Sunday, March 4, 2018

ஸஹீஹ் முஸ்லிம் - முன்னுரை - பகுதி 02







حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: حَدَّثَنِي الْحَارِثُ الْأَعْوَرُ الْهَمْدَانِيُّ، وَكَانَ كَذَّابًا. حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ اللهِ بْنُ بَرَّادٍ الْأَشْعَرِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُفَضَّلٍ، عَنْ مُغِيرَةَ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ: حَدَّثَنِي الْحَارِثُ الْأَعْوَرُ، وَهُوَ يَشْهَدُ أَنَّهُ أَحَدُ الْكَاذِبِينَ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: قَالَ عَلْقَمَةُ: «قَرَأْتُ الْقُرْآنَ فِي سَنَتَيْنِ» فَقَالَ الْحَارِثُ: «الْقُرْآنُ هَيِّنٌ الْوَحْيُ أَشَدُّ»
وحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا أَحْمَدُ يَعْنِي ابْنَ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ الْحَارِثَ، قَالَ: «تَعَلَّمْتُ الْقُرْآنَ فِي ثَلَاثِ سِنِينَ، وَالْوَحْيَ فِي سَنَتَيْنِ» أَوْ قَالَ «الْوَحْيَ فِي ثَلَاثِ سِنِينَ، والْقُرْآنَ فِي سَنَتَيْنِ»
وحَدَّثَنِي حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنِي أَحْمَدُ وَهُوَ ابْنُ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، وَالْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، «أَنَّ الْحَارِثَ اتُّهِمَ» وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، قَالَ: سَمِعَ مُرَّةُ الْهَمْدَانِيُّ، مِنَ الْحَارِثِ شَيْئًا، فَقَالَ لَهُ: «اقْعُدْ بِالْبَابِ» ، قَالَ: فَدَخَلَ مُرَّةُ، وَأَخَذَ سَيْفَهُ، قَالَ: وَأَحَسَّ الْحَارِثُ بِالشَّرِّ، فَذَهَبَ


ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் அல் அஃவர் அல்ஹம்தானீ என்பார் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார். ஆனால், அவர் ஒரு பொய்யராவார்.

இதை அபூஹிஷாம் முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஹிஷாம் முஃகீரா அள்ளப்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் அல்ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் அல்அஃவர் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார் என்று கூறிவிட்டு, அவர் பொய்யர்களில் ஒருவர் என அறுதியிட்டுக் கூறினார்கள்.

இதை முஃபள்ளல் பின் முஹல்ஹல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்கள், நான் குர்ஆனை இரண்டு ஆண்டுகளில் பயின்றேன் என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அல் ஹாரிஸ் அல்அஃவர், குர்ஆன் எளியது; வேத அறிவிப்பு தான் (வஹீ) வலியது என்று கூறினார்.

இதை முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்ஹாரிஸ் அல்அஃவர் நான் குர்ஆனை மூன்று வருடங்களிலும் வேத அறிவிப்பை (வஹீ) இரண்டு வருடங்களிலும் அல்லது வேத அறிவிப்பை மூன்று வருடங்களிலும் குர்ஆனை இரண்டு வருடங்களிலும் பயின்றேன் என்று கூறினார்.

இதை சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்ஹாரிஸ் சந்தேகத்திற்கிடமானவர் எனக் கருதப்பட்டார்.

இதை முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்தத் தகவல் இரு அறிவிப்பாளார் தொடர்களில் வந்துள்ளது

وحَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ابْنِ عَوْنٍ، قَالَ: قَالَ لَنَا إِبْرَاهِيمُ: «إِيَّاكُمْ وَالْمُغِيرَةَ بْنَ سَعِيدٍ، وَأَبَا عَبْدِ الرَّحِيمِ، فَإِنَّهُمَا كَذَّابَانِ».


ஹம்ஸா அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முர்ரா அல்ஹம்தானீ (ரஹ்) அவர்களிடம் அல்ஹாரிஸ், ஒரு ஹதீஸை அறிவித்தார். அப்போது முர்ரா (ரஹ்) அவர்கள், வாசலிலேயே அமர்ந்திருப்பீராக என்று கூறிவிட்டு இல்லத்திற்குள் சென்று தமது உடைவாளை எடுத்தார்கள். (நிலைமையின்) விபரீதத்தை உணர்ந்த அல்ஹாரிஸ் (அங்கிருந்து) சென்று விட்டார்.

حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ: كُنَّا نَأْتِي أَبَا عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيَّ وَنَحْنُ غِلْمَةٌ أَيْفَاعٌ، فَكَانَ يَقُولُ لَنَا: «لَا تُجَالِسُوا الْقُصَّاصَ غَيْرَ أَبِي الْأَحْوَصِ، وَإِيَّاكُمْ وَشَقِيقًا» ، قَالَ: «وَكَانَ شَقِيقٌ هَذَا يَرَى رَأْيَ الْخَوَارِجِ، وَلَيْسَ بِأَبِي وَائِلٍ»

அப்துல்லாஹ் பின் அவ்ன் பின் அர்திபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், முஃகீரா பின் சயீத், அபூஅப்திர் ரஹீம் ஆகியோர் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவ்விருவரும் பொய்யார்கள் ஆவர் என்று கூறினார்கள்.

ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இளம் பிள்ளைகளாக இருந்தபோது அபூஅப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ருபய்யிஆ -ரஹ்) அவர்களிடம் செல்வோம். அப்போது அவர்கள் எங்களிடம், அபுல்அஹ்வஸைத் தவிர வேறெந்தப் பேச்சாளர்களிடமும் நீங்கள் உட்காராதீர்கள்! ஷகீக் அள்ளப்பீ என்பாரைக் குறித்தும் உங்களை நான் எச்சரிக்கிறேன் (அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்காதீர்கள்!) என்று கூறுவார்கள். மேலும், இந்த ஷகீக், காரிஜீய்யாக்களின் கொள்கை கொண்டவராய் இருந்தார். இந்த ஷகீக், அபூவாயில் (என்றழைக்கப்படும் ஷகீக் பின் சலமா) அல்லர்; என்றும் கூறுவார்கள்.

حَدَّثَنَا أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّازِيُّ، قَالَ: سَمِعْتُ جَرِيرًا، يَقُولُ: «لَقِيتُ جَابِرَ بْنَ يَزِيدَ الْجُعْفِيَّ فَلَمْ أَكْتُبْ عَنْهُ، كَانَ يُؤْمِنُ
بِالرَّجْعَةِ»

ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் யஸீத் அல்ஜுஅஃபீ என்பாரைச் சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து (எந்த ஹதீஸையும்) நான் பதிவு செய்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர், (ராஃபிஜிகளின் கொள்கையான) ரஜ்ஆஎனும் கொள்கையில் நம்பிக்கையுடையவராய் இருந்தார்.

இதை அபூஃகஸ்ஸான் முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

حَدَّثَنَا الْحَسَنُ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ: «حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ، قَبْلَ أَنْ يُحْدِثَ مَا أَحْدَثَ»

மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் யஸீத் (அடிப்படையற்ற) நூதனக் கருத்துகளை நம்பிக்கை கொள்வதற்கு முன் எனக்கு ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.

இதை யஹ்யா பின் ஆதம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

وحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: «كَانَ النَّاسُ يَحْمِلُونَ عَنْ جَابِرٍ قَبْلَ أَنْ يُظْهِرَ مَا أَظْهَرَ، فَلَمَّا
أَظْهَرَ مَا أَظْهَرَ اتَّهَمَهُ النَّاسُ فِي حَدِيثِهِ، وَتَرَكَهُ بَعْضُ النَّاسِ» ، فَقِيلَ لَهُ: وَمَا أَظْهَرَ؟ قَالَ: «الْإِيمَانَ بِالرَّجْعَةِ»

ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் ஸுபைர் பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் யஸீத் (அடிப்படையற்ற) நூதனக் கருத்துகளை வெளியிடுவதற்கு முன் அவரிடமிருந்து மக்கள் ஹதீஸ்களை அறிவித்துவந்தனர். அவர் நூதனக் கருத்துகளை வெளியிட்ட பின் அவரை ஹதீஸ் துறையில் மக்கள் சந்தேகிக்கலாயினர். சிலர் அவரிடமிருந்து ஹதீஸ்கள் அறிவிப்பதை நிறுத்திக் கொண்டனர் என்று கூறினார்கள். அப்போது சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ஜாபிர் அப்படி எதை வெளியிட்டார் என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (அலீ (ரலி) அவர்கள் மேகத்தினுள் மறைந்திருக்கிறார்கள் என்ற) ரஜ்ஆஎனும் கொள்கையை என்று பதிலளித்தார்கள்.

இதை சலமா பின் ஷபீப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

وحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا قَبِيصَةُ، وَأَخُوهُ، أَنَّهُمَا سَمِعَا الْجَرَّاحَ بْنَ مَلِيحٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرًا
يَقُولُ: «عِنْدِي سَبْعُونَ أَلْفَ حَدِيثٍ عَنْ أَبِي جَعْفَرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهَا»

அல்ஜர்ராஹ் பின் மலீஹ் அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் யஸீத்என்னிடம் எழுபதாயிரம் ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் பின் அலீ அல்பாகிர்-ரஹ்) அவர்களால் அறிவிக்கப் பெற்றவையாகும் என்று கூறினார்

وحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: سَمِعْتُ زُهَيْرًا، يَقُولُ: قَالَ جَابِرٌ - أَوْ سَمِعْتُ جَابِرًا - يَقُولُ: «إِنَّ
عِنْدِي لَخَمْسِينَ أَلْفَ حَدِيثٍ، مَا حَدَّثْتُ مِنْهَا بِشَيْءٍ» ، قَالَ: ثُمَّ حَدَّثَ يَوْمًا بِحَدِيثٍ، فَقَالَ: «هَذَا مِنَ الْخَمْسِينَ أَلْفًا»

ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் யஸீத், என்னிடம் ஐம்பதாயிரம் ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதையும் நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லைஎன்று கூறினார். பிறகு ஒரு நாள் அவர் ஒரு ஹதீஸை அறிவித்துவிட்டு, (அந்த) ஐம்பதாயிரம் ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும்என்றார்.

இதை அஹ்மத் பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
 .
وحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ الْيَشْكُرِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا الْوَلِيدِ، يَقُولُ: سَمِعْتُ سَلَّامَ بْنَ أَبِي مُطِيعٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرًا الْجُعْفِيَّ، يَقُولُ: «عِنْدِي خَمْسُونَ أَلْفَ حَدِيثٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் யஸீத் அல்ஜுஅஃபீ, என்னிடம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பெற்ற ஐம்பதாயிரம் ஹதீஸ்கள் உள்ளனஎன்று கூறினார்.

இதை அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக் அத்தயாலிஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



No comments:

Post a Comment