Tuesday, February 27, 2018

அற்பமாக கருத படும் பாவமன்னிப்பு




அற்பமாக கருத படும் பாவமன்னிப்பு

இந்த உலகத்தில் வாழும் எப்படி பட்ட நல்ல மனிதராக இருந்தாலும் சரி எவ்வளவு இறைவனுக்கு வணக்கங்கள் செய்து இறைவனுக்கு நெருக்கமானானவராக இருந்தாலும் சரி அவர் கூட தவறு செய்ய கூடியவர்களாக தான் இருப்பார் என்பது இஸ்லாம் நமக்கு சொல்லி தரகூடிய பொதுவான விதிகளில் ஒன்று ஆகும்

ஒவ்வொருவரும் அவர்களுடைய இறையச்சத்திற்க்கு ஏற்ப பாவங்களில் குறைந்தவர்களாக இருப்பார்கள் எந்த அளவு இறையச்சம் குறைவாக உள்ளதோ அந்த அளவு பாவங்களும் அதிகமாக இருக்கும்

ஆனால் பாவமே செய்யாது இருக்க கூடிய மனிதர்கள் இந்த உலகத்தில் கிடையாது நபி ஸல் அவர்கள் அல்லாஹ் சொல்லுவதாக சொல்லி காட்டுகிறார்கள்


كل بني آدم يخطئ بالليل والنهار

ஆதமுடைய மக்கள் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்[ அஹ்மத் 21458]

இந்த நபிமொழி பாவம் செய்வர்களை பாவம் செய்ய தூண்டுவதையோ அல்லது பாவிகளுக்கு ஆதரவாகவோ சொல்லபட்ட வஹீ செய்தி இல்லை மனிதனுடைய இயல்பு அது தான் என்பதை இறைவன் சொல்லி காட்டுகிறான்

ஆனால் பாவங்களை குறைத்து பெரும் பாவங்களை தன்னுடைய வாழ்வில் ஈடுபடாதவாரு வாழும் நல்லமக்களும் இருக்க தான் செய்கிறார்கள் ஆனால் பாவமே இல்லை என்று சொல்ல கூடிய நிலையில் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.

தவ்பா என்ற வார்த்தை இஸ்திஹ்ஃபார் என்ற வார்த்தை ஒருவரை விட்டு தூர படுத்த பட வேண்டும் என்றால் அல்லது அதற்க்கு தகுதியானவர் என்றால் நபி ஸல் அவர்கள் மட்டுமே.

ஆனால் நபி ஸல் அவர்களுக்கு இறைவன் தவ்பா, இஸ்திஹ்ஃபார் என்ற வார்த்தைகளை இறைவன் திருமறையில் பயன்படுத்தி இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக ! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். ( 110:3 )

وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ

என் இறைவா ! மன்னித்து அருள் புரிவாயாக நீ அருள் புரிவோரில் சிறந்தவன் என்று ( நபியே ) கூறுவீராக ( 23:118 )

பாவங்களை ஒர் அடியார் எந்த அளவு குறைத்துகொள்ள முயற்ச்சி செய்கிறாரோ அது போல் அவர் செய்த பாவங்களையும் இறைவன் மன்னிக்க முன்வருவதாக சொல்லி காட்டுகிறான்

اِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏

உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம் உங்களை மதிப்புமிக்க இடத்தில் நுழையச் செய்வோம் ( 4 :31 )


اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏

மன்னிப்புக் கேட்டு ( தங்களைத் ) திருத்திக் கொண்டு ( மறைத்தவற்றை ) தெளிவுபடுத்தியோரைத் தவிர அவர்களை நான் மன்னிப்பேன் நான் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன் ( 2 :160 )

அதை போல் நமக்கு எல்லாம் தந்தையான ஆதம் அலை அவர்கள் சிறப்பை நாம் அனைவரும் அறிந்துவைத்து தான் உள்ளோம் அவர்களை இறைவன் தன்னுடைய கைகளை கொண்டு படைத்தான்., அவர்களுக்கு அனைத்தையும் கற்றுகொண்டுத்தான் சுவனத்தில் அவர்களை தங்க வைத்தான்

இப்படி பல அற்புதங்களை பார்த்த அவர்களுக்கு எவ்வளவு இறையச்சம் இருக்க வேண்டும் அப்படி பட்ட இறைத்தூதர் அவர்களே இறைவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்து விட்டார்கள் அவர்கள் செய்த பாவத்தை இறைவன் மன்னித்தும் விடுகிறான்

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

எங்கள் இறைவா எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம் நீ எங்களை மன்னித்து அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர் ( 7 :23 )

ஆகவே மனிதன் என்பவர் பாவம் செய்ய கூடியவர் தான் சிலர் நினைப்பது உண்டு இவர் எவ்வளவு பெரிய அறிஞர் இப்படி செய்து விட்டாரே ! இவரா இப்படி செய்வது ?

இப்படி பேசுபவர்கள் உண்மையில் அகீதாவை சரியாக புரிந்துகொள்ளாத வெளிப்பாடு தான் இவர்களை இப்படி பேச வைக்கிறது

நம்மீடத்தில் ஹதீஸ் கிரந்தங்கள் கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் குர் ஆன் – தமிழ் மொழிப்பெயர்ப்புகள் கண்டிப்பாக அனைவருடைய வீட்டில் யிலும் இருக்கும் அதை தினமும் படிக்கும் வழக்கம் உடையவர்களாக நாம் இருந்தால் இந்த கேள்வி எழாது ஏனெனில் ஒர் இடத்தில் அல்லாஹ் சொல்லி காட்டுகிறான் மானக் கேடான செயல்களை மனிதன் செய்தாலும் அதை மன்னிக்க கூடியவன் இறைவன் என்று

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ  وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

அவர்கள் வெட்கக் கேடானதைச் செய்தாலோ தமக்கு தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார் ?

தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள் (3:135 )

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ ‏"‏ أَذْنَبَ عَبْدٌ ذَنْبًا فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ‏.‏ فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ‏.‏ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَىْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي ‏.‏ فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى عَبْدِي أَذْنَبَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ‏.‏ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَىْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي ‏.‏ فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ وَاعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ


நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.
பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்" என்று சொல்கிறான்.( முஸ்லிம் 5322 )

ஆகவே இறைவனுக்கு இணைவைத்தவர்கள் பாவங்களை மட்டும் இறைவன் மன்னிக்கமாட்டான் அவர் நேர்வழி வரும் வரை .

பாவமன்னிப்பு என்பது இறைவனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் உள்ள விஷயம் அதில் கேலி அடிப்பதோ / குத்திகாட்டுவதோ இருப்பின் நாம் தான் நஸ்டவாழிகள் என்பதை நினைவில் கொள்ளவும்

அல்லாஹ் உங்களையும் என்னையும் மன்னித்து நேர்வழியில் வாழ வைப்பானாக..!!!



No comments:

Post a Comment