Thursday, April 19, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 06 [ 26 முதல் 30 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 06 [ 26 முதல் 30 ஹதீஸ் வரை ]




25-حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ ابْنُ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَتْ أَبَا بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص: 205] أَنْ يَقْسِمَ لَهَا مِيرَاثَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ، فَقَالَ لَهَا أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ» فَغَضِبَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلامُ فَهَجَرَتْ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَلَمْ تَزَلْ مُهَاجِرَتَهُ حَتَّى تُوُفِّيَتْ، قَالَ: وَعَاشَتْ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةَ أَشْهُرٍ، قَالَ: وَكَانَتْ فَاطِمَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَسْأَلُ أَبَا بَكْرٍ نَصِيبَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ وَفَدَكَ وَصَدَقَتِهِ بِالْمَدِينَةِ، فَأَبَى أَبُو بَكْرٍ عَلَيْهَا ذَلِكَ وَقَالَ: لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِ إِلَّا عَمِلْتُ بِهِ، إِنِّي أَخْشَى إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ فَأَمَّا صَدَقَتُهُ بِالْمَدِينَةِ فَدَفَعَهَا عُمَرُ إِلَى عَلِيٍّ وَعَبَّاسٍ، فَغَلَبَهُ عَلَيْهَا عَلِيٌّ وَأَمَّا خَيْبَرُ وَفَدَكُ فَأَمْسَكَهُمَا عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَالَ: هُمَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتَا لِحُقُوقِهِ الَّتِي تَعْرُوهُ، وَنَوَائِبِهِ، وَأَمْرُهُمَا إِلَى مَنْ وَلِيَ الْأَمْرَ قَالَ: فَهُمَا عَلَى ذَلِكَ الْيَوْمَ

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

25. ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் ( தம் தந்தை ) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இறந்த பின் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம்,”ஆல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்கு , போரிடாமல் அவன் வழங்கியிருந்த ஃபைஉச் சொத்துகளில் அவர்கள் விட்டுச் சென்றுள்ளவற்றில் என் வாரிசுரிமைப்படி பங்கிட்டுத் தாருங்கள் “ என்று கேட்டார்கள் அப்போது அவர்களிடம் அபூபக்ர் ( ரலி ) அவர்கள், “ ( நபிமார்களான ) எங்களுடைய சொத்துக்கு யாரும் வாரிசாக மாட்டார்கள். நாங்கள் விட்டுச் செல்பவை தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள். இதனால் ,ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் கோபம் கொண்டார்கள். அபூபக்ர் ( ரலி ) அவர்களை வெறுத்தார்கள் தாம் இறக்கும்வரை அந்த வெறுப்பைக் கைவிட வில்லை.

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்தபின் ஆறு மாதம்வரை ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் வாழ்ந்தார்கள் தம் தந்தை அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கைபர் மற்றும் ஃபதக் பகுதியில் விட்டுச் சென்றவற்றிலிருந்தும், மதீனாவில் இருந்த அவர்களுக்குரிய தர்மப் பொருளிலிருந்தும் தமக்குரிய பங்கை அபூபக்ர்( ரலி ) அவர்களிடம் கேட்டார்கள் ஆனால் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அவர்களிடம் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

மேலும் அவர்கள்,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் செய்துவந்த எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல் நான் விடுபவன் அல்லன் அவர்கள் இட்ட உத்தரவு ஒன்றை நான் விட்டுவிட்டால் வழி தவறிவிடுவேன் என நான் அஞ்சுகிறேன் “ என்றும் கூறினார்கள்.

மதீனாவில் இருந்த அவர்களின் தர்மப் பொருளை உமர் ( ரலி ) அவர்கள் அலீ ( ரலி ) அப்பாஸ் ( ரலி ) ஆகிய இருவரிடமும் ஒப்படைத்தார்கள் இந்த( ச் சொத்துகளை பராமரிக்கும் ) விஷயத்தில் அலீ ( ரலி ) அவர்கள் அப்பாஸ் ( ரலி ) அவர்களை மிகைத்துவிட்டார்கள். கைபர், ஃபதக் பகுதியில் உள்ளதை உமர் ( ரலி ) அவர்கள் தம்மிடமே ( அரசுப் பொறுப்பில் ) வைத்துகொண்டார்கள். “ அந்த இரண்டு சொத்துகளும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வழங்கிய தர்மம் ஆகும்.

அவையிரண்டும் நபி ஸல் அவர்களுக்கு ஏற்படுகின்ற ( சமூதாயத் ) தேவைகளுக்காகவும் அவர்கள் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளுக்காகவும் பயன்பட்டு வந்தன.

அந்த இரண்டையும் பொறுப்புடன் செயல்படுத்துவது அதிகாரம் உள்ள ஆட்சியாளருக்கே உரியதாகும் “ என்று உமர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள்.” அந்த இரண்டும் இன்றுவரை அப்படியே உள்ளது “ என அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் ( ரஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 9,55,58,60,78,79,172,333,336,349,425,1391,1406,1550,1658,1781,1782 ) புஹாரி ( 3092,3094,3711,4033,4035,4240) முஸ்லிம் ( 1757,1759) அபூதாவூத் ( 2963,2968,2975) திர்மிதீ ( 1608,1609,1610) நஸாயீ (4141,4148)

26-حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، وَعَفَّانُ، قََالَا حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ أَنَّهَا تَمَثَّلَتْ بِهَذَا الْبَيْتِ وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْضِي
[البحر الطويل]
[ص: 206] وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ... رَبِيعُ الْيَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ
فَقَالَ أَبُو بَكْرٍ: رَضِيَ اللَّهُ عَنْهُ: «ذَاكَ وَاللَّهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

حكم الحديث : 
إسناد ضعيف

26. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

( என் பாட்டனார் ) அபூபக்ர்( ரலி ) அவர்கள் இறப்புத் தறுவாயில் இருந்தபோது ( அவர்களுடைய புதல்வி) ஆயிஷா ( ரலி ) அவர்கள் ( அபூபக்ர் ரலி அவர்களைப் பாராட்டிக்) கீழ்க்காணும் கவிதையைக் கூறினார்கள்:

“ வெண்மை முகமுடை இவர்பொருட்டால்

          வேண்டின் மழையது பொழிவாகும்;

உண்மை! அ நாதை வசந்தமவர்

     உயரிய விதவைக் காவலராம்.

அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள் “ அல்லாஹ்வின் மீது ஆணையாக ! இந்த கவிதையானது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களையே குறிக்கும் என்று கூறினார்கள்.

தரம் : ளயீப் ( இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அலீ பின் ஸைத் பின் ஜத் ஆன் என்பவர் பலவீனமானவர் ஆவார் )

இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்னதுல் பஸ்ஸார் ( 58 ) முஸன்னஃபு இப்னு அபீஷைபா ( 26591 ) மேல் சொன்ன அறிவிப்பாளரே இவற்றிலும் இடம்பெறுவதால் இந்த அறிவிப்பும் பலவீனமானவையே ஆகும்.

27-حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْرُوا أَيْنَ يَقْبُرُونَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى قَالَ أَبُو بَكْرٍ: رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يُقْبَرَ نَبِيٌّ إِلَّا [ص: 207] حَيْثُ يَمُوتُ» فَأَخَّرُوا فِرَاشَهُ، وَحَفَرُوا لَهُ تَحْتَ فِرَاشِهِ

حكم الحديث : حديث قوي بطرقه وهدا إسناد ضعيف لا نقطاعه

27. அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ் ( ரஹ் ) கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் இறந்தபோது அவர்களுக்கு எங்கே “ கப்று “ ( அடக்கக் குழி ) தோண்டுவது என்று அறியாமல் நபித்தோழர்கள் ( யோசித்துக்கொண்டு ) இருந்தார்கள். இந்நிலையில் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் “ இறைத்தூதர் ( இறந்தால் ) அவர் இறந்த இடத்திலேயே அவருக்கு கப்று தோண்டப் பட வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

உடனே நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களின் படுக்கையைச் சற்று நகர்த்திவிட்டு அந்தப் படுக்கை விரிப்பின் கீழ்ப் பகுதியிலேயே குழி தோண்டினார்கள்.

