Sunday, April 15, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 02 [ 6 முதல் 10 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 02 [ 6 முதல் 10 ஹதீஸ் வரை ]

1-مُسْنَدُ الْعَشْرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ
அத்தியாயம் – 1
சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பெற்ற நபித்தோழர்கள் வழியாக வந்துள்ள நபிமொழிகள்




6-حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو عَامِرٍ، قَالا: حَدَّثَنَا زُهَيْرٌ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ يَعْنِي ابْنَ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُعَاذِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، رِفَاعَةَ بْنِ رَافِعٍ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فَبَكَى أَبُو بَكْرٍ حِينَ ذَكَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ سُرِّيَ عَنْهُ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي هَذَا الْقَيْظِ عَامَ الْأَوَّلِ: «سَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ، وَالْيَقِينَ فِي الْآخِرَةِ وَالْأُولَى»

حكم الحديث : 
إسناده حسن

6.ரிஃபா ஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுடைய சொற்பொழிவு மேடை ( மிம்பர்) மீதிருந்தபடி அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியதைக் கேட்டேன் என்று சொற்பொழிவைத் துவக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்ததும் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அழுதார்கள் ! பின்பு அமைதியானார்கள்.

பிறகு “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் இதே போன்ற ஒரு கோடைக் காலத்தில் அல்லாஹ்விடம் இம்மை – மறுமை ஆகிய இரண்டிலும் மன்னிப்பையும் உடல் நலத்தையும் மன உறுதியையும் கேளுங்கள் என்று கூறியதைக் கேட்டேன் என்றார்கள்.

தரம் : ஹஸன்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,10,34,38,44,46,66) திர்மிதீயில் ( 3558 ) ஹஸன் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது.

7-حَدَّثَنَا أَبُو كَامِلٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنِ ابْنِ أَبِي عَتِيقٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»

حكم الحديث : 
إسناده صحيع لغيره

7.அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் ;
பல் துலக்குவது, வாயைத் தூய்மைப்படுத்தும் இறைவனை மகிழ்வடையச் செய்யும் .
இதை அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்
தரம் : ஸஹீஹ் லி கைரிஹி [ புறச்சான்றுகளால் ஆதாரபூர்வமான ஹதீஸ் ]
இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (62) நஸாயீ ( 5)  இப்னு குஸைமா (135) இப்னு ஹிப்பான் (1070) பைஹகீ(137) முஸ்னத் அபீய அலா (4916)

8-حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاتِي، قَالَ: «قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ» ، وقَالَ يُونُسُ: «كَبِيرًا» [ص: 188] . حَدَّثَنَاهُ حَسَنٌ الْأَشْيَبُ، عَنْ ابْنِ لَهِيعَةَ قَالَ: «كَبِيرًا»

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

8.அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் ,’ எனது தொழுகையின் இறுதி அமர்வில் ஓதிகொள்ள ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று கேட்டேன். அப்போது அவர்கள்,” அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப் இல்லா அன்த்த ,ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ இன்னக்க அந்த்தல் ஃகஃபூருர் ரஹீம் “ எனப் பிரார்த்திப்பீராக என்று கூறினார்கள். ( பொருள் : இறைவா ! எனக்கு நானே அதிகமாக அ நீதியிழைத்துக்கொண்டேன் உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் வேறெவருமிலர் ஆகவே எனக்கு உன்னிடமிருந்து மன்னிப்பை வழங்குவாயாக ! எனக்குக் கருணை புரிவாயாக ! நீயே மிகவும் மன்னிப்பவன்; பெரிதும் கருணை புரிபவன் )

யூனுஸ் பின் முஹம்மது பின் முஸ்லிம் அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில் ,( அதிகமாக அ நீதியிழைத்துக்கொண்டேன் எனும் இடத்தில் ) பெரிதும் அ நீதியிழைத்துகொண்டேன் ( ழுல்மன் கபீரன் ) என்று இடம்பெற்றுள்ளது இப்னு லஹீ ஆ அவர்களிடமிருந்து ஹஸன் பின் மூஸா அவர்கள் வழியாக வரும் அறிவிப்பிலும் ,” பெரிதும் அ நீதியிழைத்துக் கொண்டேன் என்றே இடம்பெற்றுள்ளது.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (28) புஹாரி ( 834,6326 ) முஸ்லிம் (2705) இடம்பெற்று உள்ளது.

9-حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمَا حِينَئِذٍ يَطْلُبَانِ أَرْضَهُ مِنْ فَدَكَ وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ، فَقَالَ لَهُمْ أَبُو بَكْرٍ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ» ، وَإِنِّي وَاللَّهِ لَا أَدَعُ أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ فِيهِ إِلَّا صَنَعْتُهُ "

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

9.ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

ஃபத்திமா ( ரலி ) அவர்களும் ( பெரிய தந்தை ) அப்பாஸ் ( ரலி ) அவர்களும் ஃபத்க் எனுமிடத்திலிருந்த அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் நிலத்தையும் ‘கைபர் எனுமிடத்திலிருந்த குமுஸ் ( ஜந்தில் ஒரு பங்கு ) நிதியில் கிடைத்த அவர்களின் போர்ப்பங்கையும் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக ( கலீஃபா ) அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்களிடம் வந்தனர்.

அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( நபிமார்களான ) எங்களுக்கு ( எங்களுடைய சொத்தில் ) எவரும் வாரிசாக ஆகமாட்டார்கள் நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் ஆகும் இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் ( செலவு தொகை பெற்று ) உண்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று கூறிவிட்டு,’ அல்லாஹ்வின் மீதாணையாக ! அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் செய்யக் கண்ட எந்த ஒரு செயலையும் நான் செய்யாமல் விட மாட்டேன் என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 25,55,58,60,78,79,425,1781,1782) புஹாரி ( 3092,3094,3711,4033,4035) முஸ்லிம் (1757) அபூதாவூத் ( 2963) நஸாயீ ( 4141) மற்றும் திர்மிதீ ( 1608,1609,1610) நூல்களில் பதிவாகி உள்ளது.


10-حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، قَالَ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ الْحَارِثِ، يَقُولُ إِنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ [ص: 189] : سَمِعْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ عَلَى هَذَا الْمِنْبَرِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْيَوْمِ مِنْ عَامِ الْأَوَّلِ ثُمَّ اسْتَعْبَرَ أَبُو بَكْرٍ وَبَكَى، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَمْ تُؤْتَوْا شَيْئًا بَعْدَ كَلِمَةِ الْإِخْلاصِ مِثْلَ الْعَافِيَةِ، فَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ»

حكم الحديث : 
إسناده صحيع لغيره

10. அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலிலுள்ள ) இந்தச் சொற்பொழிவு மேடை ( மிம்பர் ) மீதிருந்தவாறு ,” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) தலாம் ஆண்டின் முதல் நாளில் கூறியதைக் கேட்டேன் “ என்று கூறி விட்டு ( அல்லாஹ்வின் தூதரை நினைவு கூர்ந்ததும் ) தம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் சஞ்சலம் மேலிட்டு அழலானார்கள்.!
பிறகு ,( லா இலாஹ் இல்லாஹ் எனும் ) இந்த ஏகத்துவ உறுதிமொழிக்குப் பின் உடல் நலத்தைப் போன்ற வேறு ( சிறந்த அருட்கொடை ) எதுவும் நீங்கள் வழங்கப்பட்ட தில்லை எனவே நீங்கள் அல்லாஹ்விடம் உடல் நலத்தைக் கேளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்.

தரம் : ஸஹீஹ் லி ஹைரிஹி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,17,34,38,44,46,49,66) திர்மிதீ ( 3558) பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment