Saturday, April 14, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 01 [ 1 முதல் 5 ஹதீஸ் வரை ]



முஸ்னத் அஹ்மத் - தொடர் 01 [ 1 முதல் 5 ஹதீஸ் வரை ]

1-مُسْنَدُ الْعَشْرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ
அத்தியாயம் – 1

சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பெற்ற நபித்தோழர்கள் வழியாக வந்துள்ள நபிமொழிகள்

مُسْنَدُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ

பாடம் : 1 அபூ பக்ர் அஸ் ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அறிவித்த நபிமொழிகள்

1-حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، قَالَ حَدَّثَنِي أَبِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلِ بْنِ هِلَالِ بْنِ أَسَدٍ، مِنْ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ - يَعْنِي ابْنَ أَبِي خَالِدٍ - عَنْ قَيْسٍ، قَالَ:
قَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَؤونَ هَذِهِ الْآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] ، وَإِنَّا سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْمُنْكَرَ فَلَمْ يُغيِّرُوهُ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللهُ بِعِقَابِهِ "

حكم الحديث : إسناده صحيح على شرط الشيخين

1. கைஸ் பின் அபீ ஹாஸிம் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மக்களிடையே ) நின்று உரையாற்றினார்கள்.அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு,” மக்களே! நீங்கள்,” இறை நம்பிக்கை கொண்டவர்களே ! உங்களை நீங்கள் காத்துகொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிக்கேடு உங்களுக்கு எத்தீங்கும் செய்திடாது எனும் இந்த ( 5:105)ஆவது வசனத்தை ஓதினார்கள்.ஆனால் அல்லாவின் தூதர் ( ஸல் ) அவர்கள் மக்கள் ( தம் கண்ணெதிரே ) தீமை நடைபெறுவதைக் கண்டு அதை அவர்கள் தடுக்காமலிருந்தால் அல்லாஹ் பொதுவாக எல்லாரையும் சேர்த்துத் தண்டித்து விடலாம் என்று கூறியதை நாங்கள் கேட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே செய்தி அஹ்மத்( 16,29,30,53 ) அபீய அலா (131) முஸ்னதுல் பஸ்ஸார் ( 65) இப்னு ஹிப்பான் ( 304 ) அபூதாவூத் ( 4338) திர்மிதீ ( 2168,3057) இப்னுமாஜா ( 4005)

2-حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ وَسُفْيَانُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ الثَّقَفِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْوَالِبِيِّ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ
عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا نَفَعَنِي اللهُ بِمَا شَاءَ مِنْهُ، وَإِذَا حَدَّثَنِي عَنْهُ غَيْرِي اسْتَحْلَفْتُهُ، فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ، وَإِنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ حَدَّثَنِي - وَصَدَقَ أَبُو بَكْرٍ - أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَا مِنْ رَجُلٍ يُذْنِبُ ذَنْبًا فَيَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، قَالَ مِسْعَرٌ: وَيُصَلِّي، وَقَالَ سُفْيَانُ: ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَيَسْتَغْفِرُ اللهَ عَزَّ وَجَلَّ إِلَّا غُفَرَ لَهُ "

حكم الحديث : إسناده صحيح

2. அலீ பின் அபீதாலிப் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து ( நேரடியாக ) எதையேனும் செவியுற்றால் அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய அளவுக்குப் பயனளிப்பான்.அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து வேறு யாரேனும் எனக்கு அறிவித்தால் அவரை நான் சத்தியம் செய்யச் சொல்வேன் அவர் சத்தியம் செய்தால் அதை உண்மை என நான் ஏற்பேன். அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் பின்வருமாறு அறிவித்தார்கள் அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் உண்மையே உரைத்தார்கள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் யாரேனும் ஒருவர் பாவமொன்றை செய்துவிட்டு அங்கத் தூய்மை ( உளூ) செய்து அதையும் செம்மையாகச் செய்த பிறகு இரண்டு ரக் அத்கள் தொழுது வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வின் பாவமன்னிப்பு கோரினால் அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று சொன்னதாக அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே செய்தி அஹ்மத் ( 47,56) அபூதாவூத் ( 1521) திர்மிதீ ( 406,3006) இப்னுமாஜா ( 1395) அபீஷைபா (7724)

3-حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ أَبُو سَعِيدٍ - يَعْنِي الْعَنْقَزِيَّ - قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبٍ سَرْجًا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا. قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرِ الْبَرَاءَ فَلْيَحْمِلْهُ إِلَى مَنْزِلِي، فَقَالَ: لَا، حَتَّى تُحَدِّثَنَا كَيْفَ صَنَعْتَ حِينَ خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنْتَ مَعَهُ؟
قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: خَرَجْنَا فَأَدْلَجْنَا، فَأَحْثَثْنَا يَوْمَنَا وَلَيْلَتَنَا، حَتَّى أَظْهَرْنَا، وَقَامَ قَائِمُ الظَّهِيرَةِ، فَضَرَبْتُ بِبَصَرِي: هَلْ أَرَى ظِلًّا نَأْوِي إِلَيْهِ؟ فَإِذَا أَنَا بِصَخْرَةٍ، فَأَهْوَيْتُ إِلَيْهَا فَإِذَا بَقِيَّةُ ظِلِّهَا، فَسَوَّيْتُهُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفَرَشْتُ لَهُ فَرْوَةً، وَقُلْتُ: اضْطَجِعْ يَا رَسُولَ اللهِ، فَاضْطَجَعَ، ثُمَّ خَرَجْتُ أَنْظُرُ: هَلْ أَرَى أَحَدًا مِنَ الطَّلَبِ؟ فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ، فَقُلْتُ: لِمَنْ أَنْتَ يَا غُلامُ؟ فَقَالَ: لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ. فَسَمَّاهُ فَعَرَفْتُهُ، فَقُلْتُ: هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ؟ قَالَ: نَعَمْ. قَالَ: قُلْتُ: هَلْ أَنْتَ حَالِبٌ لِي؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْهَا، ثُمَّ أَمَرْتُهُ فَنَفَضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ فَنَفَضَ كَفَّيْهِ مِنَ الْغُبَارِ، وَمَعِي إِدَاوَةٌ عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَحَلَبَ لِي كُثْبَةً مِنَ اللَّبَنِ، فَصَبَبْتُ (1) عَلَى الْقَدَحِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَافَيْتُهُ وَقَدِ اسْتَيْقَظَ، فَقُلْتُ: اشْرَبْ يَا رَسُولَ اللهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ، ثُمَّ قُلْتُ: هَلْ أَنَى الرَّحِيلُ.
قَالَ: فَارْتَحَلْنَا، وَالْقَوْمُ يَطْلُبُونَا، فَلَمْ يُدْرِكْنَا أَحَدٌ مِنْهُمْ إِلَّا سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا. فَقَالَ: " لَا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا " حَتَّى إِذَا دَنَا مِنَّا فَكَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قَدْرُ رُمْحٍ أَوْ رُمْحَيْنِ أَوْ ثَلاثَةٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا. وَبَكَيْتُ، قَالَ: " لِمَ تَبْكِي؟ " قَالَ: قُلْتُ: أَمَا وَاللهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي، وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ. قَالَ: فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " اللهُمَّ اكْفِنَاهُ بِمَا شِئْتَ ". فَسَاخَتْ قَوَائِمُ فَرَسِهِ إِلَى بَطْنِهَا فِي أَرْضٍ صَلْدٍ، وَوَثَبَ عَنْهَا، وَقَالَ: يَا مُحَمَّدُ، قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ، فَادْعُ اللهَ أَنْ يُنْجِّيَنِي مِمَّا أَنَا فِيهِ، فَوَاللهِ لَأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي مِنَ الطَّلَبِ، وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ مِنْهَا سَهْمًا، فَإِنَّكَ سَتَمُرُّ بِإِبِلِي وَغَنَمِي فِي مَوْضِعِ كَذَا وَكَذَا، فَخُذْ مِنْهَا حَاجَتَكَ. قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا حَاجَةَ لِي فِيهَا ". قَالَ: وَدَعَا لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُطْلِقَ، فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ.
وَمَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ، فَتَلَقَّاهُ النَّاسُ، فَخَرَجُوا فِي الطَّرِيقِ، وَعَلَى الْأَجَاجِيرِ، فَاشْتَدَّ الْخَدَمُ وَالصِّبْيَانُ فِي الطَّرِيقِ يَقُولُونَ: اللهُ أَكْبَرُ، جَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَ مُحَمَّدٌ. قَالَ: وَتَنَازَعَ
الْقَوْمُ أَيُّهُمْ يَنْزِلُ عَلَيْهِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنْزِلُ اللَّيْلَةَ عَلَى بَنِي النَّجَّارِ، أَخْوَالِ عَبْدِ الْمُطَّلِبِ، لِأُكْرِمَهُمْ بِذَلِكَ " فَلَمَّا أَصْبَحَ غَدَا حَيْثُ أُمِرَ.
قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ: أَوَّلُ مَنْ كَانَ قَدِمَ عَلَيْنَا مِنَ الْمُهَاجِرِينَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ أَخُو بَنِي عَبْدِ الدَّارِ، ثُمَّ قَدِمَ عَلَيْنَا ابْنُ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى أَخُو بَنِي فِهْرٍ، ثُمَّ قَدِمَ عَلَيْنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي عِشْرِينَ رَاكِبًا، فَقُلْنَا مَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: هُوَ عَلَى أَثَرِي، ثُمَّ قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ مَعَهُ.
قَالَ الْبَرَاءُ: وَلَمْ يَقْدَمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَرَأْتُ سُوَرًا مِنَ الْمُفَصَّلِ، قَالَ إِسْرَائِيلُ: وَكَانَ الْبَرَاءُ مِنَ الْأَنْصَارِ مِنْ بَنِي حَارِثَةَ.
حكم الحديث : إسناده صحيح على شرط الشيخين

