Tuesday, March 6, 2018

அல்லாஹ் உடைய அதிகாரத்தில் மட்டும் எவரும் தலை இடாதீர்கள் !!





அல்லாஹ் உடைய அதிகாரத்தில் மட்டும் எவரும் தலை இடாதீர்கள் !!


அல்லாஹ் நாடினால் ஒருவரை மன்னிப்பான் அவன் நாடினால் தண்டிப்பான்
இணைவைப்பில் இருந்து ஒருவர் மீளாதை வரை மறுமைக்கான நல்லறங்கள் ( தொழுகை+ ஜகாத்+ நோன்பு+ ஹஜ்)எதுவும் பயன் அளிக்காது

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 4:18
இதை தவிர்த்து இருக்கும் மக்களை பார்த்து இவர் என்னை இப்படி விமர்சனங்கள் வைக்கிறார் இவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் ,இவர்க்கு அல்லாஹ் உடைய அருள் எப்படி கிடைக்கும் என்று நாம் ஒர் காலமும் சொல்லி விட கூடாது ஏனெனில் அல்லாஹ் உடைய அருள் விசாலமானது இணைவைப்பை தவிர அனைத்துவித பாவங்களையும் இறைவன் மன்னிப்பதாக சொல்லுகிறான்

إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:17

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 3:135
இந்த விஷயங்களை அறிந்தும் நம்மலில் பலர் தான் பயன்படுத்தும் சில சொற்களின் கணத்தை அறியாமல் பயன்படுத்தியும் விடுகிறார்கள் சமூக தளங்களில்

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ ".
صحيح البخاري ( 6477 )
صحيح مسلم ( 2988 )
سنن الترمذي ( 2314 )
سنن ابن ماجه ( 3970 )
موطأ مالك ( 2819 )
مسند أحمد ( 7215, 7958, 8411, 8658, 8923, 9220, 10895, 10900 )


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ,முஸ்லிம்

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالَ : كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ : يَا نَبِيَّ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ. قَالَ : " لَقَدْ سَأَلْتَ عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ : تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ الْبَيْتَ ". ثُمَّ قَالَ : " أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ ؟ الصَّوْمُ جُنَّةٌ ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ، وَصَلَاةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ ". ثُمَّ قَرَأَ : { تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ }، حَتَّى بَلَغَ { يَعْمَلُونَ }. ثُمَّ قَالَ : " أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ، وَعَمُودِهِ، وَذِرْوَةِ سَنَامِهِ ؟ ". فَقُلْتُ : بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ : " رَأْسُ الْأَمْرِ الْإِسْلَامُ، وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ ". ثُمَّ قَالَ : " أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ ؟ ". فَقُلْتُ لَهُ : بَلَى يَا نَبِيَّ اللَّهِ. فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ : " كُفَّ عَلَيْكَ هَذَا ". فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ ؟ فَقَالَ : " ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ - أَوْ قَالَ : عَلَى مَنَاخِرِهِمْ - إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ ".
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

مسند أحمد ( 22016, 22032, 22047, 22051, 22063, 22068, 22122, 22133 )
سنن الترمذي ( 2616 )
سنن النسائي ( 2224, 2225, 2226 )
سنن ابن ماجه ( 3973 )


நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : அனைத்திற்க்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா ? என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள் அதற்கு நான் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் நபியே ! ஆம் என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து இதை நீ பாதுகாத்துக்கொள் என்று கூறினார்கள் .
அல்லாஹ்வின் தூதரே ! நாம் பேசுகின்ற வைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம் என்று நான் கேட்டேன் அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன்
மக்களை முகம்குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும் ( என்று நபி ஸல் கூறினார்கள்)
நூல் : அஹ்மத்

عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَكْثَرَ خَطَايَا ابْنِ آدَمَ فِي لِسَانِهِ
للطبراني [الحكم: إسناده متصل ، رجاله ثقات]

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :
மனிதனின் தவறுகளில் அதிகமானவை அவனுடைய நாவால் ( தான் ) ஏற்படுகின்றன..
நூல் : தப்ரானீ ( 10295 ) தரம் : ஸஹீஹ்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَفَعَهُ قَالَ ‏ "‏ إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا ‏"‏ ‏.‏
جامع الترمذي [الحكم: إسناده حسن رجاله ثقات عدا أبو الصهباء الكوفي وهو صدوق حسن الحديث]

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அபூ ஸயீத் குத்ரீ( ரலி) அறிவிக்கிறார்கள் :
ஆதமுடைய மகன் காலை நேரத்தை அடைந்ததும் அவனது உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளும் நாவிடம் நீ எங்களுடைய விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள் , ஏனெனில் எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் ( இணைந்துள்ளன ).
நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம் நீ வளைந்து விட்டால் நாங்களும் வளைந்துவிடுவோம்..
நூல் : திர்மிதீ ( 2407 ) தரம் : ஹஸன்
மேலும் அல்லாஹ்வின் அதிகாரங்களில் எதிலேனும் நாம் தலையிட்டால் அதன் விளைவுகளையும் பற்றியும் நபி ஸல் சொல்லி காட்டுகிறார்கள்

إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا، يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِقِ "

ஒர் அடியார் ( பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார் அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொலைவை விட அதிகமான தூதரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹ் புஹாரி ( 6477 )
தரம் : ஸஹீஹ்

قَالَ أَبُو هُرَيْرَةَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ، فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ، فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ : أَقْصِرْ. فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ، فَقَالَ لَهُ : أَقْصِرْ. فَقَالَ : خَلِّنِي وَرَبِّي، أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا ؟ فَقَالَ : وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ - أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ - فَقَبَضَ أَرْوَاحَهُمَا، فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ، فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ : أَكُنْتَ بِي عَالِمًا ؟ أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا ؟ وَقَالَ لِلْمُذْنِبِ : اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ بِرَحْمَتِي. وَقَالَ لِلْآخَرِ : اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ ".
حكم الحديث: صحيح
سنن أبي داود ( 4901 )
مسند أحمد ( 8292 )


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவித்ததாவது:
.
பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்த இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் ஒரே நோக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
.
அதில் ஒருவர் பாவம் செய்பவராகவும், அடுத்தவர் தனது சக்திக்குட்பட்டவரையில் நன்மை செய்பவராகவும் இருந்தனர்.
.
எப்போதும் நல்லமல்கள் செய்வதில் குறியாக இருந்த மனிதரின் பார்வையில், அடுத்தவர் பாவியாகவே தென்படலானார். அவரைப் பார்த்து இவர், “பாவங்களிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்” என்று அடிக்கடி கூறி வந்தார்.
.
ஒரு நாள் அவர் (வழமை போல்) பாவம் செய்வதைக் கண்ட இவர், “இந்தப் பாவத்திலிருந்து உன்னை விடுவித்துக் கொள்” என்று அறிவுரை கூறினார். அதற்கு அந்தப் பாவி, “என்னைக் கண்காணிப்பது தான் எப்போதும் உனது வேலையா? எனக்கும், என் இறைவனுக்கும் நடுவில் குறுக்கிடாமல் நீ இருந்தால் போதும்” என்று பதிலளித்தார்.
.
அதற்கு அந்த நல்ல மனிதர், “நிச்சயமாக (இப்படியே சென்றால்) அல்லாஹ் உன்னை மன்னிக்கவும் மாட்டான்; சுவர்க்கத்தில் அனுமதிக்கவும் மாட்டான்” என்று கூறினார்.
.
பிறகு இருவரது உயிர்களும் கைப்பற்றப் பட்ட பின் இருவரும் அல்லாஹ்வின் சன்னிதானத்திற்குக் கொண்டுவரப் பட்டனர்.
.
நல்லமல் செய்த மனிதரைப் பார்த்து அல்லாஹ், “என்னைப் பற்றி நீ முழுமையாக அறிந்திருந்தாயா? எனது உள்ளத்தில் நான் என்ன நாடுகிறேன் என்பதை அறியும் ஆற்றல் உனக்கு இருந்ததா?” என்று கேட்டான்.
.
அடுத்து, பாவம் செய்த மனிதரைப் பார்த்து, “எனது கருணையையைக் கொண்டு நீ சுவர்க்கத்துக்குச் செல்” என்று கூறினான்.
.
நன்மை செய்த மனிதரைக் காட்டி, “இவனை நரகிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கட்டளையிட்டான்.

قَالَ أَبُو هُرَيْرَةَ : وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ.

அபூஹுரைரா (ரழி) தொடர்ந்து கூறினார்கள்:
எனது உயிர் எவன் வசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக, நன்மை செய்த அந்த மனிதர் பேசிய ஒரு வார்த்தை அவரது ஈருலக வாழ்க்கையும் நாசமாக்கி விட்டது.
நூல் : அபூதாவூத் ,அஹ்மத்
மேலும் இந்த ஹதீஸ்யில் சொல்ல பட்ட இரண்டாவது பாதியான செய்தியை வலுபடுத்தும் இன்னொரு ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் யில் இடம்பெற்று உள்ளது

عَنْ جُنْدَبٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَ : " أَنَّ رَجُلًا قَالَ : وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لِفُلَانٍ. وَإِنَّ اللَّهَ تَعَالَى قَالَ : مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لَا أَغْفِرَ لِفُلَانٍ ؛ فَإِنِّي قَدْ غَفَرْتُ لِفُلَانٍ، وَأَحْبَطْتُ عَمَلَكَ ". أَوْ كَمَا قَالَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
:
(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" என்று கூறினார். அல்லாஹ், "இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்" என்றோ, அதைப் போன்றோ கூறினான்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (2621) தமிழ் மொழிபெயர்ப்பு எண் ( 5115)
ஆகவே நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களுடைய நாவினை பயன்படுத்தும் போது சிந்தித்து ஒன்றுக்கு பல முறை ஆராய்ந்து பேசவும்
வல்ல ரஹ்மான் உங்களையும் என்னையும் மன்னித்து அருள்புரிவானாக என்ற பிரார்த்தனையுடன்

No comments:

Post a Comment