كتاب الطهارة
அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்
(51) باب
الْوُضُوءِ ثَلاَثًا ثَلاَثًا
பாடம்: 51 உலூச் செய்யும் போது உறுப்புக்களை மும்மூன்று
முறை கழுவுதல்.
135-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ
عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلًا أَتَى
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ
كَيْفَ الطُّهُورُ فَدَعَا بِمَاءٍ فِي إِنَاءٍ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا،
ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ
بِرَأْسِهِ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ السَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ، وَمَسَحَ
بِإِبْهَامَيْهِ عَلَى ظَاهِرِ أُذُنَيْهِ، وَبِالسَّبَّاحَتَيْنِ بَاطِنَ
أُذُنَيْهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا
الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا أَوْ نَقَصَ فَقَدْ أَسَاءَ وَظَلَمَ - أَوْ
ظَلَمَ وَأَسَاءَ -»
[حكم
الألباني] : حسن صحيح دون قوله أو نقص فإنه شاذ
135. நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உலூச் செய்வது
எவ்வாறு? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் கொண்டு வரச் சொல்லி தமது இரு முன் கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு
தமது முகத்தை மூன்று முறையும், தமது கைகளை முட்டுக்கை வரை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு
தனது தலைக்கு மஸஹ் செய்துவிட்டு தனது இரு ஆட்காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள்
செலுத்தி இருகாதுகளின் வெளிப்பாகத்தை தனது இரு பெருவிரல்களாலும் உட்பாகத்தை ஆட்காட்டி
விரல்களாலும் மஸஹ் செய்தார்கள். பிறகு தனது இருகால்களையும் மும்மூன்று முறை கழுவினார்கள்.
பின்னர் உலூச் செய்யும் விதம் இவ்வாறு தான். யார் இதைவிடக் கூடுதலாகச் செய்கிறாரோ அல்லது
இதைவிடக் குறைத்து விட்டாரோ அவரும் தீங்கு இழைத்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அம்ருபின் ஷுஐப் (ரலி) தனது தந்தை மூலமாகப் பாட்டனார் கூறியதாக அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன் ஸஹீஹ்
(52) باب
الْوُضُوءِ مَرَّتَيْنِ
பாடம்: 52 உலூச் செய்யும் போது உறுப்புக்களை இரண்டிரண்டு
முறை கழுவி உலூச் செய்தல்.
136-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا زَيْدٌ يَعْنِي ابْنَ الْحُبَابِ،
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَوْبَانَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ
الْفَضْلِ الْهَاشِمِيُّ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، «أَنَّ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ»
[حكم
الألباني] : حسن صحيح
136. நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது ஒவ்வொரு உறுப்புகளையும் இரண்டிரண்டு முறை
கழுவி உலூச் செய்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹன் ஸஹீஹ்
137-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا
هِشَامُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا زَيْدٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ
لَنَا ابْنُ عَبَّاسٍ: أَتُحِبُّونَ أَنْ أُرِيَكُمْ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ «فَدَعَا بِإِنَاءٍ فِيهِ مَاءٌ
فَاغْتَرَفَ غَرْفَةً بِيَدِهِ الْيُمْنَى فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ
أَخَذَ أُخْرَى فَجَمَعَ بِهَا يَدَيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ أَخَذَ
أُخْرَى فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُمْنَى، ثُمَّ أَخَذَ أُخْرَى فَغَسَلَ بِهَا
يَدَهُ الْيُسْرَى، ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنَ الْمَاءِ، ثُمَّ نَفَضَ يَدَهُ،
ثُمَّ مَسَحَ بِهَا رَأْسَهُ وَأُذُنَيْهِ، ثُمَّ قَبَضَ قَبْضَةً أُخْرَى مِنَ
الْمَاءِ فَرَشَّ عَلَى رِجْلِهِ الْيُمْنَى، وَفِيهَا النَّعْلُ، ثُمَّ مَسَحَهَا
بِيَدَيْهِ يَدٍ فَوْقَ الْقَدَمِ وَيَدٍ تَحْتَ النَّعْلِ، ثُمَّ صَنَعَ
بِالْيُسْرَى مِثْلَ ذَلِكَ»
[حكم
الألباني] : حسن لكن مسح القدم شاذ
137.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எப்படி உலூச் செய்தார்கள் என்பதை உங்களுக்கு நான் செயல் முறையில் காட்ட விரும்புகின்றீர்களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு விட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். தமது வலக்கரத்தினால் ஒரு சிரங்கையளவு
நீரள்ளி வாய் கொப்பளித்து நாசிக்கும் நீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள். பிறகு
இன்னொரு கையளவு நீர் அள்ளி, இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து தனது முகத்தைக் கழுவினார்கள்.
பிறகு இன்னொரு கையளவு நீர் அள்ளி தனது இடது கையைக் கழுவினார்கள். பிறகு ஒரு கைப்பிடி
அளவு நீர் அள்ளி அந்தக் கையை உதறிவிட்டு பின்னர் தலைக்கும் காதுக்கும் மஸஹ் செய்தார்கள்.