3.பராஉ பின் ஆஸிப் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( என் தந்தை ) ஆஸிப் ( ரலி ) அவர்களிடம் பதின்மூன்று திர்ஹங்கள் ( வெள்ளிக் காசுகள் ) கொடுத்து ஒட்டகச் சேணம் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் “( உம்முடைய புதல்வர் ) பராஉக்குக் கட்டளையிடுங்கள் அவர் இந்தச் சேணத்தை எனது வீடுவரை சுமந்து வரட்டும் “ என்று சொன்னார்கள்.
அதற்கு ஆஸிப்( ரலி ) அவர்கள் “ முடியாது; அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து ( ஹிஜ்ரத்) சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர்கள் அப்போது நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்பதைப் பற்றி எங்களிடம் நீங்கள் கூறாதவரை ( இதைச் சுமந்து வருமாறு பராஉக்குக் கட்டளையிடமாட்டேன் )” என்று கூறிவிட்டார்கள்.

அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள்; நாங்கள் இரவின் தொடக்கத்தில் (மக்காவை விட்டு மதீனாவை நோக்கிப் ) புறப்பட்டோம் ஒரு பகல் ஒர் இரவு விரைவாகப் பயணம் செய்து நண்பகல் நேரத்தை அடைந்தோம் உச்சிப் பொழுதின் வெயில் கடுமையாக அடிக்கலாயிற்று நாங்கள் ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா ? என்று நான் நோட்டமிட்டேன் அங்கு பாறை ஒன்றைக் கண்டேன் அந்தப் பாறையை நோக்கி நான் சென்றேன் அங்குப் பாறையின் நிழல் இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்காக அந்த இடத்தை சரி செய்து அவர்களுக்காகத் தோல் விரிப்பொன்றை அந்த இடத்தில் விரித்து “ அல்லாஹ்வின் தூதரே ! படுத்துக்கொள்ளுங்கள் “ என்றேன் அவர்கள் படுத்துக்கொண்டார்கள்.
பிறகு நான் எங்களைத் தேடிக்கொண்டு யாரேனும் வந்திருக்கிறார்களா என்று பார்ப்பதற்காகப் புறப்பட்டென் அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவனை கண்டேன் அவனிடம் நான்,” இளைஞரே ! நீ யாருடைய பணியாள் ?” என்று கேட்டேன் அவன் “ நான் இன்ன குறைஷி மனிதருடைய பணியாள் “ என்று கூறி அவருடைய பெயரைக் குறிப்பிட்டான் அவர் இன்னாரெனப் புரிந்துகொண்டேன்.அவனிடம் நான் உன் ஆடுகளில் பால் இருக்குமா ? என்று கேட்டேன் அவன் ஆம் இருக்கிறது என்றான் எனக்குப் பால் கறந்து தருவாயா ? என்று கேட்டேன் அவன் ஆம் கறந்து தருகிறேன் என்றான்.

