Wednesday, April 11, 2018

அத்தியாயம் : 01 சுன்னாவை பற்றியது ஹதீஸ் 1 முதல் 50 வரை




بَابُ اتِّبَاعِ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அத்தியாயம் : 01

சுன்னாவை பற்றியது

1-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا»
[حكم الألباني]
صحيح
1.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

நான் உங்களுக்கு கட்டளையிடுவதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களை விலக்குகிறேனோ அதிலிருந்து விலகி கொள்ளுங்கள்.
இதை அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி (7288) முஸ்லிம் (1337) அஹ்மத்(7367,7501,8144)

2-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَانْتَهُوا»

[حكم الألباني]
صحيح

2.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

நான் உங்களுக்கு (சொல்லாமல்) விட்டுவிட்டதை நீங்களும் என்னிடம் (கேட்காமல்) விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான் (காரணங்களாகும்). ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகி கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி ( 7288) முஸ்லிம் ( 1337)  திர்மிதீ ( 2679 )

3-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ»

[حكم الألباني]
صحيح
3.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

யார் எனக்கு கட்டுப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். எனக்கு மாறு செய்பவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார்.
இதை அபூஹூரைரா ரலி அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி ( 2957) முஸ்லிம் (1835)  நஸாயீ ( 4193) அஹ்மத் (7334)

4-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ «إِذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ يَعْدُهُ، وَلَمْ يُقَصِّرْ دُونَهُ»

[حكم الألباني]
صحيح
4.இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை செவியுற்றால் அதில் எல்லை மீறவும் மாட்டார்கள். உள்ளதை விட குறைத்து விடவும் மாட்டார்கள்.

அபூஜஃபர் (ரஹ்) இதை அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்
இந்த செய்தி இப்னுமாஜாவில் மட்டுமே இடம்பெற்று உள்ளது. 

5-حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الْقَاسِمِ بْنِ سُمَيْعٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُلَيْمَانَ الْأَفْطَسُ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَذْكُرُ الْفَقْرَ وَنَتَخَوَّفُهُ، فَقَالَ: «آلْفَقْرَ تَخَافُونَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُصَبَّنَّ عَلَيْكُمُ الدُّنْيَا صَبًّا، حَتَّى لَا يُزِيغَ قَلْبَ أَحَدِكُمْ إِزَاغَةً إِلَّا هِيهْ، وَايْمُ اللَّهِ، لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»
قَالَ أَبُو الدَّرْدَاءِ: صَدَقَ وَاللَّهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَكَنَا وَاللَّهِ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»
[حكم الألباني]
حسن
5.அபுத்தர்தா ரலி அறிவிக்கிறார்கள்

நாங்கள் ஒரு முறை வறுமை (ஏற்படுவது) பற்றி பயந்தவாறு பேசிக் கொண்டிருந்த போது நபி ஸல் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது வறுமை பற்றியா பயப்படுகிறீர்கள்? என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக இந்த உலகம் உங்களுக்கு நன்றாக பொழியப்படும். அதை தவிர வேறு எதுவும் உங்களின் உள்ளத்தை வழிதவறச் செய்யாது என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக வெள்ளை வெளீரென்ற (மார்க்கத்) தில் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமே என்று கூறினார்கள்.

இதை கூறிய அபுத்தர்தா ரலி அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உண்மையே கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக வெள்ளை வெளீரென்ற (மார்க்கத்) திலேயே எங்களை அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவும் பகலும் சமமாகவே உள்ளது என்று சொன்னார்கள்.

ஜூபைர் பின் நுஃபைஃ (ரஹ்) இதை அறிவிக்கிறார்.

தரம் : ஹஸன்

இந்த செய்தி இப்னுமாஜாவில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

6-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»

[حكم الألباني]

صحيح
6.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

என் சமுதாயத்தில் ஒரு கூட்டம் (இறைவனால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களை வெறுப்பவர்கள் எந்த தீங்கையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாது.
குர்ரா பின் இயாஸ் ரலி இதை அறிவிக்கிறார்

தரம் : ஸஹீஹ்

இந்த செய்தி இப்னுமாஜாவில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

7-حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَلْقَمَةَ نَصْرُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عُمَيْرِ بْنِ الْأَسْوَدِ، وَكَثِيرِ بْنِ مُرَّةَ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي قَوَّامَةً عَلَى أَمْرِ اللَّهِ، لَا يَضُرُّهَا مَنْ خَالَفَهَا»

[حكم الألباني]

حسن صحيح

7.என் சமுதாயத்தில் ஒரு கூட்டம் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளையை நிலைநாட்டுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மாறு செய்தோர் எந்த தீங்கையும் அவர்களுக்கு ஏற்படுத்திட மாட்டார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹூரைரா ரலி அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 8274 ,8484,8930)

8-حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ زُرْعَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا عِنَبَةَ الْخَوْلَانِيَّ، وَكَانَ قَدْ صَلَّى الْقِبْلَتَيْنِ، مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ اللَّهُ يَغْرِسُ فِي هَذَا الدِّينِ غَرْسًا يَسْتَعْمِلُهُمْ فِي طَاعَتِهِ»

[حكم الألباني]

حسن
8.பக்ரு பின் ஜூர்ஆ (ரஹ் )அறிவிக்கிறார்.

அல்லாஹ் இந்த மார்க்கத்தில் தனக்கு கட்டுப்படும் விவகாரத்தில் பயன்படத்தக்க ஒரு சமுதாயத்தை நிலைநிறுத்திக் கொண்டே இருப்பான் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஇனபா அல்கவ்லானீ (ரலி) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

இந்த அபூஇனபா அல்கவ்லானீ (ரலி )அவர்கள் நபி ஸல் அவர்களுடன் இரு கிப்லாக்களில் தொழுதவராவார்.

தரம் : ஹஸன்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 17787)

9-حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ نَافِعٍ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَامَ مُعَاوِيَةُ، خَطِيبًا فَقَالَ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ، لَا يُبَالُونَ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ نَصَرَهُمْ»

[حكم الألباني]

صحيح

9.முஆவியா ரலி அவர்கள் (ஒரு முறை) பிரசங்கம் செய்தார்கள். அப்போது உங்கள் அறிஞர்கள் எங்கே? உங்கள் அறிஞர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு என் சமுதாயத்தில் ஒரு கூட்டம் மக்களிடம் (சத்தியத்தை) வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தங்களை துன்புறுத்துவோரையும் தங்களுக்கு உதவி செய்வோரையும் பொருட்படுத்த மாட்டார்கள். இது (ஏற்படும்) வரை மறுமை நாள் நிகழாது என்று நபி (ஸல் )அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

இதை ஷூஐப் பின் முஹம்மத் ரஹ் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி ( 71,3116,3641,7312) முஸ்லிம் ( 1037)  அஹ்மத் ( 16849,16881,16912)

10-حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يزالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ عَزَّ وَجَلَّ»

[حكم الألباني]

صحيح
10.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

எனது சமுதாயத்தில் ஒரு கூட்டம் (இறைவனால்) உதவி செய்யப்படுபவர்களாக, சத்தியத்திலேயே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களுக்கு மாறு செய்தோர் எந்த தீங்கையும் அவர்களுக்கு ஏற்படுத்திட மாட்டார்கள்.