பிறகு ஒரு கைப்பிடி அளவு தண்ணீர் எடுத்து செருப்பணிந்திருந்த தனது வலது காலில் தெளித்து
ஒரு கையை கால்பாதத்திற்கு மேலும் மற்றொரு கையை செருப்பிற்கு கீழுமாக ஆக்கி இரு கைகளினால்
மஸஹ் செய்தார்கள். (தடவினார்கள்) பிறகு இது போன்று இடது காலிலும் செய்தார்கள் என அதாஃ
பின் யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன்
(53) باب
الْوُضُوءِ مَرَّةً مَرَّةً
பாடம்: 53 உறுப்புக்களை ஒரு தடவை மட்டும் கழுவி உலூச்
செய்தல்.
138-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ،
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَلَا أُخْبِرُكُمْ
بِوُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «فَتَوَضَّأَ مَرَّةً
مَرَّةً»
[حكم
الألباني] : صحيح
138.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின்
உலூச் செய்யும் முறையை உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கேட்டுவிட்டு ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை மட்டும் கழுவி உலூச் செய்தார்கள் என்று
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அதாஃ பின் யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(54) باب فِي الْفَرْقِ بَيْنَ الْمَضْمَضَةِ
وَالاِسْتِنْشَاقِ
பாடம்: 54 வாய் கொப்பளிப்பதையும் மூக்கை சுத்தம் செய்வதையும்
தனித்தனியாகச் செய்தல்.
139-حَدَّثَنَا
حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ لَيْثًا،
يَذْكُرُ عَنْ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «دَخَلْتُ - يَعْنِي
- عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ،
وَالْمَاءُ يَسِيلُ مِنْ وَجْهِهِ وَلِحْيَتِهِ عَلَى صَدْرِهِ، فَرَأَيْتُهُ
يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ»
[حكم
الألباني] : ضعيف
139.நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்.
அப்போது உலூச் செய்து கொண்டிருந்த அவர்களின் முகம் மற்றும் தாடியிலிருந்து தண்ணீர்
மார்பில் வழிந்தோடக் கண்டேன். அவர்கள் வாய் கொப்பளிப்பதற்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தி
மூக்கை சுத்தம் செய்யவும் தனித்தனியாகத் தண்ணீர் எடுக்கக் கண்டேன் என தல்ஹா (ரலி) அவர்கள்
தமது தந்தை கூறியதாக பாட்டனாரிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
தரம் : ளயீப்
(55) باب فِي
الاِسْتِنْثَارِ
பாடம்: 55 நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தல்.
140-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ
الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً
ثُمَّ لْيَنْثُرْ " .
[حكم
الألباني] : صحيح
140.உங்களில் ஒருவர் உலூச் செய்யும்
போது அவர் தனது நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யவும்' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
141-حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ،
عَنْ قَارِظٍ، عَنْ أَبِي غَطَفَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ
بَالِغَتَيْنِ أَوْ ثَلَاثًا»
[حكم
الألباني] : صحيح
141.நீங்கள் (உலூச் செய்யும் போது)
இரண்டு முறையோ அல்லது மூன்று முறைகளோ தண்ணீரை நாசிக்குள் நன்கு செலுத்தி மூக்கை சிந்தி
சுத்தம் செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
142-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ
سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ
صَبْرَةَ، عَنْ أَبِيهِ لَقِيطِ بْنِ صَبْرَةَ، قَالَ: كُنْتُ وَافِدَ بَنِي
الْمُنْتَفِقِ - أَوْ فِي وَفْدِ بَنِي الْمُنْتَفِقِ - إِلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ نُصَادِفْهُ فِي مَنْزِلِهِ،
وَصَادَفْنَا عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، قَالَ: فَأَمَرَتْ لَنَا
بِخَزِيرَةٍ فَصُنِعَتْ لَنَا، قَالَ: وَأُتِينَا بِقِنَاعٍ - وَلَمْ يَقُلْ
قُتَيْبَةُ: الْقِنَاعَ، وَالْقِنَاعُ: الطَّبَقُ فِيهِ تَمْرٌ - ثُمَّ جَاءَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلْ أَصَبْتُمْ
شَيْئًا؟ - أَوْ أُمِرَ لَكُمْ بِشَيْءٍ؟» قَالَ: قُلْنَا: نَعَمْ، يَا رَسُولَ
اللَّهِ، قَالَ: فَبَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ جُلُوسٌ، إِذْ دَفَعَ الرَّاعِي غَنَمَهُ إِلَى الْمُرَاحِ، وَمَعَهُ
سَخْلَةٌ تَيْعَرُ، فَقَالَ: «مَا وَلَّدْتَ يَا فُلَانُ؟»، قَالَ: بَهْمَةً،
قَالَ: «فَاذْبَحْ لَنَا مَكَانَهَا شَاةً»، ثُمَّ قَالَ: " لَا تَحْسِبَنَّ
وَلَمْ يَقُلْ: لَا تَحْسَبَنَّ أَنَّا مِنْ أَجْلِكَ ذَبَحْنَاهَا، لَنَا غَنَمٌ
مِائَةٌ لَا نُرِيدُ أَنْ تَزِيدَ، فَإِذَا وَلَّدَ الرَّاعِي بَهْمَةً، ذَبَحْنَا
مَكَانَهَا شَاةً " قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي امْرَأَةً
وَإِنَّ فِي لِسَانِهَا شَيْئًا - يَعْنِي الْبَذَاءَ - قَالَ: «فَطَلِّقْهَا
إِذًا»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَهَا صُحْبَةً، وَلِي مِنْهَا
وَلَدٌ، قَالَ: " فَمُرْهَا يَقُولُ: عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ
فَسَتَفْعَلْ، وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ [ص: 36] أُمَيَّتَكَ "
فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي، عَنِ الْوُضُوءِ، قَالَ: «أَسْبِغِ
الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا
أَنْ تَكُونَ صَائِمًا».