அவற்றிலிருந்து ஒர் ஆட்டைப் பிடிக்கும்படி கூறினேன். அவ்வாறே அவன் பிடித்தான் பின்னர் அதன் மடியில் படிந்திருந்த புழுதியைச் சுத்தம் செய்யச் சொன்னேன் அவன் சுத்தம் செய்தான் பிறகு அவனுடைய கைகளை உதறிச் சுத்தம் செய்யச் சொன்னேன் அவ்வாறே அவன் செய்தான் என்னிடம் ஒரு தண்ணீர்ப்பை இருந்தது அதன் வாய்ப் பகுதி ஒரு துண்டுத் துணியால் மூடிப்பட்டிருந்தது.
அவன் ( ஒரு குவளையில் ) எனக்காகச் சிறிது பாலைக் கறந்து தந்தான் நான் ( அதிலிருந்த ) தண்ணீரைப் பால் குவளையின் மீது அதன் அடிப்பகுதி குளிர்ந்துவிடும்வரை ஊற்றினேன். பின்னர் ( அதை எடுத்துக் கொண்டு ) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் சென்றபோது சரியாக அவர்களும் விழித்தெழுந்துவிட்டிருந்தார்கள் “ அல்லாஹ்வின் தூதரே ! பருகுங்கள் என்றேன் நான் நிறைவுடையும் வரை அவர்கள் பருகினார்கள்.

நான் ,” புறப்படும் நேரம் இன்னும் வரவில்லையா அல்லாஹ்வின் தூதரே ! என்றேன் பிறகு நாங்கள் புறப்பட்டோம் பகைவர்களோ எங்களை தேடிக்கொண்டிருந்தனர் ( அது வரை இஸ்லாத்தை தழுவியிராத ) சுராக்கா பின் மாலிக் பின் ஜு அஷும் என்பவரைத் தவிர அந்தப் பகைவர்களுன் வேறெவரும் எங்களை காணவில்லை ( எங்களைப் பின் தொடர்ந்து ) வந்தார் நான் அல்லாஹ்வின் தூதஏ ! இதோ நம்மைத் தேடுபவர்கள் நம் அருகே வந்து விட்டார்கள் என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் “ கவலைப்படாதீர் ! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் “ என்று கூறினார்கள் அவர் எங்களை நெருங்கி அவருக்கும் எங்களுக்கும் இடையில் ஒர் ஈட்டி அல்லது இரண்டு ஈட்டிகள் அல்லது மூன்று ஈட்டிகள் அளவு தூரமே இருந்தன அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே ! இதோ நம்மைத் தேடுபவர்கள் நம்மை நெருங்கி விட்டனர் என்று கூறி அழுதேன். நபி ஸல் அவர்கள் “ ஏன் அழுகிறீர்கள் ?” என்று கேட்டார்கள் நான் அல்லாஹ்வின் மீதாணையாக நான் என் யிரை அஞ்சி அழவில்லை தங்களுக்காகவே ( தங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்று எண்ணியே ) அழுகிறேன் என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இறைவா ! நீ விரும்பிய முறையில் அவனிடமிருந்து எங்களுக்குப் பாதுகாப்பு கொடு !” என சுராக்காவிற்க்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள் உடனே அவரது குதிரையின் கால்கள் அதன் வயிற்றுப் பகுதிவரை சுடு நிலத்தில் புதைந்தன சுராக்கா கீழே குதித்தார்.

முஹம்மதே ! இது உமது செயல்தான் என நான் அறிவேன் நான் சிக்கியிருக்கும் இ ந் நிலையிலிருந்து என்னை காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனைசெய்வீராக ! அல்லாஹ்வின் மீதாணையாக ! எனக்குப் பின்னால் உம்மைத் தேடிக்கொண்டு வரும் ஆட்களிடம் உம்மைப் பற்றி செய்தியைச் சொல்லமாட்டேன் இதோ என் அம்பு கூடு இதிலிருந்து அம்பை எடுத்துகொள்வீராக ! எனக்கு சொந்தமான ஒட்டகங்களும் ஆடுகளும் இன்ன இடங்களில் உள்ளன நீர் சென்று அவற்றுள் உமக்கு தேவைப்படும் அளவுக்கு எடுத்துகொள்ளும் என்று கூறினார்.

அது எனக்கு வேண்டியதில்லை என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் அவர் விடுவிக்கப்பட்டார் பிறகு அவர் தம்முடைய நண்பர்களிடமே திரும்பி சென்று விட்டார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள் நானும் அவர்களுடன் சென்றேன் மதீனாவை நாங்கள் அடைந்தோம் அவர்களை மக்கள் எதிர் கொண்டு சந்தித்தார்கள் . பாதைகளிலும் மொட்டை மாடிகளிலும் மக்கள் திரண்டிருந்தார்கள் பணியாளர்களும் சிறுவர்களும் “ அல்லாஹ் அக்பர் ( இறைவன் மிகப் பெரியவன் ) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வந்துவிட்டார்கள் ! முஹம்மது ( ஸல் ) அவர்கள் வந்துவிட்டார்கள் என்று கூறியபடி ஓடிவந்தார்கள்.

