலிருந்து
(தண்ணீர் எடுத்து) அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்.-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர்
பின் தீனார் (ரஹ்) அவர்கள் (உறுப்புக்களை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும்
ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத்தில்
மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள்
நின்று தொழுதார்கள். உடனே நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு
வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே (தொழுது கொண்டிருந்த) நபி (ஸல்)
அவர்கள் என்னைத் திருப்பி தம் வலப் பக்த்தில் நிறுத்திக் கொண்டார்கள். பிறகு அல்லாஹ்
நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம்
தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து
அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால் அவர்கள் (உறங்கியதற்காக புதிதாக)
உளூ செய்யவில்லை.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் அம்ர் பின் தீனார்
(ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் கண்கள் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது என்று மக்கள் கூறுகின்றனரே! (அது உண்மையா?) என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்)
அவர்கள், இறைத்தூதர் களின் கனவு இறைவனிடமிருந்து
வரும் செய்தி (வஹீ) ஆகும் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள்
கூறக்கேட்டுள்ளேன் என்றார்கள்.
பிறகு, (மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி
செய்து) விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன் எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தம் கருத்தக்குச்
சான்றாக) ஓதிக் காட்டினார்கள்.
٨٦٠حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ
أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ، فَأَكَلَ مِنْهُ
فَقَالَ " قُومُوا فَلأُصَلِّيَ بِكُمْ ". فَقُمْتُ إِلَى
حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْيَتِيمُ مَعِي، وَالْعَجُوزُ مِنْ
وَرَائِنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ.
860 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய் வழிப்)பாட்டி
முலைக்கா (ரலி) அவர்கள் உணவு சமைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துண்ண)
அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக் காக நான் (உபரியான
தொழுகையை) தொழுவிக் கிறேன் என்று கூறினார்கள். (தொழுவதற்காக) நான் எங்களுக்குரிய பாயொன்றை
(எடுக்க அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கறுப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயில் தொழுகைக்காக) நின்றார்கள். நானும்
என்னுடன் ஓர் அநாதைச் சிறுவரும் (முதல் வரிசையில்) நிற்க அந்த மூதாட்டி எங்களுக்குப்
பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு
(இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தெழுவித்தார்கள்.
٨٦١حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ
اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما
ـ أَنَّهُ قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ
قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي
بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ
الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ وَدَخَلْتُ فِي الصَّفِّ،
فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَىَّ أَحَدٌ.
861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த
வெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில்
பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன் அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்
(தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து)
இறங்கி அதை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன்.
அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.
٨٦٢حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ أَعْتَمَ
النَّبِيُّ صلى الله عليه وسلم. وَقَالَ عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى
حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله
عنها ـ قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْعِشَاءِ
حَتَّى نَادَاهُ عُمَرُ قَدْ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ
الأَرْضِ يُصَلِّي هَذِهِ الصَّلاَةَ غَيْرُكُمْ ". وَلَمْ يَكُنْ أَحَدٌ
يَوْمَئِذٍ يُصَلِّي غَيْرَ أَهْلِ الْمَدِينَةِ.
862 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, (தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும்
உறங்கிவிட்டனர் என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து)
புறப்பட்டு வந்து, பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை என்று
கூறினார்கள்.
அன்றைய நாளில் மதீனாவாசிகளைத்
தவிர வேறுயாரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.
٨٦٣حَدَّثَنَا
عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ،
حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله
عنهما ـ قَالَ لَهُ رَجُلٌ شَهِدْتَ الْخُرُوجَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم قَالَ نَعَمْ، وَلَوْلاَ مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ ـ يَعْنِي مِنْ
صِغَرِهِ ـ أَتَى الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ، ثُمَّ
خَطَبَ ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ أَنْ
يَتَصَدَّقْنَ فَجَعَلَتِ الْمَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى حَلْقِهَا تُلْقِي
فِي ثَوْبِ بِلاَلٍ، ثُمَّ أَتَى هُوَ وَبِلاَلٌ الْبَيْتَ.
