كتاب الطهارة
அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்
(91) باب فِي الْجُنُبِ يُصَافِحُ
பாடம்: 91 குளிப்புக் கடமையானவரோடு கைகொடுக்க செய்ய அனுமதி
230-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مِسْعَرٍ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ،
عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ
فَأَهْوَى إِلَيْهِ، فَقَالَ: إِنِّي جُنُبٌ، فَقَالَ: «إِنَّ الْمُسْلِمَ لَا
يَنْجُسُ»
[حكم
الألباني] : صحيح
230.ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரை (ஹுதைபாவை)
சந்தித்து கைகொடுப்பதற்காக அவரை நோக்கி வந்த போது, அவர் சொன்னார், 'நான் குளிப்புக் கடமையானவனாக இருக்கிறேன்'. அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,
'ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார்'.
தரம் : ஸஹீஹ்
231-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، وَبِشْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي
رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَأَنَا جُنُبٌ،
فَاخْتَنَسْتُ فَذَهَبْتُ فَاغْتَسَلْتُ، ثُمَّ جِئْتُ فَقَالَ: «أَيْنَ كُنْتَ
يَا أَبَا هُرَيْرَةَ؟» قَالَ: قُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ
أُجَالِسَكَ عَلَى غَيْرِ طَهَارَةٍ. فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ
الْمُسْلِمَ لَا يَنْجُسُ» وَقَالَ فِي حَدِيثِ بِشْرٍ، حَدَّثَنَا حُمَيْدٌ،
حَدَّثَنِي بَكْرٌ
[حكم
الألباني] : صحيح
231.மதீனாவின் ஒரு தெருவில் குளிப்புக்கடமையான
என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். நான் பாதையை மாற்றிக் கொண்டு வேறு வழியாக
சென்று விட்டேன். நான் குளித்து விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். 'அபூஹுரைராவே! நீர் எங்கே சென்றிருந்தீர்' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நான், 'நான் குளிப்புக்கடமையானவனாக இருந்தேன், தூய்மையற்ற நிலையில் உங்கள் முன் அமர்ந்திருப்பதை வெறுத்தேன்' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான்' என்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்:
பிஸ்ர் அறிவிக்கும் இதே ஹதீஸில் பக்ர்
என்பவரிடமிருந்து ஹுமைத் அறிவிக்கிறார்.
தரம் : ஸஹீஹ்
(92) باب فِي الْجُنُبِ يَدْخُلُ الْمَسْجِدَ
பாடம்: 92 குளிப்புக் கடமையானவர் பள்ளியில் பிரவேசித்தல்
232-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَفْلَتُ
بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَتْنِي جَسْرَةُ بِنْتُ دَجَاجَةَ قَالَتْ: سَمِعْتُ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَوُجُوهُ بُيُوتِ أَصْحَابِهِ شَارِعَةٌ فِي الْمَسْجِدِ،
فَقَالَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ». ثُمَّ دَخَلَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَصْنَعِ الْقَوْمُ شَيْئًا
رَجَاءَ أَنْ تَنْزِلَ فِيهِمْ رُخْصَةٌ، فَخَرَجَ إِلَيْهِمْ بَعْدُ فَقَالَ:
«وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ، فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ
لِحَائِضٍ وَلَا جُنُبٍ» قَالَ أَبُو دَاوُدَ: هُوَ فُلَيْتٌ الْعَامِرِيُّ
[حكم
الألباني] : ضعيف
232.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய
தோழர்களின் வீட்டு வாயில்கள் (பள்ளிக்குள் வந்து போக வசதியாக பள்ளியை முன்னோக்கியவாறு)
பள்ளியை ஒட்டி இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த (வீட்டு) வாயில்களை பள்ளியை விட்டும்
(வேறு திசையை) நோக்கி மாற்றியமையுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு நபி (ஸல்)
(வீட்டிற்குள் அல்லது பள்ளிக்குள்) நுழைந்து விட்டனர். தங்களுக்கு (இந்த உத்தரவில்)
சலுகை கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து அவர்கள் எதையுமே செய்யாதிருந்தனர். இதற்கு
பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் வந்து, 'இந்த வீட்டு வாயில் பள்ளியை விட்டும்
(வேறு திசையை நோக்கி) மாற்றியமையுங்கள். ஏனெனில் பள்ளியை மாதவிடாய் ஆனவளுக்கும், குளிப்புக் கடமையானவர்களுக்கும் (நுழைவதற்கு) நான் அனுமதிக்க
மாட்டேன்' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்லத்
என்பவர் புலைத் அல்ஆமிரி ஆவார்.