[حكم
الألباني] : صحيح
142.பனூ முன்தஃபிக் கூட்டத்தினரின்
சார்பில் தூதராக நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்திருந்தேன். (அல்லது அத்தூதுக்குழுவில்
ஒருவனாக இருந்தேன்.) நாங்கள் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அவர்களது இல்லத்தில்
காண வில்லை. ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டோம். அவர்கள் எங்களுக்கு கஸீரா என்ற உணவைத்
தயாரிக்க உத்தரவிட்டார்கள். அது தயாரிக்கப்பட்டு விட்டது. பின்னர் எங்களுக்கு பேரீத்தம்
பழங்கள் அடங்கிய தட்டு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
வந்து 'நீங்கள் ஏதாவது சாப்பிட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள்
'ஆம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!' என்று பதில் அளித்தோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
அமர்ந்திருக்கும் போது அவர்களின் ஆடு மேய்ப்பாளர் நபி (ஸல்) அவர்களுக்குச் சொந்தமான
ஆடுகளை கொட்டடிக்கு ஓட்டிச் சென்றார். அவரிடம் அப்போது தான் பிறந்த ஆட்டுக் குட்டியும்
சப்தமிட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் 'என்னப்பா! நமது ஆடு என்ன குட்டி ஈன்று உள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'பெண் ஆட்டுக்குட்டி' என்றார். (நமக்கு ஒரு குட்டி கிடைத்து விட்ட காரணத்தால்) அதற்கு
பதிலாக நமது ஆடுகளில் ஒன்றை அறுப்பீராக! என்று சொன்னார்கள். பிறகு (விருந்தினர்களை
நோக்கி நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்காக நாங்கள் (சிரமேற் கொண்டு) அதை அறுக்கின்றோம்
என்று நீர் எண்ணிவிடாதீர்! எங்களிடம் நூறு ஆறுகள் இருக்கின்றன. அதை விட ஒன்று அதிகமாவதை
நாங்கள் விரும்புவதில்லை. எங்களின் ஆடு, ஒரு பெண்குட்டியை ஈன்று விட்டால் அதற்குப் பகரமாக நாங்கள் ஒரு
ஆட்டை அறுப்போம் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது மனைவிக்கு நாக்கு
கொஞ்சம் நீளம் - அதாவது தீயவார்த்தைகளைப் பேசும் வாயாடி என்று நான் சொன்னதும் 'நீ அவளை விவாகரத்து செய்துவிடு!' என்றார்கள்.
அதற்கு நான் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அவள் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருப்பதோடு, அவளிடம் நான் பாசமுடனும் இருக்கின்றேன்' என்று கூறியதும், 'நீ அவளுக்கு அறிவுரை கூறு! அவளிடம்
நல்லெண்ணம் இருப்பின் அவள் நல்லவிதமாக நடந்து கொள்வாள். நீ உனது அடிமைப் பெண்ணை அடிப்பது
போல உனது மனைவியை அடிக்காதே! என்று கூறினார்கள். அடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எனக்கு உலூச் செய்யும் தெரிவித்துக் கொடுங்கள்' என்றேன். அதற்கு அவர்கள் உலூவை பூரணமாகச் செய். உலூச் செய்யும் போது உனது கைவிரல்களுக்கிடையே
கோதிக்கழுவு. நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர நாசிக்கு நன்கு தண்ணீர் செலுத்தி மூக்கை
சுத்தம் செய்! என்று கூறினார்கள் என லகீத் பின் ஸபிரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
143-حَدَّثَنَا
عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ
جُرَيْجٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ
صَبْرَةَ، عَنْ أَبِيهِ وَافِدِ بَنِي الْمُنْتَفِقِ، أَنَّهُ أَتَى عَائِشَةَ
فَذَكَرَ مَعْنَاهُ، قَالَ: فَلَمْ يَنْشَبْ أَنْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَقَلَّعُ يَتَكَفَّأُ، وَقَالَ: عَصِيدَةٌ، مَكَانَ
خَزِيرَةٍ.
[حكم
الألباني] : صحيح
143.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது.
அதில் 'நாங்கள் சென்று அமர்ந்திருக்க மாட்டோம்' அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வேகமாக அடியெடுத்து வைத்து இருபக்கமாகவும் சாய்ந்து
சாய்ந்து நடந்து வந்து விட்டார்கள் என்றும், கஸீரா என்ற உணவு தயாரிக்கப்பட்டது என்ற இடத்தில் 'அஸீதா' என்ற உணவு தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
தரம் : ஸஹீஹ்
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ
جُرَيْجٍ بِهَذَا الْحَدِيثِ، قَالَ فِيهِ: «إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ»144
-
[حكم الألباني] :
صحيح
144.மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது.
அதில் நீ உலூச் செய்யும் போது வாய் கொப்பளி என்பது மேலதிகமாக வந்துள்ளது.
தரம் : ஸஹீஹ்
(56) باب تَخْلِيلِ اللِّحْيَةِ
பாடம்: 56 தாடியைக் கோதி விடுதல்.
