Monday, April 16, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 03 [ 11 முதல் 15 ஹதீஸ் வரை ]



முஸ்னத் அஹ்மத் - தொடர் 03 [ 11 முதல் 15 ஹதீஸ் வரை ]



11-حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ أَبَا بَكْرٍ حَدَّثَهُ، قَالَ: قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْغَارِ: وَقَالَ مَرَّةً: وَنَحْنُ فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرَنَا تَحْتَ قَدَمَيْهِ [ص: 190] ، قَالَ فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا»

حكم الحديث : إسناده صحيح على شرط الشيخين

11. அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
( ஹிஜ்ரத் பயணத்தில் ) நாங்கள் அந்த ( ஸவ்ர்) குகையில் இருந்தபோது நான் நபி ஸல் அவர்களிடம் ,”( குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும் ) இவர்களுள் யாரேனும் தம் பாதங்களுக்குக் கீழே ( குனிந்து ) பார்த்தால் நம்மைக் கண்டு பிடித்து விடுவார்கள் என்று சொன்னேன்.
அதற்கு நபி ஸல் அவர்கள்,( நம்) இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருப்பதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள், அபூபக்ரே ? என்றார்கள்.
மற்றொரு தடவை அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் கூறுகையில் நாங்கள் குகையில் இருந்தபோது எனும் இடத்தில் ,’ நபி ஸல் அவர்கள் ( ஸவ்ர்) குகையில் இருந்தபோது என்று ( சிறு வேறுபாட்டுடன் ) கூறினார்கள்.
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 3653,3922,4663) முஸ்லிம் (2381) திர்மிதீ ( 3096 ) இடம்பெற்று உள்ளது.

12-حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ سُبَيْعٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّ الدَّجَّالَ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا خُرَاسَانُ يَتَّبِعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ»

حكم الحديث : 
إسناده صحيح
12. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்:
( மாபெரும் குழுப்பவாதியான ) தஜ்ஜால் ( உலக முடிவு நாள் நெருக்கத்தில் ) கிழக்குத் திசையிலுள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்படுவான் அது,” குராசான்” என்று கூறப்படும் அப்போது ( அவனுக்கு ஆதரவாக ) அவனை ஒரு சமுதாயத்தார் பிந்தொடர்வர் அவர்களுடைய முகங்கள் தொலால் மூடிய கேடயங்களைப் போன்று ( அகலமாக ) இருக்கும்.
இதை அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 33) திர்மிதீ ( 2237) இப்னுமாஜா ( 4072) பதிவாகி உள்ளது.

13-حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ، قَالَ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى صَاحِبُ الدَّقِيقِ، عَنْ فَرْقَدٍ، عَنْ مُرَّةَ بْنِ شَرَاحِيلَ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ بَخِيلٌ، وَلا خَبٌّ وَلا خَائِنٌ وَلا سَيِّئُ الْمَلَكَةِ، وَأَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ الْمَمْلُوكُونَ، إِذَا أَحْسَنُوا فِيمَا بَيْنَهُمْ وَبَيْنَ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَفِيمَا بَيْنَهُمْ وَبَيْنَ مَوَالِيهِمْ»

حكم الحديث : إسناده ضغيف

13. அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
கஞ்சனும் மகா மோசடிப் பேர்வழியும் தன் அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளனும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். தம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் சொர்க்கத்தின் கதவை முதலில் தட்டுபவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பர்.
இதை அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தரம் : ளயீப்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 31,32,75) திர்மிதீ ( 1946,1963) இப்னுமாஜா ( 3691 )

14-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ وَسَمِعْتُهُ مِنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الْوَلِيدِ بْنِ جُمَيْعٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ: لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ فَاطِمَةُ إِلَى أَبِي بَكْرٍ: أَنْتَ وَرِثْتَ [ص: 192] رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمْ أَهْلُهُ؟ قَالَ: فَقَالَ: لَا، بَلْ أَهْلُهُ. قَالَتْ: فَأَيْنَ سَهْمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ، إِذَا أَطْعَمَ نَبِيًّا طُعْمَةً، ثُمَّ قَبَضَهُ، جَعَلَهُ لِلَّذِي يَقُومُ مِنْ بَعْدِهِ» ، فَرَأَيْتُ أَنْ أَرُدَّهُ عَلَى الْمُسْلِمِينَ، قَالَتْ: فَأَنْتَ وَمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمُ

حكم الحديث : إسناده حسن

14.அபுத்துஃபைல் ( ஆமிர் பின் வாஸிலா ரலி ) அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் இறந்ததும் ஃபத்திமா ( ரலி ) அவர்கள் கலீஃபா அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் ஆளனுப்பி ,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் வாரிசு நீங்களா ? அல்லது அவர்களின் குடும்பத்தாராகிய நாங்களா ? “ என்று கேட்டார்கள் . அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” இல்லை ; அவர்களின் குடும்பத்தார்தான் ( வாரிசுகள் )” என்று கூறினார்கள். அப்போது ஃபத்திமா ( ரலி ) அவர்கள்,” அப்படியானால், அல்லாஹ்வின் தூதர் ( விட்டுச் சென்ற ஃபதக் மற்றும் கைபர் சொத்துகளில் ) அவர்களின் பங்கு எங்கே ?” என்று கேட்டார்கள்.

உடனே அபூபக்ர் ( ரலி ) அவர்கள், “ அல்லாஹ் , நபி ஒருவருக்கு ( சொத்து ) ஒன்றை உணவு ( வகை)க்காகத் தந்திருந்து, பிறகு அவரை அவன் இறக்கச் செய்துவிட்டால், ( அந்த நபி செலவழித்த வகைகளில் , செலவழிப்பதற்காக ) அதை அவருக்குப் பின் ( ஆட்சிப் ) பொறுப்பேற்பவரிடம் அல்லாஹ் வழங்குகிறான்” என அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். நான் அதை முஸ்லிம் பொதுமக்களிடம் ( அவர்களது பொறுப்பிலேயே ) ஒப்படைக்க விரும்புகிறேன் “ என்று கூறினார்கள். அதற்கு ஃபாத்திமா ( ரலி ) அவர்கள், “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் நீங்கள் கேட்டதை நீங்களே மிகவும் அறிந்தவர் என்று கூறினார்கள்.

தரம் : ஹஸன்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அபூதாவூத்யில் ( 2973 ) பதிவாகி உள்ளது.