தரம் : ளயீப்
(93) باب
فِي الْجُنُبِ يُصَلِّي بِالْقَوْمِ وَهُوَ نَاسٍ
பாடம்: 93 குளிப்புக் கடமையானவர் மறதியாக மக்களுக்கு தொழுகை
நடத்துதல்
233-حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ زِيَادٍ الْأَعْلَمِ، عَنِ
الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ «دَخَلَ فِي صَلَاةِ الْفَجْرِ، فَأَوْمَأَ بِيَدِهِ أَنْ مَكَانَكُمْ،
ثُمَّ جَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ»
[حكم
الألباني] : صحيح
233.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பஜ்ர் தொழுகையில் நுழைந்தார்கள். அப்போது 'நீங்கள் உங்களுடைய இடங்களில் இருந்து கொள்ளுங்கள்'
என்று சைகை செய்தார்கள். பிறகு தனது தலையிலிருந்து நீர்
சொட்டியவாறு வந்து அவர்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
234-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا
حَمَّادُ بْنُ سَلَمَةَ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَقَالَ: فِي أَوَّلِهِ:
«فَكَبَّرَ». وَقَالَ فِي آخِرِهِ: " فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ:
«إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنِّي كُنْتُ جُنُبًا». قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ
الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ: " فَلَمَّا قَامَ فِي مُصَلَّاهُ، وَانْتَظَرْنَا أَنْ
يُكَبِّرَ انْصَرَفَ، ثُمَّ قَالَ: «كَمَا أَنْتُمْ». قَالَ أَبُو دَاوُدَ:
وَرَوَاهُ أَيُّوبُ، وَابْنُ عَوْنٍ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدٍ مُرْسَلًا، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَكَبَّرَ ثُمَّ أَوْمَأَ
بِيَدِهِ إِلَى الْقَوْمِ أَنِ اجْلِسُوا، فَذَهَبَ فَاغْتَسَلَ». وَكَذَلِكَ
رَوَاهُ مَالِكٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ، عَنْ عَطَاءِ بْنِ
يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي
صَلَاةٍ». قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ حَدَّثَنَاه مُسْلِمُ بْنُ
إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى، عَنِ الرَّبِيعِ بْنِ مُحَمَّدٍ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ كَبَّرَ»
[حكم
الألباني] : صحيح
234.இந்த ஹதீஸ் மேலுள்ள அதே இஸ்னாத், பொருளைக் கொண்டே இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான
யசீத்; பின் ஹாரூன் இந்த ஹதீஸின் ஆரம்பத்தில்
(நுழைந்தார்கள்) என்பதை அடுத்து தக்பீர் கூறினார்கள் என்றும் அதன் கடைசியில் 'அவர்கள் தொழுகையை முடித்த போது நானும் மனிதன் தான், நான் குளிப்புக் கடமையாக இருந்தேன்' என்று சொன்னார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசலமா
வாயிலாக ஜுஹ்ரி அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது அவர்கள் தான் தொழுமிடத்தில் நின்று
அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள்
(தொழுகையை விட்டும்) திரும்பி விட்டார்கள். பிறகு 'அப்படியே இருங்கள்' என்று சொன்னார்கள் என்ற குறிப்பிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். பிறகு கையினால் மக்களுக்கு உட்காருங்கள் என்று
சைகை செய்து விட்டு சென்று குளித்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை
முர்ஸலாக முஹம்மத் அவர்கள் வாயிலாக அய்யூப், இப்னுஅவ்ன், ஹிஷாம் ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இதே போன்று (முர்ஸலாக) 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தக்பீர் சொன்னார்கள்' என்று அதா பின் யஸார் வழியாக இஸ்மாயீல் பின் அபூஹகீம் மூலம்
இமாம் மாலிக் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் 'தக்பீர் கூறினார்கள்' என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து ரபீஃ
பின் முஹம்மது, யஹ்யா, அபான் ஆகியோர் வாயிலாக இதை எமக்கு முஸ்லிம் பின் இப்ராகீம் அறிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
235-حَدَّثَنَا
عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا
الزُّبَيْدِيُّ، ح وحَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْأَزْرَقِ، أَخْبَرَنَا ابْنُ
وَهْبٍ، عَنْ يُونُسَ، ح وحَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ إِمَامُ مَسْجِدِ صَنْعَاءَ، حَدَّثَنَا رَبَاحٌ، عَنْ
مَعْمَرٍ، ح وحَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ
الْأَوْزَاعِيِّ كُلُّهُمْ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ: " أُقِيمَتِ الصَّلَاةُ، وَصَفَّ النَّاسُ صُفُوفَهُمْ،
فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا قَامَ فِي
مَقَامِهِ ذَكَرَ أَنَّهُ لَمْ يَغْتَسِلْ فَقَالَ لِلنَّاسِ: «مَكَانَكُمْ»،
ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، فَخَرَجَ عَلَيْنَا يَنْطُفُ رَأْسُهُ، وَقَدِ اغْتَسَلَ
وَنَحْنُ صُفُوفٌ وَهَذَا لَفْظُ ابْنُ حَرْبٍ، وَقَالَ عَيَّاشٌ فِي حَدِيثِهِ
«فَلَمْ نَزَلْ قِيَامًا نَنْتَظِرُهُ حَتَّى خَرَجَ عَلَيْنَا وَقَدِ اغْتَسَلَ»
[حكم
الألباني] : صحيح
235.இகாமத் சொல்லப்பட்டு மக்கள் அணியில்
நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இல்லத்திலிருந்து) வெளிவந்து
தனது இடத்தில் வந்து நின்றதும் தான் குளிக்க வில்லை என்று அவர்களுக்கு ஞாபகம் வந்தது.
உடனே மக்களை நோக்கி உங்களுடைய இடத்தில் இருந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். பிறகு
தன்னுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று குளித்துவிட்டு தனது தலையிலிருந்து நீர் சொட்டியவாறு
அணியில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
இது இதன் அறிவிப்பாளரான இப்னு ஹர்ப்
என்பாரின் உரை நடையாகும். அய்யாஷ் என்பார் தனது அறிவிப்பில் 'அவர்கள் குளித்து விட்டு எங்களிடம் வருகின்ற வரை நாங்கள் அவர்களை
நின்றவாறே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்' என்று கூறுகிறார்.
