இறை திருப்தியை பெறுவதில் ஆர்வம் காட்டுவோம்
ஒரு முஃமினிடம் இருக்க வேண்டிய முக்கியமான இலட்சியமாக இருக்கவேண்டிய ஒன்று இறை திருப்தியை பெறுவது ஆகும். நாம் செய்யும் அனைத்து விஷயங்களிலும் இறைவன் அதை பொறுந்தி கொள்ள வேண்டும். அவன் எப்படி பட்ட சூல் நிலையில் இருந்தாலும் சரியே அவன் இலக்காக வைத்து பார்க்கும் செயல் எதுவாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இறை திருப்தியாக தான் இருக்க வேண்டும்.
ஒர் முஃமீன் அடிக்கடை பெருமை படக்கூடிய சக முஃமீன்கள் எனக்கு இந்த ரஹ்மத் கிடைக்காதா என்று ஏக்கப்படும் பண்பும் இந்த இறை திருப்தி மட்டும் தான்.
அல்லாஹ் தனது திருமறையில் எங்கு எல்லாம் “ ரலியல்லாஹு அன்ஹு“ அதாவது அல்லாஹ் அவர்களை பொறுந்தி கொண்டான் அவர்களும் அவனை பொறுந்தி கொண்டார்கள் என்ற வசனத்தை பார்க்கும் போது எல்லாம் நமக்கு ஒர் ஏக்கம் வரவேண்டும். இதை போல் அல்லாஹ் எங்களுக்கும் சொல்ல மாட்டானா என்று வரவேண்டும்
அதைபோல் திருமறையில் நபிமார்களுடைய வரலாறுகளை சொல்லும் போது இவர் நல்ல அடியாராக இருந்தார் ,பெற்றோர்க்கு நன்மை செய்ய கூடியவராக இருந்தார் என்று பாராட்டுகிறான்.. இதை பார்த்து ஒர் முஃமீன் உள்ளத்தில் நினைக்க வேண்டும் அல்லாஹ் இதை போல் செயல்களை நான் செய்தால் பொறுந்தி கொள்ளுவானா ? அந்த செயல்களை அங்கீகரித்து கொள்ளுவானா? என்று ஏக்கம் கொள்ள வேண்டும்.
காரணம், ஒர் முஸ்லிம் சிறந்த முறையில் யோசித்து பார்த்தான் என்றால் சக மனிதர்களை எவரையும் அவனால் 100/100 சதவீதம் திருப்தி படுத்த முடியாது அதை போல் அவனாலும் பிறருக்கு 100/100 சதவீதம் திருப்தி அளிப்பது போல் நடக்க முடியாது என்பதே உண்மை அதையும் மனிதன் அறிந்து தான் வைத்து உள்ளான்.
ஆனால் இறைவனோ தன்னுடைய அடியான் செய்யும் சின்ன விஷயங்களை கூட பொறுந்தி கொள்ளுவதாக சொல்லுகிறான். ஒரு மனிதன் பிற மனிதனுக்கு 60 ஆண்டுகாலம் நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார் ஒர் நாள் அவற்றுக்கு மாற்றமாக ஒர் விஷயம் செய்யும் போது உதவி பெற்றவர் எடுத்த எடுப்பிலேயே அவர் செய்ய அனைத்து விதமான நற்பண்புகளையும் மறந்து விட்டு அந்த தீய பண்பை மட்டுமே முதன்மையாக சொல்லக்கூடிய செய்தியை பரவலாக நான் காணுகிறோம்.
ஆனால் இறைவனை பொறுத்த வரை நீங்கள் 65 ஆண்டுகாலங்கள் இவ்வுலகில் அனியாயம் செய்து அவனுக்கு இணைவைத்து விட்டு அதை தவறு என்று உணர்ந்து உள்ளப்பூர்வமாக ஒருவர் கலிமா சொன்னார் என்றால் அவர் முன்பு செய்த அனைத்து விஷயங்களையும் இறைவன் மறந்து விடுகிறான். ஆக இறை திருப்தி என்பது இலகுவாக பெறக்கூடிய ஒர் விஷயம்.
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمُعَاذٌ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ قَالَ " يَا مُعَاذُ بْنَ جَبَلٍ ". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. قَالَ " يَا مُعَاذُ ". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثَلاَثًا. قَالَ " مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صِدْقًا مِنْ قَلْبِهِ إِلاَّ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ ".