15-حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الطَّالْقَانِيُّ، قَالَ حَدَّثَنِي النَّضْرُ بْنُ شُمَيْلٍ الْمَازِنِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو نَعَامَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو هُنَيْدَةَ الْبَرَاءُ بْنُ نَوْفَلٍ، عَنْ وَالَانَ الْعَدَوِيِّ، عَنْ حُذَيْفَةَ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَصَلَّى الْغَدَاةَ، ثُمَّ جَلَسَ حَتَّى إِذَا كَانَ مِنَ الضُّحَى ضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ جَلَسَ مَكَانَهُ حَتَّى صَلَّى الْأُولَى وَالْعَصْرَ وَالْمَغْرِبَ، كُلُّ ذَلِكَ لَا يَتَكَلَّمُ، حَتَّى صَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ، ثُمَّ قَامَ إِلَى أَهْلِهِ، فَقَالَ النَّاسُ لِأَبِي بَكْرٍ: أَلا تَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَأْنُهُ؟ صَنَعَ الْيَوْمَ شَيْئًا لَمْ يَصْنَعْهُ قَطُّ، قَالَ: فَسَأَلَهُ، فَقَالَ: " نَعَمْ عُرِضَ عَلَيَّ مَا هُوَ كَائِنٌ مِنْ أَمْرِ الدُّنْيَا، وَأَمْرِ الْآخِرَةِ، فَجُمِعَ الْأَوَّلُونَ وَالْآخِرُونَ بِصَعِيدٍ وَاحِدٍ، فَفَظِعَ النَّاسُ بِذَلِكَ حَتَّى انْطَلَقُوا إِلَى آدَمَ عَلَيْهِ السَّلامُ، وَالْعَرَقُ يَكَادُ يُلْجِمُهُمْ، فَقَالُوا يَا آدَمُ، أَنْتَ أَبُو الْبَشَرِ، وَأَنْتَ اصْطَفَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، قَالَ: قَدْ لَقِيتُ مِثْلَ الَّذِي لَقِيتُمْ، انْطَلِقُوا إِلَى أَبِيكُمْ بَعْدَ أَبِيكُمْ، إِلَى نُوحٍ {إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ} [آل عمران: 33] [ص: 194] ، قَالَ: فَيَنْطَلِقُونَ إِلَى نُوحٍ عَلَيْهِ السَّلامُ، فَيَقُولُونَ: اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ فَأَنْتَ اصْطَفَاكَ اللَّهُ، وَاسْتَجَابَ لَكَ فِي دُعَائِكَ، وَلَمْ يَدَعْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا، فَيَقُولُ: لَيْسَ ذَاكُمْ عِنْدِي، انْطَلِقُوا إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلامُ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ اتَّخَذَهُ خَلِيلًا، فَيَنْطَلِقُونَ إِلَى إِبْرَاهِيمَ، فَيَقُولُ: لَيْسَ ذَاكُمْ عِنْدِي، وَلَكِنِ انْطَلِقُوا إِلَى مُوسَى عَلَيْهِ السَّلامُ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ كَلَّمَهُ تَكْلِيمًا، فَيَقُولُ مُوسَى عَلَيْهِ السَّلامُ: لَيْسَ ذَاكُمْ عِنْدِي، وَلَكِنِ انْطَلِقُوا إِلَى عِيسَى ابْنِ مَرْيَمَ فَإِنَّهُ يُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ، وَيُحْيِي الْمَوْتَى، فَيَقُولُ عِيسَى عَلَيْهِ السَّلَامُ لَيْسَ ذَاكُمْ عِنْدِي، وَلَكِنِ انْطَلِقُوا إِلَى سَيِّدِ وَلَدِ آدَمَ، فَإِنَّهُ أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ، انْطَلِقُوا إِلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَشْفَعَ لَكُمْ إِلَى رَبِّكُمْ عَزَّ وَجَلَّ. قَالَ: فَيَنْطَلِقُ فَيَأْتِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ رَبَّهُ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، قَالَ: فَيَنْطَلِقُ بِهِ جِبْرِيلُ فَيَخِرُّ سَاجِدًا قَدْرَ جُمُعَةٍ، وَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: ارْفَعْ رَأْسَكَ يَا مُحَمَّدُ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ، قَالَ: فَيَرْفَعُ رَأْسَهُ، فَإِذَا نَظَرَ إِلَى رَبِّهِ عَزَّ وَجَلَّ، خَرَّ سَاجِدًا قَدْرَ جُمُعَةٍ أُخْرَى، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: ارْفَعْ رَأْسَكَ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ، قَالَ: فَيَذْهَبُ لِيَقَعَ سَاجِدًا، فَيَأْخُذُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ بِضَبْعَيْهِ فَيَفْتَحُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ مِنَ الدُّعَاءِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى بَشَرٍ قَطُّ، فَيَقُولُ: أَيْ رَبِّ، خَلَقْتَنِي سَيِّدَ وَلَدِ آدَمَ، وَلا فَخْرَ، وَأَوَّلَ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ [ص: 195] يَوْمَ الْقِيَامَةِ، وَلا فَخْرَ، حَتَّى إِنَّهُ لَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ أَكْثَرُ مِمَّا بَيْنَ صَنْعَاءَ وَأَيْلَةَ، ثُمَّ يُقَالُ: ادْعُوا الصِّدِّيقِينَ فَيَشْفَعُونَ، ثُمَّ يُقَالُ: ادْعُوا الْأَنْبِيَاءَ، قَالَ: فَيَجِيءُ النَّبِيُّ وَمَعَهُ الْعِصَابَةُ، وَالنَّبِيُّ وَمَعَهُ الْخَمْسَةُ وَالسِّتَّةُ، وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ، ثُمَّ يُقَالُ: ادْعُوا الشُّهَدَاءَ فَيَشْفَعُونَ لِمَنْ أَرَادُوا، قَالَ: فَإِذَا فَعَلَتِ الشُّهَدَاءُ ذَلِكَ، قَالَ: يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَا أَرْحَمُ الرَّاحِمِينَ، أَدْخِلُوا جَنَّتِي مَنْ كَانَ لَا يُشْرِكُ بِي شَيْئًا، قَالَ: فَيَدْخُلُونَ الْجَنَّةَ. قَالَ: ثُمَّ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا فِي النَّارِ: هَلْ تَلْقَوْنَ مِنْ أَحَدٍ عَمِلَ خَيْرًا قَطُّ؟ قَالَ: فَيَجِدُونَ فِي النَّارِ رَجُلًا، فَيَقُولُ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ فَيَقُولُ: لَا، غَيْرَ أَنِّي كُنْتُ أُسَامِحُ النَّاسَ فِي الْبَيْعِ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَسْمِحُوا لِعَبْدِي كَإِسْمَاحِهِ إِلَى عَبِيدِي. ثُمَّ يُخْرِجُونَ مِنَ النَّارِ رَجُلًا فَيَقُولُ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ فَيَقُولُ: لَا، غَيْرَ أَنِّي قَدْ أَمَرْتُ وَلَدِي: إِذَا مِتُّ فَأَحْرِقُونِي بِالنَّارِ، ثُمَّ اطْحَنُونِي، حَتَّى إِذَا كُنْتُ مِثْلَ الْكُحْلِ، فَاذْهَبُوا بِي إِلَى الْبَحْرِ، فَاذْرُونِي فِي الرِّيحِ، فَوَاللَّهِ لَا يَقْدِرُ عَلَيَّ رَبُّ الْعَالَمِينَ أَبَدًا، فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ: لِمَ فَعَلْتَ ذَلِكَ؟ قَالَ: مِنْ مَخَافَتِكَ، قَالَ: فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرْ إِلَى مُلْكِ أَعْظَمِ مَلِكٍ، فَإِنَّ لَكَ مِثْلَهُ وَعَشَرَةَ أَمْثَالِهِ، قَالَ: فَيَقُولُ: لِمَ تَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ؟ قَالَ: وَذَاكَ الَّذِي ضَحِكْتُ مِنْهُ مِنَ الضُّحَى "