146-حَدَّثَنَا
أَبُو تَوْبَةَ يَعْنِي الرَّبِيعَ بْنَ نَافِعٍ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ،
عَنِ الْوَلِيدِ بْنِ زَوْرَانَ، عَنْ أَنَسٍ يَعْنِي ابْنَ مَالِكٍ، «أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَوَضَّأَ، أَخَذَ
كَفًّا مِنْ مَاءٍ فَأَدْخَلَهُ تَحْتَ حَنَكِهِ فَخَلَّلَ بِهِ لِحْيَتَهُ»،
وَقَالَ: «هَكَذَا أَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ»، قَالَ أَبُو دَاوُدَ:
وَالْوَلِيدُ بْنُ زَوْرَانَ، رَوَى عَنْهُ حَجَّاجُ بْنُ حَجَّاحٍ، وَأَبُو
الْمَلِيحِ الرَّقِّيُّ
[حكم
الألباني] : صحيح
145.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
உலூச் செய்யும் போது ஒரு கையளவு தண்ணீர் எடுத்து தமது முகவாய்க் கட்டைக்குக் கீழே அதைச்
செலுத்தி தமது தாடியைக் கோதி விடுவார்கள். மேலும் 'எனது இறைவன் எனக்கு இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளான்'
எனவும் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(57) باب الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ
பாடம்: 57 தலைப் பாகையில் மஸஹ் செய்தல்.
146-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ
ثَوْرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ ثَوْبَانَ، قَالَ: «بَعَثَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَأَصَابَهُمُ الْبَرْدُ
فَلَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَمَرَهُمْ أَنْ يَمْسَحُوا عَلَى الْعَصَائِبِ وَالتَّسَاخِينِ»
[حكم
الألباني] : صحيح
146.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
ஒரு சிறு படையை அனுப்பினார்கள். (அவர்கள் சென்ற இடத்தில்) அவர்களைக் கடும் குளிர் தாக்கியது.
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த(தும் முறையிட்டனர். அப்)போது அவர்களது
தலைப்பாகைகளிலும் காலுறைகளிலும் கஸஹ் செய்து கொள்ள அனுமதித்தார்கள் என சவ்பான் (ரலி)
அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
147-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ
صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي مَعْقِلٍ، عَنْ أَنَسِ
بْنِ مَالِكٍ، قَالَ [ص: 37] : «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ، فَأَدْخَلَ يَدَهُ مِنْ
تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ»
[حكم
الألباني] : ضعيف
147.வண்ணக் கோடுகள் போடப்பட்ட தலைப்பாகை
அணிந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் உலூச் செய்யக்
கண்டேன்.
தரம் : ளயீப்
(58) باب غَسْلِ الرِّجْلَيْنِ
பாடம்: 58 கால்களைக் கழுவும் முறை
148-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو،
عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ،
قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا
تَوَضَّأَ يَدْلُكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ»
[حكم
الألباني] : صحيح
148.நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும்
போது தனது கால்விரல்களை தனது சுண்டு விரலால் தேய்ப்பதை நான் கண்டேன்'
என்று முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(59) باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
பாடம்: 59 காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.
149-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي
يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبَّادُ بْنُ زِيَادٍ،
أَنَّ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ
أَبَاهُ الْمُغِيرَةَ، يَقُولُ: عَدَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، وَأَنَا مَعَهُ فِي غَزْوَةِ تَبُوكَ قَبْلَ الْفَجْرِ، فَعَدَلْتُ
مَعَهُ، فَأَنَاخَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَبَرَّزَ، ثُمَّ
جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدِهِ مِنَ الإِدَاوَةِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ
غَسَلَ وَجْهَهُ، ثُمَّ حَسَرَ عَنْ ذِرَاعَيْهِ، فَضَاقَ كُمَّا جُبَّتِهِ،
فَأَدْخَلَ يَدَيْهِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَغَسَلَهُمَا إِلَى
الْمِرْفَقِ، وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ تَوَضَّأَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ
رَكِبَ، فَأَقْبَلْنَا نَسِيرُ حَتَّى نَجِدَ النَّاسَ فِي الصَّلَاةِ قَدْ
قَدَّمُوا عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، فَصَلَّى بِهِمْ حِينَ كَانَ وَقْتُ
الصَّلَاةِ وَوَجَدْنَا عَبْدَ الرَّحْمَنِ وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً مِنْ
صَلَاةِ الْفَجْرِ، فَقَامَ رَسُولُ [ص: 38] اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَصَفَّ مَعَ الْمُسْلِمِينَ فَصَلَّى وَرَاءَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ
عَوْفٍ الرَّكْعَةَ الثَّانِيَةَ، ثُمَّ سَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ، فَقَامَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ فَفَزِعَ
الْمُسْلِمُونَ، فَأَكْثَرُوا التَّسْبِيحَ لِأَنَّهُمْ سَبَقُوا النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُمْ: «قَدْ أَصَبْتُمْ - أَوْ قَدْ
أَحْسَنْتُمْ -»
[حكم
الألباني] : صحيح
149.தபூக் யுத்தத்தின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் பயணத்தில் இருந்தேன்.