இதை ஸவ்பான் ரலி அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் முஸ்லிம் ( 1920 ) அபூதாவூத் ( 4252 ) திர்மிதீ ( 2229) அஹ்மத் ( 22403)


11-حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، قَالَ: سَمِعْتُ مُجَالِدًا يَذْكُرُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَّ خَطًّا، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الْأَوْسَطِ، فَقَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ} [الأنعام: 153] "
[حكم الألباني]
صحيح
11.ஜாபிர் ரலி அறிவிப்பதாவது

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் ஒரு கோட்டையும் பிறகு தம் வலப்புறத்தில் இரு கோடுகளையும் தம் இடப்புறத்தில் இரு கோடுகளையும் போட்டார்கள். பிறகு நடுக்கோட்டில் தம் கையை நுழைத்து இது தான் அல்லாஹ்வின் பாதையாகும் என்று கூறி இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். அல்குர்ஆன் 6 153 என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 15277)

12-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي الْحَسَنُ بْنُ جَابِرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ معْدِ يكَرِبَ الْكِنْدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُوشِكُ الرَّجُلُ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ، يُحَدَّثُ بِحَدِيثٍ مِنْ حَدِيثِي، فَيَقُولُ: بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَلَالٍ اسْتَحْلَلْنَاهُ، وَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَرَامٍ حَرَّمْنَاهُ، أَلَّا وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ مَا حَرَّمَ اللَّهُ "
[حكم الألباني]
صحيح
12.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

(பிற்காலத்தில்) ஒரு மனிதன் கட்டிலின் மீது சாய்ந்து கொண்டு எனது செய்தியை அறிவிப்பான். பிறகு அவன் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வின் வேதம் உள்ளது. அதில் எதை அனுமதியாக பெறுகிறோமோ அதை ஹலால் என்போம். எதை தடை செய்யப்பட்டதாக காண்கிறோமோ அதை ஹராம் என்போம் என்று கூறுவான். அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் தூதர் ஒன்றை தடைசெய்தால் அது அல்லாஹ் தடை செய்ததை போன்றதே.

இதை மிக்தாம் பின் மஃதீகரிப் ரலி அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அபூதாவூத் ( 4604 ) திர்மிதீ ( 2664) அஹ்மத் ( 17174,17194) தாரமி ( 606 )

13-حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ فِي بَيْتِهِ، أَنَا سَأَلْتُهُ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، ثُمَّ مَرَّ فِي الْحَدِيثِ قَالَ: أَوْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ، يَأْتِيهِ الْأَمْرُ مِمَّا أَمَرْتُ بِهِ، أَوْ نَهَيْتُ عَنْهُ، فَيَقُولُ: لَا أَدْرِي، مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ "
[حكم الألباني]
صحيح
13.ஒருவர் தனது கட்டிலின் மீது சாய்ந்தவாறிருக்க நான் (செய்யும்படி) கட்டளையிட்ட அல்லது (செய்யவேண்டாமென) எச்சரித்த விஷயம் ஒன்று அவரிடத்தில் வரும்போது (இது) எனக்கு தெரியாது, அல்லாஹ்வின் வேதத்திலே எதை பெறுவோமோ அதை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணக்கூடாது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இதை நபிகளாரின் அடிமை அஸ்லம் ரலி அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அபூதாவூத் (4605 ) திர்மிதீ ( 2663 ) அஹ்மத் ( 23861,23876)

14-حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ»
[حكم الألباني]
صحيح
14.ஆயிஷா ரலி கூறியதாவது

யார் நமது (மார்க்க) விஷயத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி ( 2697 ) முஸ்லிம் ( 1718 ) அபூதாவூத் ( 4606 ) அஹ்மத் ( 24450,25128,25472,26033,26191,26329)

15-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ: أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ، فَقَالَ الْأَنْصَارِيُّ: سَرِّحِ الْمَاءَ يَمُرُّ، فَأَبَى عَلَيْهِ، فَاخْتَصَمَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ» فَغَضِبَ الْأَنْصَارِيُّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ؟ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «يَا زُبَيْرُ، اسْقِ، ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ» قَالَ: فَقَالَ الزُّبَيْرُ: وَاللَّهِ، إِنِّي لَأَحْسِبُ هَذِهِ الْآيَةَ، نَزَلَتْ فِي ذَلِكَ: {فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا} [النساء: 65]
[حكم الألباني]
صحيح
15.அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி) அறிவிக்கிறார்கள்
அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் பேரிச்சமரத்திற்கு மக்கள் தண்ணீர் பாய்ச்சும் ஹர்ரா பகுதியின் கால்வாய் தொடர்பாக ஜூபைர் (ரலி) அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். அந்த அன்சாரித்தோழர் என் (தோட்டத்திற்கு) தண்ணீரை ஓடச்செய் என்று கூறினார். ஆனால் (என் தந்தை) ஜூபைர் (ரலி )அதற்கு மறுப்பு தெரிவித்தார். இவ்விருவரும் நபி (ஸல் )அவர்களிடம் வழக்காடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஜீபைரே (முதலில் உங்களுக்கு) தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உம் அண்டை வீட்டாருக்கு தண்ணீரை திறந்து விடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு அல்லாஹ்வின் தூதரே உங்கள் மாமி மகன் என்பதாலா? (இப்படியொரு தீர்ப்பு) என்று கேட்கவும் நபி (ஸல் )அவர்களின் முகம் கோபத்தால் மாறியது. பிறகு ஜூபைரே (முதலில்) உமக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு பிறகு வரப்புகளை நோக்கி வரும் வரை அதை தடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இந்த விவகாரத்தில் தான் . (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 4 65) இந்த வசனம் இறங்கியது என்று தான் கருதுவதாக ஜூபைர் (ரலி )அவர்கள் கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி (2359) முஸ்லிம் ( 2357) அபூதாவூத் ( 3637) திர்மிதீ ( 1363,3027) நஸாயீ ( 5416) அஹ்மத் ( 16116)

