Tuesday, January 30, 2018

அல்லாஹ் போதுமானவன்!




அல்லாஹ் போதுமானவன்!

அல்லாஹ் போதுமானவன் என்ற சொற்றொடரை அடிக்கடி நம்மவர்கள் பயன்படுத்துவதை நாம் செவியுறுகிறோம். அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற தரஹாக்களில் தவம் கிடப்பதைப் காணும் போது,"அல்லாஹ் இவர்களுக்குப் போதவில்லை" என்று தான் கருத வேண்டியுள்ளது ,ஏதோ சம்பிரதாயத்திற்காக இந்த சொற்றொடரைப் பயன் படுத்திகிறார்களேன்றி அதன் பொருளை அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

திருக்குர் ஆனின் போதனைகளை அவர்கள் உணர்ந்திருந்தால் இந்த நிலமைக்குத் தங்களை ஆக்கிக் கொள்ளமாட்டார்கள். 'அல்லாஹ் போதுமானவன் அல்ல' என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களைப்பற்றித் இறைவன் தன்னுடைய திருமறையில்  சொல்லுவதை பார்ப்போம்.

قُلْ اَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ‌ؕ وَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏ 

"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.( 5:76)

   وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏ 

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!( 10:106)

سَيَـقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَـتْنَاۤ اَمْوَالُـنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَـنَا‌ ۚ يَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَـيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ لَـكُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔــا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ‌ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏ 

 "எங்கள் செல்வங்களும், எங்கள் குடும்பங்களும் எங்களைத் திசை திருப்பி விட்டன! எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக!'' என்று கிராமவாசிகளில் போருக்கு வராமல் தங்கி விட்டோர் (முஹம்மதே!) உம்மிடம் கூறுவார்கள். தமது உள்ளங்களில் இல்லாத ஒன்றைத் தமது நாவுகளால் கூறுகின்றனர். "அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.(48:11)

   قُلْ اِنِّىْ لَاۤ اَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا‏ 

"நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை" என்றும் கூறுவீராக!(72:21)


  قُلْ اِنِّىْ لَنْ يُّجِيْرَنِىْ مِنَ اللّٰهِ اَحَدٌ  ۙ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۙ‏ 

"அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக!(72:22)

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ؕ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.(6:17)


  قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ‌ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ‌ ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ‌ ؕ اَفَلَا تَتَفَكَّرُوْنَ 

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!(6:50)


No comments:

Post a Comment