தரம் : ஸஹீஹ்
(94) باب
فِي الرَّجُلِ يَجِدُ الْبِلَّةَ فِي مَنَامِهِ
பாடம்: 94 இரவில் தூங்கி எழுந்து ஆடையில் ஈரத்தை காணுதல்
236-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ،
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الْعُمَرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ،
عَنْ عَائِشَةَ قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلَا يَذْكُرُ احْتِلَامًا. قَالَ: «يَغْتَسِلُ»،
وَعَنِ الرَّجُلِ يَرَى أَنَّهُ قَدْ احْتَلَمَ وَلَا يَجِدُ الْبَلَلَ. قَالَ:
«لَا غُسْلَ عَلَيْهِ» فَقَالَتْ: أُمُّ سُلَيْمٍ الْمَرْأَةُ تَرَى ذَلِكَ
أَعَلَيْهَا غُسْلٌ؟ قَالَ: «نَعَمْ. إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ»
[حكم
الألباني] : حسن إلا قول أم سليم المرأة ترى الخ
236.(ஒரு மனிதர் ஒரு மாதிரியான கனவு கண்டு விந்து வெளிப்பட்டதாக அவருக்கு நினைவு இல்லை)
ஆனால் ஆடையில் ஈரத்தைக் காண்கிறார். (அவர் குளிக்க வேண்டுமா?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட
போது, 'அவர் குளிக்க வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 'ஒருவர் (ஒரு மாதிரியான) கனவு கண்டதாக
நினைவு கொள்கிறார். ஆனால் அவர் ஈரத்தைக் காண்வில்லை என்றால் (அவர் குளிக்க வேண்டுமா?) என்ற வினவப்பட்ட போது அவர் குளிக்க
வேண்டியதில்லை' என்று பதிலளித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ஒரு பெண் இதை (ஈரத்தை)
காணுகிறாள் என்றால் அவள் மீது குளிப்புக் கடமையாகுமா? என்று கேட்ட போது 'ஆம் பெண்கள் ஆண்களை (இது விஷயத்தில்)
ஒத்தவர்கள் தான்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்.
தரம் : ஹஸன்
(95) باب
فِي الْمَرْأَةِ تَرَى مَا يَرَى الرَّجُلُ
பாடம்: 95 ஆண்களை போன்று பெண்களும் ஈரத்தைக் கண்டால்
237-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ
شِهَابٍ قَالَ: قَالَ عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ
الْأَنْصَارِيَّةَ هِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ،
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ أَرَأَيْتَ
الْمَرْأَةَ إِذَا رَأَتْ فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ أَمْ
لَا؟ قَالَتْ عَائِشَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«نَعَمْ. فَلْتَغْتَسِلْ إِذَا وَجَدَتِ الْمَاءَ». قَالَتْ عَائِشَةُ:
فَأَقْبَلْتُ عَلَيْهَا، فَقُلْتُ: أُفٍّ لَكِ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟
فَأَقْبَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:
«تَرِبَتْ يَمِينُكِ يَا عَائِشَةُ، وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ؟» قَالَ
أَبُو دَاوُدَ [ص: 62] : وَكَذَلِكَ رَوَى عُقيْلٌ، وَالزُّبَيْدِيُّ، وَيُونُسُ،
وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي
الْوَزِيرِ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، وَوَافَقَ الزُّهْرِيُّ: مُسَافِعًا
الْحَجَبِيَّ قَالَ: عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَأَمَّا هِشَامُ بْنُ
عُرْوَةَ فَقَالَ: عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ
أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ
[حكم
الألباني] : صحيح
237.ஆசியா, உம்முஸுலைம் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கமடைய
மாட்டான். ஒரு பெண் தூக்கத்தில் ஆண் காண்பதையே கண்டால் அவள் குளிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று
வினவிய போது, 'ஆம் அவள் நீரைக் கண்டால் குளிக்க வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறி அன்னையார் அவர்கள் தொடர்ந்து அறிவிக்கின்றார்கள்: நான் அவர்களை (உம்முஸுலைம்)
நோக்கி சீ! ஒரு பெண்ணும் இதை காண்பாளா? என்று கேட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, 'ஆயிஷாவே! உனது வலக்கரம் மண்ணை தழுவட்டும்' பின் எவ்வாறு (தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உருவ) ஒற்றுமை
தோன்றுகிறது? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் அவர்கள்
மூலம் ஜுபைதி, உகைல், யூனுஸ், ஜுஹ்ரி அவர்களுடைய சகோதரன் மகனும், ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் மூலம் இப்ராகீம் பின் அபுல்
வசீர் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர்.
ஜுஹ்ரி அவர்களுக்கு உடன்பட்டு முஸாபிஃ
அல்ஹஜபீ என்பார் 'ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா
மூலம் என்றே அறிவிக்கின்றார். ஆனால் ஹிஷாம் பின் உர்வா அவர்கள் உம்முஸுலைம் அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்' என்று உம்முஸலமா, ஜைனப் பின்த் அபீஸலமா வாயிலாக உர்வா
அவர்களிடமிருந்து என்று அறிவிக்கிறார்.