ஒரே வாகனத்தின் மீது முஆது(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் 'முஆதே!' என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத்(ரலி) கூறினார். 'முஆதே!' என்று என மீண்டும் நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத்(ரலி) கூறினார்.
இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு 'தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டேன்'( புஹாரி 128 )
அப்படி பட்ட ரஹ்மானை நாம் திருப்தி படுத்தாமல் இருந்தோம் என்று சொன்னால் அல்லது இறைவன் நம் மீது திருப்தி அடைய வில்லை என்று சொன்னால் நாம் இறைவனை சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த உலகத்தில் மனிதனுக்கு இறைவன் ஃபிக்ஹையும் எந்த அளவுக்கு அறிவையும் கொடுத்து இருக்கிறானோ அதன் அடிப்படையிலேயே அவனுடைய செயல்கள் அமைந்து இருக்கும் .
இந்த உலகத்தில் உள்ள கருவூலங்களை உணர்ந்து விளங்கி நடக்க கூடிய மக்களும் இருக்க தான் செய்கிறார்கள் அதே நேரத்தில் இந்த உலகத்தை பற்றி சரியாக தெரியாது ஏனோ தானோ என்று வாழக்கூடியவர்களும் இருக்கிறார்கள் .
இறைவன் தன்னுடைய அடியான் மீது திருப்தி அடைந்து விட்டான் என்று சொன்னால் இந்த உலகத்தில் அனைத்தையும் கொடுப்போம் என்று சொல்லவில்லை
ஆனால் இந்த உலகத்தில் அவனுக்கு கடைக்காத விஷயங்கள் இருந்தாலும் அவனை திருப்தியாக அவன் வாழவைப்பான்.
அதைபோல் ஒருவர் மீது இறைவன் திருப்தி கொள்ளவில்லை என்றால் அவனுக்கு உலகில் உள்ள அனைத்து விஷயங்களை கொடுத்து அவனை திருப்தி இல்லாதவனாக வாழவைப்பான்
இறை திருப்தி பெரியதாக இருந்தாலும் ஆனால் அதை இலகுவாக அடைந்து கொள்ள முடியும்.,
அதைபோல் சில தவறான புரிதலும் நம்மீல் உள்ளது சிலர் குர் ஆன் ஸுன்னாவை பேசுவதினால் இவர் தக்வா வாதி என்று நாம் கணக்கில் வைத்து இருப்போம் இன்னொருவர் எந்த ஒர் நல்ல அமல்களையும் வழிப்படையாக செய்து இருக்க மாட்டார் அனால் அவர் இறைவன் இடத்தில் சிறந்தவராக கருத்தப்படுவார்.
وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.( 9 :72)
திருப்தியை இந்த அளவு விசாலமாக விளங்கி வைத்து இருக்கிறோமா என்றால் இல்லை ! இது ஒர் சின்ன விஷயமாக புரிந்து வைத்து இருக்கிறோம்.
இந்த உலகத்தில் கொடுப்பதும் தடுப்பதும் அழிப்பது ஒருவரை தாழ்த்துவது , உயர்த்துவதும் தன்னுடைய கையில் வைத்து உள்ள ரஹ்மான் அவன் திருப்தி பட்டால் தான் வாழ்வே அப்படி நாம் சார்தானமாக வேலை செய்ய கூடிய நாம் பிறரை திருப்தி படுத்த குறைந்ததாவது முயற்ச்சிகளை எடுப்போம்….
உதாரணமாக : உழியர் + முதலாளி
பின்வரும் ஹதீஸையை பாருங்கள் முஸ்லிம் [302] நீண்ட ஹதீஸ் சுருக்கம் :
فَيَقُولُ لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُونَ يَا رَبَّنَا أَىُّ شَىْءٍ أَفْضَلُ مِنْ هَذَا
அதற்கு இறைவன், "உங்களுக்கு இதைவிடச் சிறந்த வேறொன்று உள்ளது" என்று கூறுவான். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?" என்று கேட்பார்கள்.
فَيَقُولُ رِضَاىَ فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا
"எனது திருப்தி(தான் அது). இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்" என்பான் இறைவன்.
சொர்க்கத்தை விட இன்பம் எது ? இறைவனின் திருப்தி
சொந்த காரம் நம்மீது திருப்தி கொண்டால் வேறு என்ன இருக்க முடியும் ?
No comments:
Post a Comment