863 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ்
(ரலி) அவர் களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாட்களில் (பெண்கள் பகுதிக்குப்) புறப்பட்டுச்
சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள், ஆம் (இருந்தேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின்
சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் (பெண்கள் பகுதிவரை சென்று) இருந்திருக்க முடியாது.
(பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு) நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் ஸல்த் (ரலி) அவர்களின்
வீட்டருகேயுள்ள அடையாள(க் கம்ப)ம் அருகில் வந்து (மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள்.
பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். மேலும் (ஏழை எளியோருக்காக)
தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அப்பெண்கள் தங்களின் ஆபரணங்களை
நோக்கி தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவற்றைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் (கையில்
ஏந்தப்பட்டிருந்த) ஆடையில் போடலானார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும்
இல்லம் சென்றனர்.
(162)باب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ
وَالْغَلَسِ
பாடம்
: 162
இரவிலும்
பின்னரவின் இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது.
٨٦٤حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ
أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعَتَمَةِ حَتَّى نَادَاهُ
عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه
وسلم فَقَالَ " مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الأَرْضِ
". وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلاَّ بِالْمَدِينَةِ، وَكَانُوا
يُصَلُّونَ الْعَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ
اللَّيْلِ الأَوَّلِ.
864 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி)
அவர்கள் நபியவர்களை அழைத்து, பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள்
(தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர
வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார்கள்.
அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின்
செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர்.
٨٦٥حَدَّثَنَا
عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ
اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ " إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى
الْمَسْجِدِ فَأْذَنُوا لَهُنَّ ". تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ
عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
865 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் துணைவியர் இரவில்
பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.
இதை இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(163)باب انْتِظَارِ النَّاسِ قِيَامَ الإِمَامِ الْعَالِمِ
பாடம் :
163
(தொழுகை முடிந்தபின்)
இமாம் எழுவதை எதிர்பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது.
٨٦٦حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا
يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ
أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ
النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ إِذَا سَلَّمْنَ
مِنَ الْمَكْتُوبَةِ قُمْنَ، وَثَبَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ
صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم قَامَ الرِّجَالُ.
866 நபி (ஸல்) அவர்களின் துணைவியார்
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் சலாம் கொடுத்ததும்
எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுடன்) தொழுகையில்
கலந்து கொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள்
சென்றபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்.
٨٦٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ
بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ
عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم لَيُصَلِّي الصُّبْحَ، فَيَنْصَرِفُ النِّسَاءُ
مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ.
867 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். அப்போது பெண்கள் தங்கள் ஆடைகளால் தங்கள்
உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு (தொழுதுவிட்டு) திரும்பிச் செல்வார்கள். அவர்கள்
(யார் யாரென) அறியப்பட மாட்டார்கள்.
٨٦٨حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ،
حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ
الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" إِنِّي لأَقُومُ إِلَى الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا،
فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ
عَلَى أُمِّهِ ".
868 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நீண்ட நேரம் தொழுவிக்கும்
எண்ணத் துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்)
குழந்தை அழுவதைக் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக
நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.
இதை அபூகத்தாதா அல்அன்சாரி
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨٦٩حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ
سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَوْ أَدْرَكَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ كَمَا
مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ. قُلْتُ لِعَمْرَةَ أَوَ مُنِعْنَ قَالَتْ
نَعَمْ.
869 அம்ரா பின்த் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் (இன்று) நடந்துகொள்ளும் முறையை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இன்று) கண்டிருந்தால் பனூஇஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதுபோன்று
இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (அந்த அளவுக்கு
இன்று பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வருகிறார்கள்) என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான யஹ்யா
பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அம்ரா (ரஹ்) அவர்களிடம், பனூஇஸ்ராயீல் பெண்கள் (பள்ளி வாசலுக்கு
வரக்கூடாதென) தடுக்கப்ட்டிருந்தனரா? என்று கேட்டேன். அதற்கு அம்ரா அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.