பஜ்ரு தொழுகைக்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் (முக்கிய பாதையை விட்டும்) வேறு பாதையில்
திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பிச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப்
படுக்க வைத்துவிட்டு (தனது மலஜலத்) தேவைகளை நிறைவேற்ற தனித்து சென்றார்கள். அவர்கள்
திரும்பி வந்ததும் தோல்பையிலிருந்து அவர்களது கையில் நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள்
தமது இரு முன்கைகளையும் வெளியே கொண்டு வர முற்பட்டார்கள். அவர்கள் அணிந்திருந்த குளிர்
ஆடையின் கைகள் இறுக்கமாக இருந்ததால் அவற்றை சுருட்ட சிரமப் பட்டார்கள்.
(வெளியே கொண்டு வர முடியவில்லை) இரு
கைகளையும் சட்டையின் உட்புறமாக வெளியே கொண்டு வந்து (சட்டைக் கைகளை தோள்புஜங்கள் மேல்
போட்டுக் கொண்டு) இரு கைகளை முழங்கை வரை கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். பிறகு
தமது இரு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். பின்னர் பயணமானார்கள். நாங்கள் (நபித்
தோழர்கள் இருந்த இடத்திற்கு) வந்த போது மக்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப்
பின் பற்றித் தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அவர் உரிய நேரத்தில் அவர்களுக்கு தொழுகை
நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை பஜ்ரு
தொழுகையில் ஒரு ரக்அத்தை முடித்து விட்ட நிலையில் அடைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின் பற்றி முஸ்லிம்களுடன் அணியில்
நின்று இரண்டாவது ரக்அத்தை தொழுதார்கள். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஸலாம் கூறியதும்
நபி (ஸல்) அவர்கள் (வடுபட்டதை தொழ) எழுந்து நின்றார்கள். இதை முஸ்லிம்கள் (இது வரை
கண்டிராததால்) உடனே திடுக்குற்று தஸ்பீஹை அதிகமாக்கினார்கள். (ஸுப்ஹானல்லாஹ் ஸுப்ஹானல்லாஹ்
எனக் கூறினார்கள்) ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களை விட முந்தித் தொழுது விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கூறியதும் அவர்களை நோக்கி நீங்கள் முறையாகச்
செய்தீர்கள் என்றோ அல்லது நல்லதைச் செய்தீர்கள் என்றோ கூறினார்கள் என்று முகீரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
150-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ،
حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنِ التَّيْمِيِّ، حَدَّثَنَا بَكْرٌ، عَنِ الْحَسَنِ،
عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ وَمَسَحَ نَاصِيَتَهُ
- وَذَكَرَ - فَوْقَ الْعِمَامَةِ»، قَالَ: عَنِ الْمُعْتَمِرِ، سَمِعْتُ أَبِي،
يُحَدِّثُ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ
الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ، وَعَلَى نَاصِيَتِهِ
وَعَلَى عِمَامَتِهِ»، قَالَ بَكْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنَ ابْنِ الْمُغِيرَةِ
[حكم
الألباني] : صحيح
150.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
உலூச் செய்தார்கள். (அவ்வாறு உலூச் செய்யும் போது) தமது தலையின் முன்பாகத்தில் மஸஹ்
செய்தார்கள். பிறகு தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தார்கள் என்று முகீரா (ரலி) கூறியதாக
யஸயா பின் ஸயீத் அறிவிக்கின்றார்.
இதையே முஃதமர் என்பார் அறிவிக்கும்
போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு காலுறைகள் மீதும் தம் தலையின் முன்பாகத்திலும்
தலைப்பாகையின் மீதும் மஸஹ் செய்தார்கள் என்று அறிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
151-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنِي أَبِي، عَنِ الشَّعْبِيِّ،
قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يَذْكُرُ عَنْ أَبِيهِ،
قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَكْبِهِ
وَمَعِي إِدَاوَةٌ فَخَرَجَ لِحَاجَتِهِ، ثُمَّ أَقْبَلَ فَتَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ
فَأَفْرَغْتُ عَلَيْهِ فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يُخْرِجَ
ذِرَاعَيْهِ، وَعَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ مِنْ جِبَابِ الرُّومِ، ضَيِّقَةُ الْكُمَّيْنِ،
فَضَاقَتْ فَادَّرَعَهُمَا ادِّرَاعًا، ثُمَّ أَهْوَيْتُ إِلَى الْخُفَّيْنِ لِأَنْزَعَهُمَا،
فَقَالَ لِي: «دَعِ الْخُفَّيْنِ، فَإِنِّي أَدْخَلْتُ الْقَدَمَيْنِ الْخُفَّيْنِ
وَهُمَا طَاهِرَتَانِ فَمَسَحَ عَلَيْهِمَا» ، قَالَ أَبِي: قَالَ الشَّعْبِيُّ: شَهِدَ
لِي عُرْوَةُ، عَلَى أَبِيهِ، وَشَهِدَ أَبُوهُ، عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ،
__________
[حكم الألباني]
: صحيح
151.ஊர்வா தம் தந்தை
முகீரா ( ரலி) அவர்களை ஆதாரமாக்க் கொண்டு
அறிவிக்கிறார்:
நாங்கள் நபி ( ஸல் ) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்.என்னிடம் தண்ணீர்ப் பாத்திரம் இருந்தது. நபி
( ஸல் ) அவர்கள் இயற்க்கைக் கடனை நிறைவேற்றச் சென்றுவிட்டார்கள்.(
முடிந்துவிட்டு ) திரும்பி வந்தார்கள்
. நான் ( தண்ணீர்ப் ) பார்த்திரத்துடன்
அவர்களைச் சந்தித்தேன். பின்பு தண்ணீர் ஊற்றினேன் , நபியவர்கள் தம் கைகளை மணிக்கட்டு வரையும் முகத்தையும் கழுவினார்கள்.
