Friday, April 20, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 07 [ 31 முதல் 35 ஹதீஸ் வரை ]




முஸ்னத் அஹ்மத் - தொடர் 07 [ 31 முதல் 35 ஹதீஸ் வரை ]


31-حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا هَمَّامٌ قَالَ: أخْبَرَنَا فَرْقَدٌ، عَنْ مُرَّةَ الطَّيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ سَيِّئُ الْمَلَكَةِ»


حكم الحديث : 
إسناد ضعيف
31.  நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :

தன்னுடைய அடிமையை மோசமாக நடத்துகின்ற உரிமையாளன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.
இதை அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப் ( ஃபர்கத் பின் யஅகூப் என்ற அறிவிப்பாளர் பலவீனமானவர் )

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 13,32,75) திர்மிதீ ( 1946 ) இப்னுமாஜா (3691 )

32-حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ مُرَّةَ الطَّيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ خَبٌّ، وَلا بَخِيلٌ، وَلا مَنَّانٌ، وَلا سَيِّئُ الْمَلَكَةِ، وَأَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ الْمَمْلُوكُ إِذَا أَطَاعَ اللَّهَ وَأَطَاعَ سَيِّدَهُ»

حكم الحديث : 
إسناد ضعيف

32. நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :

துரோகமிழைப்பவன் , கஞ்சத்தனம் செய்பவன், செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன், தன்னுடைய அடிமையை மோசமாக நடத்துகின்ற உரிமையாளன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்து தன் உரிமையாளனுக்கும் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் முதலில் சொர்க்கத்தில் நுழைபவன் ( அந்த ) அடிமையாகவே இருப்பான்.

இதை அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப் ( ஃபர்கத் பின் யஅகூப் என்ற அறிவிப்பாளர் பலவீனமானவர் )

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 13,32,75) திர்மிதீ ( 1946,1963 ) இப்னுமாஜா (3691 )

33-حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ سُبَيْعٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ [ص: 210] ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، أَفَاقَ مِنْ مَرْضَةٍ لَهُ، فَخَرَجَ إِلَى النَّاسِ، فَاعْتَذَرَ بِشَيْءٍ، وَقَالَ: مَا أَرَدْنَا إِلَّا الْخَيْرَ، ثُمَّ قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنَّ الدَّجَّالَ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا: خُرَاسَانُ، يَتْبَعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ "

حكم الحديث : 
إسناده صحيح

33. அம்ர் பின் ஹுரைஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

ஒரு முறை அபூபக்ர் ( ரலி ) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்து உடல் நலம் தேறிய பின் , மக்களிடம் புறப்பட்டு வந்து , ஏதோ ஒன்றுக்காகச் சமாதானம் சொல்லி விட்டு, “ நாம் நன்மையையே நாடினோம் “ என்றார்கள் , பிறகு,அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( மாபெரும் குழுப்பவாதியான ) தஜ்ஜால் ( உலக முடிவு நாள் நெருக்கத்தில் ) கிழக்குத் திசையிலுள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்படுவான் அது,” குராசான்” என்று கூறப்படும் அப்போது ( அவனுக்கு ஆதரவாக ) அவனை ஒரு சமுதாயத்தார் பின்தொடர்வர் அவர்களுடைய முகங்கள் தொலால் மூடிய கேடயங்களைப் போன்று ( அகலமாக ) இருக்கும்.

இதை அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 12) திர்மிதீ ( 2237) பதிவாகி உள்ளது.

34-حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ سَمِعْتُ سُلَيْمَ بْنَ عَامِرٍ، رَجُلًا مِنْ أَهْلِ حِمْصٍ وَكَانَ قَدْ أَدْرَكَ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ مَرَّةً: قَالَ سَمِعْتُ أَوْسَطَ الْبَجَلِيَّ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ النَّاسَ، وَقَالَ مَرَّةً: حِينَ اسْتُخْلِفَ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَامَ الْأَوَّلِ مَقَامِي هَذَا وَبَكَى أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: «أَسْأَلُ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ، فَإِنَّ النَّاسَ لَمْ يُعْطَوْا بَعْدَ الْيَقِينِ شَيْئًا خَيْرًا مِنَ الْعَافِيَةِ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّهُ فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّهُ مَعَ الْفُجُورِ، وَهُمَا فِي النَّارِ، وَلا تَقَاطَعُوا [ص: 211] ، وَلا تَبَاغَضُوا، وَلا تَحَاسَدُوا، وَلا تَدَابَرُوا، وَكُونُوا إِخْوَانًا كَمَا أَمَرَكُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ»

حكم الحديث : 
إسناده صحيح

34.அவ்சத் ( பின் இஸ்மாஈல் அல்பஜலீ ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

( ஒரு நாள் கலீஃபா ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அப்போது அவர்கள், “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் நான் நிற்கும் இதே இடத்தில் ( இந்த சொற்பொழிவு மேடைமீது ) நின்றார்கள் என்று கூறிவிட்டு அழுதார்கள் !
பிறகு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை அல்லது உடல் நலத்தை கேளுங்கள் ஒருவருக்கு உறுதியான இறை நம்பிக்கைக்கு பின் பாவமன்னிப்பை அல்லது உடல் நலத்தைவிட மிகச் சிறந்த வேறெதுவும் ஒருபோதும் கொடுக்கபடுவதில்லை. 

உண்மை பேசுவதைக் கடைபிடியுங்கள் அது நன்மைக்கு வழி வகுக்கும் ( உண்மை நன்மை ஆகிய ) அவ்விரண்டும் ( அவற்றைக் கடைப்பிடிப்போரைச் ) சொர்க்கத்தில் சேர்க்கும்.

பொய் பேச வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன் அது தீமைகளுக்கு வழி வகுக்கும் ( பொய் பாவம் ஆகிய ) அவ்விரண்டும் ( அவற்றைக் கடைபிடிப்போரை ) நரகத்தில் தான் சேர்க்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள் ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள் உறவை முறித்துக்கொள்ளாதீர்கள் பிணங்கிக்கொள்ளாதீர்கள் ( மாறாக ) நீங்கள் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி ( அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,38,44,46,49,66 ) திர்மிதீ ( 3558 ) இப்னுமாஜா ( 3849 )

35-حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَعْنِي ابْنَ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ بَشَّرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ، فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ» ،

حكم الحديث : إسناده حسن


35.அப்துல்லாஹ் பின் மஸ் ஊது( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ,” ஒருவர் குர் ஆனை அது இறக்கியருளப்பெற்ற முறையில் செழுமையாக ஓத விரும்பினால் அவர் இப்னு உம்மி அப்தின் ( அப்துல்லாஹ் பின் மஸ் ஊது ரலி அவர்களின் ) ஓதல் முறைப்படி ஓதட்டும் “ என்று ( என்னைப் பற்றிக் ) கூறினார்கள் என அபூபக்ர் ( ரலி ) அவர்களும் உமர் ( ரலி ) அவர்களும் என்னிடம் நற்செய்தி கூறினர்.

தரம் : ஹஸன்

No comments:

Post a Comment