حكم الحديث : إسناده حسن

15. அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது ;

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ,’சுப்ஹுத் தொழுது விட்டுப் பிறகு ( தொழுத இடத்திலேயே ) அமர்ந்தார்கள் . முற்பகல் ( ளுஹா ) நேரமான போது அவர்கள் சிரித்தார்கள் பின்பு அதே இடத்திலேயே அமர்ந்திருந்து லுஹ்ர் அஸ்ர் மற்றும் மஃக்ரிப் ஆகிய தொழுகைகளை ( அவற்றிற்குரிய நேரங்களில் ) தொழுதார்கள் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் பேசவே இல்லை.

இறுதியாக, இஷா தொழுதுவிட்டுத் தம் வீட்டாரிடம் சென்றார்கள் அப்போது மக்கள் என்னிடம் ,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் நிலை என்ன ? இதுவரை ஒருபோதும் அவர்கள் நடந்துகொள்ளாத விதத்தில் இன்று அவர்கள் நடந்துகொண்டார்களே ? அதைப் பற்றி நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் கேட்கக் கூடாதா ?” என்றனர். அது போன்றே அவர்களிடம் நான் கேட்டேன் அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,” ஆம் ( சொல்கிறேன் )” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்;
இவ்வுலகில் நடப்பவை , மறுமையில் நடக்க இருப்பவை அனைத்தும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன ( உலக ) மக்களில் முன்னோர், பின்னோர் அனைவரும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டப்பட்டனர், இதனால் மக்கள் திடுக்கிட்டு ( நிலைகுலைந்து செய்வதறியாது ) ஆதம் ( அலை ) அவர்களிடம் சென்றனர் மக்களின் ( உடலிருந்து சுரந்த ) வியர்வையோ அவர்களை மூழ்கடிக்கும் அளவில் இருந்தது.

ஆதம் அவர்களே ! நீங்கள் மனித குலத்தின் தந்தை ஆவீர்கள் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத்தான். ( இந்தப் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி ) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள் “ என்று கூறினர்.
அதற்கு ஆதம் ( அலை ) அவர்கள், “ நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்களோ அதே நிலையில் தான் நானும் உள்ளேன் எனவே நீங்கள் ( எனக்குப் பின் ) உங்களின் தந்தையான ( நபி ) நூஹுடம் செல்லுங்கள் என்று கூறினார்கள்.
( இவ்விருவரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் ) ஆதம் , நூஹ் இப்ராஹீமின் குடும்பத்தார் ஆகியோரை ( அந்த ந்தக் காலத்தில் வாழ்ந்த ) அகிலத்தாருள் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான் ( 3:33)
அவ்வாறே மக்கள் நூஹ் ( அலை ) அவர்களிடம் சென்று ,( இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி ) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள் அல்லாஹ் உங்களைத் தேர்தெடுத்தான் உங்களுடைய பிரார்த்தனையை ஏற்று புவியில் இறை மறுப்பாளர் எவரையும் அவன் உயிருடன் விட்டுவைக்கவில்லை என்று கூறினர்.

உடனே நூஹ் அலை அவர்கள் ,” உங்களுக்கு உதவும் நிலையில் நான் இல்லை வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் தனக்கு உற்ற நண்பராக்கி கொண்ட இப்ராஹீமிடம் ( அலை ) யிடம் செல்லுங்கள் என்று கூறினார்கள்.