தரம் : ஸஹீஹ்
(96) باب
فِي مِقْدَارِ الْمَاءِ الَّذِي يُجْزِئُ فِي الْغُسْلِ
பாடம்: 96 குளிப்பதற்கு போதுமான தண்ணீர் அளவு
238-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ
شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
- هُوَ الْفَرَقُ - مِنَ الجَنَابَةِ» قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَى ابْنُ
عُيَيْنَةَ نَحْوَ حَدِيثِ مَالكٍ قَالَ أَبُو دَاوُدَ قَالَ: مَعْمَرٌ، عَنِ
الزُّهْرِيِّ فِي هَذَا الْحَدِيثِ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِيهِ قَدْرُ
الْفَرَقِ» قَالَ أَبُو دَاوُدَ: سَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ:
الْفَرَقُ: سِتَّةَ عَشَرَ رِطْلًا وَسَمِعْتُهُ يَقُولُ: صَاعُ ابْنِ أَبِي
ذِئْبٍ خَمْسَةُ أَرْطَالٍ وَثُلُثٌ. قَالَ: فَمَنْ قَالَ: ثَمَانِيَةُ أَرْطَالٍ؟
قَالَ: لَيْسَ ذَلِكَ بِمَحْفُوظٍ قَالَ: وسَمِعْت أَحْمَد يَقُولُ: مَنْ أَعْطَى
فِي صَدَقَةِ الْفِطْرِ بِرِطْلِنَا هَذَا خَمْسَةَ أَرْطَالٍ وَثُلُثًا فَقَدْ
أَوْفَى قِيلَ الصَّيْحَانِيُّ ثَقِيلٌ. قَالَ: الصَّيْحَانِيُّ أَطْيَبُ قَالَ:
لَا أَدْرِي
[حكم
الألباني] : صحيح
238.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கடமையான குளிப்பை ஒரு பரக் அளவு பாத்திரத்தில் நிறைவேற்றுவார்கள். அறிவிப்பவர்: அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
ஒரு பரக் அளவு (நீர்) கொள்ளும் ஒரே
பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் குளிப்போம் என்று அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இந்த ஹதீஸில் ஜுஹ்ரி வாயிலாக மஃமர் அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
மாலிக் அவர்களின் (முதலிலுள்ள) ஹதீஸை
போன்று இப்னு உஐனா அவர்களும் அறிவிக்கின்றார்.
மேலும் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
பரக் என்பது 16 ராத்தல்களாகும்.
தரம் : ஸஹீஹ்
குறிப்பு: வழக்கொழிந்து விட்ட இந்த
ராத்தல் முறையை வைத்து நாம் பரக் என்பதற்கு விளக்கம் காண்பது மிகவும் சிரமம். ஒரு பரக்
எத்தனை 'சாஉ' க்களைக் கொண்டது என்பதை வைத்து அதன் அளவை நாம் அறியலாம்.
மூன்று 'சாஉ'க்கள் கொண்டது ஒரு பரக் ஆகும் என்று
சுப்யான் பின் உஐனா அவர்கள் கூறுவதாக முஸ்லிமில் வரும் அறிவிப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறே ஒரு பெருங்கூட்டம் தெரிவிக்கின்றது
என்று இமாம் நவவீ அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (அவ்னுல் மஃபூத்)
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின்
'சாஉ' என்பது நான்கு முத்துகள் ஆகும் என புகாரியின் விளக்கவுரையில்
கிர்மானி என்பவர் கூறுகின்றார். நடுத்தரமான ஒரு மனிதரின் இரு சிரங்கைகள் நிரம்பியிருப்பது
ஒர முத்து ஆகும் என்று காமூஸ் (அரபி அகராதி) தெரிவிக்கின்றது. (அவ்னுல் மஃபூத்)
(97) باب الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ
பாடம்: 97 கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை
239-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا
أَبُو إِسْحَاقَ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، عَنْ جُبَيْرِ بْنِ
مُطْعِمٍ أَنَّهُمْ ذَكَرُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْغُسْلَ مِنَ الجَنَابَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثًا». وَأَشَارَ
بِيَدَيْهِ كِلْتَيْهِمَا
[حكم الألباني]
: صحيح
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
முன்னிலையில் கடமையான குளிப்பு பற்றி பேசி கொண்டிருந்தனர் அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) நான் எனது தலையில் மூன்று தடவை (நீரை) ஊற்றுவேன் என்று கூறி மேலும் தனது இரு
கைகளில் எப்படி ஊற்றுவது என்று சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்
(ரலி)
தரம் : ஸஹீஹ்
240-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنِ
الْقَاسِمِ [ص: 63] ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَيْءٍ مِنْ
نَحْوِ الْحِلَابِ، فَأَخَذَ بِكَفَّيْهِ فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الْأَيْمَنِ،
ثُمَّ الْأَيْسَرِ، ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ»
[حكم
الألباني] : صحيح
240.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதாக இருந்தால் ஹிலாபை கொண்டு வரச் செய்வார்கள். பிறகு
தன் கைகளால் அள்ளி தனது தலை (முழுவதும்) யில் ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
குறிப்பு :ஹலாப் ஒரு ஒட்டகையில் கரக்கும் பாலை கொள்கின்ற பாத்திரமாகும்.
241-حَدَّثَنَا
يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ
مَهْدِيٍّ، عَنْ زَائِدَةَ بْنِ قُدَامَةَ، عَنْ صَدَقَةَ، حَدَّثَنَا جُمَيْعُ
بْنُ عُمَيْرٍ أَحَدُ بَنِي تَيْمِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ قَالَ: دَخَلْتُ مَعَ
أُمِّي وَخَالَتِي عَلَى عَائِشَةَ، فَسَأَلَتْهَا إِحْدَاهُمَا كَيْفَ كُنْتُمْ
تَصْنَعُونَ عِنْدَ الْغُسْلِ؟ فَقَالَتْ عَائِشَةُ: «كَانَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ
يُفِيضُ عَلَى رَأْسِهِ ثَلَاثَ مَرَّاتٍ، وَنَحْنُ نُفِيضُ عَلَى رُءُوسِنَا
خَمْسًا مِنْ أَجْلِ الضُّفُرِ»
[حكم
الألباني] : ضعيف جدا
241.நான் எனது தாயாருடனும்,
சிறிய தாயாருடனும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம்.
