Wednesday, January 10, 2018

பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது



தஃப்ஸீர் விளக்கம் - 13


பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது

تفسير ابن كثير ط العلمية (3 / 282):
وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذَلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَى رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ (108)

அல்லாஹ்வையென்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள் ! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம் பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான் ( 6 : 108 )

இந்த வசனத்தில் அல்லாஹ் இணைவைப்பாளர்கள் வழிபடக்கூடிய செய்வங்களை ஏசக் கூடாது என்று நபி ஸல் அவர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் கட்டளையிடுகின்றான் ஏனெனில் அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமையே அதிகம் .
பதிலுக்கு பதிலாக இணைவைப்பாளர்கள் முஸ்லிம்கள் வழிபடக்கூடிய உண்மையான இறைவனை ஏசுவார்கள்.

{اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا (87)} [النساء: 87]

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான் அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார் ? ( 4 :87 )

அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் கற்பனைகளே தவிர கடவுள்கள் அல்ல எனவும் இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.
ஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதோ , ஏசுவதோ கூடாது என்று திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.
முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு தான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாக கருதுவோரை எக்காரணம் கொண்டு ஏசக் கூடாது எனக் கூறி பல்சமய மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது. ( பீ.ஜே தஃப்ஸீர் பதிப்பு 14 பக்கம் 1266 )

تفسير ابن كثير ط العلمية (3 / 282):
قَالَ أَبُو جَهْلٍ:
وَأَبِيكَ لَنُعْطِيَنَّكَهَا وَعَشَرَةَ أمثالها قالوا: فَمَا هِيَ؟ قَالَ قُولُوا «لَا إِلَهَ إِلَّا اللَّهُ» فَأَبَوْا وَاشْمَأَزُّوا، قَالَ أَبُو طَالِبٍ: يَا ابْنَ أَخِي قُلْ غَيْرَهَا، فَإِنَّ قَوْمَكَ قَدْ فَزِعُوا مِنْهَا، قَالَ «يَا عَمِّ مَا أَنَا بالذي يقول غَيْرَهَا، حَتَّى يَأْتُوا بِالشَّمْسِ فَيَضَعُوهَا فِي يَدِي، وَلَوْ أَتَوْا بِالشَّمْسِ فَوَضَعُوهَا فِي يَدِي، مَا قُلْتُ غَيْرَهَا» إِرَادَةَ أَنْ يُؤَيِّسَهُمْ فَغَضِبُوا، وَقَالُوا: لتكفن عن شتم آلهتنا أو لنشتمنك ونشتمن مَنْ يَأْمُرُكَ، فَذَلِكَ قَوْلُهُ فَيَسُبُّوا اللَّهَ عَدْواً بِغَيْرِ عِلْمٍ .


…. அப்போது அபூ ஜஹ்ல் “ உம்முடைய தந்தை மீது சத்தியமாக ! அது மட்டுமல்ல அதை போன்ற பத்து உறுதிமொழிகளை வேண்டுமென்றாலும் நாங்கள் தருகிறோம் என்று கூறினார் பின்னர் அவர்கள் “ அந்த உறுதிமொழி என்ன ? என்று கேட்டனர்.

அதற்கு நபி ஸல் அவர்கள் “ அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுங்கள் என்று சொன்னார்கள் ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள் அதைக் கேட்டு வெறுப்படைந்தார்கள் பின்னர் அபூதாலிப் ,” என் சகோதரர் மகனே ! இதைத் தவிர வேறு எதை வேண்டுமென்றாலும் நீ கூறு ஏனென்றால் உன் சமுதாயத்தார் இதனால் மிகவும் அச்சமடைந்துள்ளர் என்று கூறினார்.
அதற்க்கு நபி ஸல் அவர்கள் “ என் தந்தையின் சகோதரே ! அவர்கள் சூரியனைக் கொண்டுவந்து என் கையில் வைக்கும் வரை அந்த ஏகத்துவ உறுதிமொழியை தவிர வேறு எதையும் நான் சொல்லமாட்டேன் ஒரு வேளை அவர்கள் சூரியனை என் கையில் கொடுத்தாலும் அதைத் தவிர வேறு எதையும் நான் கூற மாட்டேன் என்று அவர்கள் நிராசையாகும் வகையில் உறுதியாக சொன்னார்கள்.

இதைக் கேட்டுகொண்டிருந்த குறைஷியர் கோபடைந்தனர் நீர் எங்கள் தெய்வங்களை ஏசுவதை நிறுத்திக்கொள்ளும் இல்லையென்றால் உம்மையும் உமக்கு கட்டளையிடுகின்ற உம்முடைய இறைவனையும் நாங்கள் ஏசுவோம் என்று குறைஷித் தலைவர்கள் கூறினர் அப்போதுதான் இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான் ( 6 : 108 ) ( தப்ஸீர் தபரீ பாகம் 5 பக்கம் 304 – 305 )

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ ‏"‏‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ ‏"‏ يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أَمَّهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , “ தம் தாய் தந்தையரை ஏசுபவர் சபிக்கப்பட்டவர் ஆவார் என்று கூறினார்கள் அப்போது ஒரு மனிதர் தம் தாய் தந்தையை எவ்வாறு ஏசுவார் ? என்று கேட்கப்பட்ட்து நபி ஸல் அவர்கள் ஓருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார் உடனே ( பதிலுக்கு ) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் ( ஆக தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார் ) என்றார்கள் இதை அப்துல்லாஹ் பின் அமர் ரலி அறிவிக்கிறார்கள் ( நூல் : புஹாரி 5973 முஸ்லிம் 146 )

இவ்வாறே அல்லாஹ் ஏசப்பட இறை நம்பிக்கையாளர்கள் காரணமாக இருக்க கூடாது என்பதையே இந்த வசனம் உணர்த்துகிறது
ஆதார நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் ( பாகம் 3 பக்கம் 282-283 )

No comments:

Post a Comment