உடனே மக்கள் இப்ராஹீம் அலை அவர்களிடம் சென்று பேச அவர்களும் உங்களுக்கு உதவும் நிலையில் நான் இல்லை என்று கூறி வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் உரையாடிய ( நபி ) மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

( அவ்வாறே மக்கள் சென்றபோது ) மூசா ( அலை ) அவர்களும்,” உங்களுக்கு உதவும் நிலையில் நான் இல்லை “ என்று கூறி, “ நீங்கள் மர்யமின் மைந்தர் ஈசாவிடம் செல்லுங்கள் அவர் பிறவிக் குருடரையும் , தொழு நோயாளிகளையும் குணப்படுத்தினார்( இறை அனுமதியின் பேரில் ) இறந்தோரை உயிர்ப்பித்தார் ( இறை அனுமதியுடன் ) என்று கூறினார்கள்.
( அவ்வாறே மக்கள் சென்ற போது ) ஈசா ( அலை ) அவர்கள் ( அந்த மக்களிடம் ) இல்லை நீங்கள் ஆதமுடைய மக்களின் ( மனிதர்களின் ) தலைவர் முஹம்மதிடம் செல்லுங்கள். அவர்தாம் மறுமை நாளில் மண்ணறையிலிருந்து வெளியேறும் முதலாமவர் ஆவார்.அவரிடம் செல்லுங்கள் அவர் உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்வார் என்று கூறினார்கள்.

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் தொடர்ந்து கூறிகிறார்கள் ;

அவ்வாறே மக்கள் நபி ஸல் அவர்களிடம் செல்வார்கள் அப்போது ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் இறைவனிடம் செல்வார்கள் அவர்களிடம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “ அவருக்கு ( பரிந்துரை செய்ய )அனுமதி கொடு அவருக்குச் சொர்க்கம் உண்டென நற்செய்தி கூறு “ என்பான் அப்போது ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் நபி ஸல் அவர்களை அழைத்துச் செல்வார்கள் நபி ஸல் அவர்கள் ஒரு வார காலம் அளவுக்கு சஜ்தாவில் கிடப்பார்கள்.
அப்போது அல்லாஹ் ,” முஹம்மதே ! உங்கள் தலையை உயர்த்துங்கள் கேளுங்கள்; கொடுக்கப்படும் பரிந்துரை செய்யுங்கள்; பரிந்துரை ஏற்கப்படும் என்று கூறுவான். உடனே நபி ஸல் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பார்த்தவுடன் மற்றொரு வார காலம் அளவுக்கு சஜ்தாவில் வீழ்ந்து கிடப்பார்கள் பிறகு “ முஹம்மதே ! தலையை உயர்த்துங்கள் ! கேளுங்கள் ; கொடுக்கப்படும் பரிந்துரை செய்யுங்கள்; பரிந்துரை ஏற்கப்படும் “ என்று அல்லாஹ் கூறுவான்.

மீண்டும் சஜ்தாவில் விழுவதற்காக நபி ஸல் அவர்கள் முயற்சிப்பார்கள் அப்போது ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் அவர்களின் இரு விலாப் புறங்களையும் பிடித்துக்கொள்வார்கள் அப்போது எந்த மனிதருக்கும் அறவே தொன்றாத பிரார்த்தனை ஒன்றை அவர்களுக்குத் தோன்றச் செய்வான் அல்லாஹ் அவர்கள் ,” இறைவா ! நீ ஆதமுடைய மக்களின் தலைவராக என்னைப் படைத்தாய் பெருமைக்காகச் சொல்லவில்லை ( உலக மாந்தர்களுள் மறுமை நாளில் ) முதன் முதலாக மண்ணறையிலிருந்து வெளியேறுபவனாகவும் ( என்னைப் ) படைத்தாய் இதையும் நான் பெருமைக்காகச் சொல்லவில்லை என்று கூறுவார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :

பிறகு ( யமன் நாட்டிலுள்ள ) ஸன் ஆ மற்றும் ( ஃபலஸ்தீனிலுள்ள ) அய்லா பகுதிகளுக்கிடையிலான தொலைவைவிட அதிகத் தொலைவு கொண்ட தண்ணீர்த் தடாகத்தை அல்லாஹ் எனக்கு வழங்குவான் அத்தடாகத்திற்க்கு ( நீரந்த ) மக்கள் வருவர்.