அப்போது அவ்விருவர்களில் ஒருவர் குளிக்கும் போது என்ன செய்வீர்கள்?
என்று அன்னையாரிடம் வினவினார். அதற்கு அன்னையார் அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச் செய்வார்கள்
பிறகு தனது தலையில் மூன்று தடவை தண்ணீரை ஊற்றுவார்கள் நாங்கள் எங்களது தலைகளில் (தலைமுடி)
பின்னல்கள் காரணமாக ஐந்து தடவைகள் ஊற்றுவோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜுமைஃபின் உமைர் அவர்கள்.
தரம் : ளயீப்
242-حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ الْوَاشِحِيُّ، وَمُسَدَّدٌ قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ،
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ
الجَنَابَةِ - قَالَ سُلَيْمَانُ - يَبْدَأُ فَيُفْرِغُ بِيَمِينِهِ عَلَى
شِمَالِهِ» وَقَالَ مُسَدَّدٌ: «غَسَلَ يَدَيْهِ يَصُبُّ الْإِنَاءَ عَلَى يَدِهِ
الْيُمْنَى، ثُمَّ اتَّفَقَا فَيَغْسِلُ فَرْجَهُ»، وَقَالَ مُسَدَّدٌ: «يُفْرِغُ
عَلَى شِمَالِهِ، وَرُبَّمَا كَنَتْ عَنِ الْفَرْجِ، ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ
لِلصَّلَاةِ، ثُمَّ يُدْخِلُ يَدَيْهِ فِي الْإِنَاءِ، فَيُخَلِّلُ شَعْرَهُ،
حَتَّى إِذَا رَأَى أَنَّهُ قَدْ أَصَابَ الْبَشْرَةَ، أَوْ أَنْقَى الْبَشْرَةَ
أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، فَإِذَا فَضَلَ فَضْلَةٌ صَبَّهَا عَلَيْهِ»
[حكم
الألباني] : صحيح
242.அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான
குளிப்பை நிறைவேற்றும் போது இரு கைகளையும் கழுவி நீரை வலது கையின் மீது ஊற்றுவார்கள்.
பிறகு மர்மஸ்தானத்தை கழுவுவார்கள். பிறகு இடது கைக்கு ஊற்றுவார்கள் பிறகு தொழுகைக்கு
உலூச் செய்வார்கள். பிறகு தம் இருகைகளையும் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து)
தம் தலையை கோதி விடுவார்கள். (தலையின்) அடிப்பாகம் நனைந்து விட்டது என்று தோன்றியதும்
தம் தலையில் மூன்று தடவை ஊற்றிக் கொள்வார்கள். அதற்கு பிறகு தண்ணீர் மிச்சமாக இருந்தால்
தலையில் ஊற்றி விடுவார்கள்.
தரம் : ஸஹீஹ்
243-حَدَّثَنَا
عَمْرُو بْنُ عَلِيٍّ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ،
حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنِ النَّخَعِيِّ، عَنِ الْأَسْوَدِ،
عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ بِكَفَّيْهِ
فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ مَرَافِغَهُ، وَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، فَإِذَا
أَنْقَاهُمَا أَهْوَى بِهِمَا إِلَى حَائِطٍ [ص: 64] ، ثُمَّ يَسْتَقْبِلُ
الْوُضُوءَ، وَيُفِيضُ الْمَاءَ عَلَى رَأْسِهِ»
[حكم
الألباني] : صحيح
243.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கடமையான குளிப்பை நிறைவேற்ற விரும்பினால் தன் முன்னங்கைகளைக் கழுவத் துவங்கி அவ்விரண்டையும்
கழுவிய பின்பு கைகால்களின் அந்தரங்கப் பகுதிகளை கழுவி பிறகு தண்ணீர் ஊற்றுவார்கள்.
இரு கைகளையும் அவர்கள் சுத்தம் செய்ததும் அவ்விருகைகளையும் சுவரில் தேய்ப்பார்கள்.
பிறகு உலூச் செய்து தனது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
244-حَدَّثَنَا
الْحَسَنُ بْنُ شَوْكَرٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عُرْوَةَ الْهَمْدَانِيِّ،
حَدَّثَنَا الشَّعْبِيُّ قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا:
«لَئِنْ شِئْتُمْ لَأُرِيَنَّكُمْ أَثَرَ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَائِطِ حَيْثُ كَانَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ»
[حكم
الألباني] : ضعيف
244.நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் இடத்தில் உள்ள சுவரில் அவர்களின்
கைத்தடத்தை உங்களுக்கு காட்டுவேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷுஃபீ அவர்கள்.