அப்போது ரோம் நாட்டு கம்பளி ஜுப்பாக்களில்
ஒன்றை அணிந்த நிலையில் இரு கைகளை வெளியாக்க நாடினார்கள். ஜுப்பாவின் இரு கைகளும் இறுக்கமாக இருந்ததால் கையை வெளியே எடுக்க
முடியவில்லை.
ஆகவே ஜுப்பாவின் கீழ் ( உடல் ) பகுதியிலிருந்து கைகளை வெளியில்
எடுத்தார்கள். பின்னர் காலுறையைக் கழற்றுவதற்காக நான் எனது கையை
நீட்டினேன். அப்போது அவர்கள் நான் கால் களைக் கழுவிய பிறகு தான்
காலுறையே அணிந்துள்ளேன் . கழற்ற வேண்டாம் எனக் கூறிவிட்டு இரு
காலுறைகள் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்
இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில்
இடம்பெற்றுள்ள முகீரா ( ரலி ) அவர்களும் , உர்வா ( ரலி)
அவர்களும் இந்த நபிமொழியை அறிவிக்கும்போது “ அஷ்ஹது
“ ( நான் உறுதிமொழி அளிக்கிறேன் ) என்ற வார்த்தையைக்
கூறி அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
152-حَدَّثَنَا
هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، وَعَنْ
زُرَارَةَ بْنِ أَوْفَى، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، قَالَ: تَخَلَّفَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ هَذِهِ الْقِصَّةَ، قَالَ: فَأَتَيْنَا
النَّاسَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يُصَلِّي بِهِمُ الصُّبْحَ [ص:39]، فَلَمَّا
رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ
إِلَيْهِ أَنْ يَمْضِيَ، قَالَ: فَصَلَّيْتُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ خَلْفَهُ رَكْعَةً، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي سُبِقَ بِهَا، وَلَمْ يَزِدْ عَلَيْهَا، قَالَ
أَبُو دَاوُدَ: أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، وَابْنُ الزُّبَيْرِ، وَابْنُ عُمَرَ،
يَقُولُونَ: «مَنْ أَدْرَكَ الْفَرْدَ مِنَ الصَّلَاةِ عَلَيْهِ سَجْدَتَا السَّهْوِ»
__________
[حكم الألباني]
: صحيح
152.முகீரா ( ரலி ) அறிவித்ததாவது : பயணக் கூட்டத்திலிருந்து நபி ( ஸல் ) அவர்கள் பிந்தங்கிவிட்டார்கள் என்று முகீரா ( ரலி ) அவர்கள் கூறிய பின் முந்தைய நபிமொழியில் உள்ள நிகழ்வைக் கூறினார். நாங்கள் ( எங்கள் ) கூட்டத்தை அடைந்தபோது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி ) அவர்கள் காலைத் தொழுகையை தோழர்களுக்குத் தொழுவைத்துகொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் நபியவர்களை கண்டவுடன் – இமாமத் செய்ய நபி ( ஸல் ) அவர்களுக்கு தான் தகுதி என்பதை உணர்ந்து பின்னால் நகர நாடினார். உடனே நபி ( ஸல் ) அவர்கள் “ நீங்களே தொழுகையை நிறைவு செய்யுங்கள் “ என்று ஜாடை செய்தார்கள்.
நானும் நபியவர்களும் இமாமுக்குப் பின்னால் தொழுதோம் . இமாம் ஸலாம் கொடுத்தவுடன் நபி ( ஸல் ) அவர்கள் எழுந்து நின்று விடுபட்ட ஒரு ரக் அத்தைத் தொழுதார்கள் கூடுதலாக எதுவும் செய்யவில்லை.
ஆபூதாவூத் ( ஆகிய நான் ) கூறுகிறேன் : யார் இமாமுடன் ஒர் ரக் அத்தை அடைகிறாரோ அவர் மறதிக்குரிய ஸஜ்தா செய்ய வேண்டும் என அபூ ஸஈத் அல் குத்ரீ ( ரலி ) இப்னு ஜுபைர் ( ரலி ) இப்னு உமர் ( ரலி ) ஆகியோர் கூறுகின்றனர்.
தரம் : ஸஹீஹ்
153-حَدَّثَنَا
عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي
بَكْرٍ يَعْنِي ابْنَ حَفْصِ بْنِ عُمَرَ بْنِ سَعْدٍ، سَمِعَ أَبَا عَبْدِ اللَّهِ،
عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، أَنَّهُ شَهِدَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ
عَوْفٍ يَسْأَلُ بِلَالًا، عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَقَالَ: «كَانَ يَخْرُجُ يَقْضِي حَاجَتَهُ، فَآتِيهِ بِالْمَاءِ فَيَتَوَضَّأُ، وَيَمْسَحُ
عَلَى عِمَامَتِهِ وَمُوقَيْهِ» ، قَالَ أَبُو دَاوُدَ: هُوَ أَبُو عَبْدِ اللَّهِ
مَوْلَى بَنِي تَيْمِ بْنِ مُرَّةَ
__________
[حكم الألباني]
: صحيح
153.அபூ அப்துர் ரஹ்மான் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது : அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி ) அவர்கள் , பிலால் ( ரலி ) அவர்களிடம் நபி ( ஸல் ) அவர்களின் “ உளூ”வைப் பற்றிக் கேட்ட போது நானும் அங்கு ( சபையில் ) இருந்தேன். நபி ( ஸல் ) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு வருவார்கள். நான் தண்ணீர் எடுத்துச் செல்வேன்.
நபி ( ஸல் ) அவர்கள் “ உளூ “ செய்வார்கள் .அப்போது தலைப் பாகை மீதும் காலுறைகள் மீதும் மஸ்ஹ் செய்வார்கள் என்று பிலால் ( ரலி ) அவர்கள் பதிலளித்தார்கள்.
அபூதாவூத் ( ஆகிய நான் ) கூறுகிறேன் : அறிவிப்பாளர் தொடரில் வரக் கூடிய அபூ அப்தில்லாஹ் என்பவர் பனூதமீம் பின் முர்ரா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை யாவார்.
தரம் : ஸஹீஹ்
154-حَدَّثَنَا
عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدِّرْهَمِيُّ، حَدَّثَنَا ابْنُ دَاوُدَ، عَنْ بُكَيْرِ
بْنِ عَامِرٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، أَنَّ جَرِيرًا، بَالَ،
ثُمَّ «تَوَضَّأَ فَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ» وَقَالَ: مَا يَمْنَعُنِي أَنْ أَمْسَحَ
وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ» ، قَالُوا:
إِنَّمَا كَانَ ذَلِكَ قَبْلَ نُزُولِ الْمَائِدَةِ، قَالَ: مَا أَسْلَمْتُ إِلَّا
بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ
__________
[حكم الألباني]
: حسن
154.அபூஜுர் ஆ ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது : எனது பாட்டனார் ஜரீர் ( ரலி ) அவர்கள் சிறு நீர் கழித்தபின் “ உளூ” செய்தார்கள். அதில் காலுறைக்கு மஸ்ஹ் செய்தார்கள்.அப்போது அவர்கள், “ நபி ( ஸல் ) அவர்கள் காலுறையின் மீது மஸ்ஹ் செய்ததை நான் பார்த்தபின் நான் காலுறையின் மீது மஸ்ஹ் செய்வதை யார் தடுக்க முடியும் ? என்று சொன்னார்கள். அங்கிருந்த சிலர் இதனைக் குறையாகக் கருதி “ உளூ”வின் வசனம் இறங்குவதற்கு முன் காலுறையின் மீது மஸ்ஹ் செய்வது அனுமதிக் கப்பட்டிருந்தது.அல்மாயிதா அத்தியாயத்தில் “உளூ”வைப் பற்றிய வசனம் இறங்கியபின் காலுறை மீது மஸ்ஹ் செய்யும் சலுகை காலாவதியாகி விட்டது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
“அல்மாயிதா அத்தியாயம் இறங்கிய பின்புதான் நான் முஸ்லிமானேன் “ என்று ஜரீர் ( ரலி ) கூறினார்கள். ஆகவே , அல்மாயிதா அத்தியாயம் இறங்கிய பின் தான் நபி ( ஸல் ) அவர்கள் காலுறையின் மீது மஸ்ஹ் செய்ததைப் பார்த்தேன் .
தரம் : ஹஸன்
155-حَدَّثَنَا
مُسَدَّدٌ، وَأَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ،
حَدَّثَنَا دَلْهَمُ بْنُ صَالِحٍ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ
بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ، فَلَبِسَهُمَا [ص:40]
ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا» ، قَالَ مُسَدَّدٌ: عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ،
قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا مِمَّا تَفَرَّدَ بِهِ أَهْلُ الْبَصْرَةِ»
__________
[حكم الألباني] : حسن
155. புரைதா பின் அல் ஹஸீத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
வடிவங்கள் இல்லாத , முடிகள் நீக்கப்பட்ட , கருப்பு நிற காலுறைகளை நபி ( ஸல் ) அவர்களுக்கு நஜ்ஜாஷ் மன்னர் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். நபி ( ஸல் ) அவர்கள் அதனை அணிந்து கொண்டார்கள். “ உளூ” செய்யும் போது அதன் மீது மஸ்ஹ் செய்தார்கள்.
இந்த நபிமொழி இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அபூதாவூத் ( ஆகிய நான் ) கூறுகிறேன் :
இந்த நபிமொழியின் எல்லா அறிவிப்பாளர்களும் பஸராவை சார்ந்தவர்கள்.
தரம் : ஹஸன்
156-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ حَيٍّ هُوَ الْحَسَنُ بْنُ صَالِحٍ عَنْ بُكَيْرِ
بْنِ عَامِرٍ الْبَجَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنِ الْمُغِيرَةِ
بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى
الْخُفَّيْنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَنَسِيتَ؟، قَالَ: «بَلْ أَنْتَ نَسِيتَ،
بِهَذَا أَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ»
__________
[حكم الألباني]
: ضعيف
156. முகீரா பின் ஷு அபா ( ரலி ) கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் காலுறையின் மீது மஸ்ஹ் செய்தார்கள். அப்போது நான் “ அல்லாஹ்வின் தூதரே ! தாங்கள் மறந்துவிட்டீர்களா ? ( காலைக் கழுவாமல் மஸ்ஹ் செய்கின்றீர்களே “) என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள் ,”இல்லை நீங்கள் தான் மறந்துவிட்டீர் மாண்பும் வல்லமையும் மிக்க என் இறைவன் இவ்வாறு செய்யவே கட்டளையிட்டுள்ளான் “ என்று நபி (ஸல் ) கூறினார்கள்.