தங்களிடம் தான் அவர்கள் தங்க வேண்டும் என மக்கள் போட்டி போட்டுக்கொண்டனர் அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ,” நான் ( என் பாட்டனார் ) அப்துல் முத்தலிப் அவர்களின் மாமன்களான பனூ நஜ்ஜார் குலத்தாரிடம் அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக இன்றிரவு தங்குகிறேன் என்று கூறினார்கள் .
காலை நேரமானதும் இறைவன் கட்டளையிட்ட இடத்திற்க்குச் சென்றார்கள் ( இவ்வாறு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் )

தொடர்ந்து பராஉ பின் ஆஸிப் ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள் :

புலம்பெயர்ந்து ( மதீனாவுக்கு ) வந்தோருள் எங்களிடம் முதலாமவராக வந்தவர் பனூ அப்தித் தார் குலத்தவரான முஸ்அப் பின் உமைர்( ரலி ) அவர்கள் ஆவார்கள் அடுத்து எங்களிடம் வந்தவர் பனூ ஃபிஹ்ர் குலத்தவரும் கண் தெரியாதவருமான இப்னு உம்மி மக்தூம் ( ரலி ) அவர்கள் ஆவார்கள் பின்பு எங்களிடம் இருபது பேர் கொண்ட பயணக் குழுவினருடன் வந்தவர் உமர் பின் அல்கத்தாப் ( ரலி ) அவர்கள் ( இவர்களுக்குப் பிறகே அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வந்தார்கள் )
அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் என்ன ஆனார்கள் ? என்று கேட்டோம் “ இதோ அவர்கள் எனக்குப் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று ( உமர் ) மறுமொழி கூறினார்கள் பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தம்முடன் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் இருக்க எங்களிடம் வந்தார்கள் குர் ஆனின் அல்முஃபஸ்ஸல் எனும் நடுத்தர அத்தியாயங்களுள் (49-114) சிலவற்றை நான் மனமிடும்வரை அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மதீனாவுக்கு வரவில்லை.

இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளரான இஸ்ராயீல் பின் யூனுஸ் ( ரஹ் ) அவர்கள் “ பராஉ ( ரலி ) அவர்கள் பனூ ஹாரிஸா குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுள் ஒருவராக இருந்தார்கள் “ என்று குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் ( அஹ்மத் 50 ) புஹாரி ( 2439,3615,3652,3917,5607 ) முஸ்லிம் ( 2009 )

4-حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: قَالَ إِسْرَائِيلُ، قَالَ أَبُو إِسْحَاقَ: عَنْ زَيْدِ بْنِ يُثَيْعٍ، عَنْ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ بِبَرَاءَةٌ لِأَهْلِ مَكَّةَ: «لَا يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلا يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ وَلا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ، مَنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدَّةٌ فَأَجَلُهُ إِلَى مُدَّتِهِ، وَاللَّهُ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ» قَالَ: فَسَارَ بِهَا ثَلاثًا، ثُمَّ قَالَ لِعَلِيٍّ: رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ: «الْحَقْهُ فَرُدَّ عَلَيَّ أَبَا بَكْرٍ وَبَلِّغْهَا أَنْتَ» ، قَالَ: فَفَعَلَ، قَالَ: فَلَمَّا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو بَكْرٍ بَكَى، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، حَدَثَ فِيَّ شَيْءٌ؟ قَالَ: «مَا حَدَثَ فِيكَ إِلَّا خَيْرٌ، وَلَكِنْ أُمِرْتُ أَنْ لَا يُبَلِّغَهُ إِلَّا أَنَا أَوْ رَجُلٌ مِنِّي»