தரம் : ளயீப்
245-حَدَّثَنَا
مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ
الْأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ
خَالَتِهِ مَيْمُونَةَ قَالَتْ: «وَضَعْتُ للنبى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
غُسْلًا يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الْإِنَاءَ عَلَى يَدِهِ
الْيُمْنَى، فَغَسَلَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ صَبَّ عَلَى فَرْجِهِ
فَغَسَلَ فَرْجَهُ بِشِمَالِهِ، ثُمَّ ضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ فَغَسَلَهَا،
ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى
رَأْسِهِ وَجَسَدِهِ، ثُمَّ تَنَحَّى نَاحِيَةً فَغَسَلَ رِجْلَيْهِ،
فَنَاوَلْتُهُ الْمِنْدِيلَ فَلَمْ يَأْخُذْهُ وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ عَنْ
جَسَدِهِ» فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ فَقَالَ: «كَانُوا لَا يَرَوْنَ
بِالْمِنْدِيلِ بَأْسًا، وَلَكِنْ كَانُوا يَكْرَهُونَ الْعَادَةَ» قَالَ أَبُو
دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ: قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ دَاوُدَ: كَانُوا
يَكْرَهُونَهُ لِلْعَادَةِ؟ فَقَالَ: هَكَذَا هُوَ، وَلَكِنْ وَجَدْتُهُ فِي
كِتَابِي هَكَذَا
[حكم
الألباني] : صحيح
245.நான் நபி (ஸல்) அவர்களுக்கு கடமையான
குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் எடுத்து வைத்தேன். அவர்கள் பாத்திரத்தை தனது வலது கையில்
சாய்த்து (ஊற்றி) அதை இரு தடவைகளோ அல்லது மூன்று தடவைகளோ கழுவினார்கள். பிறகு தனது
மறைவு உறுப்பில் (நீர்) ஊற்றி தன் மறைவு உறுப்பை இடது கையினால் கழுவினார்கள். பிறகு
தனது கையை தரையில் தேய்த்து அதையும் கழுவினார்கள். பிறகு வாய்க்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பிறகு தனது முகத்தையும் இருகைகளையும்
கழுவினார்கள். பிறகு தனது தலைக்கும் தனது உடலுக்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு குளிக்கும்
இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று தனது இரு கால்களையும் கழுவினார்கள். அவர்களுக்கு
நான் (துடைப்பதற்கு) துண்டு கொடுத்தேன் அவர்கள் அதை எடுக்கவில்லை. அவர்கள் தனது உடலிலிருந்த
தண்ணீரை உதறி விட்டேன்.
அறிவிப்பவர்: அன்னை மைமூனா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
(இதன் அறிவிப்பாளர் அஃமத் கூறுகின்றார்)
இந்த (துடைக்கவில்லை என்ற) செய்தியை இப்ராகீம் அன்னநயீ அவர்களிடம் வினவினேன். அதற்கு
அவர் (நபித்தோழர்கள்) துண்டைக் கொண்டு துடைப்பதை தவறாக கருதவில்லை. ஆனால் வழக்கமாக
செய்வதை விரும்பவில்லை என்று பதிலளித்தார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
முஸத்தத் தெரிவிக்கின்றார்.
நான் (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ்
பின் தாவூத் அவர்களிடம் வழக்கமாக செய்வதற்காகத்தான் இதை அவர்கள் விரும்பவில்லையா என்று
வினவிய போது அது அப்படித்தான் என்று சொன்னார்கள் எனினும் இந்த எனது இந்த நூலில் இவ்வாறு
(ஹதீஸ் மட்டும்) தான் உள்ளது.
246-حَدَّثَنَا
حُسَيْنُ بْنُ عِيسَى الْخُرَاسَانِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ
ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ شُعْبَةَ قَالَ: " إِنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ
إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ يُفْرِغُ بِيَدِهِ الْيُمْنَى عَلَى يَدِهِ
الْيُسْرَى سَبْعَ مِرَارٍ، ثُمَّ يَغْسِلُ فَرْجَهُ - فَنَسِيَ مَرَّةً كَمْ
أَفْرَغَ، فَسَأَلَنِي كَمْ أَفْرَغْتُ؟ فَقُلْتُ لَا أَدْرِي. فَقَالَ: لَا أُمَّ
لَكَ، وَمَا يَمْنَعُكَ أَنْ تَدْرِيَ؟ - ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ
لِلصَّلَاةِ، ثُمَّ يُفِيضُ عَلَى جِلْدِهِ الْمَاءَ ". ثُمَّ يَقُولُ:
«هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَطَهَّرُ»
[حكم
الألباني] : ضعيف
246.இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கடமையான
குளிப்பை நிறைவேற்றும் போது தனது வலது கையால் இடது கைக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்றுவார்கள்.
பிறகு தனது மறைவு உறுப்பை கழுவுவார்கள். தான் எத்தனை தடவை ஊற்றினோம் என்பதை அவர்கள்
ஒரு தடவை மறந்து விட்ட போது என்னிடம் நான் எத்தனை தடவை ஊற்றினேன் என்று வினவினார்கள்.
நான் எனக்கு தெரியாது என்று சொன்னதும் உனக்குத் தாய் இல்லாமல் போகட்டும்! ஏன் உனக்குத்
தெரியவில்லை என்று கேட்டார்கள். பிறகு அவர்கள் தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச்
செய்வார்கள். பிறகு தன் மேனியில் தண்ணீரை ஊற்றுவார்கள். பிறகு இவ்வாறு தான் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஷுஃபா (ரலி) அவர்கள்.
தரம் : ளயீப்
247-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُصْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: «كَانَتِ الصَّلَاةُ
خَمْسِينَ، وَالْغُسْلُ مِنَ الجَنَابَةِ سَبْعَ مِرَارٍ، وَغَسْلُ الْبَوْلِ مِنَ
الثَّوْبِ سَبْعَ مِرَارٍ، فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ [ص: 65] يَسْأَلُ حَتَّى جُعِلَتِ الصَّلَاةُ خَمْسًا، وَالْغُسْلُ مِنَ
الْجَنَابَةِ مَرَّةً، وَغَسْلُ الْبَوْلِ مِنَ الثَّوْبِ مَرَّةً»
[حكم
الألباني] : ضعيف
247.ஐம்பது நேரங்கள் தொழவேண்டும் குளிப்பு
கடமையாகி விட்டால் எழு முறை குளிக்க வேண்டும். சிறுநீர் பட்ட ஆடையை ஏழு முறை கழுவ வேண்டும்
என்ற சட்டம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதனை மாற்றுமாறு அல்லாஹ்விடம்)
கேட்டுக் கொண்டே இருந்தார்கள். (முடிவில்) தொழுகை ஐந்தாகவும், கடமையான குளிப்பு ஒரு தடவையாகவும், ஆடையில் பட்ட சிறுநீரை ஒரு தடவை கழுவுவதெனவும் ஆக்கப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்.
தரம் : ளயீப்
248-حَدَّثَنَا
نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنِي الْحَارِثُ بْنُ وَجِيهٍ، حَدَّثَنَا مَالِكُ
بْنُ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ تَحْتَ كُلِّ شَعْرَةٍ
جَنَابَةً فَاغْسِلُوا الشَّعْرَ، وَأَنْقُوا الْبَشَرَ» قَالَ أَبُو دَاوُدَ:
الْحَارِثُ بْنُ وَجِيهٍ حَدِيثُهُ مُنْكَرٌ، وَهُوَ ضَعِيفٌ
[حكم
الألباني] : ضعيف
248.ஒவ்வொரு முடியின் அடிப்பகுதியிலும்
தீட்டு இருக்கிறது. எனவே முடியை நன்கு கழுவுங்கள். மேலும் மேனியை சுத்தம் செய்யுங்கள்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
இதன் அறிவிப்பாளரான ஹரீஸ் பின் வஜீஹ் என்பவரின் ஹதீஸ் முன்கராகும். (நிராகரிக்கப் படக்கூடியதாகும்)
இவர் பலவீனமானவராவார்.
தரம் : ளயீப்
249-حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ
السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ مَوْضِعَ شَعْرَةٍ
مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهَا كَذَا وَكَذَا مِنَ النَّارِ» قَال
عَلِيٌّ: فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي ثَلَاثًا، وَكَانَ يَجُزُّ شَعْرَهُ
[حكم
الألباني] : ضعيف
249.கடமையான குளிப்பை நிறைவேற்றும்
போது ஒருவர் ஒரு முடியின் இடத்தை கழுவாது விட்டுவிடுவாராயின் அவருக்கு நரகத்தின் இன்னின்னவாறு
(வேதனை) செய்யப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால்
தான் நான் எனது முடியை வெறுத்து (வெட்டி) விட்டேன் என்று அலி (ரலி) அவர்கள் மூன்று
தடவை கூறினார்கள். மேலும் அவர்கள் முடியை வெட்டும் வழக்கமுடையவராக இருந்தார்கள்.
தரம் : ளயீப்
(98) باب فِي الْوُضُوءِ بَعْدَ الْغُسْلِ
பாடம்: 98 குளித்த பின் உலூச் செய்தல்
250-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا
أَبُو إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ
وَصَلَاةَ الْغَدَاةِ، وَلَا أَرَاهُ يُحْدِثُ وُضُوءًا بَعْدَ الْغُسْلِ»
[حكم
الألباني] : صحيح
250.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
குளிப்பார்கள் (பஜ்ரின் முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களையும்,
பஜ்ர் தொழுகையையும் அவர்கள் தொழுவார்கள். மேலும் அவர்கள்
குளித்தபின் புதிதாக உலூச் செய்வார்கள் என்று நான் கருதவில்லை.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
(99) باب
فِي الْمَرْأَةِ هَلْ تَنْقُضُ شَعَرَهَا عِنْدَ الْغُسْلِ
பாடம்: 99 குளிக்கும் போது பின்னலை பெண்கள் அவிழ்த்து
விடுதல்
251-حَدَّثَنَا
زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ السَّرْحِ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ
عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ
امْرَأَةً مِنَ الْمُسْلِمِينَ - وَقَالَ زُهَيْرٌ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ
اللَّهِ، إِنِّي امْرَأَةٌ - أَشُدُّ ضُفُرَ رَأْسِي أَفَأَنْقُضُهُ
لِلْجَنَابَةِ؟ قَالَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْفِنِي عَلَيْهِ ثَلَاثًا» -
وَقَالَ زُهَيْرٌ: «تُحْثِي عَلَيْهِ ثَلَاثَ حَثَيَات مِنْ مَاءٍ» ثُمَّ تُفِيضِي
عَلَى سَائِرِ جَسَدِكِ، فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ "
[حكم
الألباني] : صحيح
251.முஸ்லிம்களில் ஒரு பெண்மணி,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக
பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன். கடமையான குளிப்பின் போது நான் (அதனை) அவிழ்த்து விட
வேண்டுமா? என்று வினவிய போது 'நீ அதன் மீது இருகை நிரம்ப தண்ணீரை ஊற்று. ஊற்றுவதே உனக்குப்
போதுமானதாகும். பிறகு உனது உடலின் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள். நீ அப்போது தூய்மையாகி
விடுவாய்' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
252-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ نَافِعٍ يَعْنِي
الصَّائِغَ، عَنْ أُسَامَةَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ
امْرَأَةً جَاءَتْ إِلَى أُمِّ سَلَمَةَ بِهَذَا الْحَدِيثِ قَالَتْ: فَسَأَلْتُ
لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ فِيهِ:
«وَاغْمِزِي قُرُونَكِ عِنْدَ كُلِّ حَفْنَةٍ»
[حكم
الألباني] : حسن
252.உம்முஸலமா (ரலி) அவர்களிடம் ஒரு
பெண்மணி வந்தார்கள் என்று இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்ற போது 'அப்பெண்மணிக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் (விளக்கம்) கேட்டேன்'
என்று உம்முஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று மேலுள்ள
ஹதீஸின் பொருளையே தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு இரு கையளவு நீரின் போதும் உனது பின்னலை
அழுந்த தேய்ப்பாயாக என்று ( நபி ஸல் கூறியதாக) இதில் அறிவிக்கின்றார்.