16-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ أَنْ يُصَلِّينَ فِي الْمَسْجِدِ» فَقَالَ ابْنٌ لَهُ: إِنَّا لَنَمْنَعُهُنَّ، فَقَالَ: فَغَضِبَ غَضَبًا شَدِيدًا، وَقَالَ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وتقولُ: إِنَّا لَنَمْنَعُهُنَّ؟
[حكم الألباني]
صحيح
16.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை பள்ளிவாசலில் தொழுவதை விட்டும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) சொன்ன போது அவரது மகன் நாங்கள் அவர்களை தடுக்கவே செய்வோம் என்று கூறினார். இதனால் இப்னு உமர் (ரலி) அவர்கள் கடுமையாக கோபம் கொண்டு நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை சொல்கிறேன் நீ அவர்களை தடுப்பேன் என்கிறாயா? என்று (கண்டிப்புடன்) கேட்டார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி ( 865,873,900,5238) முஸ்லிம் ( 442) அபூதாவூத் ( 566,567) நஸயீ ( 706) அஹ்மத் ( 4522,4556,4655,4932) தாரமீ ( 456,1314)

17-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، وَأَبُو عَمْرٍو حَفْصُ بْنُ عَمْرٍو، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّهُ كَانَ جَالِسًا إِلَى جَنْبِهِ ابْنُ أَخٍ لَهُ، فَخَذَفَ، فَنَهَاهُ، وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا وَقَالَ: «إِنَّهَا لَا تَصِيدُ صَيْدًا، وَلَا تَنْكِي عَدُوًّا، وَإِنَّهَا تَكْسِرُ السِّنَّ، وَتَفْقَأُ الْعَيْنَ» قَالَ: فَعَادَ ابْنُ أَخِيهِ يخذفَ فَقَالَ: أُحَدِّثُكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، ثُمَّ عُدْتَ تَخْذِفُ، لَا أُكَلِّمُكَ أَبَدًا
[حكم الألباني]
صحيح
17.அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருக்க அவர்களுக்கு அருகாமையில் அவரது சகோதரனின் மகன் உடனிருந்தார். அவர் சிறுகற்களை எறிந்தபோது அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவ்வாறு செய்யாதே நபி (ஸல் )அவர்கள் (சிறுகற்களை எறியக் கூடாதென்று) தடை விதித்துள்ளார்கள். மேலும் இதன் மூலம் வேட்டையாடவோ எதிரியை வீழ்த்தவோ முடியாது. மாறாக அருகிலிருப்பவர்களின் பல்லை உடைக்கவும் கண்ணை பறிக்கவுமே வழிவகுக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்றார்கள். அவர் சகோதரனின் மகன் மீண்டும் அவ்வாறு செய்யவே அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) நான் நபி (ஸல் )அவர்கள் இதை தடுத்துள்ளார்கள் என்கிறேன் நீ திரும்பவும் சிறுகற்களை எறிகிறாயே? என்று கூறி ஒரு போதும் நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறினார்.

இதை ஸயீத் பின் ஜூபைர் ரஹ் அறிவிக்கிறார்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் புஹாரி (4841,5479,6220) முஸ்லிம் ( 1954) அபூதாவூத் ( 5270) நஸாயீ ( 4815) அஹ்மத் ( 16794,20540,20551)

18-حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ قَالَ: حَدَّثَنِي بُرْدُ بْنُ سِنَانٍ، عَنْ إِسْحَاقَ بْنِ قَبِيصَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ الْأَنْصَارِيَّ النَّقِيبَ، صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَزَا مَعَ مُعَاوِيَةَ أَرْضَ الرُّومِ، فَنَظَرَ إِلَى النَّاسِ وَهُمْ يَتَبَايَعُونَ كِسَرَ الذَّهَبِ بِالدَّنَانِيرِ، وَكِسَرَ الْفِضَّةِ بِالدَّرَاهِمِ، فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَأْكُلُونَ الرِّبَا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَبْتَاعُوا الذَّهَبَ بِالذَّهَبِ، إِلَّا مِثْلًا بِمِثْلٍ، لَا زِيَادَةَ بَيْنَهُمَا وَلَا نَظِرَةً» فَقَالَ: لَهُ مُعَاوِيَةُ يَا أَبَا الْوَلِيدِ، لَا أَرَى الرِّبَا فِي هَذَا، إِلَّا مَا كَانَ مِنْ نَظِرَةٍ، فَقَالَ عُبَادَةُ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتُحَدِّثُنِي عَنْ رَأْيِكَ لَئِنْ أَخْرَجَنِي اللَّهُ لَا أُسَاكِنُكَ بِأَرْضٍ لَكَ عَلَيَّ فِيهَا إِمْرَةٌ، فَلَمَّا قَفَلَ لَحِقَ بِالْمَدِينَةِ، فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ: مَا أَقْدَمَكَ يَا أَبَا الْوَلِيدِ؟ فَقَصَّ عَلَيْهِ الْقِصَّةَ، وَمَا قَالَ مِنْ مُسَاكَنَتِهِ، فَقَالَ: ارْجِعْ يَا أَبَا الْوَلِيدِ إِلَى أَرْضِكَ، فَقَبَحَ اللَّهُ أَرْضًا لَسْتَ فِيهَا وَأَمْثَالُكَ، وَكَتَبَ إِلَى مُعَاوِيَةَ: لَا إِمْرَةَ لَكَ عَلَيْهِ، وَاحْمِلِ النَّاسَ عَلَى مَا قَالَ، فَإِنَّهُ هُوَ الْأَمْرُ
[حكم الألباني]
صحيح
18.நபி (ஸல் )அவர்களின் தோழரும் (அகபா உடன்படிக்கையில் நபியால்) தேர்வு செய்யப்பட்டவருமான உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் முஆவியா( ரலி )அவர்களுடன் ரோமபுரி நாட்டிற்கு சென்றார்கள்.
அங்கே மக்கள் தீனார்களுக்கு பகரமாக தங்கத்துண்டுகளையும் திர்ஹத்திற்கு பகரமாக வெள்ளித்துண்டுகளையும் விற்பதை கண்ட போது மக்களே நீங்கள் வட்டியை உண்கிறீர்கள். நபி (ஸல் )அவர்கள் சரிக்கு சரியாக இருந்தாலே தவிர தங்கத்திற்கு பகரமாக தங்கத்தை விற்காதீர்கள் .
அவற்றுக்கிடையில் கூடுதலும் இருக்க கூடாது, காலதாமதமும் இருக்க கூடாது என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று உபாதா (ரலி )கூறினார்கள்.

