باب الصدق
பாடம் : 4 உண்மை பேசுதல்
قَالَ الله تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا
مَعَ الصَّادِقِينَ} [التوبة: 119] وَقالَ تَعَالَى:
{وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ}
[الأحزاب: 35] وَقالَ تَعَالَى: {فَلَوْ صَدَقُوا اللَّهَ لَكَانَ خَيْراً لَهُمْ}
[محمد: 21]
நம்பிக்கை
கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! உண்மையாளர்களுடன் ஆகுங்கள் ! ( 9 : 119 )
உண்மை பேசும் ஆண்களும்
, பெண்களும் ( 33:35)
…அவர்கள் அல்லாஹ்விடம்
உண்மையாக நடந்து கொண்டால் அது அவர்களுக்கு சிறந்தது(47:21)
54-فَالأَوَّلُ: عَن ابْنِ مَسْعُودٍ رضي اللَّه عنه عن النَّبِيَّ
صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ: "إِنَّ الصَّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ
وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ ليصْدُقُ حَتَّى يُكتَبَ
عِنْدَ اللَّهِ صِدِّيقاً، وإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الفجُورِ وَإِنَّ الفجُورَ
يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكتَبَ عِنْدَ اللَّهِ
كَذَّاباً" متفقٌ عَلَيهِ
54.இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்.
இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்)
ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர்
பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 6094 , முஸ்லிம் 2607 )
55-الثَّاني: عَنْ أبي مُحَمَّدٍ الْحَسنِ بْنِ عَلِيِّ بْنِ أبي طَالِبٍ،
رَضيَ اللَّهُ عَنْهما، قَالَ حفِظْتُ مِنْ رسولِاللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم:
"دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَريبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمأنينَةٌ، وَالْكَذِبَ
رِيبةٌ" رواه التِرْمذي وَقالَ: حديثٌ صحيحٌ.
قَوْلُهُ:"يرِيبُكَ"هُوَ
بفتحِ الياء وضَمِّها، وَمَعْناهُ: اتْرُكْ مَا تَشُكُّ في حِلِّه، واعْدِلْ إِلى مَا
لا تَشُكُّ فِيهِ.
55.அபூ முஹம்மத் ஹஸன் இப்னு
அலீ ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
“ உமக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை
விட்டுவிடுவீராக ! உமக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக ! நிச்சயமாக , உண்மை
அமைதி ( அளிக்கும் ) பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்”என்று நபி ஸல் கூறியதை நான் மனனம்
செய்துள்ளேன்.
( திர்மிதீ 2518 தரம் : ஸஹீஹ் )
56-الثَّالثُ: عنْ أبي سُفْيانَ صَخْرِ بْنِ حَربٍ. رضيَ اللَّه عنه.
في حديثِه الطَّويلِ في قِصَّةِ هِرقْلُ، قَالَ هِرقْلُ: فَماذَا يَأْمُرُكُمْ يعْني
النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ أَبُو سُفْيَانَ: قُلْتُ: يقولُ"اعْبُدُوا
اللَّهَ وَحْدَهُ لا تُشرِكُوا بِهِ شَيْئاً، واتْرُكُوا مَا يَقُولُ آباؤُكُمْ، ويَأْمُرنَا
بالصَّلاةِ والصِّدقِ، والْعفَافِ، والصِّلَةِ". متفقٌ عليه.
56.அபூ சுப்ஃயான்
(ரலி ) அறிவிக்கின்றார்கள் .
( நீண்ட ஹதீஸின் சுருக்கம்
) உங்களுக்கு அவர் நபி ஸல் கட்டளையிட்டது என்ன ? என்று மன்னர் ஹிர்கல் கேட்டார் “ அல்லாஹ்வை
மட்டும் வணங்குங்கள் எதையும் அவனுக்கு இணை வைக்காதீர்கள் , உங்கள் முன்னோர் கூறுவதை
விட்டுவிடுங்கள் என்று கூறும் நபி ஸல் எங்களுக்குத் தொழுகையை , உண்மை பேசுவதை, பத்தினித்தனத்தை,
உறவினருடன் சேர்ந்து வாழ்வதைக் கட்டளையிட்டார்கள்”என்று கூறினேன்
( புஹாரி 7 முஸ்லிம்
1773 )
57-الرَّابِعُ: عَنْ أبي ثَابِتٍ، وقِيلَ: أبي سعيدٍ، وقِيلَ: أبي الْولِيدِ،
سَهْلِ بْنِ حُنيْفٍ، وَهُوَ بدرِيٌّ، رضي اللَّه عنه، أَن النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم قَالَ: "مَنْ سَأَلَ اللَّهَ، تعالَى الشِّهَادَة بِصِدْقٍ بَلَّغهُ اللَّهُ
مَنَازِلَ الشُّهدَاء، وإِنْ مَاتَ عَلَى فِراشِهِ" رواه مسلم.
57.ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி ) அறிவிக்கின்றார்கள்
:
“ தான் போரில் மரணிப்பதை
உண்மையாக அல்லாஹ்விடம் ஒருவர் கேட்டால் அவர் தன் படுக்கையில் ( சாதாரணமாக ) மரணித்தாலும்
உயிரைத் தியாகம் செய்தோரின் அந்தஸ்தை அவருக்கு அல்லாஹ் வழங்குவான் “ என்று நபி ஸல்
கூறினார்கள் .( முஸ்லிம் 1909 )
58-الخامِسُ: عَنْ أبي هُريْرة رضي اللَّهُ عنه قَالَ: قَالَ رسولُ
اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِياءِ صلواتُ اللَّه وسلامُهُ علَيهِمْ فَقَالَ
لقوْمِهِ: لا يتْبعْني رَجُلٌ ملَكَ بُضْعَ امْرَأَةٍ. وَهُوَ يُرِيدُ أَن يَبْنِيَ
بِهَا وَلَمَّا يَبْنِ بِها، وَلا أَحدٌ بنَى بيُوتاً لَمْ يرفَع سُقوفَهَا، وَلا أَحَدٌ
اشْتَرى غَنَماً أَوْ خَلَفَاتٍ وهُو يَنْتَظرُ أوْلادَهَا. فَغزَا فَدنَا مِنَ الْقَرْيةِ
صلاةَ الْعصْرِ أَوْ قَريباً مِنْ ذلكَ، فَقَال للشَّمس: إِنَّكِ مَأمُورةٌ وأَنا مأمُورٌ،
اللهمَّ احْبسْهَا علَينا، فَحُبستْ حَتَّى فَتَحَ اللَّهُ عليْهِ، فَجَمَعَ الْغَنَائِم،
فَجاءَتْ يَعْنِي النَّارَ لتَأكُلهَا فَلَمْ تطْعمْهَا، فَقَالَ: إِنَّ فِيكُمْ غُلُولاً،
فليبايعنِي منْ كُلِّ قبِيلَةٍ رجُلٌ، فلِزقتْ يدُ رَجُلٍ بِيدِهِ فَقَالَ: فِيكُم
الْغُلولُ، فليبايعنِي قبيلَتُك، فلزقَتْ يدُ رجُليْنِ أو ثلاثَةٍ بِيَدِهِ فقَالَ:
فِيكُمُ الْغُلُولُ، فَجاءوا برَأْسٍ مِثْلِ رَأْس بَقَرَةٍ مِنْ الذَّهبِ، فوضَعها
فَجَاءَت النَّارُ فَأَكَلَتها، فلمْ تَحل الْغَنَائِمُ لأحدٍ قَبلَنَا، ثُمَّ أَحَلَّ
اللَّهُ لَنا الغَنَائِمَ لمَّا رأَى ضَعفَنَا وعجزنَا فأحلَّها لنَا" متفقٌ عَلَيهِ.
"الخلفاتُ"بفتحِ
الخاءِ المعجمة وكسرِ اللامِ: جمْعُ خَلِفَةٍ، وهِي النَّاقَةُ الحاملُ.
58. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல்
இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர
வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு)
வரவேண்டாம்' என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ
நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில்
அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்
போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, 'நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய்.
நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு' என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும்
வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த
பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து)
நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் 'உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள்
ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம்
உறுதி மொழி கொடுக்கட்டும்' என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக்
கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்' என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய
கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது' என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு
வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான்.
நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 3124 முஸ்லிம் 1747 )
59-السادِسُ: عن أبي خالدٍ حكيمِ بنِ حزَامٍ. رضِيَ اللَّهُ عنه، قَالَ:
قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "الْبيِّعَان بالخِيارِ مَا
لَمْ يَتفرَّقا، فإِن صدقَا وبيَّنا بوُرِك لهُما في بَيعْهِما، وإِن كَتَما وكذَبَا
مُحِقَتْ بركةُ بيْعِهِما" متفقٌ عليه.
59. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை
முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத்
தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்!
குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!'
என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
( புஹாரி 2079 முஸ்லிம் 1532 )
No comments:
Post a Comment