Wednesday, April 11, 2018

பாடம் : 05 காலுறைகளில் மஸஹ் செய்வது பற்றினது





بَابُ اَلْمَسْحِ عَلَى اَلْخُفَّيْنِ காலுறைகளில் மஸஹ் செய்வது விளக்கம்

62-عَنْ اَلْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ - رضي الله عنه - قَالَ: - كُنْتُ مَعَ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم - فَتَوَضَّأَ, فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ, فَقَالَ: "دَعْهُمَا, فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ" فَمَسَحَ عَلَيْهِمَا - مُتَّفَقٌ عَلَيْه
صحيح. رواه البخاري (206) ، ومسلم (274) (79)


63 நபி(ஸல்) அவர்களுடன் நானிருந்த போது, அவர்கள் உளு செய்தார்கள். அப்போது நான் அவர்களது காலுறைகளைக் கழற்ற முயன்றேன். (அதற்கு) ''அவை இரண்டையும் விட்டுவிடு. ஏனெனில், தூய்மையான நிலையில் தான் அவை இரண்டையும் நான் அணிந்துள்ளேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

   64-وَلِلْأَرْبَعَةِ عَنْهُ إِلَّا النَّسَائِيَّ: - أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - مَسَحَ أَعْلَى اَلْخُفِّ وَأَسْفَلَهُ - وَفِي إِسْنَادِهِ ضَعْف ٌ
ضعيف. رواه أبو داود (165) ، والترمذي (97) ، وابن ماجه (550)

64 ''நபி(ஸல்) அவர்கள் காலுறையின் மேலும், கீழும் மஸஹ் செய்தார்கள்'' எனும் வாசகம் முகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்களிடமிருந்தே அபூ தாவூத் திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய மூன்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

65-وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: - لَوْ كَانَ اَلدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ اَلْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ, وَقَدْ رَأَيْتُ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم - يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَن
صحيح. رواه أبو داود (162)


65 ''மார்க்கம், அறிவை (மட்டும்) அடிப்படையாகக் கொண்டிருப்பின், காலுறைகளின் கீழ்ப்பக்கம் மஸஹ் செய்வது சிறப்பானதாய் இருந்திருக்கும். ஆனால், நான் நபி(ஸல்) அவர்களை காலுறைகளின் மேல்பக்கம் மஸஹ் செய்யக் கண்டிருக்கிறேன்'' என அலி(ரலி) கூறுகிறார்.

அபூ தாவூத். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

66-وَعَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ - رضي الله عنه - قَالَ: - كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفْرًا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ, إِلَّا مِنْ جَنَابَةٍ وَلَكِنْ مِنْ  غَائِطٍ, وَبَوْلٍ, وَنَوْمٍ - أَخْرَجَهُ النَّسَائِيُّ, وَاَلتِّرْمِذِيُّ وَاللَّفْظُ لَهُ, وَابْنُ خُزَيْمَةَ وَصَحَّحَاه ُ
حسن. رواه النسائي (1/83-84) ، والترمذي (96) ، وابن خزيمة (196) ، وقال الترمذي: حسن صحيح.


66 பயணத்தில், குளிப்பு கடமையானவர்களைத் தவிர்த்து, மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு மலம், ஜலம் கழித்தல் மற்றும் தூங்குதல் போன்றவற்றிற்காக எங்கள் காலுறைகளை கழற்ற வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அறிவிக்கிறார்.

நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு குஸைமா. இதில் திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. திர்மிதீயிலும் இப்னு குஸைமாவிலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

67-وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رضي الله عنه - قَالَ: - جَعَلَ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ, وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ. يَعْنِي: فِي اَلْمَسْحِ عَلَى اَلْخُفَّيْنِ - أَخْرَجَهُ مُسْلِم ٌ
صحيح. رواه مسلم (276)


67 ''மூன்று பகலும் மூன்று இரவும் பயணிகளுக்கும், ஒரு பகல் ஒரு இரவு பயணியல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்'' என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