அதற்கு முஆவியா (ரலி )அவர்கள் அபுல் வலீதே தவணை அடிப்படையிலான (வியாபாரத்) தை தவிர இதில் வட்டி இருப்பதாக நான் கருதவில்லை. என்றார்கள்.

அப்போது உபாதா (ரலி )அவர்கள் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் சொந்தக்கருத்தை தெரிவிக்கிறீர்கள்? பரிசுத்தவானாகிய அல்லாஹ் என்னை வெளியேற்றினாலும் (பிரச்சனையில்லை) என் மீது உங்களுக்கு அதிகாரம் இருக்கும் இந்த ஊருக்குள் நான் உங்களுடன் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டு மதீனா நகருக்கு புறப்பட்டார்கள். உபாதா (ரலி) மதீனாவை அடைந்த போது அபுல்வலீதே நீர் இங்கே வந்ததன் காரணம் என்ன? என்று உமர் (ரலி) அவர்கள் வினவினார். நடந்த நிகழ்வையும் தான் முஆவியா (ரலி) அவருடன் இருப்பது பற்றியும் சொன்ன கருத்துக்களை அவர் தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அபுல் வலீதே நீங்கள் உங்கள் ஊருக்கு திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில் நீரும் உன்போன்றவர்களும் இல்லாத ஊரை அல்லாஹ் வெறுத்து விடுவான் என்று கூறிவிட்டு உடனே முஆவியா (ரலி) அவர்களுக்கு இவர் மீது உமக்கு அதிகாரம் இல்லை. (இந்த விவகாரத்தில்) இவர் சொன்னதையே மக்களுக்கு தெரிவிப்பீராக. இதுவே சரியானது என்று கடிதம் எழுதினார்கள்.

இதை கபீஸா பின் துஐப் (ரலி) அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் முஸ்லிம் ( 1587) திர்மிதீ ( 1240) நஸாயீ ( 4560,4561,4562,4563,4566) அஹ்மத் ( 22683) தாரமீ ( 457,2621)

19-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ الْخَلَّادِ الْبَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ قَالَ: أَنْبَأَنَا عَوْنُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: «إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَظُنُّوا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الَّذِي هُوَ أَهْنَاهُ، وَأَهْدَاهُ، وَأَتْقَاهُ»
[حكم الألباني]
ضعيف منقطع

19.அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்( ரலி )அறிவிக்கிறார்கள்

நீங்கள் நபி (ஸல்) அவர்களை பற்றி ஏதும் அறிவித்தால் நபி (ஸல்) அவர்களே அதற்கு மிகவும் தகுதி பெற்றவர்கள், அவர்களே நேர்வழிபெற்றவர்கள், (இறைவனை) அதிகம் அஞ்சுபவர்கள் என்பதை (தவறாமல்) எண்ணிக் கொள்ளுங்கள்.

தரம் : ளயீப்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் தாரமீ ( 611) அஹ்மத் ( 3645,3940 ) பலவீனமான அறிவிப்பாளர் தொடர்யில் வந்து உள்ளது.

20-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: «إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا، فَظُنُّوا بِهِ الَّذِي هُوَ أَهْنَاهُ، وَأَهْدَاهُ، وَأَتْقَاهُ»
[حكم الألباني]
صحيح
20.அலி பின் அபீதாலிப் (ரலி) அறிவிக்கிறார்கள்

நீங்கள் நபி (ஸல்) அவர்களை பற்றி ஏதும் அறிவித்தால் நபி (ஸல்) அவர்களே அதற்கு மிகவும் தகுதி பெற்றவர்கள், அவர்களே நேர்வழிபெற்றவர்கள், இறைவனை அதிகம் அஞ்சுபவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் தாரமீ ( 612 ) அஹ்மத் ( 985,986,987,1039,1080,1082,1092)


21-حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ قَالَ: حَدَّثَنَا الْمَقْبُرِيُّ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " لَا أَعْرِفَنَّ مَا يُحَدَّثُ أَحَدُكُمْ عَنِّي الْحَدِيثَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ، فَيَقُولُ: اقْرَأْ قُرْآنًا، مَا قِيلَ مِنْ قَوْلٍ حَسَنٍ فَأَنَا قُلْتُهُ "
[حكم]
.ضعيف جدا
21.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவர் கட்டிலில் சாய்ந்தவாறு என்னைப்பற்றிய செய்தியை அறிவித்து விட்டு குர்ஆனை ஓதுங்கள். அதில் சொல்லப்பட்ட நல்ல கருத்துக்களை (மட்டுமே) நான் சொல்வேன் (இதை ஏற்க மாட்டேன்) என்று கூறுவதை நான் அறிய மாட்டேன்.

இதை அபூஹூரைரா ரலி அறிவிக்கிறார்

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 8801,10269) பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்று உள்ளது.

22-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ آدَمَ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَحَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ لِرَجُلٍ: يَا ابْنَ أَخِي، «إِذَا حَدَّثْتُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا، فَلَا تَضْرِبْ لَهُ الْأَمْثَالَ»
حسن  : حكم 

22.அபூஹூரைரா( ரலி )அவர்கள் ஒரு மனிதரிடம் என் சகோதரனின் மகனே நபிகள் நாயகத்திடமிருந்து ஒரு செய்தியை நீ அறிவித்தால் அதற்கு உதாரணம் கூறாதே என்று கூறினார்கள்.

இதை அம்ரு பின் முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்

தரம் : ஹஸன்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் இப்னுமாஜா ( 485) யில் இடம்பெற்று உள்ளது.