தரம் : ஹஸன்
253-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ،
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ
بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَتْ إِحْدَانَا إِذَا أَصَابَتْهَا
جَنَابَةٌ أَخَذَتْ ثَلَاثَ حَفَنَاتٍ - هَكَذَا تَعْنِي بِكَفَّيْهَا جَمِيعًا -
فَتَصُبُّ عَلَى رَأْسِهَا، وَأَخَذَتْ بِيَدٍ وَاحِدَةٍ فَصَبَّتْهَا عَلَى هَذَا
الشِّقِّ، وَالْأُخْرَى عَلَى الشِّقِّ الْآخَرِ»
[حكم
الألباني] : صحيح
253.எங்களில் ஒருத்திக்கு குளிப்புக்கடமை
ஏற்பட்டு விட்டால் அவள் மூன்று தடவை இரு கைகள் அளவு தண்ணீரை இவ்வாறு (என்று அன்னையர்
அவர்கள்) தனது இரு கைகளையும் இணைத்துக் காட்டினார்கள். அள்ளி தனது தலையில் ஊற்றும்
போது ஒரு கை(யளவு தண்ணீரை)யை எடுத்து (தலையின்) ஒரு பகுதியில் ஊற்றுவாள். இன்னொரு கை(யளவு
தண்ணீரை)யை இன்னொரு பக்கம் ஊற்றுவாள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸபிய்யா பின் ஷைபா அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
254-حَدَّثَنَا
نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ عَمْرِو بْنِ
سُوَيْدٍ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
قَالَتْ: «كُنَّا نَغْتَسِلُ وَعَلَيْنَا الضِّمَادُ، وَنَحْنُ مَعَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحِلَّاتٌ وَمُحْرِمَاتٌ»
[حكم
الألباني] : صحيح
254.நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் இஹ்ராம் கட்டியவர்களாகவும், கட்டாதவர்களாகவும் இருக்கும் போது எங்களுடைய
தலைகளின் மீது லிமாத் (லிமாத் என்றால் தலையில் இருகக் கட்டியுள்ள துணி) இருக்கும் நிலையிலேயே
குளிப்போம்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
255-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عَوْفٍ، قَالَ: قَرَأْتُ فِي أَصْلِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ
قَالَ: ابْنُ عَوْفٍ، وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِيهِ،
حَدَّثَنِي ضَمْضَمُ بْنُ زُرْعَةَ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ قَالَ:
أَفْتَانِي جُبَيْرُ بْنُ نُفَيْرٍ عَنِ الْغُسْلِ مِنَ الجَنَابَة، أَنَّ
ثَوْبَانَ حَدَّثَهُمْ أَنَّهُمُ اسْتَفْتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: «أَمَّا الرَّجُلُ فَلْيَنْشُرْ رَأْسَهُ
فَلْيَغْسِلْهُ حَتَّى يَبْلُغَ أُصُولَ الشَّعْرِ، وَأَمَّا الْمَرْأَةُ فَلَا
عَلَيْهَا أَنْ لَا تَنْقُضَهُ لِتَغْرِفْ عَلَى رَأْسِهَا ثَلَاثَ غَرَفَاتٍ
بِكَفَّيْهَا»
[حكم
الألباني] : صحيح
255.தங்களுக்கு ஸப்வான் (ரலி) அவர்கள்
(கீழ்கண்டவாறு) அறிவித்தார்கள் என கடமையான குளிப்பு முறையை பற்றி எனக்கு ஜுபைர் பின்
நுபைர் தீர்ப்பளித்தார். (சப்வான் இன்னும் மற்றவர்களும்) கடமையான குளிப்பு முறை பற்றி
நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரிய போது 'ஒரு ஆண் (குளிக்கும் போது) தனது தலை முடியை விரித்து விட வேண்டும். பிறகு முடிகளின்
அடிக்காம்புகளுக்கு நீர் சென்று அடையும் அளவுக்கு அதை அவர் கழுவ வேண்டும். ஒரு பெண்
அவள் மீது (முடியை) அவிழ்த்து விடாமல் இருப்பது தவறில்லை. அவள் தமது இருகைகளால் மூன்று
தடவைகள் தண்ணீரை அள்ளி தலையில் விட வேண்டும்' என்று நபி ஸல்
பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் அபீத் அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
(100) باب
فِي الْجُنُبِ يَغْسِلُ رَأْسَهُ بِالْخِطْمِيِّ أَيُجْزِئُهُ ذَلِكَ
பாடம்: 100 மூலிகையைத் தேய்த்து கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்
256-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ قَيْسِ بْنِ
وَهْبٍ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُوَاءَةَ بْنِ عَامِرٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّهُ كَانَ يَغْسِلُ رَأْسَهُ
بِالْخِطْمِيِّ وَهُوَ جُنُبٌ يَجْتَزِئُ بِذَلِكَ، وَلَا يَصُبُّ عَلَيْهِ
الْمَاءَ»
[حكم
الألباني] : ضعيف
256.நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பின்
போது தனது தலையை கித்மிய்யா (என்ற மூலிகையி)னால் தேய்த்து கழுவுவார்கள். இதைக் கொண்டே
போதுமாக்கிக் கொள்வார்கள். இதற்கு மேல் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
தரம் : ளயீப்
No comments:
Post a Comment