حكم الحديث : إسناده ضعيف

4.அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
( குர் ஆனின் 9:28 வது வசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ) பொறுப்பிலிருந்து விலகிகொண்டனர் என்று அறிவிப்பதற்க்கு என்னை நபி ஸல் அவர்கள் மக்காவாசிகளிடம் அனுப்பி வைத்தார்கள் .” இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது ( இறையில்லம் ) க அபாவை நிர்வாணமானவர் எவரும் சுற்றி ( தவஃப் ) வரக் கூடாது ( ஒரே இறைவனை நம்பி அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்த ) முஸ்லிமைத் தவிர வேறெவரும் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.
யாரேனும் ஒருவருக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் இடையே ( ஏற்கனவே ஏற்பட்ட ) உடன்படிக்கை ஏதேனும் இருக்குமானால் அது அதற்குரிய தவணைவரை தான் நீடிக்கும் இணைவைப்போரைவிட்டு அல்லாஹ்வும் அவன தூதரும் பொறுப்பு விலக்கிகொண்டனர் “ என்று அறிவிப்பதற்கும் அனுப்பிவைத்தார்கள். இந்தச் செய்தியுடன் நான் சென்ற மூன்றாவது நாள் நபி ஸல் அவர்கள் அலீ ( ரலி ) அவர்களிடம் நீங்கள் அபூபக்ரைச் சென்றடைந்து அவரை என்னிடம் திரும்பி வரும்படிக் கூறுங்கள் .

அந்தச் செய்திகளை மக்களிடம் நீங்கள் அறிவியுங்கள் என்று கூறினார்கள். அலீ ( ரலி ) அவர்களும் அதே போன்று செய்தார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் வந்து “ அல்லாஹ்வின் தூதரே ! என்னைப்பற்றி ஏதேனும் புதிய கட்டளை வந்துள்ளதா ?” என்று அழுதுகொண்டே கேட்டேன்.
அதற்கு நபி ஸல் ‘ உங்கள் சார்பாக நல்ல கட்டளைதான் வந்துள்ளது ஆயினும் ( உங்களிடம் கூறி அனுப்பிய செய்தியை ) நானோ என் ( குடும்பத்தி)னைச் சேர்ந்த வேறொருவரோதான் அறிவிக்க வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
இதை ஸைது பின் யுஸைஉ ( ரஹ் ) அறிவிக்கிறார்கள்

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புகாரி ( 369,4363,4655,4656,4657 ) முஸ்லிம் (1347) அபூதாவூத் ( 1946 )

5-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ أَوْسَطَ، قَالَ خَطَبَنَا أَبُو بَكْرٍ فَقَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامِي هَذَا عَامَ الْأَوَّلِ وَبَكَى أَبُو بَكْرٍ، فَقَالَ أَبُو بَكْرٍ: " سَلُوا اللَّهَ الْمُعَافَاةَ أَوْ قَالَ: الْعَافِيَةَ فَلَمْ يُؤْتَ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ أَوِ الْمُعَافَاةِ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ، وَهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ، وَهُمَا فِي النَّارِ، وَلا تَحَاسَدُوا، وَلا تَبَاغَضُوا، وَلا تَقَاطَعُوا، وَلا تَدَابَرُوا، وَكُونُوا إِخْوَانًا كَمَا أَمَرَكُمُ اللَّهُ

حكم الحديث : إسناده صحيح

5.அவ்சத் ( பின் இஸ்மாஈல் அல்பஜலீ ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

( ஒரு நாள் கலீஃபா ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அப்போது அவர்கள், “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் நான் நிற்கும் இதே இடத்தில் ( இந்த சொற்பொழிவு மேடைமீது ) நின்றார்கள் என்று கூறிவிட்டு அழுதார்கள் !
பிறகு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை அல்லது உடல் நலத்தை கேளுங்கள் ஒருவருக்கு உறுதியான இறை நம்பிக்கைக்கு பின் பாவமன்னிப்பை அல்லது உடல் நலத்தைவிட மிகச் சிறந்த வேறெதுவும் ஒருபோதும் கொடுக்கபடுவதில்லை. உண்மை பேசுவதைக் கடைபிடியுங்கள் அது நன்மைக்கு வழி வகுக்கும் ( உண்மை நன்மை ஆகிய ) அவ்விரண்டும் ( அவற்றைக் கடைப்பிடிப்போரைச் ) சொர்க்கத்தில் சேர்க்கும்.

பொய் பேச வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன் அது தீமைகளுக்கு வழி வகுக்கும் ( பொய் பாவம் ஆகிய ) அவ்விரண்டும் ( அவற்றைக் கடைபிடிப்போரை ) நரகத்தில் தான் சேர்க்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள் ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள் உறவை முறித்துக்கொள்ளாதீர்கள் பிணங்கிக்கொள்ளாதீர்கள் ( மாறாக ) நீங்கள் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி ( அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்



இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 6,10,17,34,38,44,46,49,66 ) திர்மிதீ ( 3558 ) இப்னுமாஜா ( 3849 )

No comments:

Post a Comment