23-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا مُسْلِمٌ الْبَطِينُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: " مَا أَخْطَأَنِي ابْنُ مَسْعُودٍ عَشِيَّةَ خَمِيسٍ إِلَّا أَتَيْتُهُ فِيهِ، قَالَ: فَمَا سَمِعْتُهُ يَقُولُ لِشَيْءٍ قَطُّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ ذَاتَ عَشِيَّةٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَكَسَ " قَالَ: «فَنَظَرْتُ إِلَيْهِ، فَهُوَ قَائِمٌ مُحَلَّلَةً، أَزْرَارُ قَمِيصِهِ، قَدْ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ، وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ» قَالَ: أَوْ دُونَ ذَلِكَ، أَوْ فَوْقَ ذَلِكَ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، أَوْ شَبِيهًا بِذَلِكَ

حكم : صحيح

23.அம்ர் பின் மைமூன் (ரலி) கூறியதாவது

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையும் இப்னு மஸ்ஊத் (ரலி )அவர்களிடம் தவறாது சென்று (சந்தித்து) வந்தேன். எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (ஒரு ஹதீஸை) அவர் கூறுவார். ஒரு மாலைப்பொழுதில் அவர் நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள் என்று கூறி தம் தலையை மேலும் கீழுமாக உயர்த்தி பார்த்தார்.
அப்போது நான் அவரை பார்த்தேன் அவர் தனது சட்டையைின் பொத்தான்களை கழற்றியவராக நின்று கொண்டிருந்தார். அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன. உடல் நடுங்கியவாறே இதைவிட குறைவானதையோ, கூடுதலானதையோ, நெருக்கமானதையோ இதற்கு ஒப்பானதையோ நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று (நடுக்கத்துடன்) கூறினார்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 3670,4321,4333) தாரமீ ( 278,279,289)

24-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ، " إِذَا حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا فَفَرَغَ مِنْهُ قَالَ: أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "

حكم : صحيح

24.அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்கள் சொன்ன செய்தியை கூறி முடிக்கும் போது அவ் கமா கால ரசூலுல்லாஹ் (ஸல்), (இது போன்ற வார்த்தைகளை நபி சொல்லியிருக்கலாம்) என்று (பேணுதலுக்காக) கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

இதை முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அறிவிக்கிறார்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 13124,13465) தாரமீ ( 284,285)

25-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: قُلْنَا لِزَيْدِ بْنِ أَرْقَمَ: حَدِّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَبِرْنَا وَنَسِينَا، وَالْحَدِيثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَدِيدٌ»

حكم : صحيح

25.நாங்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தியை எங்களுக்கு தெரிவியுங்கள் என்று ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கூறினோம். அதற்கு அவர், நபி (ஸல்) அவர்களின் செய்தியை அறிவிப்பது கடினமான வேலை. ஆனால் எங்களுக்கோ வயதாகி விட்டது. (நிறைய செய்திகளை) மறந்து விட்டோம் என்றார்கள்.

இதை அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா ரஹ் அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 19304,19305,19324)

26-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ يَقُولُ: «جَالَسْتُ ابْنَ عُمَرَ سَنَةً، فَمَا سَمِعْتُهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا»

حكم : صحيح

26.இப்னு உமர் (ரலி )அவர்களுடன் (நட்பு அடிப்படையில்) ஒரு வருட காலம் அமர்ந்து (பேசி) இருக்கிறேன். அவர் நபி (ஸல் )அவர்களை பற்றி எதையும் சொல்ல நான் கேட்டதில்லை.

இதை ஷஃபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 6465 ) தாரமீ ( 280,281 )

27-حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: «إِنّا كُنَّا نَحْفَظُ الْحَدِيثَ، وَالْحَدِيثُ يُحْفَظُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا إِذَا رَكِبْتُمُ الصَّعْبَ وَالذَّلُولَ، فَهَيْهَاتَ»

حكم : صحيح
27.இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை மனனம் செய்து வந்தோம். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மனனம் செய்யப்பட வேண்டியவையே. ஆனால் நீங்கள் வரம்பு மீறவோ, அலட்சியம் காட்டவோ செய்தால் அது (ஹதீஸ்களை அறிவிப்பது) தூரமாகி விடும்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தியை இமாம் முஸ்லிம் தன்னுடைய முன்னுரையில் எடுத்துகாட்டுகிறார்கள்.

28-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَرَظَةَ بْنِ كَعْبٍ، قَالَ: بَعَثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى الْكُوفَةِ وَشَيَّعَنَا، فَمَشَى مَعَنَا إِلَى مَوْضِعٍ يُقَالُ لَهُ صِرَارٌ، فَقَالَ: «أَتَدْرُونَ لِمَ مَشَيْتُ مَعَكُمْ؟» قَالَ: قُلْنَا: لِحَقِّ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِحَقِّ الْأَنْصَارِ، قَالَ " لَكِنِّي مَشَيْتُ مَعَكُمْ لِحَدِيثٍ أَرَدْتُ أَنْ أُحَدِّثَكُمْ بِهِ، فأردْتُ أَنْ تَحْفَظُوهُ لِمَمْشَايَ مَعَكُمْ، إِنَّكُمْ تَقْدَمُونَ عَلَى قَوْمٍ لِلْقُرْآنِ فِي صُدُورِهِمْ هَزِيزٌ كَهَزِيزِ الْمِرْجَلِ، فَإِذَا رَأَوْكُمْ مَدُّوا إِلَيْكُمْ أَعْنَاقَهُمْ، وَقَالُوا: أَصْحَابُ مُحَمَّدٍ، فَأَقِلُّوا الرِّوَايَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَنَا شَرِيكُكُمْ "

حكم : صحيح

28.கரளா பின் கஃப் (ரலி) கூறுவதாவது

(ஒருமுறை) உமர் (ரலி )அவர்கள் எங்களை கூஃபா நகரத்திற்கு அனுப்பி வைத்து அவரும் எங்களுடன் வந்தார்கள். ஸிரார் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது நான் உங்களுடன் ஏன் வந்தேன் என அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் நபியின் தோழர்களாகவும் அன்சாரிகளாகவும் இருப்பதாலேயே (தாங்கள் வந்தீர்கள்) என்றோம். உமர்( ரலி) அவர்கள் அதுவல்ல நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியை உங்களுக்கு சொல்லி நான் உங்களுடன் நடந்து வரும் நேரத்தில் அதை நீங்கள் மனனம் செய்ய வேண்டும் என்று விரும்பியே உங்களுடன் வந்தேன். நீங்கள் எத்தகைய கூட்டத்தாரிடம் செல்கிறீர்கள் என்றால் தண்ணீர் பாத்திரம் கொதிப்பதை போன்று குர்ஆனுக்காக (செவியேற்பதில்) அவர்களது உள்ளத்தில் (ஆர்வம்) கொதித்து கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் உங்களை கண்டால் தங்கள் கழுத்துக்களை உங்களை நோக்கி நீட்டுவார்கள். உங்களை நபியின் தோழர்கள் என்று (பெருமையுடன்) கூறிக்கொள்வார்கள். ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்திகளை குறைவாகவே அறிவியுங்கள். (நன்மையில்) நானும் உங்களுடன் கூட்டு சேர்வேன் என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தி தாரமீ ( 287,288) பதிவாகி உள்ளது.

