Tuesday, April 17, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 04 [ 16 முதல் 20 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 04 [ 16 முதல் 20 ஹதீஸ் வரை ]






16-حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ يَعْنِي ابْنَ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ قَالَ حَدَّثَنَا قَيْسٌ، قَالَ قَامَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] إِلَى آخِرِ الْآيَةِ، وَإِنَّكُمْ تَضَعُونَهَا عَلَى غَيْرِ مَوْضِعِهَا، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْمُنْكَرَ، وَلا يُغَيِّرُوهُ، أَوْشَكَ اللَّهُ أَنْ قَالَ: وَسَمِعْتُ أَبَا بَكْرٍ، يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ إِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ مُجَانِبٌ لِلْإِيمَانِ» [ص: 198] يَعُمَّهُمْ بِعِقَابِهِ»

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

16.கைஸ் பின் அபீ ஹாஸிம் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மக்களிடையே ) நின்று உரையாற்றினார்கள்.அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு,” மக்களே! நீங்கள்,” இறை நம்பிக்கை கொண்டவர்களே ! உங்களை நீங்கள் காத்துகொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிக்கேடு உங்களுக்கு எத்தீங்கும் செய்திடாது எனும் இந்த ( 5:105)ஆவது வசனத்தை நீங்கள் ஓதுகின்றீர்கள் .ஆனால் அதற்குப் பொருத்தமில்லாத பொருள் கொள்கிறீர்கள்.

 அல்லாவின் தூதர் ( ஸல் ) அவர்கள் மக்கள் ( தம் கண்ணெதிரே ) தீமை நடைபெறுவதைக் கண்டு அதை அவர்கள் தடுக்காமலிருந்தால் அல்லாஹ் பொதுவாக எல்லாரையும் சேர்த்துத் தண்டித்து விடலாம் என்று கூறியதை நாங்கள் கேட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்கள்.
அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( பின்வருமாறு ) சொல்லக் கேட்டேன்; மக்களே ! பொய்யுரைப்பது பற்றி உங்களை எச்சரிக்கிறேன் ! ஏனெனில் பொய்யானது இறை நம்பிக்கைக்கு மிகத் தொலைவானதாகும்.

தரம் : ஸஹீஹ்

இதே செய்தி அஹ்மத்( 16,29,30,53 ) அபீய அலா (131) முஸ்னதுல் பஸ்ஸார் ( 65) இப்னு ஹிப்பான் ( 304 ) அபூதாவூத் ( 4338) திர்மிதீ ( 2168,3057) இப்னுமாஜா ( 4005)

17
z-حَدَّثَنَا هَاشِمٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُمَيْرٍ، قَالَ سَمِعْتُ سُلَيْمَ بْنَ عَامِرٍ، رَجُلًا مِنْ حِمْيَرَ يُحَدِّثُ، عَنْ أَوْسَطَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ أَوْسَطَ الْبَجَلِيِّ، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَهُ حِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْأَوَّلِ مَقَامِي هَذَا، ثُمَّ بَكَى، ثُمَّ قَالَ: «عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ، وَهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ، وَهُمَا فِي النَّارِ، وَسَلُوا اللَّهَ الْمُعَافَاةَ، فَإِنَّهُ لَمْ يُؤْتَ رَجُلٌ بَعْدَ الْيَقِينِ شَيْئًا خَيْرًا مِنَ الْمُعَافَاةِ ثُمَّ قَالَ: «لَا تَقَاطَعُوا، وَلا تَدَابَرُوا، وَلا 
تَبَاغَضُوا، وَلا تَحَاسَدُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا»»

حكم الحديث : 
إسناده صحيح

17.அவ்சத் ( பின் இஸ்மாஈல் அல்பஜலீ ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

( ஒரு நாள் கலீஃபா ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அப்போது அவர்கள், “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் நான் நிற்கும் இதே இடத்தில் ( இந்த சொற்பொழிவு மேடைமீது ) நின்றார்கள் என்று கூறிவிட்டு அழுதார்கள் !
பிறகு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை அல்லது உடல் நலத்தை கேளுங்கள் ஒருவருக்கு உறுதியான இறை நம்பிக்கைக்கு பின் பாவமன்னிப்பை அல்லது உடல் நலத்தைவிட மிகச் சிறந்த வேறெதுவும் ஒருபோதும் கொடுக்கபடுவதில்லை. உண்மை பேசுவதைக் கடைபிடியுங்கள் அது நன்மைக்கு வழி வகுக்கும் ( உண்மை நன்மை ஆகிய ) அவ்விரண்டும் ( அவற்றைக் கடைப்பிடிப்போரைச் ) சொர்க்கத்தில் சேர்க்கும்.
பொய் பேச வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன் அது தீமைகளுக்கு வழி வகுக்கும் ( பொய் பாவம் ஆகிய ) அவ்விரண்டும் ( அவற்றைக் கடைபிடிப்போரை ) நரகத்தில் தான் சேர்க்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள் ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள் உறவை முறித்துக்கொள்ளாதீர்கள் பிணங்கிக்கொள்ளாதீர்கள் ( மாறாக ) நீங்கள் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி ( அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 6,10,17,34,38,44,46,49,66 ) திர்மிதீ ( 3558 ) இப்னுமாஜா ( 3849 )

18-حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ الْأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ فِي طَائِفَةٍ مِنَ الْمَدِينَةِ، قَالَ: فَجَاءَ فَكَشَفَ عَنْ وَجْهِهِ فَقَبَّلَهُ، وَقَالَ: «فِدًى لَكَ أَبِي وَأُمِّي، مَا أَطْيَبَكَ حَيًّا
 [ص: 199] وَمَيِّتًا، مَاتَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَبِّ الْكَعْبَةِ» فَذَكَرَ الْحَدِيثَ
قَالَ: فَانْطَلَقَ أَبُو بَكْرٍ وَعُمَرُ يَتَقَاوَدَانِ حَتَّى أَتَوْهُمْ، فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ وَلَمْ يَتْرُكْ شَيْئًا أُنْزِلَ فِي الْأَنْصَارِ وَلا ذَكَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَأْنِهِمْ، إِلَّا وَذَكَرَهُ، وَقَالَ: وَلَقَدْ عَلِمْتُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا، وَسَلَكَتِ الْأَنْصَارُ وَادِيًا، سَلَكْتُ وَادِيَ الْأَنْصَارِ»
وَلَقَدْ عَلِمْتَ يَا سَعْدُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَأَنْتَ قَاعِدٌ «قُرَيْشٌ وُلاةُ هَذَا الْأَمْرِ، فَبَرُّ النَّاسِ تَبَعٌ لِبَرِّهِمْ، وَفَاجِرُهُمْ تَبَعٌ لِفَاجِرِهِمْ» ، قَالَ: فَقَالَ لَهُ سَعْدٌ: صَدَقْتَ نَحْنُ الْوُزَرَاءُ، وَأَنْتُمُ الْأُمَرَاءُ

حكم الحديث : 
إسناده صحيع لغيره

18. ஹுமைது பின் அப்திர் ரஹ்மான் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்தபோது , அபூபக்ர் ( ரலி ) அவர்கள் மதீனாவின் புற நகர்ப் பகுதியில் இருந்தார்கள்.( நபியின் இறப்புச் செய்தியைக் கேள்விப் பட்டதும் ) வந்து அவர்களின் முகத்தை ( மூடியிருந்த துணியை)ஹ் திறந்து அவர்கள் முத்தமிட்டார்கள்.
பின்பு ,” என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் உயிருடன் இருந்த போது இறந்த பிறகும் நீங்கள் நறுமணம் கமழ்கின்றீர்களே! க அபாவின் அதிபதி மீதாணையாக ! முஹம்மத் ( ஸல் ) அவர்கள் இறந்துவிட்டார்கள் ! “ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸின் தொடர்ச்சியைக் கூறிவிட்டு அறிவிப்பாளர் ஹுமைது பின் அப்திர் ரஹ்மான் கூறுகின்றார்கள்;

அபூபக்ர் ( ரலி ) அவர்களும் உமர் ( ரலி ) அவர்களும் முன்னும் பின்னுமாக விரைந்து மக்களிடம் வந்தார்கள். அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மக்களிடையே ) பேசினார்கள்.( மதீனாவசிகளான ) அன்சாரிகள் தொடர்பாக இறக்கியருளப் பெற்ற இறைவசனங்கள் எதையும் ( விட்டு வைக்காமல் ) அவர்கள் கூறினார்கள். அன்சாரிகள் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் தம்மிடம் கூறிய எதையும் விட்டு வைக்காமல் கூறினார்கள்.
அப்போது ,” மக்கள் அனைவரும் ஒரு கணவாய் வழியாக நடந்து அன்சாரிகள் மற்றொரு கணவாய் வழியாக நடந்தால் நான் அன்சாரிகள் நடக்கும் கணவாயில் தான் நடப்பேன்” என்று  அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதை நீங்கள் அறிவீர்கள் என்று கூறிவிட்டு ( அன்சாரிகளின் தலைவரான சஅது( ரலி ) அவர்களை நோக்கி ) ,” சஅதே ! நீங்கள் அமர்ந்திருந்த போது , அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இந்த ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் குறைஷியர் ஆவர் மக்களுள் நல்லவர், குறைஷியருள் நல்லவரைப் பின்பற்றுவார் மக்களுள் தீயவர் அவர்களுள் கெட்டவரைப் பின்பற்றுவார் என்று கூறியதை அறிவீர்கள் என்று கூறினார்கள்.

அப்போது சஅது( ரலி ) அவர்கள் ,”( அபூபக்ரே!) நீங்கள் உனமை உரைத்தீர்கள் ( அன்சாரிகளாகிய ) நாங்கள் ஆலோசகர்கள் ஆவோம் ( குறைஷியரான ) நீங்கள் ஆட்சியாளர்கள் ஆவீர்கள் “ என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

இந்த செய்தி அஹ்மத்யில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

19-حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ حَدَّثَنَا الْعَطَّافُ بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنِي [ص: 200] رَجُلٌ، مِنْ أَهْلِ الْبَصْرَةِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ سَمِعْتُ أَبِي يَذْكُرُ، أَنَّ أَبَاهُ، سَمِعَ أَبَا بَكْرٍ، وَهُوَ يَقُولُ: قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ أَنَعْمَلُ عَلَى مَا فُرِغَ مِنْهُ أَوْ عَلَى أَمْرٍ مُؤْتَنَفٍ؟ قَالَ: «بَلْ عَلَى أَمْرٍ قَدْ فُرِغَ مِنْهُ» ، قَالَ: قُلْتُ: فَفِيمَ الْعَمَلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ»

حكم الحديث : حسن لغيره إسناد ضعيف

19. அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் ,” அல்லாஹ்வின் தூதரே ! செயல்கள், ( எழுதி ) முடிக்கப்பட்டுவிட்ட விதியின்படி நடக்கின்றனவா ? அல்லது முன்பே தீர்மானிக்க ப்படாமல் புதிதாக நடக்கின்றனவா ?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள்,” ஏற்கனவே ( எழுதி ) முடிக்கப்பட்டு விட்ட விதியின் படி தான் “ என்று கூறினார்கள்.

அவ்வாறாயின், ( தலைவிதியின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இருந்துவிடலாமே ) ஏன் நல்லறங்கள் புரியவேண்டும் அல்லாஹ்வின் தூதரே ?” என்று நான் கேட்டேன் அதற்கு அவர்கள்,” ( நீங்கள் செயலாற்றுங்கள் ) ஒவ்வொருவருக்கும் படைக்கப்பட்ட ( நோக்கத்)ஹை அடைய வழிவகை செய்யப்படும்” என்றார்கள்.

தரம் : ஹஸன் லி கைரிஹி மற்றும் இஸ்னத் ளயீப்

இந்த ஹதீஸ் அஹ்மத்யில் மட்டுமே இடம்பெற்று உள்ளது
இந்த கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 1362,4947,6217,6596,6605) முஸ்லிம் ( 5153,5154 )

20-حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، مِنْ أَهْلِ الْفِقْهِ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَحِمَهُ اللَّهُ يُحَدِّثُ، أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَزِنُوا عَلَيْهِ، حَتَّى كَادَ بَعْضُهُمْ يُوَسْوِسُ، قَالَ عُثْمَانُ: وَكُنْتُ مِنْهُمْ فَبَيْنَا أَنَا جَالِسٌ فِي ظِلِّ أُطُمٍ مِنَ الْآطَامِ مَرَّ عَلَيَّ عُمَرُ، رَضِيَ اللَّهُ عَنْهُ، فَسَلَّمَ عَلَيَّ، فَلَمْ أَشْعُرْ أَنَّهُ مَرَّ وَلا سَلَّمَ، فَانْطَلَقَ عُمَرُ حَتَّى دَخَلَ عَلَى أَبِي بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ لَهُ: مَا يُعْجِبُكَ أَنِّي مَرَرْتُ عَلَى عُثْمَانَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيَّ السَّلامَ؟ وَأَقْبَلَ هُوَ وَأَبُو بَكْرٍ فِي وِلايَةِ أَبِي بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، حَتَّى سَلَّمَا عَلَيَّ جَمِيعًا، ثُمَّ قَالَ أَبُو بَكْرٍ: جَاءَنِي أَخُوكَ عُمَرُ، فَذَكَرَ أَنَّهُ مَرَّ عَلَيْكَ، فَسَلَّمَ فَلَمْ تَرُدَّ عَلَيْهِ السَّلامَ، فَمَا الَّذِي حَمَلَكَ عَلَى ذَلِكَ؟ قَالَ: قُلْتُ: مَا فَعَلْتُ، فَقَالَ عُمَرُ: بَلَى وَاللَّهِ لَقَدْ فَعَلْتَ، وَلَكِنَّهَا عُبِّيَّتُكُمْ يَا بَنِي أُمَيَّةَ، قَالَ: قُلْتُ: وَاللَّهِ مَا شَعَرْتُ أَنَّكَ مَرَرْتَ بِي، وَلا سَلَّمْتَ، قَالَ أَبُو بَكْرٍ: صَدَقَ عُثْمَانُ، وَقَدْ شَغَلَكَ عَنْ ذَلِكَ أَمْرٌ؟ فَقُلْتُ: أَجَلْ، قَالَ: مَا هُوَ؟ فَقَالَ عُثْمَانُ: رَضِيَ اللَّهُ عَنْهُ: تَوَفَّى اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ نَسْأَلَهُ عَنْ نَجَاةِ هَذَا الْأَمْرِ، قَالَ أَبُو بَكْرٍ: قَدْ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ، قَالَ: فَقُمْتُ إِلَيْهِ [ص: 202] فَقُلْتُ لَهُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَنْتَ أَحَقُّ بِهَا، قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا نَجَاةُ هَذَا الْأَمْرِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَبِلَ مِنِّي الْكَلِمَةَ الَّتِي عَرَضْتُ عَلَى عَمِّي، فَرَدَّهَا عَلَيَّ، فَهِيَ لَهُ نَجَاةٌ»

حكم الحديث : المرفوع منه صحيع بشواهده رجاله ثقات

20. உஸ்மான் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் இறந்தபோது நபித்தோழர்களுள் சிலர் கவலையடைந்தனர் ( அவர்கள் இறந்தது உண்மையா என ) அவர்களுள் சிலர் மனக் குழப்பமடையும் அளவுக்குப் போய்விட்டனர்.அவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். நான் உயரமான கட்ட டம் ஒன்றின் நிழலில் இருந்தேன் அப்போது என்னைக் கடந்து சென்ற உமர் ( ரலி ) அவர்கள், எனக்கு “ சலாம் “ கூறினார்கள் அவர்கள் ( என்னைக் ) கடந்து சென்றதையோ ,எனக்கு “ சலாம் “ சொன்னதையோ நான் அறியவே இல்லை.

உமர் ( ரலி ) அவர்கள் நேராக அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் சென்று “ உங்களுக்குத் தெரியுமா ? நான் உஸ்மான் ( ரலி ) அவர்களிடம் சென்றேன் அவருக்கு “ சலாம் “ கூறினேன் எனக்கு அவர் பதில் “ சலாம் “ சொல்லவில்லை!” என்று கூறினார்.
பிறகு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்பதைக் குறித்துப் பேசுவதற்காக என்னிடம் உமர் ( ரலி ) அவர்களும் அபூபக்ர் ( ரலி ) அவர்களும் வந்தனர். இருவரும் எனக்கு “ சலாம் “ கூறினர்.

பிறகு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் “ உங்களுடைய சகோதரர் உமர் என்னிடம் வந்தார் உங்களிடம் அவர் வந்தபோது அவர் சலாம் கூறியும் நீங்கள் அவருக்கு பதில் கூறவில்லை என்கிறார் நீங்கள் அவ்வாறு செய்த தற்கு என்ன காரணம் ?” என்று கேட்டார்கள் “ நான் அப்படிச் செய்யவில்லையே !” என்றேன்.

உடனே உமர் ( ரலி ) அவர்கள்,”இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக ! நீங்கள் அப்படித்தான் செய்தீர்கள் உமைய்யாகக் கூட்டத்தாரே ! உங்களின் செருக்குதான் இதற்குக் காரணம் “ என்றார்கள் நான் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நீங்கள் கடந்து சென்றதையோ எனக்கு சலாம் கூறியதையோ நான் அறியவே இல்லை என்று கூறினேன்.

உடனே அபூபக்ர் ( ரலி ) அவர்கள் “ உஸ்மான் உண்மையே கூறுகிறார் ஏதோ ஒன்று உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டிருக்கிறது என்று ( என்னிடம் ) கூறினார்கள் நான் ஆம் என்றேன்.” அது என்ன ?” என்று அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கேட்டார்கள் இந்த மார்க்கத்தின் வெற்றி குறித்து நபி ஸல் அவர்களிடம் கேட்பதற்கு முன்பே அவர்களை அல்லாஹ் கைப்பற்றிக் கொண்டானே !” என்று கூறினேன்.

அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” இதுகுறித்து நபி ஸல் அவர்களிடம் நான் ( முன்பே ) கேட்டுவிட்டேன்” என்று கூறினார்கள். உடனே நான் அபூபக்ர் ( ரலி ) அவர்களை நோக்கி எழுந்து “ என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! அ(து குறித்துக் கேட்ப)தற்கு நீரே மிகவும் தகுதியானவர் “ என்று கூறினேன்.

அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ,” அல்லாஹ்வின் தூதரே ! இந்த மார்க்கத்தின் வெற்றி என்ன ? என்று கேட்டேன் அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் “ என் தந்தையின் சகோதரரிடம் நான் எதை எடுத்துக் கூறியபோது அதை அவர் ஏற்க மறுத்தாரோ அந்த ( ஏகத்துவ) கூற்றை என்னிடமிருந்து ஒருவர் ஏற்றுக்கொள்வதே அவருக்கு வெற்றியாக அமையும் என்று கூறினார்கள் என்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இந்த ஹதீஸ் அஹ்மதியில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.


No comments:

Post a Comment