தரம் : ளயீப்
(60) باب التَّوْقِيتِ فِي الْمَسْحِ
பாடம்: 60 காலுறைகளை மஸஹ் செய்யும் கால வரம்பு.
157-حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وَحَمَّادٍ، عَنْ
إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ خُزَيْمَةَ بْنِ
ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَسْحُ عَلَى
الْخُفَّيْنِ لِلْمُسَافِرِ ثَلاَثَةُ أَيَّامٍ وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ
" . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ عَنْ
إِبْرَاهِيمَ التَّيْمِيِّ بِإِسْنَادِهِ قَالَ فِيهِ وَلَوِ اسْتَزَدْنَاهُ
لَزَادَنَا .
:صحيح (الألباني حكم
157.காலுறைகளை மஸஹ் செய்யும் காலம்
பயணிக்கு மூன்று நாட்களாகும். உள்ளூர்வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவுமாகும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: குஜைமா பின் சாபித் (ரலி)
அவர்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
தனது இஸ்நாத் மூலம் (இதை) இப்றாகீம்
அத்தைமீ என்பாரிடமிருந்து மனசூர் பின் அல்முஃதமர் அறிவிக்கும் போது இந்த காலவரையை நீங்கள்
நீட்டிக் கேட்டிருந்தால் நபி (ஸல்) அவர்கள் நீட்டித்தந்திருப்பார்கள் என்று அறிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
158-حَدَّثَنَا
يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ،
أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ
مُحَمَّدِ بْنِ يَزِيدَ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ أُبَىِّ بْنِ عِمَارَةَ،
- قَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَكَانَ قَدْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم لِلْقِبْلَتَيْنِ - أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَمْسَحُ عَلَى
الْخُفَّيْنِ قَالَ " نَعَمْ " . قَالَ يَوْمًا قَالَ "
يَوْمًا " . قَالَ وَيَوْمَيْنِ قَالَ " وَيَوْمَيْنِ "
. قَالَ وَثَلاَثَةً قَالَ " نَعَمْ وَمَا شِئْتَ " . قَالَ أَبُو
دَاوُدَ رَوَاهُ ابْنُ أَبِي مَرْيَمَ الْمِصْرِيُّ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي
زِيَادٍ عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ عَنْ أُبَىِّ بْنِ عِمَارَةَ قَالَ فِيهِ
حَتَّى بَلَغَ سَبْعًا . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "
نَعَمْ وَمَا بَدَا لَكَ " قَالَ أَبُو دَاوُدَ وَقَدِ اخْتُلِفَ فِي
إِسْنَادِهِ وَلَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَرَوَاهُ ابْنُ أَبِي مَرْيَمَ وَيَحْيَى
بْنُ إِسْحَاقَ السِّيْلَحِينِيُّ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ وَقَدِ اخْتُلِفَ
فِي إِسْنَادِهِ .
ضعيف (الألباني) حكم
158.உபைப் பின் இமாரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் அவர்களே! நான் இருகாலுறைகளின் மீதும் மஸஹ் செய்யலாமா? என்று வினவியதும் அவர்கள் 'ஆம்' என்றனர். ஒரு நாள் (முழுவதும் செய்யலாமா?) என்று அவர் வினவியதும் அண்ணலார் அவர்கள் ஒருநாள் (முழுதும் செய்யலாம்)
என்றனர். இரு நாட்கள் (வரை செய்யலாமா?) என்று அவர் வினவ அண்ணலார் அவர்கள் இருநாடகள்!
(வரை) என்று பதிலளித்தார்கள். மூன்று நாட்கள் (வரை செய்யலாமா?) என்று அவர் வினவ அண்ணலார் அவர்கள் 'ஆம்' நீர் விரும்பிய நாட்கள் வரை என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
இரு கிப்லாக்களை (பைத்துல் மக்தஸ், கஃபா) முன்னோக்கித் தொழுதவர் என்று
உபை பின் இமாரா (ரலி) அவர்களைப் பற்றி இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அய்யூப்
என்பார் குறிப்பிடுகின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.
இப்னு அபூமர்யம் என்பார் அறிவிக்கும்
தனது ஹதீஸில் (நாட்களை நீட்டிக் கொண்டிருந்த) உபைய் பின் இமாரா (ரலி) அவர்கள் ஏழு என்று
எண்ணிக்கையை அடைந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஆம், உமக்கு தோன்றிய நாட்கள் (வரை) என்று
பதிலளித்தார்கள்' என்று அறிவிக்கிறார்.
இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மேலுள்ள முதல் அறிவிப்பாளரான யஹ்யா
பின் அய்யூப் என்பாரின் 'இஸ்னாதில்' கருத்து வேற்றுமை காணப்படுவதோடு இவர் ஹதீஸில் வல்லுனராக இல்லை.
தரம் : ளயீப்
No comments:
Post a Comment