29-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: «صَحِبْتُ سَعْدَ بْنَ مَالِكٍ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَمَا سَمِعْتُهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَدِيثٍ وَاحِدٍ»

حكم : صحيح
29.ஸாயிப் பின் யஸீத்( ரலி) அறிவிப்பதாவது

நான் ஸஃது பின் மாலிக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா சென்றேன். (அப்பயணத்தில்) அவர் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய ஒரு ஹதீஸையும் அறிவிக்க நான் கேட்கவில்லை.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தி தாரமீ ( 286) பதிவாகி உள்ளது.

30-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالُوا: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

حكم : صحيح بل هو متواتر

30.என் மீது வேண்டும் என்றே யார் பொய்யுரைக்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ் , இது முத்தவாதீரான செய்தி ஆகும்

இதே கருத்து அடங்கின செய்தி அஹ்மத் ( 3694,3801,3814,3847,4156,4338) தாரமீ ( 2257,2659)



31-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالَا: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّ الْكَذِبَ عَلَيَّ يُولِجُ النَّارَ»
حكم : صحيح
31.அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
என் மீது பொய்யுரைக்காதீர்கள். என் மீது பொய்யுரைப்பது நரகில் நுழைத்து விடும்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தி புஹாரி ( 106) முஸ்லிம் முன்னுரை (1) திர்மிதீ ( 2660) அஹ்மத் ( 584,629,630,1000,1075,1089,1292)

32-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ - حَسِبْتُهُ قَالَ مُتَعَمِّدًا - فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
حكم ; صحيح
32.அனஸ் பின் மாலிக் (ரலி )அறிவிக்கிறார்கள்
யார் என் மீது பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வேண்டும் என்றே என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் நினைக்கிறேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
இப்னு ஷிஹாப் (ரஹ்) இதை அறிவிக்கிறார்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தி புஹாரி ( 108) முஸ்லிம் முன்னுரை ( 2) திர்மிதீ (2661) அஹ்மத் ( 11942,12110,12154,12702,12764) தாரமீ ( 241,242,244)

33-حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
حكم: صحيح
33.என் மீது வேண்டும் என்றே யார் பொய்யுரைக்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தி அஹ்மத் ( 14255) தாரமீ ( 237)

34-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَقَوَّلَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
حكم : حسن صحيح

34.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

யார் நான் சொல்லாததை என் மீது இட்டுக்கட்டிச் சொல்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அபூஹூரைரா( ரலி )அறிவிக்கிறார்கள்

தரம் : ஹஸன் ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின செய்தி புஹாரி ( 110,6197) முஸ்லிம் முன்னுரை ( 3)  அஹ்மத் (8266,9316,9350,10055,10513,10728,11092) தாரமீ ( 613)

35-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى هَذَا الْمِنْبَرِ: «إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَدِيثِ عَنِّي، فَمَنْ قَالَ عَلَيَّ، فَلْيَقُلْ حَقًّا أَوْ صِدْقًا، وَمَنْ تَقَوَّلَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
حكم : حسن
35.அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் (ஒரு சமயம்) இந்த மிம்பரில் இருந்தவாறு என்னிடமிருந்து அதிகமான செய்திகளை அறிவிப்பதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். என்னிடமிருந்து எதையேனும் சொல்பவர் உண்மையையே சொல்லட்டும். யார் நான் சொல்லாததை என் மீது இட்டுக்கட்டிச் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

தரம் : ஹஸன்

இதே கருத்து அடங்கின செய்தி அஹ்மத் ( 22538,22639 ) தாரமீ ( 243)


36-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا غُنْدَرٌ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ أَبِي صَخْرَةَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، مَا لِيَ لَا أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا أَسْمَعُ ابْنَ مَسْعُودٍ، وَفُلَانًا وَفُلَانًا؟ قَالَ: أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ مُنْذُ أَسْلَمْتُ، وَلَكِنِّي سَمِعْتُ مِنْهُ كَلِمَةً، يَقُولُ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

حكم : صحيح

36.அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி) அறிவிப்பதாவது

நான் ஜூபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் (தந்தையே) இப்னு மஸ்ஊத்( ரலி), மற்றும் இன்னார் இன்னாரிடமிருந்து நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை (அதிகம்) கேட்க முடிவதை போன்று தங்களிடமிருந்து கேட்க முடிவதில்லையே ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களை (அதிகம்) பிரிந்ததில்லை. அப்படியிருந்தும் (அதிகமான ஹதீஸ்களை அறிவிக்காததற்கு காரணம்) நபி (ஸல்) அவர்கள் யார் என் மீது பொய்யுரைக்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று கூறியதை நான் செவியேற்றுள்ளது தான் (காரணம்) என்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ்  புஹாரி ( 107 ) அபூதாவூத் ( 3651) அஹ்மத் ( 1413,1428) தாரமீ ( 239)

37-حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

حكم : صحيح

37.என் மீது வேண்டும் என்றே யார் பொய்யுரைக்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்.

இதை அபூசயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்லிம் ( 3004) அஹ்மத் ( 11344,11350,11404,11424,11536)

38-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ»

حكم : صحيح

38.என்னைப்பற்றி பொய் எனக்கருதப்படும் செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அலீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 903 ) பதிவாகி உள்ளது

39-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ»

حكم : صحيح

39.என்னைப்பற்றி பொய் எனக்கருதப்படும் செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஸமுரா பின் ஜூன்துப் (ரலி) அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்லிம் முன்னுரையிலும் , அஹ்மத் ( 20163,20221,20224) பதிவாகி உள்ளது

40-حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَوَى عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: أَنْبَأَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ، عَنْ شُعْبَةَ، مِثْلَ حَدِيثِ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ

حكم : صحيح

40.என்னைப்பற்றி பொய் எனக்கருதப்படும் செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவர் ஆவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இதை அலி ரலி அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்லிம் முன்னுரையிலும் , அஹ்மத் ( 903,20163,20221,20224) பதிவாகி உள்ளது.


