Tuesday, April 17, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 05 [ 21 முதல் 25 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 05 [ 21 முதல் 25 ஹதீஸ் வரை ]


21-حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنِي شَيْخٌ، مِنْ قُرَيْشٍ، عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ بَعَثَنِي إِلَى الشَّامِ: يَا يَزِيدُ، إِنَّ لَكَ قَرَابَةً عَسَيْتَ أَنْ تُؤْثِرَهُمْ بِالْإِمَارَةِ، وَذَلِكَ أَكْبَرُ مَا أَخَافُ عَلَيْكَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ وَلِيَ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ شَيْئًا فَأَمَّرَ عَلَيْهِمْ أَحَدًا مُحَابَاةً فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ، لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلا عَدْلًا حَتَّى يُدْخِلَهُ جَهَنَّمَ، وَمَنْ أَعْطَى أَحَدًا حِمَى اللَّهِ فَقَدِ انْتَهَكَ فِي حِمَى اللَّهِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ، أَوْ قَالَ تَبَرَّأَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ عَزَّ وَجَلَّ»

حكم الحديث : إسناده ضعيف

21. யஸீது பின் அபீ சுஃப்யான் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

( கலீஃபா ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னை “ ஷாம் “ நாட்டுக்கு ( அதை வெற்றிகொள்வதற்காகவும் அதன் ஆளு நராகவும் ) அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள்;

யஸீதே ! நிச்சயமாக உமக்கு ( அங்கே ) உறவினர்கள் உள்ளனர். அதிகாரத்தின் மூலம் அவர்களை நீர் பதவிக்குக் கொண்டுவரக் கூடும் உம்மிடம் இதைத்தான் நான் மிகவும் அஞ்சுகிறேன். ஏனெனில் ,” முஸ்லிம்களின் விவகாரத்தில் ஏதேனும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் தனக்கு விருப்பமான ஒருவரைப் பாரபட்சமான முறையில் அவர்களுக்குப் பொறுப்பாளராக்கினால் அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டு அவரிடமிருந்து அல்லாஹ் கூடுதலான வழிபாடுகளையோ , கடமையான வழிபாடுகளையோ ஏற்கமாட்டான்.

இறுதியில் அவரை நரகத்தில் நுழையச் செய்வான் மேலும் ஒருவர் மற்றொருவருக்கு அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்ட ( சட்டமியற்றும் அதிகாரத்)ஹை வழங்கினால் அவர் அல்லாஹ்வின் அதிகாரங்களுன் ஒன்றை எந்த உரிமையுமின்றி பாழடித்தவர் ஆவார். அவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் அல்லது அல்லாஹ்வின் பொறுப்பு அவரைவிட்டு நீங்கிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின செய்தி ஹாக்கியில் ( 7024 ) இடம்பெற்று உள்ளது அதுவும் பலவீனமான செய்தி ஆகும்.

22-حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، قَالَ حَدَّثَنِي بُكَيْرُ بْنُ الْأَخْنَسِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أُعْطِيتُ سَبْعِينَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَقُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، فَاسْتَزَدْتُ رَبِّي عَزَّ وَجَلَّ، فَزَادَنِي مَعَ كُلِّ وَاحِدٍ سَبْعِينَ أَلْفًا» قَالَ أَبُو بَكْرٍ: رَضِيَ اللَّهُ عَنْهُ: فَرَأَيْتُ أَنَّ ذَلِكَ آتٍ عَلَى أَهْلِ الْقُرَى وَمُصِيبٌ مِنْ حَافَّاتِ الْبَوَادِي

حكم الحديث : إسناده ضعيف

22. அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :

நான் ( என் சமுதாயத்தில் ) எழுபதாயிரம் பேர் எந்த விதக் கேள்வி கணக்குமின்றிச் சொர்க்கத்தில் நுழையும் நற்பேற்றைக் கொடுக்கப்பெற்றுள்ளேன் அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவின் நிலவுபோல் இருக்கும் அவர்களின் உள்ளங்கள் ஒரே ஒருவரின் உள்ளம் போன்று ( போட்டி , பொறாமை யின்றி ) இருக்கும் என் இறைவனிடம் நான் அவர்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக்கும்படி கேட்டேன் அவர்கள் ஒவ்வொருவருடனும் எழுபதாயிரம் பேர் ( சொர்க்கம் ) செல்வார்கள் என அவர்களின் எண்ணிக்கையை எனக்கு அவன் கூடுதலாக்கினான்.
அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : இந்த நபிமொழி கிராமவாசிகள் மற்றும் பட்டிதொட்டிகளில் அல்லல்படும் ( அப்பாவி ) மக்களையே குறிக்கும் என நான் கருதுகிறேன் .

இதை அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்னது அபீய அலா ( 112 ) யில் பதிவாகி உள்ளது அதுவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸ் ஆகும்.

23-حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ زِيَادٍ الْجَصَّاصِ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ أَبَا بَكْرٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ فِي الدُّنْيَا»

حكم الحديث : 
إسناد ضعيف

23. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :

ஒருவன் ஒரு தீமையைச் செய்தால் அதற்காக அவன் இவ்வுலகிலேயே தண்டிக்கப்படுவான்.

இதை அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப்
இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 68,69,71) திர்மிதீ ( 3039 ) இவைகள் அனைத்தும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் வந்த ஹதீஸ்கள் ஆகும்.

24-حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ: قَالَ ابْنُ شِهَابٍ، أَخْبَرَنِي رَجُلٌ، مِنَ الْأَنْصَارٍ غَيْرُ مُتَّهَمٍ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يُحَدِّثُ «أَنَّ رِجَالًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَزِنُوا، عَلَيْهِ حَتَّى كَادَ بَعْضُهُمْ أَنْ يُوَسْوِسَ» ، قَالَ عُثْمَانُ: فَكُنْتُ مِنْهُمْ فَذَكَرَ مَعْنَى حَدِيثِ أَبِي الْيَمَانِ عَنْ شُعَيْبٍ

حكم الحديث : 
إسناده صحيع لغيره

24. உஸ்மான் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் இறந்தபோது நபித்தோழர்களுள் சிலர் கவலையடைந்தனர் ( அவர்கள் இறந்தது உண்மையா என்று ) அவர்களுள் சிலர் மனக் குழப்பத்திற்கு உள்ளாகும் அளவுக்குப் போய்விட்டனர்.அவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன்.
தொடர்ந்து மேற்கொண்ட ( ஹதீஸ் எண் : 20 ) உள்ளதைப் போன்றே இங்கும் இடம் பெறுகின்றது.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

இந்த ஹதீஸ் அஹ்மதியில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

25-حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ ابْنُ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَتْ أَبَا بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص: 205] أَنْ يَقْسِمَ لَهَا مِيرَاثَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ، فَقَالَ لَهَا أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ» فَغَضِبَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلامُ فَهَجَرَتْ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَلَمْ تَزَلْ مُهَاجِرَتَهُ حَتَّى تُوُفِّيَتْ، قَالَ: وَعَاشَتْ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةَ أَشْهُرٍ، قَالَ: وَكَانَتْ فَاطِمَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَسْأَلُ أَبَا بَكْرٍ نَصِيبَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ وَفَدَكَ وَصَدَقَتِهِ بِالْمَدِينَةِ، فَأَبَى أَبُو بَكْرٍ عَلَيْهَا ذَلِكَ وَقَالَ: لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِ إِلَّا عَمِلْتُ بِهِ، إِنِّي أَخْشَى إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ فَأَمَّا صَدَقَتُهُ بِالْمَدِينَةِ فَدَفَعَهَا عُمَرُ إِلَى عَلِيٍّ وَعَبَّاسٍ، فَغَلَبَهُ عَلَيْهَا عَلِيٌّ وَأَمَّا خَيْبَرُ وَفَدَكُ فَأَمْسَكَهُمَا عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَالَ: هُمَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتَا لِحُقُوقِهِ الَّتِي تَعْرُوهُ، وَنَوَائِبِهِ، وَأَمْرُهُمَا إِلَى مَنْ وَلِيَ الْأَمْرَ قَالَ: فَهُمَا عَلَى ذَلِكَ الْيَوْمَ