(164)باب صَلاَةِ النِّسَاءِ خَلْفَ الرِّجَالِ
பாடம்
: 164
ஆண்கள்
(வரிசைக்குப்) பின்னால் பெண்கள் தொழுவது.
٨٧٠حَدَّثَنَا
يَحْيَى بْنُ قَزَعَةَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ
الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله
عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ قَامَ
النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَيَمْكُثُ هُوَ فِي مَقَامِهِ يَسِيرًا
قَبْلَ أَنْ يَقُومَ. قَالَ نَرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ أَنَّ ذَلِكَ كَانَ
لِكَىْ يَنْصَرِفَ النِّسَاءُ قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ أَحَدٌ مِنَ
الرِّجَالِ.
870 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்)
அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்
இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு
முன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற்
காகத்தான் என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
٨٧١حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ
ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ
سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
871 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை)
தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம்.
உம்மு சுலைம் அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.
(165)باب سُرْعَةِ انْصِرَافِ النِّسَاءِ مِنَ الصُّبْحِ،
وَقِلَّةِ مَقَامِهِنَّ فِي الْمَسْجِدِ
பாடம்
: 165
சுப்ஹுத்
தொழுகை முடிந்ததும் விரைவாகப் பெண்கள் (பள்ளியிலிருந்து) திரும்பி விடுவதும் குறைந்த
நேரமே அவர்கள் பள்ளியில் தங்குவதும்.
٨٧٢حَدَّثَنَا
يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا فُلَيْحٌ،
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله
عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ
فَيَنْصَرِفْنَ نِسَاءُ الْمُؤْمِنِينَ، لاَ يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ، أَوْ لاَ
يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا.
872 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சுப்ஹுத் தொழுகையை இருட்டிருக்கவே தொழுவிப்பார்கள். இறை நம்பிக்கையுள்ள பெண்கள்
(தொழுகையை முடித்து இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்கள் (யார் யாரென)
அறியப்பட மாட்டார்கள் அல்லது அவர்களில் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள மாட்டார்கள்.
இதை காசிம் பின் முஹம்மத்
பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(166)باب اسْتِئْذَانِ الْمَرْأَةِ زَوْجَهَا بِالْخُرُوجِ
إِلَى الْمَسْجِدِ
பாடம்
: 166
பள்ளிவாசலுக்குச்
செல்ல பெண்கள் தம் கணவரிடம் அனுமதி பெறுவது.
٨٧٣حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ،
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم. " إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ فَلاَ يَمْنَعْهَا
".
873 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச்
செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(167)باب صَلاَةِ النِّسَاءِ خَلْفَ الرِّجَالِ
பாடம்
: 167
ஆண்களுக்குப்
பின் பெண்களும் தொழுவது.
٨٧٤حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ،
قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ
وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
874 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் தொழுதார்கள்.
நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்முசுலைம்
(ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.
٨٧٥حَدَّثَنَا
يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ،
عَنْ هِنْدَ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي
تَسْلِيمَهُ، وَهُوَ يَمْكُثُ فِي مَقَامِهِ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ.
قَالَتْ نُرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ أَنَّ ذَلِكَ كَانَ لِكَىْ يَنْصَرِفَ النِّسَاءُ
قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ الرِّجَالُ.
875 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று)விடுவார்கள். நபி (ஸல்)
அவர்கள், எழுவதற்கு முன் சற்று நேரம் (தாம் தொழுத)
அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள். அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்கள் பெண்களை நெருங்குவதற்கு முன்
பெண்கள் திரும்பிச் சென்றுவிடட்டும் என்பதற்காகத்தான் என்றே கருதப்படுகிறது. அல்லாஹ் நன்கு
அறிந்தவன்.
No comments:
Post a Comment