41-حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ»
[حكم الألباني]
صحيح
41.என்னைப்பற்றி பொய் எனக்கருதப்படும் செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை முகீரா பின் ஷூஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்லிம் முன்னுரையிலும் ,திர்மிதீ ( 2662) அஹ்மத் ( 18184,18211,18240)

42-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ يَعْنِي ابْنَ زَبْرٍ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي الْمُطَاعِ، قَالَ: سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً، وَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ: وَعَظْتَنَا مَوْعِظَةَ مُوَدِّعٍ، فَاعْهَدْ إِلَيْنَا بِعَهْدٍ، فَقَالَ: «عَلَيْكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، وَسَتَرَوْنَ مِنْ بَعْدِي اخْتِلَافًا شَدِيدًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَالْأُمُورَ الْمُحْدَثَاتِ، فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»
[حكم الألباني]
صحيح
42.இர்பாள் பின் சாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று எச்சரிக்கை நிறைந்த உபதேசத்தை எங்களுக்கு நிகழ்த்தினார்கள். எங்கள் உள்ளங்கள் அதனால் நடுங்கியது. கண்கள் நீரை சொரிந்தன.
அப்போது அல்லாஹ்வின் தூதரே விடைபெறுபவரின் உபதேசத்தை போன்று இது உள்ளதே.? எங்களிடம் ஒப்பந்தம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று (எங்களில் சிலரால்) சொல்லப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் இறையச்சத்தை கடைபிடியுங்கள். அபிசீனிய அடிமையாக இருப்பினும் செவிமடுங்கள், கட்டுப்படுங்கள் என்று உங்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். எனக்கு பிறகு கடுமையான கருத்துவேறுபாடுகளை காண்பீர்கள். அப்போது எனது வழிமுறையையும் எனது வழிமுறையை கடவாய் பற்களால் கடித்துகொண்ட, நேர்வழி காட்டப்பட்டு நேர்வழியில் செல்கின்ற கலீபாக்களின் வழிமுறையையும் பிடித்துக் கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதுமையான விஷயங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும் என்று நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின செய்தி அபூதாவூத் ( 4607 ) திர்மிதீ ( 2676) அஹ்மத் ( 17142,17144,17145) தாரமீ (96)

43-حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ: وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: «قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ، مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ، حَيْثُمَا قِيدَ انْقَادَ»
[حكم الألباني]
صحيح
43.நபி( ஸல்) அவர்கள் ஒரு உபதேசத்தை எங்களுக்கு நிகழ்த்தினார்கள். எங்கள் உள்ளங்கள் அதனால் நடுங்கியது. கண்கள் நீரை சொரிந்தன.
அப்போது அல்லாஹ்வின் தூதரே இது விடைபெறுபவரின் உபதேசத்தை போன்று உள்ளதே.? எங்களுக்கு என்ன அறிவுரை சொல்லப்போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களை வெள்ளை வெளீரென்ற (மார்க்கத்) தில் விட்டுச் செல்கிறேன்.
அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்கு பிறகு அழிந்தவனை தவிர வேறு யாரும் அதிலிருந்து வழிதவற மாட்டார். (எனக்கு பிறகு) உங்களில் வாழ்பவர் அதிகமான கருத்து வேறுபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் அறிந்த எனது வழிமுறையையும் எனது வழிமுறையை கடவாய் பற்களால் கடித்துகொண்ட, நேர்வழி காட்டப்பட்டு நேர்வழியில் செல்கின்ற கலீபாக்களின் வழிமுறையையும் பிடித்துக் கொள்ளுங்கள். அபிசீனிய அடிமையாக இருப்பினும் செவிமடுங்கள், கட்டுப்படுங்கள் என்று உங்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். ஏனெனில் ஓர் இறைவிசுவாசி எங்கு இழுத்துச் செல்லப்பட்டாலும் அதற்கு கட்டுப்படும் கடிவாளமிடப்பட்ட ஒட்டகத்தை போன்றவன் என்று கூறினார்கள்.
இதை இர்பாள் பின் சாரியா( ரலி )அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின செய்தி அபூதாவூத் ( 4607 ) திர்மிதீ ( 2676) அஹ்மத் ( 17142,17144,17145) தாரமீ (96)

44-حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ قَالَ: حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ
[حكم الألباني]
صحيح
 நபி ஸல் அவர்கள் பஜ்ர் தொழுகையை முடித்து விட்டு எங்களை நோக்கி ஒர் உபதேசத்தை எங்களுக்கு நிகழ்த்தினார்கள். ( முன் சென்ற ஹதீஸ் 43 செய்தியே இடம்பெற்று உள்ளது )
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின செய்தி அபூதாவூத் ( 4607 ) திர்மிதீ ( 2676) அஹ்மத் ( 17142,17144,17145) தாரமீ (96)

45-حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ: «صَبَّحَكُمْ مَسَّاكُمْ» وَيَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ، وَيَقْرِنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى» ثُمَّ يَقُولُ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْأُمُورِ كِتَابُ اللَّهِ، وَخَيْرُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ» وَكَانَ يَقُولُ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا، فَعَلَيَّ وَإِلَيَّ»
[حكم الألباني]
صحيح
45.ஜாபிர் பின் அப்துல்லாஹ்( ரலி )அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது அவர்களது இரு கண்களும் சிவந்து விடும். சப்தம் உயர்ந்து விடும். கோபம் அதிகரிக்கும். எதிரி உங்களிடம் காலையில் வந்துவிடுவர், எதிரி உங்களிடம் மாலையில் வந்து விடுவர் என்று கூறி போர்ப்படையை எச்சரிப்பவரை போன்று நபி (ஸல்) அவர்கள் ஆகிவிடுவார்கள். மேலும் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறி, தம்முடைய ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். பிறகு, இறைவாழ்த்துக்குப் பின்! காரியங்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று கூறுவார்கள்.

யார் செல்வத்தை விட்டுச் செல்கிறாரோ அது அவரது குடும்பத்தாருக்குரியது. யார் கடனையோ வறுமையையோ விட்டுச் செல்கிறாரோ அது என்னைச் சார்ந்தது நானே அதற்கு பொறுப்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்லிம் ( 867) அபூதாவூத் ( 2954,2956,3343)  நஸாயீ ( 1578,1962) அஹ்மத் ( 14158,14159,14334,14431,14630,14984) தாரமீ ( 212 )

46-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ الْمَدَنِيُّ أَبُو عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّمَا هُمَا اثْنَتَانِ، الْكَلَامُ وَالْهَدْيُ، فَأَحْسَنُ الْكَلَامِ كَلَامُ اللَّهِ، وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، أَلَا وَإِيَّاكُمْ وَمُحْدِثَاتِ الْأُمُورِ، فَإِنَّ شَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، أَلَا لَا يَطُولَنَّ عَلَيْكُمُ الْأَمَدُ، فَتَقْسُوَ قُلُوبُكُمْ، أَلَا إِنَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ، وَإِنَّمَا الْبَعِيدُ مَا لَيْسَ بِآتٍ، أَلَا إِنَّمَا الشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ، وَالسَّعِيدُ مَنْ وُعِظَ بِغَيْرِهِ، أَلَا إِنَّ قِتَالَ الْمُؤْمِنِ كُفْرٌ وَسِبَابُهُ فُسُوقٌ، وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، أَلَا وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ لَا يَصْلُحُ بِالْجِدِّ وَلَا بِالْهَزْلِ، وَلَا يَعِدُ الرَّجُلُ صَبِيَّهُ ثُمَّ لَا يَفِي لَهُ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارَ، وَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّهُ يُقَالُ لِلصَّادِقِ: صَدَقَ وَبَرَّ، وَيُقَالُ لِلْكَاذِبِ: كَذَبَ وَفَجَرَ، أَلَا وَإِنَّ الْعَبْدَ يَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا "
[حكم الألباني]
ضعيف
46.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேச்சு, வழிகாட்டல் என இரண்டு (தான்) உள்ளது. பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் பேச்சாகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். (மார்க்கத்தில் புகுத்தப்படும்) புதுமையான விஷயங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். செயல்களில் தீயவை (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்''. அறிந்து கொள்ளுங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம். அது உங்கள் உள்ளங்களை இறுகச் செய்து விடும். எது வரவிருக்கிறதோ அது அருகிலேயே உள்ளது. எது தூரமாக உள்ளதோ அது வரக்கூடியதாக இல்லை.

துர்பாக்கியசாலி என்பவன் தன் தாயின் வயிற்றிலேயே துர்பாக்கியசாலியாக (விதிக்கப்பட்டு) இருப்பவன் ஆவான். நற்பாக்கியவான் என்பவன் பிறர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டவன் ஆவான்.
அறிந்து கொள்ளுங்கள் இறைவிசுவாசியை கொல்வது இறைமறுப்பாகும். அவனை திட்டுவது பாவமானதாகும். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
பொய் சொல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். திட்டமிட்டோ கேலியாகவோ பொய் சொல்வது தகாது. ஒருவர் தனது குழந்தையிடம் வாக்குறுதி வழங்கி பின்னர் அதை நிறைவேற்றாமலிருக்கும் படி ஆக்கிவிடாதீர்.
பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும்.

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.
உண்மையாளருக்கு இவர் உண்மை பேசினார், நன்மை புரிந்தார் என்று கூறப்படும். பொய் பேசியவரிடத்தில் இவர் பொய்யுரைத்தார், தீமை புரிந்தார் என்று கூறப்படும்.

ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் "பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்

தரம் : ளயீப்
குறிப்பு : இந்த செய்தியில் இடம்பெற்ற கருத்துகள் ஸஹீஹானவையே வேறு கிரந்தங்களில் ஸஹீஹ் தரத்தில் இடம்பெற்று உள்ளது.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 48,6044,6094,7076) முஸ்லிம் (64,2606,2607) அபூதாவூத் ( 4989) திர்மிதீ (1971,1983,2634,2635) நஸாயீ (4105,4106,4107,4109) அஹ்மத் (3638,3647,3727,3845 ) தாரமீ ( 2757 )

47-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ} [آل عمران: 7] إِلَى قَوْلِهِ، {وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ} فَقَالَ: «يَا عَائِشَةُ، إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يُجَادِلُونَ فِيهِ، فَهُمُ الَّذِينَ عَنَاهُمُ اللَّهُ، فَاحْذَرُوهُمْ»
[حكم الألباني]
صحيح
47.நபி (ஸல்) அவர்கள் (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ற விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்.

அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை. என்ற (அல்குர்ஆன் 3 :7) வசனத்தை ஓதினார்கள்.
பிறகு ஆயிஷாவே இதில் தர்க்கம் புரிபவர்களை பார்த்தால் அல்லாஹ் குறிப்பிட்ட (உள்ளங்களில் கோளாறுள்ள) வர்கள் அவர்கள் தான். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்கள்.
இதை ஆயிஷா( ரலி) அறிவிக்கிறார்கள்
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி (4547) முஸ்லிம் ( 2665 ) அபூதாவூத் ( 4598 ) திர்மிதீ ( 2993,2994 ) அஹ்மத் ( 24210,24929,25004,26197 ) தாரமீ ( 147 )

48-حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَا: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ» ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ {بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]
[حكم الألباني]
حسن
48.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நேர்வழியில் இருந்த கூட்டம் அதன் பிறகு வழிகெடுவதாக இருந்தால் வீண் தர்க்கம் வழங்கப்பட்ட பிறகே வழிகெடுகிறார்கள் என்று கூறி இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே! ( அல்குர்ஆன் 43 58) என்ற வசனத்தை ஓதினார்கள்.
இதை அபூஉமாமா ரலி அறிவிக்கிறார்கள்
தரம் : ஹஸன்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் திர்மிதீ ( 3253 ) அஹ்மத் ( 22164 ) பதிவாகி உள்ளது.

49-حَدَّثَنَا دَاوُدُ بْنُ سُلَيْمَانَ الْعَسْكَرِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ أَبُو هَاشِمِ بْنِ أَبِي خِدَاشٍ الْمَوْصِلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِحْصَنٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِيِّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْبَلُ اللَّهُ لِصَاحِبِ بِدْعَةٍ صَوْمًا، وَلَا صَلَاةً، وَلَا صَدَقَةً، وَلَا حَجًّا، وَلَا عُمْرَةً، وَلَا جِهَادًا، وَلَا صَرْفًا، وَلَا عَدْلًا، يَخْرُجُ مِنَ الْإِسْلَامِ كَمَا تَخْرُجُ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ»
[حكم الألباني]
موضوع
49.ஹூதைஃபா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பித்அத் செய்பவனின் நோன்பையோ தொழுகையையோ தர்மத்தையோ ஹஜ்ஜையோ உம்ராவையோ அறப்போரையோ பாவமன்னிப்பையோ நஷ்டஈட்டையோ அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். குழைத்த மாவிலிருந்து முடி வெளியேறுவதை போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சிரமமின்றி) வெளியேறி விடுவார்கள்.
தரம் : மவ்ளூவு [ இட்டுகட்டபட்டவை ]
இந்த செய்தி இப்னுமாஜாவில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

50-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ الْحَنَّاطُ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ أَبِي الْمُغِيرَةِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبَى اللَّهُ أَنْ يَقْبَلَ عَمَلَ صَاحِبِ بِدْعَةٍ حَتَّى يَدَعَ بِدْعَتَهُ»

[حكم الألباني]
ضعيف
50.இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்
பித்அத் செய்வன் தனது பித்அத்தை விட்டொழிக்கும் வரை அவனது நற்காரியங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தரம் : ளயீப்

இந்த செய்தி இப்னுமாஜாவில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.





No comments:

Post a Comment