பின்னர், “ ஸித்தீக்கீன் ( பேருண்மையாளர்) களை அழையுங்கள் “ என்று கூறப்படும் அவர்களும் ( இறைவனிடம் ) பரிந்துரை செய்வார்கள் பின்னர் ,” நபிமார்களை அழையுங்கள் “ என்று கூறப்படும் அப்போது நபி ஒருவர் வருவார் அவருடன் ஒரு குழுவினர் வருவர்.

மற்றொருவர் வருவார் அவருடன் ஜந்து அல்லது ஆறு பேர் இருப்பர் இன்னொருவர் வருவார் அவருடன் எவரும் இருக்கமாட்டார் பின்னர் “ ( இறைவனுக்காக உயிரை அர்ப்பணித்த ) உயிர்த் தியாகிகளை அழையுங்கள் “ என்று கூறப்படும் அவர்கள் தாம் விரும்புவோருக்கு ( இறை நாட்டப்படி ) பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு உயிர்த் தியாகிகள் செய்தவுடன் அல்லாஹ்,” நான் கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் ( அர்ஹமுர் ராஹிமீன் ) ஆகவேன் , ஆகவே யார் எனக்கு எதையும் இணைவைக்காமல் இருந்தாரோ அவரை எனது சொர்க்கத்தில் நுழையச் செய்யுங்கள் “ என்று கூறுவான் அப்போது அ(த்தகைய)அர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள்.

பிறகு அல்லாஹ் ,” எந்த நன்மையும் செய்யாத எவரேனும் உள்ளனரா ? என நரகத்தில் பாருங்கள் “ என்று கூறுவான் . நரகத்தில் அப்படி ஒருவரை காண்பர் அப்போது அவரிடம் அல்லாஹ் , நீ ( உலகில் ) எந்த நன்மையும் செய்யவில்லையா ?” என்று கேட்பான் அவர்,” இல்லை ; எனினும் நான் கொடுக்கல் வாங்கல் செய்தபோது ( மக்களிடம் விட்டுக்கொடுத்துப் ) பெருந்தன்மையுடன் நடந்துகொண்டேன்” என்று கூறுவார்.
அப்போது அல்லாஹ் ,” என் அடியாரிடம் இவர் பெருந்தனமையுடன் நடந்து கொண்டதைப் போன்று ,என் அடியா(றான இவ)ரிடமும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள் என்று கூறுவான்.

பின்பு நரகத்திலிருந்து மற்றோருவரையும் வெளியேற்றுவார்கள் அவரிடம் அல்லாஹ்,” நீ நன்மையே செய்யவில்லையா ?” என்று கேட்பான் அவர் “ இல்லை”! ஆனால் நான் ( மரணப் படுக்கையில் இருந்தபோது) என் பிள்ளைகளிடம் நான் இறந்துவிட்டால் நெருப்பில் என்னை எரித்துவிடுங்கள் பிறகு அஞ்சனம்போல் ஆகிவிடும் அளவுக்கு என்னைத் தூளாக்கி கடலுக்கு கொண்டு சென்று காற்றில் கலந்துவிடுங்கள் “ என்று உத்தரவிட்டேன் அல்லாஹ் மீது சத்தியமாக ! அகிலத்தின் இறைவனான அல்லாஹ் ஒரு போதும் என் மீது வலிமை பெறமாட்டான் ( அவனால் என்னை மீண்டும் படைக்க முடியாது ) என்று எண்ணினேன் என்பார் அதற்க்கு அல்லாஹ் “ ஏன் இப்படிச் செய்தாய் ?” என்று கேட்பான் அதற்கு அவர் ,” உன்னைப் பற்றி அச்சத்தால் தான் ( அவ்வாறு செய்தேன் )” என்று கூறுவார்.
உடனே அல்லாஹ்,” பேரரசனின் ஆட்சி(குட்பட்ட பகுதி)ஐப் பார் நீ பார்த்தவையும் அது போன்று பத்து மடங்கும் உனக்கு உண்டு “ என்று கூறுவான் .: அரசனாகிய நீயே என்னைக் கேலி செய்கிறாயா ?” என்று கேட்பார் முற்பகல் நேரத்தில் நான் சிரித்ததற்கு இதுதான் காரணம் ( என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் )

தரம் : ஹஸன்

இந்த நீண்ட ஹதீஸ் தனித்தியாக புஹாரீ (3340,4712,6565,2391,2077,2078,3480) முஸ்லிம் (302,327,328,3178,3183,5317,5320 ) ஆகிய எண்களில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment