إِنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ لِلنَّاسِ
بِالْحَقِّ ۖ فَمَنِ اهْتَدَىٰ فَلِنَفْسِهِ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا
ۖ وَمَا أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ (41)
அப்துல் ஹமீத் பாகவி :
(நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின்
நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உங்கள்மீது இறக்கி வைத்தோம்.
ஆகவே, எவன் இதனைப் பின்பற்றி நடக்கின்றானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகின்றானோ அவன், வழி தவறியதன் பலன் அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீங்கள்
அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல.(39:41)
ஜான் டிரஸ்ட் :
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி
நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப்
போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர்
அல்லர்.(39:41)
இக்பால் மதனீ :
( நபியே! ) நிச்சயமாக நாம் , மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டுள்ள ( இவ்) வேதத்தை
உம் மீது இறக்கினோம்; ஆகவே எவர் நேர்வழி பெற்று விடுகின்றாரோ அது அவருக்கே ( நன்மை)
ஆகும் ; எவர் ( அதிலிருந்து ) வழிகெட்டுவிடுகின்றாரோ அவர் வழிகெடுவதெல்லாம் அவரின்
மீதே ( கேடாக ) ஆகும்; ( நபியே !) நீர் அவர்களுக்காகப் பொறுப்பேற்றுகொள் பவரும் அல்லர்.(39:41)
IFT :
(நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும்
சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும்.
யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும்.
நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.(39:41)
PJ :
மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர்வழி
பெற்றவர் தமக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தமக்கு எதிராகவே வழிகெடுகிறார்.
(முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.(39:41)
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா
சத்தியத்தை கொண்டுள்ள இவ்வேதத்தை மனிதர்களுக்காக நிச்சயமாக நாம் உம்மீது இறக்கிவைத்தோம்.ஆகவே
யார் நேர்வழி பெறுகிறாரோ ( அது ) அவருக்கே ( நன்மை ) யாகும்.யார் வழி தவறுகிறானோ அவன்
தனக்கு எதிராகவே வழி தவறுகிறான் மேலும் ( நபியே !) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளராக
இல்லை.(39:41)
No comments:
Post a Comment