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

25. ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் ( தம் தந்தை ) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இறந்த பின் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம்,”ஆல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்கு , போரிடாமல் அவன் வழங்கியிருந்த ஃபைஉச் சொத்துகளில் அவர்கள் விட்டுச் சென்றுள்ளவற்றில் என் வாரிசுரிமைப்படி பங்கிட்டுத் தாருங்கள் “ என்று கேட்டார்கள் அப்போது அவர்களிடம் அபூபக்ர் ( ரலி ) அவர்கள், “ ( நபிமார்களான ) எங்களுடைய சொத்துக்கு யாரும் வாரிசாக மாட்டார்கள். நாங்கள் விட்டுச் செல்பவை தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள். இதனால் ,ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் கோபம் கொண்டார்கள். அபூபக்ர் ( ரலி ) அவர்களை வெறுத்தார்கள் தாம் இறக்கும்வரை அந்த வெறுப்பைக் கைவிட வில்லை.

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்தபின் ஆறு மாதம்வரை ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் வாழ்ந்தார்கள் தம் தந்தை அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கைபர் மற்றும் ஃபதக் பகுதியில் விட்டுச் சென்றவற்றிலிருந்தும், மதீனாவில் இருந்த அவர்களுக்குரிய தர்மப் பொருளிலிருந்தும் தமக்குரிய பங்கை அபூபக்ர்( ரலி ) அவர்களிடம் கேட்டார்கள் ஆனால் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அவர்களிடம் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

மேலும் அவர்கள்,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் செய்துவந்த எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல் நான் விடுபவன் அல்லன் அவர்கள் இட்ட உத்தரவு ஒன்றை நான் விட்டுவிட்டால் வழி தவறிவிடுவேன் என நான் அஞ்சுகிறேன் “ என்றும் கூறினார்கள்.

மதீனாவில் இருந்த அவர்களின் தர்மப் பொருளை உமர் ( ரலி ) அவர்கள் அலீ ( ரலி ) அப்பாஸ் ( ரலி ) ஆகிய இருவரிடமும் ஒப்படைத்தார்கள் இந்த( ச் சொத்துகளை பராமரிக்கும் ) விஷயத்தில் அலீ ( ரலி ) அவர்கள் அப்பாஸ் ( ரலி ) அவர்களை மிகைத்துவிட்டார்கள். கைபர், ஃபதக் பகுதியில் உள்ளதை உமர் ( ரலி ) அவர்கள் தம்மிடமே ( அரசுப் பொறுப்பில் ) வைத்துகொண்டார்கள். “ அந்த இரண்டு சொத்துகளும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வழங்கிய தர்மம் ஆகும்.

அவையிரண்டும் நபி ஸல் அவர்களுக்கு ஏற்படுகின்ற ( சமூதாயத் ) தேவைகளுக்காகவும் அவர்கள் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளுக்காகவும் பயன்பட்டு வந்தன.

அந்த இரண்டையும் பொறுப்புடன் செயல்படுத்துவது அதிகாரம் உள்ள ஆட்சியாளருக்கே உரியதாகும் “ என்று உமர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள்.” அந்த இரண்டும் இன்றுவரை அப்படியே உள்ளது “ என அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் ( ரஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 9,55,58,60,78,79,172,333,336,349,425,1391,1406,1550,1658,1781,1782 ) புஹாரி ( 3092,3094,3711,4033,4035,4240) முஸ்லிம் ( 1757,1759) அபூதாவூத் ( 2963,2968,2975) திர்மிதீ ( 1608,1609,1610) நஸாயீ (4141,4148)




No comments:

Post a Comment