தரம் : செய்தி வலுவானது ( இதை வலுபடுத்தும் ஸஹீஹ் செய்திகள் உண்டு) ஆனால் இதில் வரும் அறிவிப்பாளர் தொடரியில் இடைமுறிவுற்று உள்ளதால் இது ளயீப் தரத்தை அடைகிறது

இதே கருத்து அடங்கின ஹதீஸ் திர்மிதீ (939 ) யில் பதிவாகி உள்ளது அதுவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரை கொண்டது ஆகும்.

28-حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا لَيْثٌ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاتِي، قَالَ: " قُلْ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلا [ص: 208] يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ "

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين


28.அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் ,’ எனது தொழுகையின் இறுதி அமர்வில் ஓதிகொள்ள ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று கேட்டேன். அப்போது அவர்கள்,” அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப் இல்லா அன்த்த ,ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ இன்னக்க அந்த்தல் ஃகஃபூருர் ரஹீம் “ எனப் பிரார்த்திப்பீராக என்று கூறினார்கள். ( பொருள் : இறைவா ! எனக்கு நானே அதிகமாக அ நீதியிழைத்துக்கொண்டேன் உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் வேறெவருமிலர் ஆகவே எனக்கு உன்னிடமிருந்து மன்னிப்பை வழங்குவாயாக ! எனக்குக் கருணை புரிவாயாக ! நீயே மிகவும் மன்னிப்பவன்; பெரிதும் கருணை புரிபவன் )

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (8) புஹாரி ( 834,6326 ) முஸ்லிம் (2705) இடம்பெற்று உள்ளது.

29-حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، قَالَ: قَامَ أَبُو بَكْرٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ} [المائدة: 105] حَتَّى أَتَى عَلَى آخِرِ الْآيَةِ «أَلا وَإِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ لَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ، أَوْشَكَ اللَّهُ أَنْ يَعُمَّهُمْ بِعِقَابِهِ» ، أَلا وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ» وَقَالَ مَرَّةً أُخْرَى: وَإِنَّا سَمِعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخي

29. கைஸ் பின் அபீ ஹாஸிம் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மக்களிடையே ) நின்று உரையாற்றினார்கள்.அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு,” மக்களே! நீங்கள்,” இறை நம்பிக்கை கொண்டவர்களே ! உங்களை நீங்கள் காத்துகொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிக்கேடு உங்களுக்கு எத்தீங்கும் செய்திடாது எனும் இந்த ( 5:105)ஆவது வசனத்தை ஓதினார்கள்.ஆனால் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் மக்கள் ( தம் கண்ணெதிரே ) தீமை நடைபெறுவதைக் கண்டு அதை அவர்கள் தடுக்காமலிருந்தால் அல்லாஹ் பொதுவாக எல்லாரையும் சேர்த்துத் தண்டித்து விடலாம் என்று கூறியதை நாங்கள் கேட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே செய்தி அஹ்மத்( 1,16, 53 ) அபீய அலா (131) முஸ்னதுல் பஸ்ஸார் ( 65) இப்னு ஹிப்பான் ( 304 ) அபூதாவூத் ( 4338) திர்மிதீ ( 2168,3057) இப்னுமாஜா ( 4005)

30-حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: يا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابِهِ»

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخي

30. கைஸ் பின் அபீ ஹாஸிம் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மக்களிடையே ) நின்று உரையாற்றினார்கள்.அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு,” மக்களே! நீங்கள்,” இறை நம்பிக்கை கொண்டவர்களே ! உங்களை நீங்கள் காத்துகொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிக்கேடு உங்களுக்கு எத்தீங்கும் செய்திடாது எனும் இந்த ( 5:105)ஆவது வசனத்தை ஓதினார்கள்.ஆனால் அல்லாவின் தூதர் ( ஸல் ) அவர்கள் மக்கள் ( தம் கண்ணெதிரே ) தீமை நடைபெறுவதைக் கண்டு அதை அவர்கள் தடுக்காமலிருந்தால் அல்லாஹ் பொதுவாக எல்லாரையும் சேர்த்துத் தண்டித்து விடலாம் என்று கூறியதை நாங்கள் கேட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே செய்தி அஹ்மத்( 1,16,29, 53 ) அபீய அலா (131) முஸ்னதுல் பஸ்ஸார் ( 65) இப்னு ஹிப்பான் ( 304 ) அபூதாவூத் ( 4338) திர்மிதீ ( 2168,3057) இப்னுமாஜா ( 4005)




No comments:

Post a Comment