68-وَعَنْ ثَوْبَانَ - رضي الله عنه - قَالَ: - بَعَثَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - سَرِيَّةً, فَأَمَرَهُمْ أَنْ يَمْسَحُوا عَلَى اَلْعَصَائِبِ - يَعْنِي: اَلْعَمَائِمَ -وَالتَّسَاخِينِ- يَعْنِي: اَلْخِفَافَ - رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ اَلْحَاكِم
صحيح. رواه أحمد (577) ، وأبو داود (146) ، والحاكم (169)


68 நபி(ஸல்) அவர்கள் ஒரு சிறு படையை அனுப்பிய போது அவர்கள் தலைப்பாகைகளிலும், காலுறைகளிலும் மஸஹ் செய்து கொள்ளுமாறு அவர்களுக்குத் கட்டளையிட்டார்கள் என ஸல்பான்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
69-وَعَنْ عُمَرَ -مَوْقُوفًا- و] عَنْ] أَنَسٍ -مَرْفُوعًا-: - إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيَمْسَحْ عَلَيْهِمَا, وَلْيُصَلِّ فِيهِمَا, وَلَا يَخْلَعْهُمَا إِنْ شَاءَ إِلَّا مِنْ جَنَابَةٍ" - أَخْرَجَهُ اَلدَّارَقُطْنِيُّ, وَالْحَاكِمُ وَصَحَّحَه
انظر الدارقطني (103 - 204) ، والحاكم (181)


69 ''உங்களில் குளிப்புக் கடமையில்லாதவர் எவரேனும், காலுறைகள் அணிந்து கொண்டே உளுச் செய்தால் அவர் விரும்பினால் அவற்றின் மீது மஸஹ் செய்து கொண்டு, அவற்றுடனேயே தொழட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) வாயிலாக மவ்கூஃப் எனும் தரத்திலும், அனஸ்(ரலி) வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்திலும் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் ஹாகிம் இதை ஸஹீஹ் என்று கூறுகிறார்.

70-وَعَنْ أَبِي بَكْرَةَ - رضي الله عنه - عَنْ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم - أَنَّهُ رَخَّصَ لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ, وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً, إِذَا تَطَهَّرَ فَلَبِسَ خُفَّيْهِ: أَنْ يَمْسَحَ عَلَيْهِمَا - أَخْرَجَهُ اَلدَّارَقُطْنِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة
حسن. رواه الدارقطني (194) ، وابن خزيمة (192)


70 ''மூன்று பகல் மூன்று இரவு பயணிகளுக்கும், ஒரு பகல் ஒரு இரவு பயணியல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவர்கள் அவற்றைத் தூய்மையான நிலையில் (உளுவுடன்) அணியும் போது (மட்டும்) தான் இந்தச் சலுகை என அபூ பக்ரா(ரலி) அறிவிக்கிறார்.

தாரகுத்னீ. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

71-وَعَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ - رضي الله عنه - أَنَّهُ قَالَ: - يَا رَسُولَ اَللَّهِ أَمْسَحُ  عَلَى اَلْخُفَّيْنِ? قَالَ: "نَعَمْ" قَالَ: يَوْمًا? قَالَ: "نَعَمْ", قَالَ: وَيَوْمَيْنِ? قَالَ: "نَعَمْ", قَالَ: وَثَلَاثَةً? قَالَ: "نَعَمْ, وَمَا شِئْتَ" أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَقَالَ: لَيْسَ بِالْقَوِيِّ
ضعيف. رواه أبو داود (158)


71 ''
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ளட்டுமா?'' என்றார்கள். ''ஒரு நாள் (முழுவதும்)?'' என்று நான் கேட்டேன். ''ஆம்!'' என்றார்கள். ''இரண்டு நாட்கள்?'' என்று நான் கேட்டேன். ''ஆம்!'' என்றார்கள். ''மூன்று நாட்கள்?'' ''ஆம்! நீ விரும்பிய வரை'' என்று கூறினார்கள் என உபை இப்னு இமாரா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது பலவீனமான செய்தி ஆகும்.

No comments:

Post a Comment